https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 9 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 48 . சிருங்கிபேரபுரம் .

ஶ்ரீ:




சிருங்கிபேரபுரம்



பதிவு :  439 / தேதி :- 08. மார்ச்   2018







ருசி . அது ஒரு உளமயக்கு.உணவுப் பொருளில் அதற்கான தன்மை முழுவதுமாக இருப்பதில்லை . அதன் நுண்ணிய பிறிதொரு பகுதி உண்பவரின் நினைவிலிருந்து எடுக்கப்பட்டு  சமன்செய்யப்படுகிறது . சமனாகாத போது குறைகளாக அவை உணரப்படுகிறது போலும்  . ஆவல் பொங்க சாப்பிட சென்றவர்கள் , சாப்பிட்ட இட்லியை நொந்தபடி திரும்பினர் . இது அது மாதிரி இல்லை வேரெதோ மாதிரி இருந்தது என்றார் . அதை பார்த்த , கேட்ட சிலர் , வேண்டாம் , நமது உணவே போதும் என்கிற முடிவிற்கு வந்துவிட்டார்கள் . காலை உணவிற்கு முன்பாக அங்கிருந்து வெகு அருகாமையில் , ராமர் கோவிலுக்கான வேலைகள் நடைபெறும்  இடம்  மற்றும் அதை நிர்வகிக்கும் சாது ஒருவரை பார்க்க அனைவரும் புறப்பட்டோம். ராமஜென்ம பூமி அறக்கட்டளை என்கிற நிறுவனம் ராமர் கோவில் கட்டுவதை பற்றிய ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருவதை பல வருடங்களுக்கு முன்பு தினசரிகளில் படித்திருக்கிறேன் . இது அதுதான் எனக்கு தெரியாது .ஆனால் ஒரு அமைப்பு அங்கு ராமருக்கு கோவில் கட்டுவதை ஒரு விரதம் போல ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு சொல்லப்பட்டது . அனைவரும் அங்கு சென்றோம்





அது சுமார் ஆறு , ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்த இடம் அங்குமிங்குமாக எங்கு பார்த்தாலும் 
இளஞ்சிவம்பு நிற கற்கள் மற்றும் பலவிதமான கட்டுமான பொருட்கள் ஏராளமாக குவித்து வைக்கப்பட்டிருந்த்து . அனைத்தும் ஒரு விதமான சந்தன வண்ணத்திலான கற்கள் , நுண்ணிய வேலைப்பாடு மிக்க தூண்களும், இணைப்பு சட்டகங்கள், மேற்கூரையின் பலவித அளவுகளில் , பாணியில்  விதானங்களாக, படி நிலைகளாக , கோபுர தூண்களை நிறுத்தும் அடி பீடங்களாக . அதில் வைக்கப்படவிருக்கும் விதவிதமான சிற்பங்கள் என் ஏராளமான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிடுந்தது. அவை தவிர இன்னதென்று புரிந்து கொள்ள இயலாத கோவில் கட்டுமான பொருட்களும் அங்கு குவித்து வைத்திருந்தார்கள் . நாங்கள் சென்ற போதுகூட பெரும் கூட்டமாக வேலைகள் தொடர்ந்து நடந்தவண்ணம் இருந்தது



அதன் தலைமை பொறுப்பில் உள்ள சாது ஒருவரை சென்று பார்த்தோம் . அவர் மௌன விரதத்தில் இருப்பதாகவும் , ஒருநாள் ஒன்றுக்கு ஒரு கோடி ராம நாமம் ஜெபித்து முடித்த பிறகே உணவருந்துவதாகவும் அதுவரை ஏதும் உண்பதில்லை என அவரது உதவியாளர்கள் போல இருந்த சிலர் சொன்னார்கள் . உள்ளே சென்று பார்த்தபோது மிகவும் வயோதிகரான ஒருவர் தியானத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது . வெளியில் சிலருடன் நான் பேசியபோது அவர்கள் சொன்னார்கள்தீர்ப்பு சாதகமாக வந்தால் நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் முழு கோவிலும் கட்டி முடிக்கப்பட்டு விடும்என சொல்லி எங்களை அந்த தயார்  நிலையில் உள்ளதை ஒன்றுடன் ஒன்றை பொருத்திக்காட்டினார் . பிரமிப்பாக இருந்தது . அதன் பிறகு அங்கிருந்த பொருட்களை அளவை வைத்து பார்க்கிற பொது அவர் சொல்வது மிகையல்ல என்பதை புரிந்துகொள்ள முடிந்தது

