https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 22 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -61 . வளர்சிதை மாற்றம் .


ஶ்ரீ:





வளர்சிதை மாற்றம் 


பதிவு :  453 / தேதி :- 22 . மார்ச்   2018






வேளுக்குடி ஸ்வாமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது  அவர் சொன்னதனது உபன்யாசத்திற்கான கூறுமுறையை அன்றாட மேம்படுத்துதல்  மற்றும் மாற்றி அமைத்துக் கொள்ளுதல் பற்றிய உரையாடல் ,எனக்கு ஒரு அற்புத திறப்பை கொடுத்தது . மரபான விஷயத்திலிருந்து காலத்திற்கு உகந்த கருத்துக்களுக்கான  தேவை ஏற்படும் போது , அதற்கு ஒரு நவீனத்தன்மை இருப்பது தவிற்க இயலாதது  . அவை அனைத்தும் வேதக்கடலில் எங்கோ சொல்லப்பட்டவைகளே. இன்று சொல்லப்படுவதை அவற்றுடன் பொருத்தி புரிந்து கொள்ள ஒரு சிறுவனின் உற்சாகம் தேவைப்படுகிறதுஇணைத்து பார்க்கும் யுக்தி தெரிந்து விட்டால், மேம்படுத்துதல் மூலமாக அவை சொல்ல வருகிற அர்த்தம் நமக்கு பிரமிப்பை கொடுத்து விடலாம் .

இது  ஒருவகையில் நான் எதிர்பார்த்த கருத்தும் கூட . இன்றைய நவீன உலகிற்கு பொருந்தும் கருத்துக்கள் மதத்திற்கு எதிரானதாக நினைப்பதற்கு முன்பாக, அதுபற்றிய ஒரு மாற்று சிந்தனைக்கு அவை அறைகூவுவதை பற்றி அறிஞர்களும் ஞானிகளும் விவாதிக்கும் ஒரு சூழல் எழுந்ததால் , புதிய பாதைகளும் கருத்துக்களும் கண்டடையப்படலாம் என்கிற எண்ணம் மிகுந்த உற்சாகத்தை கொடுக்க கூடியதாக இருந்தது. காரணம் ஞானி அறிஞனைவிட நுண்புரிதலால் ஆனாவன். அதுவேதவிஞ்ஞானம்என்கிற கருதுகோளை நோக்கி என்னை நகர்த்த துவங்கியிருந்தது .

அன்று நான் அடைந்திருந்த புரிதல் , வேதம் என்பது அகவயமான விஷயமாகவும் அதற்கு புறவயமான சான்று போல விஞ்ஞானம் என்பதாக இருந்தது . ஒரு முனையில் இது சரியான புரிதல்தான் என இன்றுவரை நினைக்கிறேன் . ஆனால் அதை விளங்கிக்கொள்ள நான் பயணித்த பாதை மிக சிடுக்குகள் மிகுந்ததாக மாறிப்போனது . அதை நோக்கி தீவிரமாக பயணப்பட்ட போது ஒரு விஷயம் நினைவிற்கு வந்து திகைப்பை கொடுத்தது . 1980 ம் ஆண்டு ஒரு சனிக்கிழமை நடுநிசியில் நண்பர்களுடன் நடந்த விவாதத்திலிருந்து அது தொடங்கியதை இன்று நினைவு கூறுகிறேன் . அன்று இரவு முழுவதுமாக அதைப் பற்றிய பேச்சும் சிந்தனையுமாக சென்றது . மறுநாளும் அது பற்றிய விவாதம் தொடர்ந்ததுஅன்று நடந்த விவாதத்தின் சாரம் . கோவில் அனைத்தின் மையம்

இன்று விஞ்ஞான பூர்வகமாக நிரூபிக்கப்பட்ட நவ கிரகத்தின் இருப்பு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் என்பதிலிருந்து  நிதர்சணமான உண்மையை நோக்கி நகர்ந்து ,இப்போதைக்கு வெளியில் உள்ளது உண்மை என்றால் கர்பகிரகத்தில் உள்ளது மட்டும் எப்படி பொய்யாக இருக்க முடியும்? என்பதாக இருந்தது . அப்போதுமெய்ஞானம், விஞ்ஞானமும்இரு இணைகோடுகள் , இவை எங்காவது சந்தித்துக் கொள்ளலாம் என்கிற கருதுகோளை அடைந்தோம். அதன் தொடர்ச்சியாக எனது நண்பன் எனக்கு ஒரு புத்தகத்தை பரிசளித்தான் அது Erich von Däniken எழுதிய Chariots of the Gods? என்கிற புத்தகம் . அது ஒரு மின்னலின் தொடுதல் போல மூளையை சொடுக்குபவைகள் , பாதிக்கும் மேல் வாசிப்பை நிறுத்திக்கொண்டு , புத்தகத்தை நணபனிடம் திரும்பிக் கொடுத்துவிட்டேன் . அவை எனது அடிப்படையை ஒரு விளையாட்டை போல சிதைத்து விடுகிற ஆற்றலும் அவற்றை மறு கட்டுமானம் செய்ய எந்த உதவியையும் செய்யாத தை கவனித்து . நான் என்னை குழப்பிக்கொள்ள விழையவில்லை .

சில வருடங்கள் கழித்து விக்கிபீடியாவில் இப்படி ஒரு தகவலை பார்த்தேன் . சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நூலாசிரியர் ( Erich von Däniken ). அயற்கோளிலிருந்து வந்தோர் மானிடப் பண்பாட்டில் மாற்றங்கள் விளைவித்தனர் என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தனது நூல்களின் மூலம் பலரறியச் செய்தவர் இவர்.தனது புத்தகங்கள் 32 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும் 63 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளதாகவும் டேனிகன் தெரிவித்திருந்தார்.இவரது கருத்துகள் அறிவியலாளர்களால் போலிவரலாறு என்று கருதப்பட்டு நிராகரிக்கரிக்கப்பட்டன. போலிவரலாறு என்பது ஆய்வு நெறிமுறைக்கு ஒவ்வாத அல்லது ஆதாரமற்ற தகவல்களை உணர்வுகளைத் தூண்டும் வகையில் வரலாறு என்ற பெயரில் தருவதாகும். இவற்றை உண்மையென்று ஒத்துக் கொண்டால் வரலாற்றுப் புத்தகங்களில் பெருமளவு மாறுதல் செய்ய நேரிடும் என்று கூறிவிட்டது.

வேதவிஞ்ஞானம்என்கிற கருதுகோள் . இன்றைய நவீன கண்டுபிடிப்புக்களுக்கு எல்லாம் வேதத்தில் இருந்து பெறப்பட்டவைகள் என்பது போல தொனிக்கும் ஒரு போக்கு துவங்கியதும் அதன் முக்கியத்தும் அர்த்தமிழந்து  போனது. இது போன்ற கருத்துக்களை பற்றி பௌரானிக மரபில் நெடுங்காலமாக சொல்லப்பட்டு வரும் , பல கருத்துக்கள் மிகை நம்பிக்பையாகவே  மிக தீவிரமாக முன்வைக்கப்பட்டு வந்தன . அதற்கான ஒரு வெளிப்படையான விவாதம் நடத்த இயலுமா என்கிற விழைவே ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் அமைப்பை பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்தும் வரிவாக திட்டமிட்ட போது (Open forum) “திறந்த அரங்கம்என்கிற ஒன்றை உள்ளடக்கியதாக அது இருந்தது.

மனதளவில் அந்த திட்டம் அலை அலையாக எழுந்தாலும், முழுமை பெறாதநிலையில் தான் இருந்து கொண்டிருந்தேன். பாட்னாவிலிருந்து திரும்பி வரும் இரண்டு நாள் பயணத்தை ஜீயர் ஸ்வாமியுடன்  இணந்து வர வேண்டும்  என முடிவெடுத்திருந்தது . இந்த விஷயங்கள் குறித்து பேச நிறைய வாய்ப்பும் இருக்கும் என்கிற நம்பிக்கையில் . அன்று மாலை ஜீயர் ஸ்வாமிகள் அதே வண்டியில் வேறு பெட்டியில் வருகிறார். , வாய்ப்பு கிடைத்தால் தெளிவாக பேசி விட வேண்டும்  என முடிவெடுத்து , மதிய உணவிற்கு பிறகு தூங்கச் சென்றேன் . வண்டி ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரை கடந்து கொண்டிருந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...