https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 28 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -64 . சனாதனத்தின் நவீனம் .

ஶ்ரீ:




சனாதனத்தின் நவீனம்




பதிவு :  458 / தேதி :- 27 . மார்ச்   2018







கனவுகள் எனக்கு எளிதில் கலைந்து விடுவதில்லை. அவை என் ஆழ்மனத்திலிருந்து பிறரின் வேட்கையாக எழுந்து வருபவை என நினைக்கிறேன் , ஆகவே குறுகிய நோக்கங்கள் அற்றவையாக வடிவமைக்க பட வேண்டும்  என விரும்புவேன்  . வேளுக்குடி ஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் அவரது புதுமனை புகுவிழாவில் பரகாலனிடம் தற்செயலாக  புதுவையை  பற்றியும் ,அங்கு நடைபெறும் பாரமார்த்திக காரியங்களை குறித்து விசாரித்தது , ஊழின் ஒரு கணம்அவரது உபன்யாசத்தை புதுவையில் நடத்துவது பற்றிய சிந்தனை அவருக்கு ஏற்பட்டிருந்தாலும் அதை பரகாலனிடம் அவர் பகிர்ந்து கொண்டது விந்தை . காரணம் பரகாலன் மிக எளியவர் அனைவருக்கும் சுலபர் என்பது அவரது பலமும் ,பலவீனமும். எளிய வாழ்கையில் முற்றும் விரக்கத்தராக வாழ்பவருக்கு நிகழ்ச்சியும் ,ஒருங்கிணைப்பும் சிந்தனையில் இல்லாதது , பிரமாண்ட நிகழ்வுகளை பற்றிய அவரிடம் பேசியதே ஒரு நகைமுரண் , ஆனால் அதுதான் விதி முகூர்த்தம்

நான் அவரிடம் வேளுக்குடி ஸ்வாமியை சந்திக்க சென்று நிகழ்ந்த அனுபவத்தையும் ,என் மன விலக்கத்தையும் பற்றி சொன்னது ஒரு பதிவிற்காக மட்டுமே , அதிலிருந்து ஒன்று எழுந்து வளரக்கூடும் என்கிற சிந்தனை எனக்கே இல்லை . ஆனால் அவரிடம்  நான் நினைத்த விஷயம் நடைபெறுவதில் உள்ள இடரடக்கலை ஒரு ஆற்றாமை போல சொல்லி வைத்திருந்தேன். இந்த இரண்டின் இணைவு எனது கனவானராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழாக்குழுவிற்கான விதையாக அன்று ஊன்றப்பட்டிருக்க வேண்டும்.

எதை விழைகிறேனோ அதைப்  பற்றிய சிந்தனையிலேயே இருந்து கொண்டிருப்பதும் ,அதற்கான சந்தர்ப்பத்திற்கு காத்திருப்பதும் எனக்கு முதல்மையானது . சில காலம் கழித்து அது நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு பனியிலிருந்து துலங்கி வரும் வடிவம்போல மெல்ல திறப்பதும், அதற்கான தொடர்புகள் மெல்ல எழுந்துவருவதையும் நான் பரவசத்துடன் பார்த்திருக்கிறேன் . அதற்கான தர்க்க பூர்வமான விளக்கம் என்னிடம் இல்லை . கனவு பற்றி அப்துல்கலாம் சொல்வதற்கு முன்பாக அதை முயற்சித்திருக்கிறேன் . அவரது சொல்நான் சரிஎன்றே பின்னொருநாள் சொன்னது

நான் இதை இப்படி யோசிப்பதுண்டு . சக்தி உள்ளவனுக்கு யோசிக்க என்ன இருக்கிறது?, தனக்கு சரி என பட்டதை செயல் படுத்த அவனிடம் உள்ள பொருளியல் பலம் அதற்கான வாய்ப்புகளையும் மனிதர்களையும் அவன் முன் கொண்டு நிறுத்திவிட போகிறது . அவனுக்கு கனவிற்கான தேவை எழுவதில்லை . கனவு ,கையில் ஒன்றுமில்லாதவனுக்கானது  . பல உலகத்தலைவர்களும் சொன்ன வார்த்தைகள் தான் இவைமார்ட்டின் லூதர் கிங்சொன்னது எனக்கொரு கனவு உண்டு என

சில காலம் கழித்து வேளுக்குடி புதுவை வந்திருந்தார் . இங்கு செயல்படும்விஷ்ணுசஹஸ்ரநாம மண்டலிஎன்கிற அமைப்பு அதை ஏற்பாடு செய்திருந்தது .அதுதான் நான் முதன் முதலில் அவரை நேரில் பார்த்தது . பின்னர் தேரழுந்தூர் சம்ரோக்ஷனத்தில் இரண்டாவதாக, அப்போது என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தனர் . அதன்பின் சில காலம் கழித்து என்னை சந்திக்க வந்தபோதுதான் பரகாலன் தன்னிடம் வேளுக்குடி புதுவை நிகழ்வைபற்றி பேசியிருந்ததை என்னிடம் சொன்னார் . அவரிடம் எனது மகிழ்வை தெரிவித்தேன் , ஆனால் அதிலிருக்கும் நடைமுறை சிக்கல் . அதை முன்னெடுக்க தேவையான பொருளாதார எதிர்பார்ப்பு . அதன் பிரம்மாண்டம் அனைத்தையும் சுருக்கமாக சொன்னேன்

