ஶ்ரீ:
புத்த கயா
பதிவு : 442 / தேதி :- 11 . மார்ச் 2018
இந்த யாத்திரையை தவறவிடக்கூடாது என உறுதியாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அயோத்தி , பிறிதொன்று கயா தர்பணம் . ஒரு இந்து மகனின் கடன், தன் மூதாதையருக்கு கயாவில் பிண்டப்பிரதானம் வைப்பதை தர்மம் முக்கியமாக சொல்லுகிறது . குல வழி பரம்பரை முழுவத்துக்குமாக இங்கு செய்வதை ஒருவனின் மிக முக்கிய தன்னறமாக அது வலியுறுத்துகிறது . மஹாபாரத போரில் துரியன் அடிபட்டு மரணிக்கும் தருவாயில் ,பழி தீர்க்க கிளம்பும் அஸ்வத்தாமனிடம் பல காரணம் சொல்லி தடுக்கும் கட்டத்தில் , பிறகாலத்தில் தனது வம்சா வழியினர் யாராவது ஒருவர் கயையில் கொடுக்கும் பிண்டப்பிரதானம் தன்னையும் வந்தடையும் ,அதை கெடுக்காதே என அறிவுரை கூறுவதாக வியாச பாரதம் சொல்லுகிறது .
காசியிலிருந்து கயயைக்கு கிளம்பும் முன்பு யாத்திரை ஒருங்கிணைப்பாளர் அனைவரிடமும் வழியில் எங்கும் சிக்கிக் கொள்ளாது சரியாக இரவு 8:00 மணிக்குள் கயா பெருமாள் கோவிலை சென்றடைந்து விட வேண்டும் என்றும் , இரவு பூஜை மிக முக்கியமானது . அங்கு விஷ்ணு சகரஸ்ரநாம பாராயணமும், அர்சனையும் நடைபெறும் என்றும் , அதை அவரவர்களே செய்யவும் கோவில் நிர்வாகம் அனுமதிக்கும் என்று சொன்னார் . இரவு பூஜைக்காக “யாக குளம்” போன்ற ஒன்றில் பெருமாள் ஒரு திருவடி மட்டும் காணப்படும் , அதில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் . பூ அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் , கேட்டுக்கொண்டால் விரும்பியவர்களுக்கு பெருமாளின் பாதத்தை துணியில் பிரதியை எடுத்த்துக் கொடுப்பார்கள் என்றார் . காலை வேலையில் கயா தர்ப்பணம் கொடுக்கும் அனைவரும் பிண்டத்தை கொண்டு வந்து யாக குண்டம் போன்ற பகுதியில் உள்ள பாதத்தை நிரப்பி விடுவதால் காலை அந்த பாதத்தை பார்க்க முடியாது. ஆகவே எங்கும் எந்த குழப்பமும் இல்லாமல் சென்று சேரவேண்டும் என்லதால் வரிசையை விடாமல் வண்டிகள் ஒன்றை ஒன்று பின்தொடர்ந்தபடி இருக்க வேண்டும் என்றார் .
வழியில் புத்த கயா குறுக்கிட்டது . காசியிலிருந்து ஹௌரங்காபாத் வழியாக புத்தகயாவை கடந்து இருப்பது கயா . காசியிலிருந்து கயா செல்லும் பாதை முழுவதுமாக இருள் சூழ்ந்து எந்த முண்ணேற்றமும் இல்லாத வறண்ட கிராமப்பகுதிகள் . சாலைகள் கூட மண் சாலைகளைப் போல கருங்கல் ஜல்லி கண்டு பல நூற்றாண்டு ஆனவை போல இருந்தன. திடீரென எங்கும் பிரகாசமான விளக்குகளும் . அற்புதமான உலக தர சாலைகளாக மாறிப் போயின . நவீன வசதிகளை கொண்ட அந்த பகுதி பெரும் ஆச்சர்யம் . புத்த கயா பகுதி மட்டும் நவீன நாகரீகமடைந்த பகுதியாக மின்னலடித்தாற்போல எதிர்ப்பட்டது . சென்னை பெங்களூருக்கு இணையான வசதிகள் கொண்டதாக அது இருந்தது நம்ப முடியாததாக இருந்தது . வெளிநாட்டினர் குவியும் இடம் ,என்பதால் இத்தகைய வளர்ச்சியை அது அடைந்திருந்தது . சில சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது . அபரிதமான வளர்ச்சி . atm , நவீன உணவு மற்றும் தாங்கும் விடுதிகள் .என நவீன ஊர்களை போலிடுந்து . நமது அண்டைநாடுகள் சேர்ந்த புத்த மடாலயங்களும் , வழியில் கம்போடியா மடாலயத்தைக் கூட பார்க்க முடிந்தது . சற்று நேரத்தில் அதிலிருந்து விலகினால் பிற பகுதிகளில் காணப்படும் அதே வறுமை , முனேற்றமில்லாது நிலக்கட்சிகள் சூழ்ந்து மனதை வதைத்தன .
புத்த கயாவிலிருந்து கயா சுமார் 15 கி.மீ தூரத்திலிருந்து. அரைமணி பயணதூரம் . யாத்திரை ஏற்பாட்டாளர் 8:00 மணிக்குள் கயா சென்றுவிட வேண்டும் என்று வலியுறுத்தியதால் புத்த காயவை பார்க்காமல் கயாவிற்கு பயணத்தை தொடர்ந்தோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக