https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 30 ஜனவரி, 2021

அடையாளமாதல் * வரவேற்பற்ற நுழைவு *

 


ஶ்ரீ:பதிவு : 561  / 751 / தேதி 30 ஜனவரி  2021


* வரவேற்பற்ற நுழைவு * ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 39.அமைச்சர் பொறுப்பில் வந்தபோது கண்ணனுக்கு ஆதரவான தாழத்தப்பட்ட சமூகத்தினர் மீது அவருக்கு இருந்த  செல்வாக்கின் காரணமாக அவரை நிலவுடைமை சமூகத்தினர் அஞ்சினர். அந்த அச்சத்தால் பல காலம் அடக்கி வாசித்தனர் . வளர்முகத்தில் இருந்த கண்ணனை மெல்ல ஏற்கத்துவங்கினர் அது கண்ணன் அரசியலை மாற்றி அமைத்தது . பிற காங்கிரஸ் தலைவர்கள் சென்று சேர்ந்த இடத்தை அவரும் சென்று சேர்ந்தது துரதிஷ்டவசமானது . அவர் போக்கில் தென்பட்ட நுணுக்கமான மாறுதல்கள் அவரது நெருங்கிய நண்பர்களை அவரிடமிருந்து விலக வைத்தது . அரசியல் எதிர்காலத்தை முன்வைத்து அவரிடம் இணைந்த பலர் அப்போது வெளியேறினர் . மனம் கசந்து பாலனை போன்றோர் வெளியேறிய போது தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களில் மிகப் பெரும்பான்மையோர் அவருடன் வெளியேறினர் . கண்ணனின் அரசியல் வெற்றி மிக எளிதில் சாதிக்கக் கூடியதாக அனைவருக்கும் தெரிந்தது . ஆனால் அது முற்றாக புறத் தோற்றம் மட்டுமே . கண்ணனின் அரசியல் வெற்றிக்கு பல முக்கிய அடிப்படை காரணிகள் இருந்ததன.  


கட்சி தாண்டிய ஆதரவு தளம் ஒன்று அவருக்காக உருவாகியிருந்தது , அவரது நகர்புறம் சார்ந்த அரசியல் அவருக்கு பெருமளவு உதவின . பொதுமக்கள் அளவில் அவரது பெயர் வசீகரிக்க துவங்கி இருந்தது . இதற்கு முன்பு சுப்பையா அவர்களுக்கு அப்படிப்பட்ட செல்வாக்கு இருந்தது . பாலனால் இறுதி வரை நகரப்பகுதி இளைஞர்களை ஈர்க்க முடியவில்லை. கண்ணனிடம் இருந்த வந்த இளைஞர்களை தக்கவைத்துக் கொள்ள அவர் பெரிதும் போராடினார் . அதனால் அவரது ஆதரவு தளம் மெல்ல தேய்ந்து போனது. கண்ணனின் அரசியல் பின்புலம் மிக விஸ்தாரமானது . காமராஜர் இந்திராகாந்தியுடன் முரண்பட்டு புதிய கட்சி துவங்கிய போது புதுவையை சேர்ந்த காங்கிரஸ் ஆளுமைகளில் பலர் அவரை ஆதரித்தனர் . அவர்களுக்கு சண்முகம் மீதிருந்து கசப்பு முதன்மை காரணம் . கண்ணனைத் தவிர பிற எவரும் சண்முகத்தை நேரடியாக எதிர்த்ததில்லை . அவரை அஞ்சினர் . கண்ணன் சண்முகத்தை வெளிப்படையாக எதிர்த்த போது அவருக்கு எதிரான அனைத்து முக்கிய தலைவர்களும் கண்ணனை சார்ந்து இயங்கினர். ஒரு கட்டத்தில் கண்ணன் அவர்களுக்குமான தலைவராக உருவெடுத்தார். விந்தையான அதே சமயம் மாறாத அரசியல் வதிகளில் ஒன்று . காரணம் அவர்கள் அனைவருக்கும் சொந்தத் தொகுதி தவிர பிற தொகுதிகளில் செல்லாக்கில்லாமை வெளிப்படையான அரசியலின்னமை மேலும் வளைந்து கொடுக்கும் போக்கு போன்றவைகளால் அவர்களை விட வயதில் அனுபவத்தில் இளையவரான கண்ணனை தங்கள் தலைவராக ஏற்க வேண்டய சூழல் எழுந்தது . கண்ணன் அரசியல் ரீதியில் எழுந்த போதே மாநிலம் முழுவதும் தன்னுடைய செல்வக்கை நிலைநிறுத்திக் கொண்டார் . அது இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் பலமாக பார்க்கப்பட்டது . ராஜீவ் காந்தி உருவாகி வந்தபோது இளைஞர் அமைப்பு புது வசீகரத்தை பெற்றது . கண்ணன் மிக வேகமாக வளர்ந்தது இந்த காலகட்டத்தில் . அவரது அணிக்கு கிட்தட்ட தலைமை தாங்க துவங்கியது அப்போதுதான் .


