https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 7 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 46 . ராம ஜென்ம பூமி .



ஶ்ரீ:



ராம ஜென்ம பூமி 





பதிவு :  437 / தேதி :- 06. மார்ச்   2018







இரவிற்குள் இரண்டு நதிகளான கங்கை மற்றும் தமஸாவை கடந்து அயோத்தியை அடைந்தோம் . வழியில் சரயூ நதி இடபுறமாக எங்களுடன் நீண்ட தூரம் ஓடி வந்த படி இருந்தது . மாலை மங்கி இருள் சூழ்ந்த பின்னர் கரிய பரப்பில் பளப்பளப்பாக ஓடிக்கொண்டிருந்த அந்த நதியைப் பார்க்க  கடல் போல காட்சி அளித்தது . அயோத்தியை அடைந்த போது இரவு 9:00 மணியை கடந்து விட்டிருந்தது . இரவு தங்குவதற்கு ஒரு விடுதியை ராமஜென்ம பூமிக்கு வெகு அருகில் ஏற்பாடு செய்திருந்தார்கள் . மூன்று நாள் அங்கு முகாம் .

அலகாபாத்தில் தங்கியிருந்த விடுதியைப்போலவே இதுவடிவ இரண்டடுக்கு கட்டிடம் . கீழ் தளம் காலியாக நடுவில் சிறு முற்றம் போல சமைக்க தோதாக இருந்தது . கீழேயே டார்மென்ரி போல படுக்க வசதிகள் இருந்தது. பெரும்பாலும் திரளான மக்கள் பெருக்கத்தை யாத்திரிகர்களாக  பார்த்து அனுபவப்பட்டிருந்ததால் , அந்த கட்டிடம் அவர்களின் அனைத்தும் தேவைகளை மனதில் கொண்டு கட்டப்பட்டதாக இருந்தது. மாடியில் மூவர் படுக்குமளவிற்கு சற்று பெரிய அறைகள். சில மட்டும் கழிப்பறை வசதியுடன் , மெத்தை தலையனை என எந்த ஏற்பாடுகளும் இன்றி இருந்தது. அங்கு வருபவர்களே அதை கொண்டு வந்து விடுவதால் , அதற்கான தேவை எழவதில்லை

மறுநாள் காலை சரயூ நதிக்கரையில் தீர்த்தமாடல் . ராமணத்தில் வரும் சரயூ நதிகரைக்கு சென்றோம் , இன்றளவும் அது கடல் போலதான் இருந்தது . ராமர் தனது அவதார காரியத்தை முடித்துக்கொண்டு வைகுண்டம் கிளம்பும்போது  அயோத்தியில் இருந்த அனைத்து புல்பூண்டுக்கெல்லாம் மோட்சமளித்ததாக ராமாயணத்தில் சொல்லப்பபிடுகிறது. கோடிக்கணக்கான மக்கள் ராமருடன் சரயூ நதியில்  இறக்கி அவருடன்காரிய வைகுண்டம்சென்றார்கள் என்பதை , இன்று காணப்படுகிற அதன் பிரமாண்டமான அளவு அந்த செய்தியின் யதார்த்தத்தை நியாயப்படுத்துகிறது

படித்துறையிலிருந்து ஆற்றில் சில அடிகள் நடந்தாலே இடுப்பளவிற்கு ஆழம் வந்துவிடுகிறது . ஆற்றின் கீழே சேறு ஏதும் இல்லாமல் சுத்தமான களிமண் படுகை சமதளம் போல இருந்தது . அதை காலால் உந்தி மிதித்தால் , மொத்த படுகையும் ஆடுவதாக  உணரமுடிந்தது , இன்னும் வேகமாக மிதித்தால் பொத்துக் கொண்டு உள்ளே போய்விடுவோமோ என்கிற ஐயம் தோன்றி நிறுத்தி விட்டேன்  . படுகைக்கு கீழே பிறிதொரு ஆறு ஓடுகிறதோ ?. 

ஒருகால் இன்னும் ஓங்கி மிதித்தால் ராமர் சென்று சேர்ந்த ஊருக்கான வழி திறந்து விடக்கூடும் , என தோன்றியது. யாத்திரைக்கு பயனை அதுதானே . வைகுண்டம் நமக்கான சொத்து ,அது எங்கு ஓடிவிடப்போகிறது? . பிறிதொரு முறை சாவகாசமாக வரலாம் என நினைத்துக்கொண்டு கரையேறினேன் . வழமைப்படி காலை பூஜை ,தீர்த்த வினியோகம் இத்தியாதிகள் . அதை தொடர்ந்து சித்ரகூடத்தின் நினைவாக பரதன் ராமனிடம் பாதுகை பெற்றதைப்போல அனைவரும் பாதுகையை ஜீயர் ஸ்வாமிகளிடம் ஒரு குறியீட்டைப் போல கொடுத்துப் பெற்றனர் . நான் அவற்றை சரயூ நதிக்கரையில் பெற்றுக்கொண்டேன். இன்றளவும் அது எனது நித்யபடி பூஜையில் இருக்கிறது

குளித்து முடித்து ராமர் ஜெனித்த பூமியை பார்க்க புறப்பட்டோம்  அந்த இடம் முழுவதும் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறதுஇருகிய நட்பு முகங்களற்ற ராணுவத்தினர் , எந்த நிமிடமும் கலவரமென்றால் சாமாளிக்கும் ஏக சிந்தையாராக இருந்தனர். கட்டும் காவலுமாக இன்றும் ஒரு சக்ரவர்த்தியைப்போல யாரும் நெருங்க முடியாதபடி ராமர் இருக்கிறார் எனத் தோன்றியது. எங்கு பார்த்தாலும் பாதுகாப்பு அரண் அமைப்புகள். மொத்த இடம் சுமார் இரண்டு மூன்று ஏக்கர் நிலப்பரப்பு . முழுவதுமாக தகர வேய்ந்த பந்தல் விஸ்தாரமாக அமைக்கப்பட்டிருந்தது . பூஜை நடக்கும் இடம் மட்டிலும் அலங்காரத்  துணியால் விதானம் அமைத்து அதன் கீழ் ராமர் , லக்ஷ்மண , பரத சத்துருக்கன , ஆஞ்சநேயர் விக்ரகங்கள் பிதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அருகில் நெருங்க முடியாதபடி , பல அடுக்கு இரும்பு பைப்பினாலான தடுப்புகள் .

ஒவ்வொரு தடுப்பிலும் பாதுகாப்பு வளையங்கள். நாங்கள் நின்று சேவிக்கும் இடத்திலிருந்து ஐம்பது அடிக்கு மேல் தூரத்தில் இருக்கும் மூர்த்தங்களை பார்க்க முடிந்தது . ராமரை தூரத்தில் சேவித்தோம் . உள்ளே இரு அர்ச்சகர்கள் சிறிய இடைவெளிகள் விட்டு விட்டு ஆரத்தி காட்டிக் கொண்டே இருந்தனர் . பக்கத்தில் இரண்டு அர்ச்சகர்கள் ஏதோ பாராயணம் செய்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அர்ச்சகர்கள் தென்னகத்திலிருந்து வந்தவர்கள் போலிருந்தார்கள் .  உள் நுழைவிறகு அருகாமையில் புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமத்தை சேர்ந்த இடம் ஒன்று இருப்பது ஆச்சர்யத்தை அளித்தது . அது ஜென்மபூமிக்கு வெகு அருகாமையில் இருந்தது . ராம ஜென்ம பூமியை பார்த்துவிட்டு வெளிவந்தோம் . அங்கிருந்து ராமர் வனவாசத்தின் போது பயணப்பட்ட ஒவ்வொரு இடமாக பார்க்க புறப்பட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்