பின்னர் அங்கிருந்து தமஸா நதிக்கரைக்கு செல்வதை பற்றிய பேச்சி எழுந்ததும் அனைவரும் காலை உணவை முடித்துக்கொண்டு தமஸா நதிதீரத்திற்கு கிளம்பினோம் . ராமர் அயோத்தியை விட்டு வனவாசத்திற்கு புறப்பட்டபோது முதல் நாள் இரவு இங்குதான் தங்கியதாக ராமாயணம். சொல்லுகிறது . ராமர் வனவாசம் புறப்பட்டபோது லக்ஷக்கணக்கானவர்கள் அவரை பின்தொடர்ந்துவர தன் பொருட்டு அனைவரும் செய்யும் தியாகம் பொறுக்காது,   அதிகாலை அனைவரும் உறக்கத்திலிருக்கும்போது    அவர்களுக்கு தெரியாது ராமர் அங்கிருந்து சிருங்கிபேரபுரம் சென்றார் . சிருங்கிபேரபுரம் குகனுக்கு உட்பட்ட ராஜ்யம் . ராமர் இரண்டாம் நாள் அங்கு ஒருநாள் இரவு உறங்கினார் என்கிறது ராமாயணம் . அந்தக்காலத்தில் சாலை வசதிகள் உண்டென தெரிகிறது ராமர் லட்சுமணன் சீதை மூவரையும் சுமந்தரர் ரதத்தில் கொண்டு விட்டார் என்கிறது கதை



முக்கியமாக மூன்று விஷயங்களை சொல்லுகிறது இங்கே . அவர் இரவு தங்கி தர்பையில் உறங்கியதுதர்ப்பையை பாய் வடிவில் பின்னப்பட்டு ,இன்றும் அந்த கோவிலுக்கு அருகே ஒரு மேடையில் இருக்கிறது . அங்குள்ளவர்கள் சொல்லுகிற வழக்கத்தில் ராமர் இங்குதான் ஜடாமுடி தரித்துக்கொண்டார் என்பர் . வால்மீகி ராமாயணத்தை சொல்லும் பௌராணிக மரபு பெரியவர்கள் அந்த இரண்டுநாள் நிகழ்வை விஸ்தாரமாக சொல்வார்கள் . கம்பனும் மிக விரிவாக இதை சொல்லுகிறான் . ராமர் குகன் நட்பை திருமங்கை ஆழ்வாரும் அற்புதமான பாசுரங்களில் சொன்ன விஷயமிது . ராமரை வர்ணிக்கும் அனைத்து காவிய ஸ்லோகங்களும் அவரின் தலைமுடி அழகைத்தான் அப்படி வர்ணினிக்கின்றன . சீதை , விஸ்வாமித்ரர் , ஜனகர் என ராமரை பார்த்தபோது அனைவரும் சொக்கிப்போனது அந்த குஞ்சித குடிலமான தலைமுடி அழகைத்தான் . அதை ராமர் ஆலம்பாலை கொண்டு ஜடையாக பின்னிக்கொண்டது இங்கு என்பதால் ராமாயண ரசிகர்களுக்கு மனம் நெகிழும் காட்சி. இந்த இடம் ஒரு குறியீடுபோல பல விஷயங்களை மௌனமாக பேசியபடி இருக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்