கண்ணன் அணியினர் காமராஜரை ஆதரித்து புதுவையில் மாற்று அரசியலை முன்வைக்க விரும்பினர் . அன்று அது  சண்முகத்திற்கு எதிரான அமைப்பில் ஒன்றிணைக்கும் சக்தி கண்ணன் . சபாபதி , பாலாஜி,சாய்குமாரி,வக்கீல் முருகேசன்,ராமஜெயம் என ஒரு பட்டாளமே இருந்து .

முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினராக நீண்ட காலம் இருந்தவர் சபாபதி , “கவுண்டர்என்கிற அடைமொழியால் அறியப்படுபவர் . அரசியலில் அனுபவம் வாய்ந்தவர் காமராஜரை ஆதர்சமாக கொண்டவர் . அவரை போன்ற ஒரு நிரை அன்று சண்முகத்திற்கு எதிராக கை கோர்த்தவர்கள் . தமிழக அரசியலை போல புதுவையில் நிகழவில்லை தமிழகத்தில் காமராஜர் தோற்றதும் . புதுவையில் காங்கிரஸில் இருந்து சென்றவர் மீளவும் காங்கிரஸிற்கே திரும்பினர். சண்முகம் அனுவரையும் உள்ளே அவர் அனுமதித்தார் . அவருக்கும் வேறு வழியில்லை


அன்று கண்ணனுக்கு எதிராக நிலம்முடை சமூகம் தனது அனைத்து உள்ளூர் சிக்கலும் காவல் நிலையம் சென்றது . பொருளியல் பலம் x தொண்டர் திரள் மோதத் துவங்கியதும் அது உட்கட்சி பூசலென தலைவர் சண்முகத்திடம் கொண்டு செல்லப்பட்டு ,அவர்கள் இளைஞர் காங்கிரஸ் என்பதால் கண்ணனின் மற்றும் பாலன் அணி என முத்திரைகுத்தப்பட்டு சண்முகத்தால் அரசியல் ரீதியில் ஒவ்வொரு முறையும் வீழ்த்தப்பட்டனர் .

அவர்களின் மேல் கசப்புள்ள சண்முகம் அவர்களை முற்றாக விலக்கும் இடத்திற்கு அவரை கொண்டிவந்திருந்தனர் . சண்முகம் போன்ற தலைமைக்கும் இது தெரிந்தே நிகழந்திருக்க வேண்டும் என்றாலும் அங்கு நிலவும் உள்நெசவுகளை சிடுக்காக்கி கொள்ள அவர் விரும்பியதில்லை என்பது அவரது அரசியலாக இருக்கலாம்.அரசியலில் சண்முகம் தன்னுடைய நயிலப்பாட்டை அவர் எங்கோ ஒரு உச்சத்தில் தன்னுடன் நிகழ்ததிக் கொண்டிருக்க வேண்டும் . அனைவருக்கும் அவர்களுக்கான இருத்தலை அடைவதற்கு விட்டு விலகுபவராக அதேரசமயம் தன்னை நோக்கி வரும் எதையும் எதிர்கொள்பவராக அவரை அறிந்திருக்கிறேன் . மேலும் அது அவர்களின் அரசியல் பிழைத்திருக்கும் வழி , அதை செய்து கொடுப்பது தனது பணி என அவர் நினைதிருக்கலாம் .அவர்களை கட்சி அமைப்பில் பொருந்தியிருக்கச் செய்யும் நிர்பந்தமும் அவருக்கு  இருந்திருக்க வேண்டும் அதன் பொருட்டு நிலமுடை சமூகத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் இடத்தில் இருந்தார் .எனவே எந்த அரசு வந்தாலும் அதன் மீது வலுவான பிடி உள்ளவர்களாகவே அவர்கள் எப்போதும் இருந்தனர் .என்னிடம் இளைஞர் காங்கிரஸ் இந்த சிக்கல்களுடன் முழுமையாக என்னிடம் வந்து சேர்ந்தது . அடிப்படையில் அமைப்பை சண்முகம் முழுவதுமாக ஏற்க வேண்டும் என்பது  என்னுடைய நிலைப்பாட்டாக இருந்தது . என்னால் வன்முறை சிக்கலுக்குள் செல்ல இயலாது . எதன் பொருட்டும் என்னால் அதை ஏற்க முடியாது என அனைவரிடமும் திட்டவட்டமாக சொல்லியிருந்தேன். அந்த சூழலில்தான் அந்த கொடியேற்ற நிகழ்வு நடந்து முடிந்தது.

