ஶ்ரீ:
அக்னிப்பிரவேசம்
பதிவு : 438 / தேதி :- 07. மார்ச் 2018
ராமஜென்ம பூமிக்கு செல்லும் பாதைகள் முழுவதுமாக கலாய் தகுடுகளினால் ஆன படலால் முற்றாக மறைக்கப்பட்டிருந்தது . வழி முழுவதும் ஒருவருக்கு மேல் செல்ல முடியாத நெருக்கமான வழியே முழுவதுமாக இருந்தது. ஆனால் வெளியே வந்த வழி முழுவதும் கடைத்தெருக்கள் செறிந்த , மிகுந்த பரபரப்பான சந்தை பகுதியில் கொண்டு விட்டிருந்தது . எங்கு நுழைந்து எங்கு வந்தோம் என்பதே புரியவில்லை . ராமஜென்ம பூமி ஊரின் மைய்யப்பகுதியாக இருந்தது அந்த சர்ச்சைக்குறிய இடம் மட்டும் மைதானம் போல பலவித அடுக்கு காவலுக்கு மத்திலும் கடுமையான கட்டுப்பாடு இருந்தது . சற்று இடைவெளியில் முற்றாக சகஜ நிலை காணப்பட்டாலும் . கரசேவை நிகழ்ந்த நாளும் அங்கு நிகழ்ந்த வன்முறையும் சர்ச்சைக்குரிய அமைப்பு இடிக்கப்பட்ட பிறகு நடந்த இன்றுவரை அதன் பின்விளைவுகளுக்கு பஞ்சமில்லை . அதை இப்போது நினைக்கும்போது பெரும்பாலான இடங்கள் பழமை மாறாது ஒரு கால எல்லைக்குள் மட்டுமல்லாது அரசியல் பகடைக்குள்ளும் சிக்குண்டது போல இருந்தது .
திரு. ஜெயமோகன் தனது சாட்சி மொழி என்கிற கட்டுரைத்தொகுப்பில் இப்படி சொல்கிறார். என்.எஸ்.மாதவன் எழுதிய ஒரு மலையாளக் கதையை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். ஒரு நாளிதழ் ஆசிரியர் அதன் கதாநாயகர். பழைய சோஷலிஸ்டு இதழாளர் அவர் என்பதை என்.எஸ்.மாதவன் துல்லியமாக கதையில் நிறுவுகிறார். மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். லோகியாவுடனும் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடனும் நெருக்கமானவர். ஊடக முதலாளியாலேயே அஞ்சப்படுபவர். கட்டற்றவர். குடிகாரர். இலக்கியவாசிப்பு கொண்டவர். உச்ச அதிகார மையங்களுடன் எல்லாவகையான தொடர்புகளும் கொண்டிருந்தபோதிலும் எந்தவகையான சுயநல நோக்கங்களையும் அடையமுயலாத நேர்மையாளர்.
அவர் நள்ளிரவில் நாளிதழ் ஆசிரிய வேலையில் இருக்கிறார். அத்வானி தலைமையில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அயோத்திக்குக் கரசேவைக்குச் சென்றிருக்கும் தகவல் வருகிறது. நரசிம்மராவ் அரசு கண்ணைமூடிக்கொண்டிருக்கிறது என்று செய்தி கிடைக்கிறது. ஆசிரியர் பதற்றமும் கவலையும் கொள்கிறார். தார்மீகமான கொந்தளிப்புக்கு உள்ளாகி செயலிழந்து குடிக்ககிறார். கடைசியில் மசூதிக்கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது என்று தகவல். உதவியாசிரியர்கள் நாளிதழின் முதல்பக்கச் செய்தியாக ‘சர்ச்சைக்கிடமான கட்டிடம் இடிக்கப்பட்டது’ என்று அச்சு கோர்த்திருக்கிறார்கள். ஆசிரியர் அதை எடுத்து வெட்டிவிட்டு ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டது’ என்று செய்தியை மாற்றுகிறார். இதுதான் கதை.
இந்தக்கதை உண்மையில் நடந்தது. அந்த நாளிதழாசிரியரை நான் ஒருமுறை பார்த்துமிருக்கிறேன். செய்தியை கடைசி நிமிடத்தில் மாற்றியமைத்த நிகழ்ச்சியை அப்போது அவருடன் இருந்தவர்கள் சொன்னார்கள். அந்த நாளிதழாசிரியர் என்னுடைய பெரும் மதிப்பிற்குரியவர். எந்தவகையான நேர்மையில்லாத செயலையும் அவர் செய்யமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன். ஆனால் அவர் இங்கே இதழாளர் என்ற எல்லையில் இருந்து மீறிச்செல்கிறார். வரலாற்றை அவர் செய்தியாக்கவில்லை. மாறாக வரலாற்றை அவர் மாற்றியமைக்கிறார். அதற்கு தனக்கு உரிமை இருப்பதாக நினைக்கிறார்.