அவர் நீங்கள் இதை முன்னெடுத்து போக முடியுமா? என்றார் . இதை நான் ஒருவன் மட்டிலும் முன்னெடுப்பதால்  நிகழ்ந்துவிடாது . பலர் இணைந்து செய்ய வேண்டிய ஒரு மாபெரும் பணி . அதற்கான வாய்ப்பு எழுந்துவருமானால் நான் அதை ஒருங்கிணைக்க முயல்கிறேன்  என்றேன் . நான் சொன்னதிலிருந்து அவர் என்ன புரிதலை அடைந்தார் என்பது எனக்கு தெரியாது? . அன்று நான் அவரிடம் பேசியது எனக்குள் நான் என்கிற அளவில் . நினைப்பதை ஒருமுறை சொல்லிப்பார்ப்பது போல என  நினைத்துக்கொண்டேன்

அது மிக சமீபத்தில்ஜக்கி வாசுதேவ்புதுவைக்கு வந்து சென்றிருந்த சமயம் . அப்போது கார்ப்பரேட் குரு நிலைகளை பற்றிய அவநம்பிக்கை எனக்கு மிகுந்திருந்தது . மரபான குருநிலைக்கு அவை மாற்று இல்லை என இப்போதும் நினைக்கிறேன் . ஆன்மீக பொது சமூகத்தில்  அவைகளின் தேவை குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாத சூழல் . பின்னர் ஜெயமோகனின் கார்பரேட் குருலைகளின் செயல்பாடுகளைப் பற்றியும், அவர்களின் தேவை குறித்த பதிவுகளை வாசித்த பிறகு  சில புரிதல்களை அடைந்தேன். இன்றளவும் ஒரு விஷயத்தில் எனக்கு மாற்று கருத்தில்லை . கார்பரேட் குருநிலைகள் எப்போதும் தனி மனிதர்களை சார்ந்தது . அவை அவர்களுக்கு பின் குவிந்த சொத்துக்களை பராமரிக்க வாழ்நாள் முழுவதும் பூசலிடம் சீடர் பரம்பரையை உருவாக்கும் அன்றி ,  கொள்கைகளை அது எவருக்கும் கை மாற்றியளிப்பதில்லை .மிக சமீப  உதாரணம் புட்டபர்த்திநவீன மனங்களாக மாறி வருகிற சமூக அமைப்புகளுக்கும் அவை எதிர்கொள்ளும் அறைகூவலை சமாளிக்க இத்தகைய கார்பரேட் குருநிலைகள் சில காலம் பயிற்றுவிக்கிறது , துரதிஷ்டவசமாக அது தொடர்வதில்லை

இன்று மரபான ஆன்மிகம் ஒரு மிகப்பெரிய வியாபாரம் போல மாற்றமடைந்து வருகிறது . அதன் நிர்வாகத்திற்கு தேவைப்படுகிற மனிதர்கள் பெருபாலும் வேறெதிலும் அடையாளப்படுத்தப் படாதவர்களாகவும், அவர்களுக்கு இதுவே ஒரு அடையாளமாக மாறிவிடுவதால் , வெகு ஜன உள்மனங்களுக்கு தேவையானவற்றை விடுத்து, அதன் மலினமான  தெளிவில்லாத செயல்பாடுகள் மூர்க்கமான பக்தியை நோக்கி செலுத்துகிறது . இதிலிருந்து குவியும் பொருளியலாலும் தொடர்புகளாலும் வெகு விரைவில் அது உள்ளூழல் நிறைந்த இயக்கமாக உருவாகி விடுகிறது

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுந்த பக்தி இயக்கம் கடந்துவந்தது , அன்றைய வைதிக மார்க்கத்தை உடைத்துக்கொண்டு . ஆனால் இன்றைய பக்தியை முன்வைக்கும் பல்வேறு இயக்கங்கள் சங்கரர் ,ராமாநுஜர் போன்றவர்களால் கைவிட பட்ட பழைய மார்கத்தை நோக்கி நகரும் விபரீத போக்கை பார்க்க முடிகிறது . கடந்த நூறு ஆண்டுகளுக்குள்ளாக அவற்றின் நோக்கமும் சமூக அபைப்பும் பெரிய மற்றம் அடைந்து விட்டிருந்தன . அவை எதிர் கொள்ளும் அறைகூவல் யாரை நோக்கியது என்பதுதான்  இப்போதைய கேள்வியாக இருக்க முடியும் . அது இன்னமும் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்