https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 24 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -63 . காலமெனும் நகரும் புள்ளிகள் .


ஶ்ரீ:
காலமெனும் நகரும் புள்ளிகள் 


பதிவு :  455 / தேதி :- 24 . மார்ச்   2018

சென்னையில் வேளுக்குடி ஸ்வாமியை சந்திக்க முயன்று தோல்வியில் முடிந்ததால், அது எனது அனைத்து திட்டத்திலிருந்தும் ஒரு மன விலகலை கொடுத்திருந்தது. புதிய முயற்சிகளில் சாதகமில்லாதது போல தோன்றிடும்  காலம் ஒன்று எழுந்து வருவது, என் எல்லா முயற்சியின் போதும்  நடப்பதுதான் . அப்போது அதிலிருந்து முற்றாக விலகி மனம் லயிக்கும் பிறிதொரு காரியத்தில் மும்முரமாக இருப்பேன் . வேளுக்குடி போன்ற ஒரு ஆளுமையை சந்தித்து பேசுவது சாத்தியம் இல்லாதது என்பதுதான் அன்று நடைமுறை யதார்த்தம். அவருடன் இணைந்து ஒரு புதிய இயக்கத்திற்கு முயல்வதென்பது கனவிலும் நடைபெற இயலாதது போல ஒரு தோற்றம் அப்போது இருந்தது . விலகல் மனப்போக்கு எனக்கு சாத்தியகூறுகள் நிறைந்த அதன் மாற்று வழிகளை காட்டிக்கொடுக்கும்

அயோத்தி யாத்திரை முடிந்து ரயிலில் சென்னை திரும்பி கொண்டிருக்கையில்  நான் ஜீயர் ஸ்வாமிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரது மைத்துனர் வேளுக்குடி ஸ்வாமியுடன் அனுக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்கிற செய்தி நான் அறிந்ததே , ஆனால் அந்த தொடர்பை அப்போது பயன் படுத்துவது குறித்து ஜீயர் ஸ்வாமிகளுடன் பேசுவதற்கு எனக்கு ஒரு தயக்கமிருந்தது. நான் ஜீயர் ஸ்வாமிகளிடம் மெல்ல எனதுஆயிரமாவது ஆண்டைபற்றிய பிரமாண்டமான கனவை படிப்படியாக சொல்லத் துவங்கினேன் . அந்த சூழல் எனது திட்டத்திற்கான அடிப்படையை ஏற்படுத்தி கொடுத்தது . கருதுகோள் என்ன? என்பதை பற்றியும், அதன் செயல் திட்டம் என்ன ? என்பது குறித்த எந்த தீர்மானமானமும் இல்லாத நிலையில், அது பற்றிய எண்ணங்களை உருவாக்கிக் கொண்டே சென்று ,அதன் வழியாக புதிய வழிகளை கண்டடைவது எனது அனுகுமுறையாக எப்போதும் இருந்திருக்கிறது .

இந்த மாதிரியான அனுகுமுறையில் இருந்துதான் ,இனி நான் செயல்படுத்துவதற்கான புதிய பாதைகள் திறந்து கொள்வதை பல முறை பார்த்திருக்கிறேன் . அதை பல துறைகளில் பல முறை முயற்சித்து வெற்றி அடைந்திருக்கிறேன் . ஒரு நிகழ்வு அல்லது  ஒரு விஷயம் எனக்குள் ஆழமான பாதிப்பு ஏற்படுத்தினால் அதுபற்றிய நினைவு ஒரு கனவு போல எழுந்து , எப்போதும் அதைப்பற்றிய சிந்தனையால் நான் சூழப்பட்டு விடுவேன்.. அதன் சாத்தியங்களை பற்றி கவலைப்படாது அது நிகழ்ச்சியாக நடைபெற்று விரியும்போது  எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றிய ஒரு தெளிவான கோட்டோவியம் உருவாகி வரும். அதன் பிறகே அதற்கான தொடர்புகள் கண்களுக்கு தெரியத் துவங்கும். அரசியல் எனக்கு கற்றுக்கொடுத்து மிக உன்னதமான பாடங்களில் முதன்மையானதாக  இதை கருதுகிறேன்.

எனக்கு அரசியலை கற்றுக்கொடுத்து குருவின் வழிமுறைகளில் ஒன்றுமுடியாது என்கிற ஒன்றில்லை”. அதை அடைவதற்கான வழி அதைப்பற்றிய தீவிரக்கனவு நிலை , ஒத்த கருத்துள்ள சிலருடனான ஓயாத திட்டமிடலும் அதை பிழை நீக்கி செறிவு செய்தலும். அதற்கு ஒத்துழைக்கும் மனிதர்களை தேர்ந்தெடுப்பதுமாக நிகழ்ந்து முடியும் . அவர்களை  நான்கு வகை பிரித்துக்கொளவேன் . என் கனவிற்கு அனுகுணமானவர்கள் என்னுடன் அது பற்றி எப்போதும் உரையாடுவதில் விருப்பமுள்ளவர்கள் , இவர்களை கொண்டே என் கனவை விரித்தெடுத்துக் கொள்வேன் , அதில் உடலுழைப்பு கொடுக்க சித்தமானவர்கள். இவர்களுக்கு என் கனவை பற்றிய நம்பிக்கையில்லாது போனாலும் என்மீதுள்ள அன்பினால் நிகழ்வுகளை தொகுக்கும் போது சலியாது உழைக்கும் மனமுள்ளவர்கள்.

கனவை மெய்ப்படுத்தும் சக்தியுள்ள ஆளுமை , கனவின் மையப்புள்ளி இவர்கள் . மொத்த திட்டமும் அவர்களை சார்ந்தே இருக்கும்  அவர்கள்  சலிப்படைந்தோ , நம்பிக்கை இழந்தோம் தனது ஸ்தானத்தை அஞ்சியோ , பொதுவில் இந்தகைய பரிட்சாத்தமான புதிய முயற்சிகளுக்கு பெரும்பாலும் ஆதரவை அளிக்க மாட்டார்கள்.

அவர்களை அடைய உதவு சமூக அந்தஸ்துள்ளவர்கள். அவர்களை அனுக க்கூடியவர்கள் அல்லது அதற்கான சமூக அந்தஸ்தையும் பொருளியல் உதவிகளையும் செய்யக்கூடியவர்கள்.

பலருடனான உரையாடல்கள் வழியாக அவர்களை கண்டடையும் பாதையில் எனது கனவுதிட்டம் செறிவும்  கூரும் கொண்டுவிடும். அனைவரின் ஒத்துழைப்பு அல்லது பொருளியல் தேவை போன்றவைகளை பற்றிய திட்டமிட்டு, முதல் படி சரியாக எடுத்துவைக்கப் பட்டுவிட்டால் அடுத்தடுத்த படிகளை காலம் கொண்டு வந்து கொடுப்பதை அனுபவங்களின் வழியாக பார்த்திருக்கிறேன் . மிக ஆச்சர்யமான நிகழ்வாக அது நடந்தேறியதை பல கோணங்களில் உணர்ந்திருக்கிறேன் . என அரசியல் அனுபவம் எனக்கு  சொல்லும் பாடம் இவை .

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இதன் தொடக்கம்  வேளுக்குடி ஸ்வாமியின் கிஞ்சித்காரம் அறக்கட்டளை சேர்ந்த தன்னார்வளர் திரு பரகாலன் அவர்கள் வழியாக நிகழ்ந்தது . அவருடன் எனக்கு நீண்ட காலம் தொடர்பு என்றாலும் , இத்தகைய பெரிய திட்டங்களை உள்வாங்கி , அதை பேசி காரியத்தை வெற்றிகரமாக முடிப்பவர் அல்லர் . காரணம் மிக எளியவர் , அனைவருக்கும் சுலபர் என்பது . அவரிடம் ஒருமுறை வேளுக்குடி ஸ்வாமியை சந்திக்க சென்று நிகழ்ந்த கசப்பான அனுபவத்தையும் நான் நினைத்த விஷயம் நடைபெறுவதில் உள்ள இடரடக்கலை அவரிடம் சொல்லி வைத்திருந்தேன்.

சில காலம் கழித்து வேளுக்குடி ஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் அவரது புதுமனை புகுவிழாவில் அவர் பரகாலனிடம் தற்செயலாக  புதுவையை  பற்றியும் அங்கு அவரது உபனயாசம் நடத்துவது பற்றி கேட்டபோதுதான் எனது கனவானராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழாக்குழுவிற்கான விதை ஊன்றப்பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...