https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 7 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 45 . குகன் வழித்தோன்றல்கள்.



ஶ்ரீ:



குகன் வழித்தோன்றல்கள்




பதிவு :  436 / தேதி :- 05. மார்ச்   2018







நந்தி கிராமம் . அந்த இடம் புராதனமாக காட்சியளித்தது . நந்தவனத்திற்கு உள்ளே  சிறிய கோவில் ,அதில் பூஜைக் குறியதாக பரதனும் அனுமனும் கட்டி தழுவிக்கொள்ளும் சிற்பம் .ஒரே கல்லிலானது . அதில் தெரிந்த சிறு வித்யாசத்தை சற்று கூர்ந்து நோக்கினால் மட்டுமே அறியக்கூடியது. வித்தியாசத்தை புரிந்து கொள்ள அனுகி பார்க்க முயன்றேன். அது பூஜைக்குறிய ஸ்தலம் , இருந்தும், நம்மூர் போல இல்லாமல் வட இந்திய கோவில்களில் அனைவரும் கர்ப்பக்கிருகம் வரை சென்று வர அனுமதிக்கிறார்கள் .




முதலில் அந்த சிற்பத்தில் வித்யாசமான பகுதியை சிறிது நேரத்தில் புரிந்துகொண்டேன் , அது மார்பிலிருந்து இடை வரையிலான ஒரு உடலையும் இடைக்கு மேலும் , கீழுமாக பரதனும் அனுமனும் ஆலிங்கனம் செய்துகொள்ளும் சிற்பம். பாதம் முதல் இடை வரை முன்புறம் அனுமனாகவும் பின்புறம் பரதனாக வடிக்கப்பட்டிருந்தது . இலங்கையில் இருந்து ராமர் சீதையை மீட்டு அயோத்திக்கு திரும்புகையில், பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் இரவு தங்க நேர்ந்து விட , விடிந்தால் ராமருடைய பதினான்கு வருட வனவாசம் பூர்த்தியாகிறது. ஒருநாள் தாமதித்தாலும் பரதன் அக்னிப்ரவேசம் செய்து விடுவதாக பிரதிக்ஞை செய்திருப்பதால் , விபரீதமாக ஏதாவது நிகழாது இருக்க, ராமர் அனுமனை முன்கூட்டி அனுப்பி , தான் வந்துகொண்டிருப்பதை பரதனுக்கு அறிவிக்க சொல்கிறார் . அனுமன் பரதனுக்கு அதை சொன்னது இந்த இடத்தில். அந்த கோவிலின் சிறப்பை அங்கிருந்தவர்கள் சொன்னார்கள் . அதை பார்த்து முடிப்பதற்குள் மாலை நெருங்கிக் கொண்டிருந்தது , அங்கிருந்து கிளம்பினோம் .


அடுத்ததாக கங்கை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தோம். கங்கையை தாண்டினால் அயோத்தி. அங்கிருந்து பாதை தொடங்குகிறது . ராமனை அக்கரையில்  இருந்து  மறுகரைக்கு  குகன் கொண்டு விட .ராமன் இங்கிருந்துதான்  பரத்வஜர் ஆசிரமம் சென்றதாக சொல்லப்படுகிறது . அந்தி சாயும் வேளையில் நாங்கள் அனைவரும் கங்கை கரையில் அமர்ந்தருக்க , இரவு விரைந்து அனுகிக் கொண்டிருந்தது . இரவு 8:00 மணிக்குகுள் அயோத்தி சென்றடைவது நல்லது . என யாத்திரை ஒருங்கினைப்பாளர் சொன்னார் . ராம ஜென்ம பூமி சர்ச்சை கிடமான இடம் குறித்த தீர்ப்பை , அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கி காத்திருந்தனர் . நீதி மன்றத்தில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருந்த சூழல் அது. ஆகவே படகு சவாரி சென்று வர அனைவருக்கும் சாத்தியமல்ல என்று அதை ஒரு குறியீடாக நிகழ்த்த வேண்டி ஜீயர் ஸ்வாமிகளும் அம்மங்காரும் மட்டிலும் அதில் பயணப்பட்டனர்



படகுக்கு காத்திருக்கும்போதுதான் அங்குள்ள படகோட்டிகள் குகன் வம்சத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதை நிரூபிக்கும் குல அடையாளமான ஒரு தொழுப்பர் குறியை இன்றளவும் தழும்பாக தங்கள் வலது தோளில் தரிப்பதை அவர்கள் காண்பித்தனர் . ஒரு இதிகாச வரலாற்றின் இன்றளவிற்குள்ள தொடர்ச்சியும் ,அதில் சம்பத்தப்பட்ட குலத்தை சேர்ந்தவர்கள் என சொல்லிக்கொள்பவர்களை பார்த்த போது ராமாயண காலத்திற்கு சென்றுவிட்ட உணர்வு . ஜீயர் ஸ்வாமிகளும் அம்மங்காரும் மட்டிலும் அதில் சிறிதுதூரம் பயணப்பட அந்த காட்சியை ராமர் சீதையுடன் ஒப்பிட்டு ஒரு அற்புதமான மாலையாக அது கழிந்தது.

அன்று இரவு கங்கை நதியை கடந்து அயோத்தியை அடைந்தோம் . வழியில் சரயூ நதி இடபுறமாக ஓடி வந்த படி இருந்தது . மாலை மங்கிய வேளையில் அது கடல் போல காட்சி அளித்தது . அதை  தாண்டி சென்று அயோத்தியை அடைந்த போது இரவு 9:00 மணியை கடந்து விட்டிருந்தது . அங்கு மூன்று நாள் முகாமிட்டிருந்தோம் . இரவு தங்குவதற்கு ஒரு விடுதியை ராமஜென்ம பூமிக்கு வெகு அருகில் ஏற்பாடு செய்திருந்தார்கள்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்