அந்த இதழாளரின் நிலைபாட்டைத்தான் இந்தியாவில் உள்ள முற்போக்காளர்கள் அனைவரும் எடுத்தார்கள். அதை மீண்டும் மீண்டும் பாபர் மசூதி என்று சொல்லிச் சொல்லி நிலைநாட்டினார்கள். அங்கே ஒரு நீண்டகால உரிமைச்சர்ச்சை நிகழ்ந்திருந்தது என்பதையே முழுமையாக மறைத்தார்கள். அந்நிகழ்ச்சி நடந்து முடிந்தபின் வந்த இன்றைய புதிய தலைமுறைக்கு அந்தத்தகவல்கள் எதுவுமே தெரியாது. பல்லாயிரம்பேர் அமர்ந்து தொழுகைசெய்துவந்த ஒரு மசூதியை ராமர்கோயில் கட்ட இடம்வேண்டும் என்று கோரி இந்துத்துவர்கள் இடித்துவிட்டார்கள் என்ற ஒற்றைச்சித்திரம்தான் இன்றைய முஸ்லீம்களிடம் உள்ளது. இவ்வருடம் டிசம்பரில் தமிழகம் முழுக்க ஒட்டப்பட்ட பல்லாயிரம் சுவரொட்டிகளில் இருந்தது அந்த வாசகம்தான்!.
இன்று அந்த நிலத்தில் ராமருக்குக் கோயில் கட்டப்படுவதை நான் எதிர்க்கிறேன். அந்த இடம் அரசியலாக்கப்பட்டதன் வழியாக, ஒரு அறமீறல் அங்கே நிகழ்ந்ததன் வழியாக, இந்திய ஜனநாய்கத்தின்மீதும் இந்து மனநிலைமீதும் ஒரு களங்கமாக அது ஆனதன் வழியாக, அங்கே ராமருக்கு கோயில் கட்டபப்டும் தகுதி அவ்விடத்துக்கு இல்லாமலாகிறது என்றே எண்ணுகிறேன். அங்கே நம் நாட்டின் மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் ஒரு தேசியச்சின்னம் மட்டும் உருவாக்கப்படுவதே சிறந்தது என்று என் எண்ணம். அங்கே ஒரு கோயில் கட்டப்படுமென்றால் ஒருபோதும் அது ஓர் ஆன்மீக மையமாக இருக்காது, ஓர் அரசியல் சின்னமாகவே இருக்கும். என்கிறது அந்தக் கட்டுரை.
இரு சமூகமும் ஒரு நாளும் இணங்கி வரமுடியாத துரதிஷ்ட நிலை . சில அரசியல் சரிநிலக்களை கொண்டதாக உருவாகி வருவது ஆபத்தானது. அயோத்தியில் இருக்கையில் அனைவரும் இந்த அழுத்தத்தை கடந்தே சென்றாக வேண்டும் என்பது அங்குள்ள யதார்த்தம் .மத நல்லிணக்கத்தை வலியுறுத்த அக்னி பிரவேசம் போல ஒன்றை இன்று இந்திய பொது சமூகம் செய்யவேண்டி இருக்கும்
காலை சீக்கிரமாக ஜென்ம பூமி சென்று வந்து விடலாம் என்பதால் காலை உணவை வழிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்றனர் சிலர் . வரும் வழியில் விற்ற இட்லியை பார்த்ததும் சிலரை கட்டுப்படுத்தமுடியவில்லை. அவரவர் இடலிக்கு சொல்லி சாப்பிட ஆரம்பித்தனர். யாத்திரை துவங்கி ஒரு வாரகாலத்திற்கு மேலானபடியால் அனைவருக்குமே நாக்கு பழைய சுவையை தேடியது .இட்லி சட்னியை பார்த்ததும் குழந்தைய்ய போலாயினர் சிலர் . எங்கும் ஒரே குதூகலமாக இருந்த்து . ஒரே ஒரு தட்டுவண்டி கடை என்பதால் னைவரும் முட்டிமோதினர் . அரிசி உப்புமாவும் அவர்களை அந்தப்பாடு படுத்தியிருந்தது . பூசணிக்காயை பார்த்த மாத்திரத்தில் அனைவரும் தலை தெரிக்க ஓடத்தயாராயினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக