https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 5 ஜனவரி, 2021

அடையாளமாதல் * ஆர்வம் *


ஶ்ரீ:


பதிவு : 556  / 746 / தேதி 05 ஜனவரி  2021


* ஆர்வம்ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 34.
தலைவர் சண்முகம் அறிமுகப்படுத்திய பிரெஞ்ச் இந்திய விடுதலை போராட்டத்தின் பிறதொரு அழுத்தமான கோணத்தை பார்க்க முடிகிறது அது சொல்லும் உள் தகவல்கள் ஆர்வமளிப்பவை . அதன் விசைகளே சண்முகத்தை அரசியல் ரீதியில் வழி நடத்தியவை. குபேரையும் பிற நிலவுடைமை சமூகத்திற்கும் எதிரானவராக தன்னை நிலைநிறுத்துவதின் ஊடாக தனது அரசியல் களத்தையும் தனக்கான இடத்தையும் அவர் கண்டடைந்தார். அங்கிருந்து அவர் காமராஜருக்கும் அவர் வழியாக நேரு இந்திரகாந்தி குடும்பத்திற்கும் அனுக்கமானார் . அது புதுவை அரசியலை அவருக்கு திறந்து கொடுத்தது . தனிப்பட்ட உரையாடலில் அவர் முன் வைத்த இரண்டு கேள்விகளின் பதிலை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் புதுவை விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பலரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன் . அந்த இரண்டு கேள்விகளுக்கும் அவர்களிடம் பதில் இருந்தது . ஆனால் அவர்கள் அந்தக் கேள்விகளுக்கு தங்கள் தங்கள் கோணத்தை  முன் வைத்திருந்தனர். அவை எனக்கான அரசியலின் கற்றலை உருவக்கிக் கொடுத்தன அவர்களில் பலர் மிக எளிய மனிதர்கள் எந்த மனச் சாய்வும் இல்லாத நடைமுறைவாதிகள் . அவர்களைத் தேடி தேடி சந்தித்துக் கொண்டே இருப்பதை ஒரு அரசியல் நடைமுறையாக உருவாக்கி கொண்டேன் . கடந்தகாலத்தைப் பற்றி பேச விழையும் மனிதர்களாக அவர்கள் இருந்தனர். புதுவை விடுதலை இயக்கம் பற்றிய பல புரிதல்களை எனக்கு அளித்தனர் . அவை முரண்பாடுகளின் வழியாக அடைந்த மாற்றம் . சுதந்திரப் போராட்டம் அதை நோக்கிய அனுகுமுறையில் ,செயல்பாட்டில் ஒருவருடன் ஒருவர் முரண்படவில்லை . ஒருவரின் செயல்பாட்டை எதிர்த்தே பிறிதொருவரின் செயல்பாடு இருந்தது என்பதுதான் உச்ச கட்ட முரண் . சுதந்திரத்திற்கான வெளியில் அதில் ஈடுபட்ட பெரும்பாலனோர் ஒருவரை ஒருவர் தொடர்ந்து தாக்கியும் மறுத்தும் செயல்பட்டதால் இது சுதந்திர போராட்டம் அல்ல என்கிறார் . அப்படி ஒன்று எங்கு நிகழ்ந்தது என்கிற கேள்வியை சண்முகம் முன்வைத்த போது அதன் பின்னால் உள்ள வருத்தத்தை ,வன்மத்தை புரிந்து கொள்ள முடிகிறது . அவர் மரணிக்கும் காலம்வரை பிரெஞ்ச் இந்திய விடுதலை என ஒன்றை யாராலும் முன்வைக்க முடியவில்லை . அவர் மறைந்த பிறகே அந்த மாற்றம் நிகழ முடிந்தது .


