https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 10 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 49 . வாரணாசி.

ஶ்ரீ:





வாரணாசி 


பதிவு :  440 / தேதி :- 09 . மார்ச்   2018



சிருங்கிபேரபுரத்திலிருந்து  ராமர் குகனுடைய ஓடம் கொண்டு கங்கைக்கரையை தண்டி பாரத்துவாஜர் ஆஸ்ரமம் சென்ற பாதையில் பயணித்த்தோம் .அயோத்தி முழுவதும் சிறு சிறு எண்ணிலடங்கா கோவில்கள் அவற்றைப் பிண்ணிப் பிணைந்த ராமாயண காட்சிகள் என பலவற்றை மூன்று நாட்கள் அங்கு தங்கி பார்த்து பின்னர் அயோத்தியிலிருந்து அலகாபாத் வழியாக காசியை நோக்கிய பயணமானோம். அயோத்தியிலிருந்து சுல்த்தான்பூர் ,பாதல்பூர் வழியாக  வாரணாசி  சுமார் 200 கி.மீ தூரம் 6:00 மணி நேரப்பயணம் . பின்மதியம் கிளம்பி இரவு வாரணாசி வந்தடைந்தோம் . இந்திய சரித்திரம் மற்றும் புராணத்தில் தவிர்க்க முடியாது சொல்லப்படும் வெகு  சில தொல் நகரங்களில் வாரணாசிக்கு ஒரு தனி இடம் எப்போதும் உண்டு . வாரணாசி பழங்காலத்து காசி . இங்கு ஒருநாள் பயண திட்டம் பின் இங்கிருந்து கயா அங்கு ஒருநாள் பின் கயாவிலிருந்து பாட்னா அதுவே எங்கள் பயணத்திட்டத்தின் கடைசீ புள்ளி .பின் அங்கிருந்து ரயிலில் சென்னை திரும்புகை


எங்கள் யாத்திரை இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது . அடுத்த நாள் விடியற்காலை கங்கை கரைக்கு வந்து சேர்ந்தோம் . அது ஒருநாள் பயணமாக திட்டமிடப்பட்டதால் ஊருக்குள் சென்று முழுவதுமாக பார்த்துவரும் வாய்ப்பை அது எங்களுக்கு அளிக்கவில்லை. வாரணாசி என்பது தற்போது பிரபலமாக உள்ள பெயராக இருந்தருலும்காசிஎன்கிற அதன் புராண பெயர் அனைவரின் புழக்கத்தில் இருக்கிறது . வாரன் ,அசி என்கிற இரண்டு நதிகள் ஓடுவதால் வாரணாசி. கங்கை படித்துறை இங்கு புராண பிரசித்தமானது . காசி முழுவதுமாக ஓடும் நதிக்கு பல படித்துறைகள் பல இடங்களில் ஊரை இணைக்கிறது . முக்கியம் 64 இடங்கள்  . கட்டங்கள் என குறிப்பிடும் வகையில் அவற்றைகாட்என்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரில் அறியப்படுகிறது . பிரபலமானது ஹரிச்சந்திர , மணிகரனிகா காட் போன்றவை. அதுவொரு திறந்தவெளி மயானம் .ஹரிச்சந்திரன் சுடலை காத்த புராண ஸ்தலமா அது இருக்கிறது . தொடர்ந்து சடலங்கள் வந்தவண்ணம் இருப்பதால் இங்குள்ள சிதை அனைவதில்லை . சராசரி நாள் ஒன்றுக்கு 200 சடலம் மேல் என்றார் ஒருவர், சொல்வதை கேட்டுக் கொள்ள வேண்டியதுதான் . இந்த உலகில் எல்லோராலும் மனித உடல்கள் சகஜமாக அன்றாடம் கடந்து போகப்படுகிறது . காசியில் இறந்தால் முக்தி என்பது அனைத்து ஹிந்துக்களின் ஆழ்மன நம்பிக்கை
மரணமென்பது உடலின் முடிவேயன்றி உயிரினம் முடிவல்ல , என்கிற சித்தாந்தம் வேர்விட்ட பூமி காசிஇங்கு மரணிக்கும் தருவாயில்  ஈஸ்வரன் அனைவரின் காதுகளிலும் கர்ணன் மந்திரம் சொல்லி அவர்களை மோட்ஷத்திற்கு அனுப்புவதாக ஐதீகம் . காசியில் ஒரு நாய் கழுதை செத்தாலும் ஈஸ்வரன் அதன் காதுகளில் கர்ணமந்த்ரம் ஜெபிப்பதாக சொல்லப்படுகிறது . நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கங்கைக்கு எதிர்புற கரையில்பிந்து மாதவன்சன்னதி இருப்பதால் அனைவரும் ஒரு படகு மூலமாக பிந்து மாதவன் சன்னதியை அடைந்தோம் . சிறிய கோவில் . இதுவரை பார்த்திதலேயே மிகப்பெரிய சாளக்ராமக்கல்லை அங்குதான் பார்த்தேன் அது அளவில் இரண்டு பெரிய இளநீர் போல இருந்தது . அங்கிருந்து கோவில் பாண்டாக்கள் தங்கும் இல்லம் வழியாக வருகையில் பேசும் பச்சைக்கிளி வாழ்வில் முதல் முறையாக பார்த்தேன்




என்ன சொல்லணும் திரும்பச்சொல்லுகிறது . ஆனால் சற்று தாமதித்து முற்றும் ஆச்சர்யமாக இருந்தது . அங்கிருந்து ஹரிச்சந்திரா காட் வந்தோம் , நெருங்கும் போதே இரண்டு மூன்று சிதை எரிவதை பார்க்க முடிந்தது , கங்கை படித்துறை ஒட்டிய பகுதிகளின் சாலைகள்  முழுவது  மிகவும் இடுங்கலானவைகள் . இரண்டு பேர் சேர்ந்தபடி செல்ல முடியாத அளவிற்கு சந்து போல இருந்தது . நதிக்கரைக்கு நெருங்கும் போதே சட்டென ஓர் ஓசை மனதை ஏதோ செய்தது , அது ராம் நாம் சத்யஹை , ராம் நாம் சத்யஹை , ராம் நாம் சத்யஹை என்று ஒரே குரலில் சொல்லிக்கொண்டு நான்கு பேர் ஒரு சடலத்தை கொண்டுவருவதை பார்த்தோம் . யாரென பார்க்கமுடியாதபடி வெள்ளை துணியிக் முழுவதுமாக மூடப்பட்டு துலுக்க சாமந்திப்பூவில் மாலையிடப்பட்டிருந்தது


தெரு முழுவதும் செறிந்திருந்த சிறு வணிகர்கள் சற்றுநேரம் வியாபரத்தை நிறுத்தி எழுந்து நின்று மரணித்தவருக்கு மரியாதை செய்து பின் தங்களின் தொழிலை தொடர்ந்தனர் . அது எனது சிறு வயது நினைவை தொட்டு சென்றதுபுதுவையில் கடைத்தெருவில் சவ ஊர்வலம் கடந்து போகும்போது அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடையை ஊர்வலம் கடந்து செல்லலும் வரை எழுந்து நிற்பதை நான் நினைவு கூர்ந்தேன் . அப்பாவிடம் கேட்ட போது . அவர் இந்து நமது வழமை என்றார் . இந்திய முழுவதுமாக சில அடிப்படை சமஸ்க்காரங்கள் மறுபடுவதில்லை என்பதை நினைத்துக்கொண்டேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்