https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 1 ஜனவரி, 2021

அடையாளமாதல் * கொள்வதும் விளைவதும் *

 



ஶ்ரீ:



பதிவு : 555  / 745 / தேதி 01 ஜனவரி  2021


* கொள்வதும் விளைவதும்




ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 33.






காலம் யாருக்கும் தன்னை மீறும் ஒன்றை எப்போதும் அளித்ததில்லை . மீறுபவர்களுக்கு தன்னுடைய போக்கால் நிதானமாக காத்திருந்து பதில் சொல்லுகிறது . அவை பல கோணங்களைக் கொண்டது . அறிய முயலும் சிலருக்கு அது கால பரிமாணத்தில் புதுப்புது அர்த்தங்களை, கணக்குகளை, உருவாக்கி கொடுத்துக் கொண்டே இருக்கிறது . முடிவிலி போல .தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி அதிரடித் தலைவராக அறியப்பட்டவர் . திரவிட பாணி மற்றும் காங்கிரஸ் கலவையாக இருந்தார். தன்னுடைய நிலைப்பாட்டால் அவர் அத்தனை காலம் தமிழ காங்கிரஸ் கட்சி தலைவராக நீடித்ததே ஒரு சாதனை என்றே நினைக்கிறேன் . காரணம் காங்கிரஸ் தலைவர்கள் அதிரடி அரசியலை செய்ய இயலாதவர்கள் . காங்கிரஸ் இந்திய அரசியல் நிலப்பரப்பின் பல கருத்துக்கள் அவற்றின் நிலைப்பாடுகளினாலான முரணியக்கத்தின் வெளிப்பாடுகள். அதை தனி ஒருவர் தன்னைப் பிரநிதிப் படுத்திக் கொள்ள இயலாது . அவர்களால் கண்ணுக்கு எட்டாத விஷயங்களில் தங்களது கூரிய கருத்தை ஒரு போதும் முன்வைக்க முடியாது . அவ்வாறு முன்வைத்தவர்கள் தாங்கள் முன் வைத்த கருத்தினாலாலேயே அடித்துச் செல்லப்பட்டனர். இந்திய சுதந்திர போராட்டத்தை காந்தி அப்படி ஒரு போதும் முன்வைக்கவில்லை . ஒரு கருத்தியலை மையமாகக் கொண்ட போராட்டம் பொது வெளியில் வைக்கப்பட்ட போது அதன் திசை மெல்லத் திரண்டு தன்னைத் தானே வழிநடத்தி கொண்டு , வழியில் பல மாற்றங்கள் செய்ப்பட்டு முன்னகர்ந்திருக்கிறது . அதற்கான வழிகளை காந்தி கண்டடைந்து கொண்டே இருந்தார் .பத்திரிக்கைகள் எப்போதும் தனது தலைப்பிற்கு ஏற்ற ஓரிரு வரி செய்தியாகளையே தலைவர்களிடம் எதிர்பார்க்கின்றன ஆனால் அது இட்டுச் செல்லும் இடம் என்ன என அறிந்தவர்கள் அத்தகைய அரசியலை முன்வைப்பதில்லை . அதிரடி அரசியலையே எப்போதும் பத்திரிக்கைகள் சார்ந்திருப்பது . தமிழக பத்திரிக்கையாளர்கள் திரவிடப்பாணி கருத்தால் கொண்டு செல்லப்படுபவர்கள் . அவர்களுக்கு பரபரப்பான செய்திகளே தேவைப்படுபவை. காங்கிரஸ் போன்ற தேசிய கட்சித் தலைமைக்கு கீழ் உள்ள பல மாநிலத் தலைவர்கள்  அவற்றை ஒருபோதும் கொடுக்க முடியாது , என்பதோடு அந்தபாசாங்கைதஒருபோதும் நம்பியவர்கள் இல்லை . சண்முகம் கட்சியின் தலைவராக அவரை மிளிரச் செய்தவை அவர் தன்னை இருத்திக் கொண்டவிதம். மூப்பனார் போன்ற தலைவர்களும் அதில் சறுக்கலை சந்தித்தார்கள் . தேசிய அரசியல் நிலைப்பாடுகள் அதன்கச்சாப் பொருளானதகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அவற்றைப் மையப்படுத்தி அறிந்து கொள்ளும் ஒரு மாநிலத் தலைமை  எப்போதும் தில்லி தலைமையிடத்தை ஒட்டிய கருத்தியலுடன் தான் இருப்பதை பாதுகாப்பது என எப்போதும் நம்புவது .1990 களில் அது வழக்கொழிந்து போனது. இருந்தும் அரசியல் என்பதே தகவமைதலை அடிப்படையாக் கொண்டது என தனது இறுதிக் காலம் வரை உறுதியாக நம்பினார் . செய்தித் தாள்களை ஆவணங்களாக பாவிக்கும் போக்கை மூப்பனார் மற்றும் வாழப்பாடியிடமும் பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் பார்வைக்கு சாதாரன செய்திகளாகத் தென்படுபவைகளுக்கு உள்ளே அவர்களுக்கானதை கண்டெடுப்பது பற்றி சண்முகம் சொன்னதை நினைவுறுகிறேன். அவை மாநில அல்லது தேசிய அளவில் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதை கணிக்க இயல்வது . அரசியலின் அத்தனை சாத்தியங்களை கொண்ட அதன் நீள் முரணியகத்தின் மைய விசையில் தனக்கான இடத்தை நொய்மையாக ஆனால் உறுதியாக வைத்துக் கொண்டார். அது சமரசப்புள்ளியா என்றால இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும் . அது விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது உணர மட்டுமே முடிவது .


புதுவை சுதந்திரப் போராட்டம் குறித்து தலைவர் தனது அனுபவங்களை அதிலிருந்து உருவான ஆழமான கொள்கைகள் பற்றி தனது தனிப்பட்ட உரையாடலின் போது சொன்னவற்றை முந்தைய பதிவுகளில் சொல்லி இருக்கிறேன் . குபேர் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோரிக்கையை முன்வைக்கும் ஒவ்வொரு முறையும் பழைய சம்பவங்களை சொல்லி அந்த கோரிக்கையை ஏற்காது அவற்றை மறுத்துக் கடந்து செல்வதும் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு மழுப்பலான பதிலையும் சிரிப்பையையும் வைத்து அவர்கள் எழுந்து செல்வதை பல முறை பார்த்திருக்கிறேன் . அவர்களது கோரிக்கை சண்முகம் உயிரோடு இருந்த காலம் வரை நிகழவேயில்லை . நான் அறிந்து இந்த கோரிக்கை 1996 களில் மிக தீவிரமாக முன்வைக்கப்பட்டவைகள் . 1996 முதல் அவர் 2013 அவர் மரணமடையும் வரை சுமார் 17 வருடங்களில் அவரது அரசியல் உச்சகட்ட ஏற்றமும் இறக்கமும் கண்டவை 2006 களில் அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கிக் கொண்டார். அதன் பிறகும் இந்த கோரிக்கை பல முறை முன்வைக்க்கப் பட்டது. ஆனால் தலைவர் சண்முகமுகத்தின் எதிர் கருத்தியல் குறித்த அச்சம் விலகவேயில்லை என்பதும் அவரை கடந்து செல்ல அரசு தயங்கியதையும் அறிந்து கொள்ள முடிகிறது . அவர் 2013 மரணமடைந்த பிறகு 2014 களில் ரங்கசாமி முதல்வராக வந்த போதுதான் அந்த கோரிக்கை நிறைவேறியது . ஒருவேளை தலைவர் சண்முகம் உயிரோடு இருந்திருந்தால் அது நிகழாது போயிருக்கும் என்பதிலிருந்து அது அவரது பிடிவாதம் என்பதை விட அவர் முன்வைத்த கேள்விகளுக்கு யாராலும் இறுதிவரை பதில் அளிக்க இயலவில்லை என்பதே பிரெஞ்ச் இந்திய விடுதலை போராட்டத்தை பிறதொரு அழுத்தமான கோணத்தை பார்க்க முடிகிறது  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்