******


1989 களில் பாலனை இரவு தினமும் அவரது வீட்டில் சந்திப்பது மிகுந்த உற்சாகத்தை தருவதாக இருந்தது . இருட்டும் தனிமையுணர்வுமான இரவு நேர சந்திப்பு மிகுந்த அகவயமாக அனுக்கத்தை உணரச் செய்தது , அவருக்கு மிக நெருக்கமான சிலர் மட்டுமே எப்பவும் அங்கிருந்தனர். அது அவரது உள்வட்டம். அதெல்லாம் அன்று அறிந்து கொள்ளாமல் மிகையான ஆர்வ செலுத்துதலால் அதில் இணைந்து கொண்டேன் அங்கு பாலன் அல்ல பாலனின் மைத்துனர் சுப்புராயன் தான் மையப்புள்ளி . அவரின் தங்கையை பாலன் திருமணம் செய்திருந்தார் . சுப்புராயன் அவரதுகறார்அரசியாலாலும்கடும் சொல்பேச்சுனாலும் அறியப்படுபவர் . பாலன் மீது அவருக்கு பெரிய செல்வாக்கு இருந்தது , அதனால் அவருக்கு எதிர் சொல் வைக்க அனைவரும் தயங்கினர் . பெரும்பாலும் முடிவெடுக்கும் இடத்தில் அவர்தான் இருந்தார் , தனது கருத்தை சந்தர்ப்பங்களை பொறுத்து வெளிப்படையாக அல்லது மறைமுகமாக செலுத்த அவர் தயங்கியதில்லை . ஆலை வேலுயை விட்ட பின்னர் பாலனுக்கு பிறதொரு பொருளியல் வரவு நிலை இல்லை . வீட்டு நிர்வாகத்தை மனைவி மலர் எடுத்துக் கொள்ள அவரது  முழு ஆதரவினால் அரசியலில் தயக்கமில்லாமல் ஈடுபட அவரால் முடிந்தது . தன் தங்கையின் மீது சுப்புரானுக்கு இருந்த அதீத செல்வாக்கே பாலன் சுப்புராயனை அஞ்சும் நிலை உருவாகி இருந்தது . தனது குடும்ப சமநிலையை அவரால் பாதிக்க முடியும் என பாலன் புரிந்திருந்தார் .மேலும் அவரை பொருளியல் ரீதியாகவும் சார்ந்திருந்து இருக்க வேண்டும். அரசியலை முழு நேரமாக எடுத்திருந்த அவருக்கு குடும்ப நிர்வாகம் முதல் எல்லாமே சவாலாக இருந்தது . சுப்பிராயன் பாலன் மீது செலுத்திய ஆதிக்கம் பிற மூத்த நிர்வாகிகளின் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி ஒரு புள்ளியில் பாலன் மீதும் மனவிலகளை ஏற்படுத்தி இருந்தது . அதனால் நிர்வாகிகளில் தாமோதரனைத் தவிர பிறர் அந்த இரவு நேர கூடுகையில் கலந்து கொள்வதில்லை. தாமோதரனை வாரத்தில் ஒரு முறையாவது அங்கு சந்தித்திருக்கிறேன். பாலனிடம் எனக்கான இடம் உருவாகி விட்டதை தாமோதரன் முதலில் அறிந்திருக்க அறிந்திருக்க வேண்டும். அரசியலில் செவிவழி செய்திகளாலும்  ஊகங்களாலும் குறுக்கு நெடுக்காக நெய்யப்பட்டு அவரவர் அபிப்பிராயங்களை உருவாக்கி விடுகிறது , அதன் அடிப்படையால் அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் . ஆதரவும் எதிர்ப்பும் அப்படி உருவாகுபவை . அதுவே பல இடங்களில் என்னை முன்நிறுத்தி இருந்தது , அதை விரும்பாததும் அதன் பொருட்டே நிகழ்ந்திருக்க வேண்டும் , பின்னர் அதை நோக்கி நான் இழுக்கப்பட்டேன் .அவை நான் அறியாமல் என்னை சுற்றி மெல்ல உருவாகி வந்தவை . நான் அதை நட்புவட்டம் விரிவடைவதாக பிழை புரிதலில் இருந்தேன். சில காலத்திற்கு பிறகு கட்சி அலுவலகத்தில் சந்திக்கும் பாலனுக்கு அனுக்கமானவர்கள் பலர் என்னை என் வீட்டில் வந்து சந்திப்பது நிகழத் தொடங்கியது .ஒரு முறை வந்து என்னை சந்திப்பவர்கள் பிறதொரு சமயம் வரும்போது புதிதாக சிலரை உடன் அழைத்து வரத் துவங்கினர் . அது என் நட்பு வட்டம் விரிவடைவதல்ல , அது அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள நான் எங்கோ தேவைப்படுகிறேன் அது அவர்களின் நுண்ணிய அரசியல் செயல்பாடு .நெடுநாள் கழித்தே அதன் தீவிரத்தை அறிந்து கொண்டேன் .அடிப்படையில் எனக்கான இடம் உருவாகி வருவதற்கு பாலன் என் மீதான கனிவு முக்கியமாக இருந்தது . மேலதிகமாக அதற்கு  சுப்புராயன் காரணமாக இருந்திருக்கலாம் . சுப்புராயன் என்னிடம் மிக மரியாதையாக நடந்து கொண்டார், பாலனை கடந்து எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது .அரசியல் புரிதலின் பொருட்டே வகைப்படுத்தப் படுவது . அது மெல்ல இளைஞர் காங்கிரஸில் என்னை தவிற்க முடியாதவனாக உருவாக்கி இருக்க வேண்டும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 68 அழைப்பிதழ்

 காண்டீபன்