திங்கள், 25 ஜனவரி, 2021

அடையாளமாதல் * வெளிச்சத்தின் இருள் *

 ஶ்ரீ:பதிவு : 560  / 750 / தேதி 25 ஜனவரி  2021


* வெளிச்சத்தின் இருள்ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 38.


எங்கும் உள்ள வழக்கம் போல இங்கும். ஊருக்கு வெளியே தனிக்காலனிகளாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை சமூகம். அதன் மூத்தோர் அனைவரும்  பெருநிலக்கழார்களை சார்ந்து பல தலைமுறைகளாக தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டவர்கள் . தொழிற்சாலைகள் வந்த போது அவை தனி சாலை வசதிகள் காலனிக்களுக்கு ஊடாக அமைந்தன . சாலையின் வரவு சமூகத்தில் அக மற்றும் புறவயமான மாற்றங்களை உருவாக்கி விட்டது மிக குறிகிய காலத்தில் சட்டென எல்லாம் மாற்றமடைந்து சமூகத்தில் புது அடுக்குகள் எழுந்து வந்தன . அது நிலக்கிழார்களுக்கு சலுகையென அதுவரை வழங்கி இருந்த பலவற்றை ரத்து செய்துவிட்டிருந்தது . சிலவற்றை காலாவதியாக்கியும் இருந்தது . அதன் பின் அவர்களால் இக்கால இளைஞர்கள் மீது வெளிப்படையான  அதிகாரம் செலுத்த முடியாமலாகியது . ஆனால் அவை அனைத்தும் திரைமறைவில் வேறு தளத்தில் வேறு விதமாக ஆனால் முன்னிலும் பலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருந்ததுதமிழகத்தில் சில இடங்களில் காணப்படும் தாழ்பட்டவர்களின் நிலை போல புதுவையில் அது வெளிப்படைத் தன்மையற்று இருந்தாலும் , மௌனமாக ஆழத்தில் அது இருந்து கொண்டிருக்கிறது. கராணம் புதுவை நகரமாக மாற முயற்சிக்கும் கிராம சூழ்நிலையையும் , சட்டென நகரமாகி அதன் அத்தனை அலகுகளுக்கும் வந்து சேரக்கூடிய சிறிய வேறுபாடுகளைக் கொண்ட இடத்திலும் இருக்கிறது. ஆகையால் அதன் மீது எப்போதும் அசையும் இருப்பில் நிலமுடைய சமூகம் இருக்கிறது  . சிறு சமன்குலைவு அச்சமூட்டும் அளவிற்கு அனைத்தையும் புரட்டக்கூடியது என அவர்கள் அறிந்திருக்கி்னறனர் . தங்களை நிலை கொள்ளச்செய்ய ஆளும் காங்கிரஸ் அமைப்பில் அவர்கள் எப்போதும் தங்களை வைத்துக்கொண்டனர் . காங்கிரஸிற்கு நீண்ட கால ஆட்சியில் இருக்கும் வாய்ப்பிருந்ததால் அவர்கள் தங்களை காங்கிரஸின் ஆதரவாளர்களாக வெளிப்படுத்திக் கொண்டனர்  . 


