ஶ்ரீ:
ஒற்றை பாதம்
பதிவு : 443 / தேதி :- 12 . மார்ச் 2018
யாத்திரை ஏற்பாட்டாளர் 8:00 மணிக்குள் கயா சென்றுவிட வேண்டும் என்றும், அதற்கான காரணத்தை சொல்லி வலியுறுத்தியதால் புத்த கயாவை பார்க்காமல் கயாவிற்கு பயணத்தை தொடர வேண்டிய சூழல் எழுந்துவிட்டது . புத்த கயாவிலிருந்து கயா சுமார் 15 கி.மீ. அரைமணி பயணதூரம் . குறிப்பிட்ட நேரத்திற்குள் கயாவை அடையவேண்டும் என்கிற பரப்பு மட்டுமே அப்போது அனைவரிடமும் இருந்தது. திட்டமிட்டபடி 8:30 மணிக்கெல்லாம் கயா ஷேத்ரத்தை அடைந்தோம் . கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்தது . பொதுவில் பிதுர் காரியம் நடைபெறும் கோவில்கள் , பிற கோவில்களிலிருந்து மாறுபட்டிருப்பதை பார்த்திருக்கிறேன் . அந்த வித்யாசம் மிக நுண்மையானதாக உணரப்படுவது . அங்கு முழுவதுமாக சொல்லில் வடிக்க இயலாத ஏதோ ஒன்று கவிந்தது போல இருந்தது .
முஸ்லிம் அக்கிரமிப்பில் தப்பிய ஒருசில கோவில்களில் இதுவும் ஒன்று என்றனர் . நம்மூர் கோவிலின் சாயலில் இருந்தது , உள்ளே அர்த்த மண்பாடபம் கருவறை போன்றவை தனித்து இருந்தாலும் , அது அனைவரும் சென்று வரக்கூடிய வகையில் நிர்வகிக்கப்படுகிறது . அந்த கோவிலை நங்கள் சென்று அடைய இரவு 8:45 மணிக்கு மேல் ஆகியிருந்தது . கடைசிக்கட்ட பூஜை துவங்கி அப்போது தான்,ஆரம்பமானது , அங்கிருந்து சிலர் எங்களிடம் பூர்த்தியாகிவிடும் சீக்கிரம் செல்லுங்கள் என்றதும், நாங்கள் விரைந்து கர்ப்பகிரகம் சென்றடைந்தோம் .அது சுமார் இருபது அடி நீளம் அகலமும் கொண்ட ஹால் போன்ற அமைப்பு முற்றிலும் பளிங்கு கற்கலால் தரை அமைக்கப்பட்டு குளிர்ந்திருந்தது . அதன் மத்தியில் யாககுண்ட கிணறு போல சிறிய பள்ளத்தின் மத்தியில் கரிய பாறையால் ஆன கல் ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தது ,அதில் ஒற்றை பாதம். புடைப்பு சிற்பமாக இல்லமால் , குடைந்து செய்யபட்டிருந்தது . பல வருட பூஜையில் அது மழுங்கி புராதண ஒன்றாக , பார்ப்பதற்கு பலம்கொண்டு ஒருவர் ஆழமாக பதித்தது போல இருந்தது .
முதலில் அதை அடையாளம் காண இயலவில்லை . சற்று நிதானித்துக்பொண்டால் பாதம் துலங்கி வருவது தெரியும். பெரிய பாதம் சுமார் இரண்டடிக்கு சற்று குறைவாக இருக்கும். அந்த குண்டத்தை சுற்றி ஏராளமானவர்கள் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து கொண்டிருக்க , சிலர் அந்த குண்டத்தில் பூக்களை கொண்டு அர்ச்சித்தபடி இருந்தனர். நாம் வழக்கமாக கேட்கும் பாணியிலிருந்து சற்றும் ஏற்ற இறக்கமில்லாத ஒரு ஒழுக்குடன் அவர்கள் சகஸ்ரநாமத்தை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்த ஒற்றை ஒலி ஒரு ரீங்காரம் காரவையாக மனகத்திற்கு இதமாக இருந்தது .
நான் அதை இன்னும் சற்று அனுகி பார்க்க முயன்றேன் . அது எண்கோன யாக குண்டம் போல சுற்றிலும் சிறிய அலங்கார கல்லினால் சுவர் போல அமைத்திருந்தார்கள். உள்ளே பூக்களால் அலங்காரம் செய்யபட்டு நடுவில் அந்த ஒற்றை பாதம் , அந்த கர்ப்பகிரகமே ஒரு பெரிய பாறையில் அமைந்திருப்பதாகவும் மற்ற இடங்கள் மூடப்பட்டு இருப்பதாக பட்டது. பாதம் குழிந்து காணப்படுவதால் அதை சுற்றி குங்கும்பூவை சாந்து போல அரைத்து அதை அந்த பாதத்தை சுற்றி ஒரு கோட்டோவியம் போல அமைத்திருந்தார்கள். அந்த குண்டத்தை சுற்றி ஐந்து ஆறு பண்டாக்கள் அமர்ந்திருந்தனர் . ஒருவர் சுற்றி இருந்தவர்கள் செய்யும் அர்ச்சனையில் விழும் பூக்களை எடுத்து ஓரமாக வைத்தபடி இருந்தார். அங்கிருந்த பாண்டாக்கள் என சொல்லப்படுகிற அர்ச்சகர்கள் , நாம் கேட்டால் ஒரு வெள்ளை காடா துணியை அந்த பாதத்தின் மீது ஒற்றி எடுத்துக் கொடுக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக