ஶ்ரீ:
அழுந்திய திருவடி
நேற்று இரவு திருமண ஊர்வலத்தில் கண்ட கட்சி எனக்கு மிரட்சியை அளித்திருந்தது , என்னால் புதுவை அல்லது தென்னகநகரங்களை நினைக்காமல் இருக்க இயலவில்லை . அறம் மீறல் எங்குமுள்ளது ஆனால் இவ்வளவு பகிரங்கமாக அவை நிகழும்போதும் , மக்கள் அதை அமைதியாக கடந்து செல்லுகிறபோதும் ஏற்படும் உளவலிதவிற்க இயலவில்லை, ஊர்வலம் அந்த தெருவுக்குள் நுழைந்தபோது நாங்கள் நின்றிருந்த இடத்தின் அருகில் எல்லா கடைகள் அடைக்கப்பட்டிருந்தான . இரவு 10:00 மணியாகி விட்டதால் கடைகள் அடைக்கப்பட்டு விட்டதாக முதலில் நினைத்தேன் . ஆனால் அங்கே தள்ளுவண்டியில் பழம் விற்றுக்கொண்டிருந்தவரிடம் இவர்கள் யார்? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் ?என்றதற்கு வாய் திறந்து பேச மறுத்தும் , அங்கு நின்று கொண்டிருந்த சிலர் அங்கிருந்து மௌனமாக விலகியதை பார்த்ததும் , அந்த ஊரின் நிலவரம் தெளிவாக புரிந்து போனது . ஒரு கொடும் கனவு போலவே அது எப்போதும் எனக்குள் இருந்தது .பின்னர் அமைதியாக விடுதிக்கு திரும்பினோம் . அங்குள்ள நிலைமையை மேலதிகமாக ஏதாவது தெரிந்து கொள்ள முயற்சித்த அனைத்தும் வீணானது சந்தித்த எவரும் எதை பற்றியும் பேசும் மன நிலையில் இல்லை.
கதாதரரின் கோவிலை பகலில் நிதானமாக பார்க்கலாம் என முடிவு செய்திருந்தோம். எல்லாம் காலை பிதுர் தர்பண நிகழ்விற்கு பிறகுதான் என்று சொல்லிவிட்டார்கள் . அதிகாலை எழுந்தபோது வெந்நீர் இல்லாமல் குளிப்பது சாத்தியமில்லை என்றிருந்தது. அதிகாலை அங்கே கடும் குளிர் இருந்தது. நம்மூர் மார்கழி மாத குளிரோ , விடுமுறைக்கு செல்லும் தமிழக மலைவாசத்தளத்தின் குளிரோ இத்துடன் ஒப்பிட இயலாது . காற்றிலியே ஒருவித பச்சை வாசனை குளிரின் தன்மையை பற்றிய அச்சத்தை அதிகப்படுத்தியிருந்தது . தங்கியிருந்த விடுதியில் நாங்கள் பால் காய்ச்சுவதற்கு வைத்திருந்த எலெக்டிரிக் மக்கில் தண்ணீரை கொதிக்க வைத்து விளவி குளித்து முடித்து பிதுர் தர்பணத்திற்கு கோவிலுக்கு சென்றோம் .
முதலிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதாலும் , அன்றைய சூழலில் நாங்கள் தான் குழுவாக நிறைய பேர் இருந்ததால் தலைமை பண்டா , முதலில் அழைத்து எங்களை வரிசையாக அமரச்சொன்னார் , நானும் என் மனைவியுமாக அருகருகே அமந்துகொண்டோம் . அந்த பண்டா தமிழ் மாதிரி ஒன்றை பேசினார் . அவர்கள் ஒரு காலத்தில் தமிழக பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றார்கள் . அனைவருக்கும் மந்தார இலையில் கொஞ்சம் புஷ்பம் கோதுமை மாவு என ஒன்றை கொடுத்தார்கள் . அது தவிடும் கோதுமையும் கலந்து ஒருமாதிரி இருந்தது . அவர் சொல்ல சொல்ல அந்த கோதுமை தவிடை 37 சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க சொன்னார் , பிறகு வழமையான திதி மாதிரி அனைத்தும் முடிந்த பிறகு அந்த பிண்ட பிரதானத்தை பெருமாள் பாதம் உள்ள அந்த யாக கிணற்றில் போட்டு திரும்பும் முன்பாக நதி மற்றும் அங்குள்ள ஒரு ஆலமரத்தில் ஏதோ செய்ய சொன்னார்கள் நாங்கள் செய்து முடித்துவிட்டு , அங்கிருந்து பாட்னா செல்ல வேண்டும் .
காலை தொடங்கிய தர்பணத்தி காரியங்கள் ஒவ்வொருவராக அடைந்து பூர்த்தி செய்ய நெடு நேரமாகியது . கோவிலையும் ஊரையும் மறுமுறை ஒரு சுற்று வரவேண்டும் என்கிற எண்ணத்தை செயல்படுத்த முடியவில்லை . நேற்று நடந்த அந்த ஊர்வலம் குறித்து இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் நிறைவேறவில்லை . அதிகால எழுந்த போது நிறைய நேரமிருக்கும் என்கிற கணக்கு எப்படி பொய்த்து போனதென புரியவில்லை . பண்டா சொன்ன சிறு சிறு காரியத்தை செய்து முடித்து வந்து திரும்ப அமர்ந்த போது காலை 9:00 மணியை தாண்டி இருந்தது. பாட்னாவிலிருந்து எங்களுக்கு சென்னைக்கு மதியம் 2:00 மணிக்கு ரயில் . இப்போதோ மணி 9:00 கடந்திருந்தது. விடுதிக்கு திரும்பி அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்ப 1:00 மணி நேமாகிவிடும்.
பாட்னாவிலிருந்து ஸ் சென்னைக்கு நாங்கள் போட்டிருந்த டிக்கெட் இன்னும் RAC யில் இருந்தது . புதுவையில் இருந்து கிளம்பும் போதே எமெர்ஜென்சி கோட்டாவில் பதிந்த போது எல்லாம் சரியாகிவிட்டது என எனது கம்பெணி மேனேஜர் என்னிடம் சொல்லியிருந்தார் . அவரை தொடர்பு கொண்டபோது புதுவையிலிருந்து EQ கடிதம் பாட்னா ஃபேக்ஸ் மூலம் அனுகப்பட்டதற்கான ரசீதை எனக்கு அனுப்பி இருப்பதாக சொன்னார் . ஸ்டேஷன் மாஸ்டருக்கான கடிதத்தை நான் தனியாக வைத்திருந்தேன். " ஜீயர் ஸ்வாமிகளிடம் என் ரயில் டிக்கெட் சிக்கலை சொல்லி சற்று முன்னதாக கிளப்பினேன் . பாட்னா கயாவிலிருந்து சுமார் 90 கி.மீ தூரம் 3:00 மணி நேர பயணம் மதியம் 2:00 மணிக்கு எங்கள் வண்டி பட்னாவிலிருந்து புறப்படும் நாங்கள் கிளம்பும்போது காலை 10:00 மணி .
வழி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிக் கொண்டே வந்தது . 1:00 மணிக்குள் வந்திருக்க வேண்டிய பாட்னா இன்னும் வரவில்லை பரபாப்பு தொற்றிக்கொண்டது . ஒருவழியாக 1:45 பாட்னா ரயில்வே நிலையத்தை அடைந்தோம் . விசாரித்தபோது எங்கள் டிக்கெட் அதுவரை உறுதி செய்யப்படவில்லை என்கிற தகவல் கிடைத்ததும் .என்ன செய்வது என்கிற பதட்டம் எகிறியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக