https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 15 ஜனவரி, 2021

அடையாளமாதல் * மேலடுக்கு அரசியலும் வலிகளும் *

 


ஶ்ரீ:அடையாளமாதல்


பதிவு : 558  / 748 / தேதி 15 ஜனவரி  2021


* மேலடுக்கு அரசியலும் வலிகளும் * ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 36.அந்தப் பெரியவர் அரசியல் மிதப்பு என்கிற என்னுடைய எண்ணக்குமிழியை ஊதி உடைத்துவிட்டிருந்தார் . அரசியலின் எல்லைகள் யாருக்கும் வசப்படுவதில்லை . ஒரு சிலருக்கு சில காலம் , சில நேரம் அது அப்படி ஒரு மிதப்பை கொடுத்தாலும் அது உண்மையில்லை . அவர்கள் அனைவரும் ஒரு நிலத்தில் இறங்கி நின்றாக வேண்டிய காலம் என ஒன்று உண்டு . அன்று எனக்கு மேல் பல நிலைகளில் அமைப்பும் அதன் தலைவர்கள் இருந்ததால் அடுத்து என்ன என்கிற கேள்வி அப்போது என்னிடம் இல்லை . ஒரு வகை திகைப்பும் வருத்தமும் எங்கோ ஒட்டியிருக்க அதன் மற்ற பகுதிகள் அதை துடைத்து எடுத்து வெளியே வீசிவிட முயன்று கொண்டிருந்தது . தற்சமயம் அதை அதனிடம் விடுவது நன்று . எப்படியும் வீடு சென்று சேர்வதற்குள் அப்படி ஒன்று நிகழவேயில்லை என்றாகி இருக்கும் . உடன் வந்த அனைவரையும் அவர்களின் குடியிருப்புக்கு சென்று விடும் பொருட்டு சிறு நடை பயணம் போல அவரவர்களின் வாழ்விடம் நோக்கி நடக்கத் துவங்கினோம் . குடியிருப்பு சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது . நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிரிப்பும் வெற்றிக் களிப்புமாக பேசியபடி அந்த இரவு நேர நடை பயணத்தில் உடன் வந்தனர் . ஊர் ஆரவாரமற்ற அந்த இரவு நடைபயணம் மனதிற்கு மிக அனுக்கமாக இருந்தது . அந்த இரவு எங்களுக்கு மட்டுமேயாக . ஒருவேலை இரவு நேரம் அனைத்தையும் அப்படி பார்க்க வைப்பது போலும் . எனது வீட்டில் என்ன நிகழப் போகிறது என்கிற கவலை  ஒருபுறம் ஓடிக் கொண்டிருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பரவச நிகழ்வு அதை நானும் இழக்க விரும்பாமை மட்டுமே அப்போது நெஞ்சில் இருந்து கொண்டிருந்தது . நான் அதுபோல இரவில் நெடுநேரம் வெளியில் இருந்ததில்லை என்பது தனி உற்சாகத்தை கொடுத்திருந்தது கணக்கில்லா டீ களும் சிகரெட்களும் வெட்டி சிரிப்பும் ஒருவர் பற்றி ஒருவர் பகடியும் நையாண்டியுமாக அந்த பகுதியை அதிர்ந்து கொண்டிருந்தது , பின் மெல்ல நேரமானதை உணர்ந்து  அனைவரும் ஒவ்வொருவராக அங்கிருந்து விலக துவங்கினர் . மரியாதை நிமித்தமாக சில முக்கியஸ்தர்களை அவர்களுடைய வீடு வரை சென்று விட்டு வர கிளம்பினோம் . ஒரு விதமான வெட்டி மனநிலை . இளைஞர் காங்கிரஸ் நண்பன் பெருமாள் அந்த பகுதியை சார்ந்த தோழன் . அவன் வீடு வரை வந்தபோது அவனது தந்தையை சந்திக்க முடிந்தது எளிய குடிசைகள் நிறைந்த பகுதி . சாலை என ஏதும் இல்லாமல் கற்கள் கொட்டி மேடு செய்யப்பட்டு பகுத்து வடிவில் ஒழுங்கற்ற வீடுகள் இருள் நிறைந்து கனத்து காணப்பட்டது , சற்று நேரம் கழித்தே அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன் .கெடும் நாற்றம் அடர்த்தியான இருளுடன் அதை ஒரு பருப்பொருளை பார்க்க முடிவதை போல எங்கும் சூழ்ந்து நின்று கொண்டிருந்தது . அதன் அடர்த்தி தாங்க முடியாததாக இருந்தது . முதலில் அருகில் தேங்கி  இருக்கும் அல்லது அழுகிய பொருளில் இருக்குது அது வருகிறது என நினைத்தேன் . மூக்கை பொத்துவதோ அது என்ன துர்நாற்றம் என கேட்கவோ மிகுந்த தயக்கமாக இருந்தது , அது அவர்களை சங்கடப்படுத்தக் கூடும் . விரைவில் அங்கிருந்து வெளியேற நினைத்தேன் துர்நாற்றம் வயிற்றை புரட்டுவதாக இருந்தது . காஞ்சி போட்ட வெள்ளை காதர் சட்டையுடன் மொட மொடக்க காட்சி தரும் அவன் எப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வருகிறான் என்கிற உண்மை முகத்தில் ஓங்கி அறைந்தது. அவனைப் பற்றிய எந்த உண்மை நிலையை உணராதிருந்தது குற்ற உணர்வை ஏற்படுத்தியது.ஒரு கட்டத்தில் என் நிலைமையை புரிந்து கொண்ட பெருமாள் அது அவனது குடியிருப்பிற்கு வெகு அருகில் இருக்கும் அந்த ரசாயன ஆலையின் கழிவில் இருந்து வருகிறது என்றான் . அதன் பொருட்டே இன்று இவ்வளவு களேபரம் . அதிர்ச்சியாக இருந்தது .ஒரு நிமிடம் நிற்க முடியாமையை ஏற்படுத்திய அந்த மாசு நிறைந்த சுற்றுச் சூழல் அவர்களுக்கு பழகிய ஒன்றாக இருந்தது . அந்த தொழிற்சாலை வந்தது முதல் ஏதாவதொரு வகையில் அன்றாட சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள் . சற்று நேரத்தில் அந்த ஊர் பெரியவர் யாரோ ஒருவர் எங்களை நோக்கி கைகளை நீட்டி வசவுகளை வாரி விட்டுக்கொண்டிருந்தார் , அவர் குடிகாரர் என்று முதலில் நினைத்தேன் எங்களை திட்டியபடி வெகு அருகாமையில் வந்துவிட்டார் , அவர் குடித்திருக்கவில்லை என்பதை சிறிது நேரம் கழித்தே உணரமுடிந்தது . “இது இன்றோடு முடியப்போவதில்லை மேலும் சிக்கலை உருவாக்கும் . இப்படி எத்தனை நாளைக்கு இரவில் உங்களால் வர முடியும்என கேள்வி எழுப்பினார் . உள்ளூர் காங்கிரஸ் பிரமுகரின் பெயரை சொல்லி அதன் பிண்ணியில் அந்த ஆலை நிர்வாகம் வளர்ந்து வந்ததை விளக்கினார் அது நீண்ட காலமாக இருந்துவரும் சிக்கல் , மேலும் அது பல காலம் அங்குதான் இருக்கப்போகிறது . நிரந்தரத் தீர்வு என ஒன்றில்லைஎன்றார் . திரும்பவும் அதே அனுபவம். அரசியலால் அணைத்திற்கும் தீர்வு கண்டுவிட முடியாது என மீளவும் ஓங்கிச் சொன்ன யதார்தத குரல்


என் முதிரா இளைமையின் காரணமாக அதை முற்றும் சரி சேர்த்து விட முடியும் என்பது ஒரு மிகை நம்பிக்கை என்பதும் , அது மெல்ல உடைந்து போய்க் கொண்டும் இருந்தது . அந்த சிக்கலுக்கு பின்னால் உள்ளவர் யாரென தெரிந்தும் அவரது  செல்வாக்கு அவரை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாமையை உருவாக்கியது . நங்கள் பேசிக் கொண்டிருந்த கூட்டத்தில் மாற்று கட்சியினரும் சிலர் இருந்தனர் . அவர்களில் மூத்த ஒருவர் என்னிடம் பேசியது எனக்கு ஆரம்பத்தில் மகிழ்வாக இருந்தாலும் நான் செய்யக்கூடுவது என்ன என்கிற புரிதலை மெல்ல அடைந்தேன் . அவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் , அந்த பகுதியை சேர்ந்த மூத்தவர் சிலர் எங்கள் செயல்களை விமர்ச்சித்த போதும் அவர் தான் சொன்னவற்றில் உறுதியாக இருந்தார் . இரவு நேரம் ஏறிக்கொண்டே வந்தது நான் வீடு திரும்பியாக பேண்டும். மெல்ல காரை நோக்கி சென்றதும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அவர் என் கார் வரை என்னுடன் வந்து எங்களை வழியனுப்பி வைத்தார் . வழியில் நிறைய பேசினார் . கண்ணன் தலைவராக இருந்த காலத்தில் இது போல தொண்டர்களின் சிக்கல்கள் அவரால் நேரடியாக தலையிட்டு மட்டுமே தீர்க்கப்பட்டது . அதிகாரம் உள்ளவர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி செய்வது வளர நினைப்பவர்கள் அதை நோக்கி சென்று தான் தீர்க்க முடியும் என்றார் .அதற்கு எந்த பதவியில் இருப்பது  முக்கியமல்ல நேரடியாக அணுகுவதே அதை தீர்க்க வல்லது என்றார் .தேவை தொண்டர்களை ஒருங்கு திரட்டும் பலம் என்பதாக இருந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...