தனித் தொகுதி வேட்பாளர்கள் இவர்களின் ஆதரவில் இருந்து தான் எப்போதும் உருவாகிறார்கள் . ஊர் , காலனி என இரண்டையும் இணைக்கும் இடத்தில் இருப்பவர்களில் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படுகிறார்கள் . அதற்கு நுண்ணிய பின்னனி ஒன்று உள்ளது . அவர்களில் மிகப் பெரும்பாலும் அரசு வேலையில் இருப்பவர்கள் அல்லது வேலையை உதறி வெளிவந்தவாராக இருப்பார்கள் . அரசு உத்தியோகம் அனைத்து விதத்திலும்  அடிமைத்தொழில் , அது மேல் கீழ் என்னும் அடுக்குமுறையை அவர்களுக்கு பயிற்றுவிக்கிறது யாரும் எந்த சமூகமும் அதற்கு விதிவிலக்கல்ல . தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அது இன்னும் ஆழமான அடங்கியிருத்தலை கற்றுக் கொடுக்கிறது . மேலும் தேர்தலில் தோல்வியுற்றால் அரசு வேலைக்கு திரும்பும் வாய்ப்பை சட்டம் அவர்களுக்கு வழங்குவதால் முதல் முறை சட்டமன்ற  நுழைவுக்கு பிறகு , மறுவாய்ப்பு கிடைக்காமல் போனால் மீளவும் தங்களின் வாழ்வாதரத்தை திரும்பப் பெற இயலும் . ஆனால் அது  இறுதிவரை எந்த மாற்றத்தைக் கொண்டு வருவதில்லை. மீளவும் அரசாங்க வேலைக்கு திரும்ப அவர்கள் மனம் ஒருபோதும் ஒப்புவதில்லை . ஒரு வித கையறு நிலை . அவர்களின் வாழ்நாள் இறுதிவரை அவர்களை விடாது தொடர்வது . அவர்கள் அதற்கு எப்போதும் அஞ்சினர் . தங்களை மீறி செயல்பட நினைக்கும் எவருக்கும் நிலமுடை சமூகம் மீளவும் ஒருமுறை வாய்ப்பு அளிப்பதில்லை என்பது அவர்களை பலமுள்ளவர்காளாக ஆக்கி அந்த அடுக்குகளை நிரந்தரம் செய்கிறது  . அதன்பொருட்டு வேட்பாளர் தேர்வு  கட்சியின் வழியாக நிகழாது பார்த்துக் கொள்ளப்படுகிறது. விதி விலக்கான சட்டமன்ற உறுப்பினர்களாக வந்தவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள். அவர்கள் அரசியலுக்கு முற்றும் புதியவர் அமைப்பின் பின்னணியில் வெற்றி பெறும்போது  கட்டற்றவர்களாக ஆகி விடுகின்றனர் . புதுவையின் ஆட்சி மாற்றத்திற்கு பல சமயங்களில் இவர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். அல்லது அவர்களிடமிருந்து துவங்கி இருக்கிறது  . ஆகவே தாழத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் கட்சி அமைப்புகள் பொறுப்பிற்கு வருகிறபோது அவர்களை கட்டுக்குள் வைக்க நிலமுடை சமூகத்தின் உதவி தேவைபடுகிறது , மேலும் பல அலகுகளை கையாளத் தெரிந்த நிலவுடையை சமூகத்தை சார்ந்திருப்பது அவசியமாகிறது , அவர்கள் எண்ணற்ற உள் நெசவுகளின் மூலம் அதை தங்கள் கையில் எப்போதும் வைத்திருக்கின்றனர் . ஆகவே அவர்களே எப்போதும் கட்சியின் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களாக உறுவெடுக்கிறார்கள்.


தாழ்த்தப்பட்ட சமூக நவீன இளைஞர்கள் இயல்பில் பிற சமூக இளைஞர்களை விட மீறல் மனநிலை கொண்டவர்கள் . காரணம் அவர்கள் இருப்பே கேள்விக் குறியாகி விடுகிறது . அதை எதிர்பதன் பொருட்டு எந்த நிர்பந்தமும் இன்றி ஒருங்கு திரளக்கூடியவர்கள் என்பது அவர்களை பிற சமூகத்தினரை விட பலமுள்ளவர்களாக ஆக்குகிறது  . தங்கள் மீது இருக்கும் நேரடி மற்றும் மறைமுக கட்டுப்பாட்டில் இருந்து வெளிவர அரசியலை தேர்ந்தெடுக்கின்றனர் . அதன் ஊடாக பதில் சொல்ல முயல்வது ஒன்றே அவர்களுக்கான மீட்சி . அந்த இளைஞர்கள் அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் அமைப்பிற்குள் வந்து சேர்ந்தபோது அங்கு நிலவும் அடுத்த கட்ட சிக்கலை புரிந்து கொள்ள துவங்கினர் . தனித் தொகுதிகளின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அவர்களுக்கு மத்தியில் இருந்து தாமாக ஒருபோதும் எழுந்து வராமல் பார்த்துக் கொள்ளப்படுவதும். நிலமுடை சமூகத்தின் தயவினால் மட்டுமே அவர்களால் அரசு அதிகாரங்களுக்குள் நுழைவு நிகழ இயலும் என்பது இன்னும் தீவிர எதிர்மனநிலையை் உருவாக்கி இருந்தது . இளைஞர் காங்கிரஸ் அதற்கான மாற்று என அதன் தலைவர் கண்ணனால் அழுத்தமாக சொல்லப்பட்டது . ஆட்சி பொறுப்பில் இடம்பெற ஆர்வமுள்ளவர்களுக்கு இளைஞர் காங்கிரஸிற்குள் நுழைந்தனர் . தீவிர எதிர்ப்பு மனநிலை உள்ளவர்வகள் கம்யூனிஸ இயக்கம் நோக்கி சென்றனர்.


கண்ணன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக வந்த போது அவர்களே அதன் பலமென அமைந்தார்கள் . கண்ணன் கட்சி அமைப்பை எதிர்ப்பவராக, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மாற்றாக தன்னை நிறுவிக்கொண்டருந்த காலம் . கிராமம் மற்றும் நகர்ப்புற இளைஞர்களை கவர்பவராக இருந்தார் . அவர்களில் பெரும்பான்மையோர் கம்யூனிஸ இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். அதனால் கம்யூனிஸ்ட்களின் வெறுப்பிற்கு ஆளானார் . சகோதர யுத்தம் துவங்கி பல வன்முறைகளை அதை தொடர்ந்து அரசியல் கொலைகளுக்கு வழிவகுத்தது .


புதன், 20 ஜனவரி, 2021

அடையாளமாதல் * வளருதல் *

 ஶ்ரீ:பதிவு : 559  / 749 / தேதி 20 ஜனவரி  2021


* வளருதல்ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 37.


சிக்கல்களை தீர்க்க முக்கிய பதவிகளில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் , சொல்லுபவர்களுக்கு எந்த பதவியும் உதவப் போவதில்லை , அதை சொல்லுபவர்கள் எத்தகைய அதிகாரத்தில் இருந்தாலும் எப்போதும் உணர்வது தங்கள் போதாமையைத் தான். எழுந்துவரும் சிக்கல்கள் அனைத்தையும் நேரடியாக சென்று அணுகுவதற்குறிய செயல்பாடுகள் மட்டுமே அதை தீர்க்க வல்லதாக இருக்க முடியும் . அதற்கு தொண்டர்களை ஒருங்கு திரட்டும் பலம் ஒரு முதல் படி மட்டுமேஎவ்வளவு தடுத்தும் சிரித்தபடி கார்வரை வந்து எங்களுக்கு விடைகொடுத்து அனுப்பும் முன் அவர் சொன்ன அந்த வார்தைகள் எனது காதுகளில் கேட்டபடி இருந்தது . முதலில் திகைப்பை கொடுத்தாலும் அதை ஏனோ மனம் நிராகரிக்கவில்லை . அதனுடைய அடிப்படை சீண்டுவதாக இருந்தாலும் அதை மெல்ல உள்வாங்கிக் கொண்டிருந்தேன். நான் அவர்களை பல ஆண்டு காலம் பார்த்து வந்திருக்கிறேன் . புதுவை கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலைவராக இருந்தவர் வா.சுப்பையா எனது பக்கத்து வீட்டுக்காரர் . என்ன காரணத்திலோ கம்யூனிச சிந்தாந்தமும் அதன் வழிமுறைகள் எனக்கு உகப்பாக இருந்ததில்லை . தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கு திரட்டும் பலமே அவர்களை அரசியலின் முக்கிய இடத்தில் கொண்டு வைத்திருக்கிறது. அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியலாளர்கள் அஞ்சுவது அவர்களைத் தான் . அவர்கள் ஒருபோதும் புதுவை அரசியலில் அதிகாரத்திற்கு வரப்போகிறவர்கள் இல்லை . ஆனால் அவர்கள் எதையும் நேரடியாக வீதிக்கு கொண்டுவந்து விடுகிறார்கள் என்பதே அவர்கள் அச்சத்தின் முதன்மைக் காரணம் . அவர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி நிறுவிவிடுகிறார்கள் . பிறரின் அச்சம் அவர்களுக்கான இடத்தை உருவக்கிக் கொடுத்து விடுகிறது . இன்று காவல் நிலையத்தில் நடந்ததை திரும்பவும் ஒரு முறை நினைவில் இருந்து எடுத்துப் பார்த்தேன் . ஒரு கனவைப் போல அதை விரித்தெடுக் முடிந்ததுகாவல் நிலையத்தில் நுழைந்தது முதல் பின்னர் வெளியேறிது வரை முதலில் அவர்களின் கடும் பேச்சு பின் மெல்ல குறைந்து எங்களை எதிர்க்க முடியாதவர்களாக மாற்றியது  எனது பின்னால் கூடிய கூட்டம் என நினைத்தேன் . ஆனால் அது உண்மையல்ல கம்யூனிச ஆதரவாளரான அந்த நபர் எனது பக்கத்தில் வந்து நின்ற பிறகே அங்கு சூழ்நிலை மாற்றமடைந்த படி வந்தது காவல்துறை அதிகாரிகள் அவருக்குத் தான் முதலில் அஞ்சினர் . அது அப்பட்டமான உண்மை . அன்றிரவு வீடு வந்து சேர்ந்த போது ஒரு விஷயத்தை சாதித்த நிறைவை அடையாமல் யதார்த்தம் முகத்தில் வந்து வீசுவது போல இருந்தது . அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரம் எதையும் கொடுப்பதில்லை . மேலும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட இறுதிக் காரணம் என ஒன்று உருவாகி வந்து விடும் . அத்துடன் யாரும் போராட முடியாது என்பது யதார்த்தம் . அவர்கள் கட்சி ரீதியிலே எதையும் அணுகும் அவசியமில்லாதவர்கள் . காரணம் சட்டமன்றம் வேறுவிதமான அரசியல் செயல்பாட்டை வழிமுறையாகக் கொண்டது . கண்ணன் மற்றும் பாலனின் கம்யூனிச சிந்தனை நோக்கிய மனச் சாய்வு அதன் கொள்கையின் அடிப்படையில் ஆனது இல்லை . அது ஒரு பாவனை மட்டும் என புரிந்து கொள்கிறேன் . அரசியல் அவர்கள் எதிர் கொண்ட உண்மையின் முகம் மிகக் கொடுமையானதாக இருந்திருக்க வேண்டும் . அரசு அதிகார பதவிக்கு வரும் யாரும் இந்த இடத்தில் தங்களை சமரசம் செய்து கொள்ளாமல் முன்னகர முடியாது . ஒரு வகையில் மரணத்திற்கு ஒப்பானது . அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள அடிப்படையை சமரசம் செய்து கொள்வது ஒரு கொடுங் கனவு போல இருந்திருக்க வேண்டும் . அந்த நேரடித் தன்மை அவர்களை நிலைகொள்ள இயலாமல் செய்திருக்கும் அந்த சீற்றத்தைக் கடக்க தங்களை கலகக்காரர்களாக இளந்துருக்கியர்களாக முன்வைத்துக் கொண்டார்கள் .


எனக்கு அரசியல் மீது ஈடுபாடுகள் உருவான காலகட்டத்தில் கம்யூனிச கட்சிகளின் மேல் எனக்குள்ள கசப்பு இன்னும் ஆழமானதாக மாறியது , அவர்களின் வன்முறை அரசியலில் மீது எப்போதும் ஒவ்வாமை இருந்து . 1969 களில் கட்சிகளுக்கு இடையேயான தொழிற்சங்க சிக்கல் பழனிராஜாவின் கொலையில் முடிந்தது . என்னை வந்து முட்டி நிலையழச் செய்த முதல் அரசியல் படுகொலை செய்தி . எனக்கு அன்று ஏழு வயது . ஒரு மனிதன் பிறிதொருவனை கொல்ல முடியும் என்கிற உண்மை பெரும் அச்சத்தை அதிர்ச்சியை அப்போது உருவாக்கி இருந்தது . அதைச் செய்யும் ஒருவரின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்கிற கேள்வி அலைகழிப்பை கொடுத்தது . அந்த சவ ஊர்வலம் முக்கிய தெருக்களின் வழியாக சென்ற போது ஒவ்வொரு தெரு முணைக்கும் உளம் பதற ஓடி மீள மீள எதற்கு பார்கிறேன் என தெரியமால் பார்த்துக் கொண்டிருந்ததை நினைவுறுகிறேன் . பின்னர் தொடர்ந்து பல அரசியல் கொலைகள் கருணாஜோதி வரை நிகழ்ந்தது. அது வன்முறையை கையாண்ட அந்த அமைப்பை பற்றிய ஆழ் மன விலக்கலை அளித்திருக்க வேண்டும் . தேர்தல் அரசியலை நோக்கிய பயணம் எனக்கு இறுதி வரை உடன்பாலில்லாத ஒன்றாக இருந்தது . நான் அதற்கானவன் அல்ல என்கிற தெளிவு ஆழ்மனத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும் . அதை நோக்கி இறுதிவரை நகரவேயில்லை . தொண்டர் ஒருங்கு திரட்டல் மற்றும் அவர்களுடன் இருத்தல் எனக்கு மிக அனுக்கமானதாக இருந்தது . அதுவே எனது பலமாக பின்னாளில் ஆனது


காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளை எதிர்த்து நிகழ்ந்தது  திட்டமிட்ட ஒன்றல்ல , எனக்கு கொடுகப்பட்ட பணியை நான் செய்து முடிக்க முயன்றபோது அதன் எதிர்ப்பு உருவானது . பின் அது என்னை மையங் கொண்டது. நான் அரசியலில் இருந்த இறுதிக் கணம் வரை அதன் பாதிப்பை தொடர்ந்து அடைந்து கொண்டிருந்தேன் . முதலில் திகைப்பை கொடுத்தாலும் பிறருடன் உரையாடும் இடத்தில் நான் இருக்கவில்லை .அதற்கு அன்றைய அரசியல் பற்றிய ஒற்றைப் புரிதல் காரணம் . மெல்ல அதில் இருக்கும் ஆபத்தை உணருந்த போது காலம் கடந்து விட்டிருந்தது. அனைத்தையும்  உரையாடி தீர்த்துக் கொள்வதில் இருந்த நம்பிக்கை தகர்ந்த போயிற்று . அரசியலில் அதிகாரம் இருக்கும் வரை ஒருவருடன் வெளிப்படையான உரையாடல்கள் நிகழ வாய்ப்பில்லை  . அவர்களில் பலர் நிலவுடைமை சமூகத்தை சேர்ந்தவர்கள்புதுவையின் ஐந்து தனித் தொகுதிகளில் நான்கு அவர்களின் கட்டுப்பாட்டில் இன்றளவும் இருக்கிறது . இளைஞர் காங்கிரஸின் பெரும்பான்மை தொண்டர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் . அதற்கு சில அடிப்படைப்படை காரணிகள் உண்டு . தமிழக மற்றும் புதுவை அரசியலில் எதிர்கட்சியை ஆளும் அமைப்பாக மாற்றும் ஊசல் ஓட்டுகளை தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே எப்போதும் முடிவுசெய்கிறார்கள். தமிழகம் போலன்றி நீண்ட காலம் அவர்கள் காங்கிரஸை ஆதரித்தனர் என்பது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியில் முதல்வராக வர விழைபவர்களுக்கு அந்த நான்கு சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவு எப்போதும் தேவைப்பட்டது . அவர்களின் முடிவை தீர்மானிக்கும் இடத்தில் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு மீறி நிலவுடைமை சமூக பெரியவர்கள் கைகளில் இருந்தது . முதல்வராக வர இருப்பவர் அவர்களுடனான பேரம் வழியாக பல உள்விளைவுகளையும் சமன்பாட்டையும் உருவக்கிய பின் அந்த அதிகாரத்தில் அமர்ந்தவர்கள்.


புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்