https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 5 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 44 . வேணி மாதவன் .

ஶ்ரீ:



வேணி மாதவன் 





பதிவு :  435 / தேதி :- 04. மார்ச்   2018







எல்லோரும் ஜீயர் சுவாமியின், பூஜையில் பங்கேற்க கரைக்கு சென்றார்கள்சென்று நானும் இணைந்துகொண்டேன் . ஜீயர் சுவாமிகள் தனது 300 வருட பாரம்பரிய நித்யாராதன பெருமாளை எடுத்துவந்திருந்தார் , தீர்த்த ராஜன் என வேதத்தில் புகழப்பட்ட  புராண நதிக்கரையான் திருவேணி சங்கமத்தில் விசேஷித்து பூஜை , கண்டருளப்பட்ட பிரசாத விநியோகம் எல்லாம் நடந்து முடிந்தது . யாத்திரை குழுவினர் தங்கியிருந்த இடத்தில் எல்லோருக்கும் காலை உணவு ஒருங்கி இருந்தது . பூஜை முடிந்ததும் அனைவரும் காலை உணவிற்கு விடுதிக்கு திரும்பினர் . நாங்களும் அந்த பிரமாண்டமான ஆசிரமத்திற்கு சென்றோம் . முதல் நாள் இரவு வந்தபோது ,அந்த இடம் கலவையான பல உணர்வுகளை என்னுள் எழுப்பி இருந்தது . இப்போது எந்த ஆரவரமுமின்றி அமைதியா இருப்பதாக பட்டது . இரவில் முன்பின் தெரியாத அடந்த பிரதேசம்  ஏற்படுத்திய ஒவ்வாமை இப்போதில்லை . இருள் எப்போதும் நமக்கு கற்பனைகளை வாரி வழங்க விடுபவை




அந்த இடத்தின் பிரமாண்டத்தை இப்போது பார்க்க முடிந்தது. முதல்நாள் அங்கு வந்து நான் தான் விடுதியின் சாவிகளை வாங்கி சென்றேன் , கிழக்கு மேற்கு தெரியாத இருட்டில் பார்த்தது . இப்போது பகல் வெளிச்சத்தில் முற்றாக வேறு மாதிரி இருந்ததுஒரு சதுரமான அமைப்பும் நான்கு பக்கம் தங்கும் அறைகளை கொண்ட இரண்டடுக்கு கட்டிடம் அது . நடுவில் முற்றம் போல பெரிய திறந்த வெளி . சமையல் அங்குதான் நிகந்திருக்க வேண்டும் . அனைவருக்குமான காலை உணவாக அரிசி உப்புமா,சாம்பார் தயாராக இருந்தது. அதை எடுத்து இரண்டு பித்தளை அண்டாவில் வைத்துவிட்டு, அனைத்தும் ஏறக்கட்டி விட்டார்கள் .மதிய உணவிற்கு தேவையானவைகள் காலையிலேயே செய்து முடிக்கப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டு விட்டது . முன்னமே அங்கு வந்துவிட்டவர்கள் , தட்டுடன் வரிசையில் நின்று உணவு பெற்று சென்று கொண்டிருந்தனர். நாங்களும் அங்கு காலை உணவை முடித்து ,அந்த விடுதியை விட்டு புறப்பட தயாரானோம்.

எனது வண்டி ஓட்டுனரை அழைத்து காலை உணவு அங்கு முடித்துக்கொள்ள சொன்னேன் . அவன் பித்தளை அண்டாவில் வைத்திருந்த அரசி உப்புமாவை ஒருவித ஒவ்வாமையுடன் எட்டி பாரத்தவர் , முகத்தை சுளித்து என்னிடம் இரண்டு நாளாக அரசி சாப்பாடு எனக்கு சரி வராது. நான்  வெளியில் எங்காவது ரொட்டி சாப்பிட்டு கொள்கிறேன் என்றார் . நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன் . தொடர்ச்சியாக சப்பாத்தியாக சாப்பிட்டால் நமக்கேற்படும் அதே வெறுப்பு , அவருக்கு அரசியில் வந்திருக்கிறது

முதல்நாள் நடந்த குழப்பத்திற்கு பிறகு இந்த குழுவை ஒரு கணமும் விட்டுப்பிரிவதில்லை என்கிற சங்கல்பத்தோடு இருந்தேன். தங்கியிருந்த விடுதியை காலிசெய்துவிட்டு . அனைவரும் அங்கிருந்துவேணி மாதவன்கோவிலுக்கு புறப்பட்டோம் , பின் அங்கிருந்து  நந்திக்கிராமம் செல்லலாம் என பேசிக்கொண்டார்கள் . நந்திக்ராமம் கோகுலத்திற்கு அருகில் எங்காவது இருக்கும் என பிழையாக புரிந்துகொண்டேன் . இது பரதன் ராமரிடம் தான் வேண்டிப்பெற்றுக்கொண்ட அவரது பாதுகைகளை எடுத்துக்கொண்டு அயோத்திக்கு செல்ல விரும்பாது நந்திக்கிராமத்திலேயே தங்கிவிட்டான் , என்பதை அங்கு சென்ற பிறகு அறிந்து கொண்டேன்.எங்கள் பாதுகாப்பு கருதி ஒரு ஏற்பாடு செய்துகொண்டேன் . வழியில் எங்களுக்கு நிகழ்ந்தது போல விபத்தோ சிக்கலோ பிறிதொரு முறை நிகழக்கூடாது என முடிவெடுத்து இரண்டு பேருந்துகளுக்கு இடையில் பாதுகாப்பாக  ஜீயர் ஸ்வாமிகளும் அவர் குடும்பத்தார் சென்ற வண்டியை தொடர்ந்து எங்கள் வண்டியையும் அமைத்துக்கொண்டோம்



திரிவேணி சங்கமத்திலிருந்து நந்தி கிராமத்திற்கு முறையான பாதைகள் இல்லை. இருப்பவை எல்லாம் வயல் வரப்புகளைப்போலவே இருந்தன. முழுவதும் மண் பாதைகள். மிக மெல்ல ஊர்ந்தபடி இருந்தது அந்தப்பயணம் . சில இடங்களில் வழி தவறி, பின் அங்கிருந்த சிலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு நந்திக்கிராமத்தை அடையும்போது மலை நெருங்கிகொண்டிருந்தாது . சென்று சேரும்போது மாலை 4:00 மணி . அந்த இடம் ஒரு தோப்பு பகுதியைப்போல இருந்தது . அநேகமாக ராமாயண காலத்தில் இந்த இடம் இப்படித்தான் இருந்திருக்கும் என்கிற உளமயக்கை கொடுத்தது . அவ்வளவு புராதன இடமாக காட்சியளித்தது . சரியாக பாமரிக்கப்படாத நந்தவனத்திற்கு உள்ளே ,ஒரு சிறிய கோவில் அதில் பரதனும் அனுமனும் கட்டி தழுவிக்கொள்ளும் சிற்பம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. அது ஒரு வித்தியாசமான சிற்பமாக இருந்தது . அந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ள இன்னும் அனுகி பார்க்க முயன்றேன். அது பூஜைக்குறிய ஸ்தலமாக இருந்த போதிலும் , நம்மூர் போல கெடுபிடிகள் இல்லாமல் இருந்தது. அனைவரும் கர்ப்பக்கிருகத்தினுள்ளே சென்று வர அனுமதிக்கப்பட்டனர் . வட இந்திய கோவில்களில் அனேகமாக இது வழிமுறையாக இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக