https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 15 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 55 . பாட்னா ரயிலடி.


ஶ்ரீ:





பாட்னா ரயிலடி




பதிவு :  446 / தேதி :- 15. மார்ச்   2018




அந்த ரயில் நிலையம் முக்கிய சாலைகளில் இருந்து சற்று விலகி உள்ளே மிக விஸ்தாரமாக , மையங்கொண்ட  ஜனக்கூட்டத்தினால் விம்மிக்கொண்டிருந்தது . உள் நுழைவு பிளாட்பாரத்திற்கு எதிரில் இருப்பு பாதை ஏதும் தெரியாத அளவிற்கு சேறும் சகதியுமாகவும், அதை கடந்து அருகில் இருக்கும் மேம்பாலத்தில் ஏறி வருவதற்கு சிரமப்பட்டு, பலர் அதிலேயே நடந்து வந்து ,நாங்கள் நின்றிருக்கும் பிளாட்பாரத்தின் மேல் ஏறுவதால் மழை பெய்தது போல எங்கும் கழிவுநீர் ,ஈரமாக நாற்றத்துடன் இருந்தது. யாரும் யாரைரையும் நிமிர்ந்து பார்க்க நேரமின்றி , பரப்பரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தனர் . எல்லா நிலையங்களிலும் வரும் அதே மிகை நாற்றமும் , ஏகப்பட்ட இருப்பு பாதைகளும் இரும்பிலான மேற்பாலங்களும் எங்கும் அழுக்குமாக ,ஒரு தேசிய அடையாளம் போல அந்த ரயில் நிலையம் இருந்ததுமிக நீண்ட நடைபாதைகளும் யாருக்கும் எதற்கும் பதில் சொல்லாத ஊழியர்களை கொண்ட கௌண்டர்களும் , பேசாமடைந்தையாக உள்ளே அதிகாரிகள்  அமர்ந்து இருக்க , வெளியே சாமான்ய ஜனங்கள் அவசரமாய் பரிதவித்தனர் ,அது இந்தியாவின் பிறிதொரு நிலையம்போலவே முற்றாக இருந்தது

எனக்கிருக்கும் இருக்கும் 15 நிமிடத்தில் ரயில் எந்த பிளாட்பாரத்தில் நிற்கிறது? , எங்களுக்கு இருக்கை உறுதி செய்யப்பட்டு விட்டதா? என தெரியாமல் ஒரு நிமிடம் அந்த நீண்ட பிளாட்பாரத்தில் ஒரு அனாதைபோல நின்று கொண்டிருந்தேன்  . சற்று நிதானித்து கொண்டதும் , ஸ்டேஷன் மாஸ்டர் அறையை பார்க்க முடிந்தது . இப்போது அவர் உள்ளே இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுதல் ,அதைவிட அவர் நாம் கேட்டதற்கு பதில் சொல்ல வேண்டும், அதுவும் இப்போது முக்கியம் , அவரது அறையை நோக்கி விரைந்தேன் . நல்லவேளையாக அவர் உள்ளே இருந்தார் , நான் கேட்டதற்கு சரியாக அதே சமயம் சிக்கலாக பதில் சொன்னார் . “வண்டி வந்து கிளம்ப இருக்கும் சற்று முன்னர் தான் EQ ரிலீஸ் பற்றி சொல்லமுடியும் . வண்டி வந்த பிறகுதான் லிஸ்ட் ஓட்டுவார்கள் . இபோது என்னிடம் அந்த தகவல்கள் இல்லை . அது அந்த வண்டியில் உள்ளவரிடம் இருக்கும்என்றார் உடைந்த ஆங்கிலத்தில்



எனக்கு ஓடி வந்ததில் வாய் வரண்டு நாக்கு ஒட்டிக்கொண்டது  . கடைசியாக நான்வண்டி வந்து விட்டதாஎன்றேன். நிமிர்ந்து தன் மூக்கு கண்ணாடி வழியாக என்னை பார்த்தவர், ஒன்றும் சொல்லாது உதட்டை பிதுக்கி தலையை இல்லை என்பது போல ஆட்டினார். அடப்.. போடாங் ....... என என்னவோ சொல்லி வைய வேண்டும்போல இருந்தது . அவரை  பார்த்து மரியாதையாக புன்னகைத்து விட்டு வெளியேறினேன் . மறுமுறை வந்து விசாரிக்க வேண்டி நேரலாம் . அதற்கு இது இருகட்டும் .

இப்போதைக்கு ஒரு நிம்மதி .வண்டி இன்னும் வரவில்லை
அதை விட சிக்கல் எனக்கு சீட்டு உண்டா இல்லையா? என்பது . வண்டி வந்த பிறகுதான் தெரியும் என்பது நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது . கடைசீ நிமிடத்தில் இல்லை என சொல்லி விட்டால் ,அவ்வளவுதான் . எதற்கும் விமானத்தில் செல்ல வாய்ப்பிருக்கிறதா என கையில் உள்ள டேபில் பார்த்தபோது , அன்று இரவு சென்னைக்கு எந்த விமானமும் இல்லை. நாளை காலை 7:00 மணிக்கு இருக்கிறது என்றது . ஆனால் அது மிகவும் செலவேறியது . மேலும் இரவு தங்க ஒரு விடுதியை அடையாளம் காண வேண்டும் . எனக்கு முதல்நாள் கல்யாண ஊர்வலம் கண் முன் நிழலாடியது . பாட்னா , வளர்ந்த நகர் போல இருந்தது அஞ்ச ஒன்றில்லை என்றது ஒன்று . கயா இந்த பட்ணத்தின் தொடு தூரத்தில் இருக்கிறது என்றது பிறிதொன்று  .  நான் சற்று ஆசுவாசப்பட்டு என்னை சுற்றி பார்கக ஆரம்பித்தேன்

நாங்கள் நின்றிருந்த இடம் சென்னை மூர் மார்க்கெட் பின்னே உள்ள செனரல் ரயிலடியை நினைவு படுத்தியது . RAC  வரை வந்துவிட்டதால் எப்படியும் வண்டியில் ஏற விடுவார்கள் , அவசரப்பட வேண்டாம் என நினைத்துக்கொண்டேன் . அடுத்த கவலை, என்னை பின்தொடர்ந்து வருவதாக சொன்னவர்கள் இன்னும் வந்து  சேரவில்லை . அவர்களை தொடர்பு கொண்டபோது . எங்களுக்கு ஏற்பட்ட அதே சிக்கலே அவர்களுக்கும். எங்கோ போக்குவரத்து மாட்டிக் கொண்டிருப்பதாகவும், பாட்னா இன்னும் 30 கி.மீ என்று சொல்லும் போர்டை பார்த்ததாக சொன்னதும் குழப்பம் துவங்கியது . “கிழிந்தது கிருஷ்ணகிரி”. அவர்கள் வந்தடைய இன்னும் எப்படியும் முக்கால் மணி நேரமாவது ஆகும் .

 ரயில் எந்த நிமிடமும் வரலாம் என்கிற மாதிரி அங்கு காணப்பட்ட நிலையில் எனக்கு , இது இன்னமும் பதட்டத்தை அதிகரித்தது . இப்போது வண்டி வந்துவிட்டால் என்ன செய்வது . நாம் ஏறி பயணப்படுவதா? , காத்திருப்பதா? என்கிற சிந்தனையை தள்ளி வைத்தேன் . ரயில் வந்து நிற்கும் பிளாட்பாரம் கண்டுபிடித்து விட்டேன். அது நான் நின்றிருக்கும் பிளாட்பாரத்திலிருந்து ஏழு எட்டு லைனுக்கு முன்னால் இருந்தது . முன்பதிவு லிஸ்ட் இன்னும் ஒட்டாததிலிருந்து வண்டி வருவதற்கு தாமதப்படும் என சாதகமாக யூகிப்பதை தவிர எனக்கும் வேறு வழி இல்லை


அதற்குள் என்னை  ஜீயர்  அலைபேசியில் அழைத்தார் , தில்லியில் நாராயணசாமி பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக இருந்தார் , அவர் மூலம் தில்லியில் உயர் அதிகாரியிடம் பேசி இங்கு 90 பேருக்கு மேல் கூட்டம். இருக்கிறு வண்டியை சிறிது தாமதப்படுத்த சொல்லுங்கள் என்றார் . நான் முழுமையாக எனது அனைத்து கட்சி  தொடர்பையும் துண்டித்து விட்டேன் என்கிற தகவல்  ஸ்வாமிக்கு தெரியாது . நல்ல வேலைக்கு, நாராயணசாமியை தொடர்பு கொள்ளும் துர்பாக்கியத்தை எனக்கு கதாதரப்பெருமாள் தரவில்லை , ரயில் வருவதற்கு இன்னும் மூன்று மணி நேரமாகும் என்கிற அதிகாரப்பூர்வமான தகவல் வந்ததும் . நான் அவர்களுடன் தொடர்பு கொண்டு நிதானமாக வரச்சொன்னேன் . சில நிமிடங்களில் எங்கள் சீட்டுகள் உறியாகிவிட்டதாக குறுந்தகவல் வந்ததும் . ஒரு நிம்மதி . மதியம் 2:00 மணிக்கு வரவேண்டிய வண்டி , ஒரு வழியாக இரவு 9:30 மணிக்கு வந்து சேர்ந்தது . புறப்படும்போது 10:00 மணியாகிவிட்டது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்