https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 23 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -62 . கனவில் எழும் உரு .

ஶ்ரீ:





கனவில் எழும் உரு




பதிவு :  454 / தேதி :- 23 . மார்ச்   2018








அலை அலையாக மனதளவில் அந்த திட்டம் ஒன்றைத் தொட்டு ஒன்று எழுந்தபடி இருந்தது , எதுவும் முழுமை பெறாதநிலையில்தான் நான் அன்று நின்று கொண்டிருந்தேன்  இந்த விஷயங்கள் குறித்து பேச நிறைய வாய்ப்பும் இருக்கும் என்கிற நம்பிக்கையில் பாட்னாவிலிருந்து திரும்பி வரும் பயணத்தில் ஜீயர் ஸ்வாமியுடன் இணைந்தது இதை பற்றி விவாதிக்கலாம் எனநினைத்துதான் . சென்னைக்கு திரும்பி வருகையில்  ஜீயர் ஸ்வாமிகள் அதே வண்டியில் வேறு பெட்டியில் இருந்தார் . மதிய உணவிற்கு பிறகு தூங்கச் சென்றேன் . வண்டி ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரை கடந்து கொண்டிருந்தது. யாத்திரையின் கடைசி இரண்டு நாட்களாக இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்ததில் சரியான தூக்கமில்லை . பயணத்தின் போது காரில் தூங்கவது என்னால் முடியாதது . இப்போது ரயிலில் படுத்த சில நிமிடங்களில் தூங்கிவிட்டேன்

மதியம் 3:00 மணி இருக்கும், நல்ல தூக்கத்தில் யாரோ என்னை எழுப்பினார்கள் , நான்என்ன”என்றதும் என்னை தேடிக்கொண்டு ஜீயர் ஸ்வாமி வந்திருக்கிறார் என்று சொன்னதும்நான் சட்டென எனது படுக்கையிலிருந்து எழுந்து வந்தேன். பக்கத்து போகிக்கு சென்று பார்த்தபோது , பலர் சூழ்ந்து நின்று கொண்டிருக்க ,கீழ் படுக்கையில் அவர் அமர்ந்து அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார் , உடன் அம்மங்காரும் இருந்தார் . அவர்  என்னை பார்த்ததும் புன்னகைத்து , “நான் தான் ஸ்வாமியை அழைத்து வந்தேன் ,உங்களை பார்க்கஎன்றார். “விமானத்தில் செல்ல இருந்ததை ரத்து செய்துவிட்டு வந்தது ஸ்வாமியுடன் பேசவேண்டும் என்பதால்தானே?, அதான் ஸ்வாமியை இங்கு அழைத்துவந்து விட்டேன்என்றார் . நான் தேடிச்சென்று பேசவேண்டிய சூழல் எழாது ,அவரே என்னைத்தேடி வந்தது ஒரு நல்ல நிமித்தமாக தோன்றியது. நான் பேச நினைத்ததை இவர் எப்படி அறிந்து கொண்டார் என வியந்தேன்.

ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுகொண்டாட்டம் பற்றிய திட்டத்திலும் அதை செயல்படுத்துவதில்  பல இடர்கள் இருந்தன , ஒன்று வெளிப்படையானது , பிறிதொன்று அதன் வெளிப்படாத பகுதி  . எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசிவிட முடியாதுதான், ஆனால் பேச வேண்டிய நேரத்தில் பேசாது பெரும் காரியங்களை கையிலெடுப்பதைக் காட்டிலும் ஆபத்து பிறிதொன்றில்லை .பல பெரும் ஆளுமைகளின் மத்தியில் அது நிகழ இருப்பதால் அவர்களின் மன ஓட்டங்கள் , எதிர்வினைகள் அனைத்தையும் கணிசித்தே முன்னெடுப்புகள் நடைபெற வேண்டும் என நினைத்தேன்

அதில் எனக்கு சில வெளிப்படையான சந்தேகங்களுக்கும் , கேள்விகளுக்கும் இருக்கின்றன , ஆனால் அதற்கு பதில் கிடைக்காமல் போகும் ஆபத்திருக்கிறது . அவற்றை குறித்து நான் சில  கேள்விகளை எழுப்பினேன்  என்பதே கூட எனக்கு ஒரு  அவப்பெயராகும் வாய்ப்புகளையும் அறிந்திருந்தேன் . ஆனால் சிலவற்றை உறுதி செய்து கொண்டுதான் முன்னகர இயலும் . யாத்திரை சுமுகமாக முடிந்து ஊர் திரும்பும் மனநிலையில் ஜீயர் ஸ்வாமியுடன் அது பற்றி பேசுவது அனைத்திற்குமானது என நினைத்தேன்

முதலில் எனக்கு என் சிந்தனை மீதான தயக்கத்தை உதற வேண்டும் என்கிற நினைவில் அவருடன் பேச துவங்கினேன் . முதலில் ஸ்வாரஸ்யமாக நாங்கள் பேசுவதை கேட்டு எங்களை சூந்திருந்தவர்கள் ,ஒரு கட்டத்தில் ஆர்வமிழந்து  ஒருவர் பின் ஒருவராக அங்கிருந்து விலகினார் . நான் சுதந்திரமாக பேச வேண்டிய சூழல் எழுந்து வந்தது . ஆன்மீக விஷயங்களை முன்னெடுப்பதில் உள்ள தலையாய சிக்கல். இன்றைய சூழலில் மரபான அமைப்பிற்கு  திரளும் கூட்டத்தின்  எண்ணிக்கை மிக குறைவானது என்பதே . பெரும் பகுதிகள் கோவிலை சாராதவையாக நான் திட்டமிட்டிருந்தேன் . கோவில் சார்ந்து செயவதறகு அதில் ஒன்றும் இல்லை என்பது எனது ஆழுத்தமான கருத்தாக இருந்தது . அதன் அடைவுகள் மாற்றி அமைக்கப்பட்ட நிகழ்வுகளாக இருக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தேன் அதன் அடிப்படையில. நிகழ்வுகளை முன்னெடுப்பது மிகுந்த செலவேறியது . நன்கொடை வசூல் மட்டுமே கொண்டு அவற்றை  நிலை நிறுத்துவது நடவாது. அதையும் உவந்து செய்பவர்கள் மிக  சொற்பமானவர்கள்  , திருப்ப திரும்ப அவர்களையே நாடுவது ஒரு கட்டத்தில் சலிப்படையச் செய்து விடும் .அப்போதுதான் வேளுக்குடி ஸ்வாமியை இதில் இணைப்பதை பற்றிய என் யோசனையை முன்வைத்தேன்

வேளுக்குடி ஸ்வாமிகள் தனது பிரச்சார யுக்தியினாலும் , நா வண்மையினாலும் பெரும் புகழ் அடைந்திருந்த நேரம் அது. தனது முயற்சியின் விளைவை அவரே அப்போதுதான் உணரத்துவங்கி இருந்தார். அவருக்கான செல்வாக்கு , ஒரு புதிய இயக்கத்தை வளர்த்தெடுக்க போதுமானது . எங்கும் உள்ள அரசியல் இதிலும் தவிற்க இயலாமல் இருப்பதை நான் அறிவேன் . மிகுந்த கட்டுப்பாடும் , தனித்த பாரம்பரியமும் உள்ள ஒரு சம்பிரதாயத்தில் சில முன்னெடுப்புகள் நடைபெற வேண்டிய கட்டாயமிருப்பதை அனைவரும் தெரியும் , ஆனால்பூனைக்கு யார் மணிகட்டுவது ?” என்பதைப் போல கண்டும் காணாமல் இருந்தனர் .

அது ஆன்மீக ஆளுமைகளையும் அவர்களின் ஸ்தானம் பற்றிய சிக்கல் , அவர்கள் வெளிப்படையாக எவ்வளவு சகஜமாக பேசிக் கொண்டாலும் , நதியின் ஆழத்தின் மின்சாரம் போல ஒன்று ஓடிக்கொண்டுதான் இருக்கிறது . மெல்ல எனது திட்டத்தை அவரிடம் முன்வைத்தேன் , ஜீயர் ஸ்வாமிகள் தரப்பிலிருந்து  அதற்கு நான் எதிர் நோக்காத  ஒப்புதல் இருந்தது . அவர் எப்பவும்சுலபர்என்றாலும் , இது ஆளுமைகளின் நிர்வகிப்பது. சரியாக கையாள தெரியாது போனால் , முதல் பாதிப்பு நமக்கே என முடியும் ஆபத்து உள்ளது . அப்போது சூழலில் நான் வேளுக்குடி ஸ்வாமிகளின் உபன்யாசத்தை மிக ஆர்வமாக  கேட்டுக்கொண்டிருந்தேன். அதை தவிர அவரை பற்றிய மேலதிக தகவல்கள் அப்போது என்னிடம் இருக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன் சென்னை என் தொழில் சம்பந்தமான கூட்டத்திற்கு பிறகு வேளுக்குடி ஸ்வாமியை சந்திக்க சென்றேன்  . வெளியில் நிலவிய சூழல் காரணமாக நான் அவரை சந்திப்பதை தவிர்த்து திரும்பினேன். அன்றைய சூழலில் அவரை சந்தித்து பேசுவது சாத்தியமில்லை என்பதுதான் யதாரத்தம் . ஆனால் இதில் வேறு வகையில முயற்சிப்பதை பற்றிய ஊக்கம் கிடைத்தது , அதன் அடிப்படையில்தான் நான் ஜீயர் ஸ்வாமிகளிடம் எனதுஆயிரமாவது ஆண்டைபற்றிய பிரமாண்டமான கனவை சொன்னேன். அதற்கு அடிப்படையை ஏற்படுத்தி கொடுத்த அந்த சூழலில், அடுத்து என்ன எனபதை பற்றிய எந்த திட்டமும் என்னிடம் இல்லை . எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு அதன் திட்டங்களை வகுத்து முடிக்கும்போது , அதை செயல்படுத்துவதற்கான பாதைகள் திறந்து கொள்வதை பல முறை பார்த்திருக்கிறேன் . பல துறைகளில் பல முறை முயற்சித்து வெற்றி அடைந்திருக்கிறேன் . இது எனது பாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...