https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 18 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -58 . ஸ்வாத்யாயம் .

ஶ்ரீ:





ஸ்வாத்யாயம்




பதிவு :  449 / தேதி :- 18. மார்ச்   2018







வாழ்கை அர்த்தம் பொதிந்ததாக இருப்பதற்கு ,இங்கிருந்து பெறப்பட்டவைகளுக்கு ஈடாக ஏதாவது செய்தாக வேண்டும் என்பது இப்புடவியின் பெருநியதி . நாம் இல்லாத ஒரு உலகில் நம்மை பற்றிய நல் நினைவுகளையாவது விட்டுச் செல்லவேண்டும் என்கிற எண்ணம் மிகுந்திருந்த காலம் அது . உயிர்கள் அனைத்தும் ஆனந்தத்தையே இலக்காக கொண்டு வாழ்கின்றன . மனிதன் தனது சிந்தனையால்  அதை நோக்கியே தனது வாழ்க்கையை திருப்ப முயற்சித்துக்கொண்டே இருக்கிறான் . அவன் படும் அத்தனை பிரயத்தனங்களும் அதற்காகவே . ஆனால் இறுதியில் அதை அவன் சம்பாதித்து கொண்டானா? என்பதே கேள்வியாக மிச்சப்படுகிறது

கடந்த முறை நான் மதுரா செல்வதற்கு முன் ஜீயர் ஸ்வாமிகளிடம் ஆசி பெறுவதற்கு திருகோவலூர் சென்றிருந்தேன் . அப்போது அவர் தனது மனக்குறையாக சொன்னது எனது மனதில் நீண்ட நாட்களாக தங்கி இருந்தது . என்னுடைய தன்னறம் குறித்த தேடலுக்கான முயற்சியை கையிலெடுக்க வேண்டிய சூழலாக அதை பார்த்தேன் . அந்த தேடலில் ஜீயர் ஸ்வாமியின் மனோரதம் பூர்த்தியாகும் வாய்ப்பையும் இணைத்து அதை செயல்படுத்தும்  திட்டம் ஒன்றை சில ஆண்டுகளாக நினைத்தபடி இருந்தேன் .

வாழ்வில் வருத்தமும் ஏமாற்றமும் மிகுந்து வதைக்கும் போது , நல் எதிர்காலமென ஒன்று இருக்கிறது என்கிற நம்பிக்கையை தர வல்லவை ,பக்தி ஸம்ப்ரத்யங்களில் சொல்லப்படுகிற நம்பிக்கையும் அதன் கோட்பாடுகளும்அது எப்போதும் நாளை என்கிற ஒன்றை பற்றி எப்போதும் நம்முடன் மிகுந்து நம்பிக்கையுடன் உரையாடுபவை . மரபான குடும்பத்தில் வளர்வது ஒருவகையில் சிறையின் இருப்பு என்றாலும், அது பிறிதொரு இடத்தில் தன்னை சமன் செய்து விடுவதை அறிந்திருக்கிறேன் . நம் கேள்வி நம்மை எப்போதும் நம்பிக்கையை நோக்கி நகர்த்துவதில்லை. அதன் பாதையில் பயணிக்கும் எவரும் அனைத்திலும் குற்றம் கண்டுகசப்படைந்து கொண்டே வந்து இறுதியில் தன்னிடமே வந்து அந்த பாதை முடிவுறுவதை  தான் பார்த்திருக்கிறேன்

அறிவார்ந்த சிந்தனை எல்லோரையும் அவர் விரும்பும் முடிவை நோக்கி கொண்டு செல்வதில்லை . அங்கு எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் இருப்பதில்லை . அவை அனைத்தும் நம்மை ஒரு இடத்திற்கு கொண்டு விட்டுவிட்டு, பின் விலகிவிடுவதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம் . அந்த இடத்தில், சிறு நம்பிக்கை எனும் துளி வெளிச்சம் மட்டுமே நம்மை அங்கிருந்து மீட்க வல்லவை

ராமானுஜர் பற்றி எனது தந்தை எனக்குள் ஏற்படுத்திய சித்திரம் வேறுவிதமானவை . நான் உருவகித்த ராமானுஜர் மிக நுண்மையானவர் , எனது தந்தை இடமிருந்தே அவரை நான் அடைந்திருக்க வேண்டும் . விசிஷ்டத்திவைத்த சம்பிரதாயம் ,பூர்ணமாக எனக்கானது  என்பதை நான் புரிந்திருந்தேன் . என் மனநிலைகள் இயல்பில் அதன் கோட்பாட்டுடன் ஒத்து போவதை நான் அறிந்திருக்கிறேன் . கொண்டுவந்து நட்டதிற்கும் , அங்கேயே முளைத்து ,வளர்ந்து ,கிளைத்ததுமான செடிக்களுக்கான வித்தியாசம் அது, என உணர்கிறேன்

கொந்தளிப்பான மன நிலைகளில் நான் சிதைந்துபோகாது என்னை ஆற்றுப்படுத்தியது ராமானுஜரும் அவரது சம்பிரதாய கோட்பாடுகளை குறித்த எனது நம்பிக்கைகள் மட்டுமே. தர்கத்தில் அவை இறுதியில் வெறும் நம்பிக்கை மட்டுமே என எஞ்சினாலும் , அதை கைக்கொண்டு எனது கொந்தளிப்பில் இருந்து நான் வெளியேற முடிந்ததே இப்போதைக்கான பிரயோஜம் என்றால் , அதுவே போதுமானது . அந்த சித்தாந்தத்தின் மீது எனக்கிருந்த ஈடுபடும், அதே சமயம் அதுபற்றி மேலதிகமாக சில தேவைகளும், அவற்றை இன்றைய பொருளியல் உலகில் பொருத்தி இன்னும் அனுக்கமாக புரிந்து கொள்வது அவசியமானது என நினைக்கிறேன்

தர்மங்கள் எக்காலத்துமானவை . ஆனால் அதன் சூக்ஷ்மங்கள் காலாதீனமானவை , அவற்றை காலத்தை கொண்டே பொருள் கொள்ளப்பட வேண்டும் என்பதில் , எனக்கு ஆழமான நம்பிக்கை இருப்பதை உணர்கிறேன் . ஒருவனால் தர்மத்தை அவ்வாறு காலத்திறகு ஏற்றார் போல பொருத்த இயலாது போனால் . பக்தி மார்க்கம் வெறும் மூட நம்பிக்கையாக முடிந்து போகிற அபாயத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் . இந்து சனாதன தர்மத்தில் சொல்லப்பட்ட அனைத்திற்கும் இப்படிபட்ட நுண்பொருள் இருப்பதை அனைவரும் அறிவர் . ஆனால் அதை நடைமுறை படுத்த முயலும் எவரையும் அது புரட்சிகாரனாக மட்டுமே பார்க்கும் . அதற்கு அஞ்சியே எந்த மதத்தலைவரும் அதை முன்மொழியவே இயலாது , எனகிறபோது முன்னெடுப்புகள் நடைபெறப்போவதே இல்லை என்பதே நடைமுறை யதார்த்தம் . எனவே அவை போகாத ஊருக்கான பாதை என்றாகிப் போகும்.

ஆனால் அவற்றை முன்வைத்து சில இயக்கங்கள் வளரத்துவங்கியதை , நான் பார்த்தபடி இருந்தேன் . அவை இரண்டு விதமானவைகள், ஒன்று ISKON , பிறிதொன்று கார்பரேட் குரு நிலைகள் . இவற்றை தாண்டி சில இயக்கங்கள் இருக்கலாம் . ஆனால் இவை இரண்டையும் இங்கு எடுத்துப் பேச முக்கிய காரணி , இவை உலகளாவிய பகத்தியை நோக்கிய அறைகூவலை எதிர்கொள்ள வல்லவைகள் என்பது . போன நூற்றாண்டின் குருநிலைகளுக்கும் தற்போது உள்ளவைகளுக்குமான வேறுபாடுகள் மிக நுட்பமானவைகள் . அதில் உள்ள முரண்களையும் அறிந்திருக்கிறேன்.கார்பரேட் குருநிலைகள் தனிநபரை சார்ந்தவைகள் , அவருக்கு பின்னே அவரது கருத்தகளை நிர்வகிக்காது அவர் விட்டு சென்ற சொத்துக்களை மட்டுமே அவை நிர்வகிக்கும் துர்பாக்கிய நிலையை பார்க்கிறோம் .

இன்றைய சூழலில் ISKON மட்டுமே உலகளவில் நிலைசக்தியாக இருக்கிறது என நினைக்கிறேன். அதன் எதிர்காலம் குறித்தும் எனக்கு சில அவநம்பிக்கை உண்டு . மரபான மற்றும் உலகளாவிய குருநிலைகளின் செயல்பாடுகள் குறித்து அனைவரது எதிர்பாரப்புகள் நிறைவேறும் வாய்ப்பு மிக அரிதானது என்றே உணர்கிறேன்  . கார்பரேட் குருநிலைகள் நவீனமானவை . அதை உள்வாங்கும் இடம் மரபாக வளர்ந்து வந்தவர்களுக்கு இருப்பதில்லை . சமூகமும் குடும்ப சூழலும் அவரகளுக்கு விடுக்கும் அறைகூவலை எதிர்கொள்ள மரபான குருநிலைகள் உதவ இயலாத சூழலில், இதற்கான பதிலை கண்டடைவது எளிதானதல்ல.

அன்று இதை ஒட்டிய சிந்தனையில் ஏதாவது முயற்சிக்க வேண்டும் என்கிற வேகத்தில் நான் இருந்த நாட்கள் அவை . அதை ஒட்டியே எனது திட்டங்களும் அதை நோக்கிய எனது தேடலும் எப்போதும் எனக்குள் இருந்ததை நான் உணர்த்திருந்தேன் . எனக்குள் நிகழ்ந்த கொந்தளிப்புகளுக்கும் நிறைவினமைக்கும் பக்தி மாரக்கத்தை குறித்த நம்பிக்கை மட்டுமே வடிகாலாக இருந்தது . அதன் நுட்பம் நோக்கிய தேடலை அவை என்னுள் தொடங்கி வைத்தன . என் நம்பிக்கைக்கும் அதற்கு பிரதிபலனாக ஏதாகிலும் செய்ய வேண்டும் என்கிற முனைப்பின் வடிவேராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுபற்றிய பெரும் கனவு திட்டத்தில் நான் அப்போது இருந்தேன். இப்போதும் இருந்து கொண்டிருக்கிறேன் . அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். பாட்னா , சென்னை  இரண்டு நாள் பயணம். அதன் தொடக்கமாக அமைந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக