https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 30 ஜனவரி, 2021

அடையாளமாதல் * வரவேற்பற்ற நுழைவு *

 


ஶ்ரீ:



பதிவு : 561  / 751 / தேதி 30 ஜனவரி  2021


* வரவேற்பற்ற நுழைவு * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 39.







அமைச்சர் பொறுப்பில் வந்தபோது கண்ணனுக்கு ஆதரவான தாழத்தப்பட்ட சமூகத்தினர் மீது அவருக்கு இருந்த  செல்வாக்கின் காரணமாக அவரை நிலவுடைமை சமூகத்தினர் அஞ்சினர். அந்த அச்சத்தால் பல காலம் அடக்கி வாசித்தனர் . வளர்முகத்தில் இருந்த கண்ணனை மெல்ல ஏற்கத்துவங்கினர் அது கண்ணன் அரசியலை மாற்றி அமைத்தது . பிற காங்கிரஸ் தலைவர்கள் சென்று சேர்ந்த இடத்தை அவரும் சென்று சேர்ந்தது துரதிஷ்டவசமானது . அவர் போக்கில் தென்பட்ட நுணுக்கமான மாறுதல்கள் அவரது நெருங்கிய நண்பர்களை அவரிடமிருந்து விலக வைத்தது . அரசியல் எதிர்காலத்தை முன்வைத்து அவரிடம் இணைந்த பலர் அப்போது வெளியேறினர் . மனம் கசந்து பாலனை போன்றோர் வெளியேறிய போது தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களில் மிகப் பெரும்பான்மையோர் அவருடன் வெளியேறினர் . கண்ணனின் அரசியல் வெற்றி மிக எளிதில் சாதிக்கக் கூடியதாக அனைவருக்கும் தெரிந்தது . ஆனால் அது முற்றாக புறத் தோற்றம் மட்டுமே . கண்ணனின் அரசியல் வெற்றிக்கு பல முக்கிய அடிப்படை காரணிகள் இருந்ததன.  


கட்சி தாண்டிய ஆதரவு தளம் ஒன்று அவருக்காக உருவாகியிருந்தது , அவரது நகர்புறம் சார்ந்த அரசியல் அவருக்கு பெருமளவு உதவின . பொதுமக்கள் அளவில் அவரது பெயர் வசீகரிக்க துவங்கி இருந்தது . இதற்கு முன்பு சுப்பையா அவர்களுக்கு அப்படிப்பட்ட செல்வாக்கு இருந்தது . பாலனால் இறுதி வரை நகரப்பகுதி இளைஞர்களை ஈர்க்க முடியவில்லை. கண்ணனிடம் இருந்த வந்த இளைஞர்களை தக்கவைத்துக் கொள்ள அவர் பெரிதும் போராடினார் . அதனால் அவரது ஆதரவு தளம் மெல்ல தேய்ந்து போனது. கண்ணனின் அரசியல் பின்புலம் மிக விஸ்தாரமானது . காமராஜர் இந்திராகாந்தியுடன் முரண்பட்டு புதிய கட்சி துவங்கிய போது புதுவையை சேர்ந்த காங்கிரஸ் ஆளுமைகளில் பலர் அவரை ஆதரித்தனர் . அவர்களுக்கு சண்முகம் மீதிருந்து கசப்பு முதன்மை காரணம் . கண்ணனைத் தவிர பிற எவரும் சண்முகத்தை நேரடியாக எதிர்த்ததில்லை . அவரை அஞ்சினர் . கண்ணன் சண்முகத்தை வெளிப்படையாக எதிர்த்த போது அவருக்கு எதிரான அனைத்து முக்கிய தலைவர்களும் கண்ணனை சார்ந்து இயங்கினர். ஒரு கட்டத்தில் கண்ணன் அவர்களுக்குமான தலைவராக உருவெடுத்தார். விந்தையான அதே சமயம் மாறாத அரசியல் வதிகளில் ஒன்று . காரணம் அவர்கள் அனைவருக்கும் சொந்தத் தொகுதி தவிர பிற தொகுதிகளில் செல்லாக்கில்லாமை வெளிப்படையான அரசியலின்னமை மேலும் வளைந்து கொடுக்கும் போக்கு போன்றவைகளால் அவர்களை விட வயதில் அனுபவத்தில் இளையவரான கண்ணனை தங்கள் தலைவராக ஏற்க வேண்டய சூழல் எழுந்தது . கண்ணன் அரசியல் ரீதியில் எழுந்த போதே மாநிலம் முழுவதும் தன்னுடைய செல்வக்கை நிலைநிறுத்திக் கொண்டார் . அது இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் பலமாக பார்க்கப்பட்டது . ராஜீவ் காந்தி உருவாகி வந்தபோது இளைஞர் அமைப்பு புது வசீகரத்தை பெற்றது . கண்ணன் மிக வேகமாக வளர்ந்தது இந்த காலகட்டத்தில் . அவரது அணிக்கு கிட்தட்ட தலைமை தாங்க துவங்கியது அப்போதுதான் .


கண்ணன் அணியினர் காமராஜரை ஆதரித்து புதுவையில் மாற்று அரசியலை முன்வைக்க விரும்பினர் . அன்று அது  சண்முகத்திற்கு எதிரான அமைப்பில் ஒன்றிணைக்கும் சக்தி கண்ணன் . சபாபதி , பாலாஜி,சாய்குமாரி,வக்கீல் முருகேசன்,ராமஜெயம் என ஒரு பட்டாளமே இருந்து .

முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினராக நீண்ட காலம் இருந்தவர் சபாபதி , “கவுண்டர்என்கிற அடைமொழியால் அறியப்படுபவர் . அரசியலில் அனுபவம் வாய்ந்தவர் காமராஜரை ஆதர்சமாக கொண்டவர் . அவரை போன்ற ஒரு நிரை அன்று சண்முகத்திற்கு எதிராக கை கோர்த்தவர்கள் . தமிழக அரசியலை போல புதுவையில் நிகழவில்லை தமிழகத்தில் காமராஜர் தோற்றதும் . புதுவையில் காங்கிரஸில் இருந்து சென்றவர் மீளவும் காங்கிரஸிற்கே திரும்பினர். சண்முகம் அனுவரையும் உள்ளே அவர் அனுமதித்தார் . அவருக்கும் வேறு வழியில்லை


அன்று கண்ணனுக்கு எதிராக நிலம்முடை சமூகம் தனது அனைத்து உள்ளூர் சிக்கலும் காவல் நிலையம் சென்றது . பொருளியல் பலம் x தொண்டர் திரள் மோதத் துவங்கியதும் அது உட்கட்சி பூசலென தலைவர் சண்முகத்திடம் கொண்டு செல்லப்பட்டு ,அவர்கள் இளைஞர் காங்கிரஸ் என்பதால் கண்ணனின் மற்றும் பாலன் அணி என முத்திரைகுத்தப்பட்டு சண்முகத்தால் அரசியல் ரீதியில் ஒவ்வொரு முறையும் வீழ்த்தப்பட்டனர் .

அவர்களின் மேல் கசப்புள்ள சண்முகம் அவர்களை முற்றாக விலக்கும் இடத்திற்கு அவரை கொண்டிவந்திருந்தனர் . சண்முகம் போன்ற தலைமைக்கும் இது தெரிந்தே நிகழந்திருக்க வேண்டும் என்றாலும் அங்கு நிலவும் உள்நெசவுகளை சிடுக்காக்கி கொள்ள அவர் விரும்பியதில்லை என்பது அவரது அரசியலாக இருக்கலாம்.அரசியலில் சண்முகம் தன்னுடைய நயிலப்பாட்டை அவர் எங்கோ ஒரு உச்சத்தில் தன்னுடன் நிகழ்ததிக் கொண்டிருக்க வேண்டும் . அனைவருக்கும் அவர்களுக்கான இருத்தலை அடைவதற்கு விட்டு விலகுபவராக அதேரசமயம் தன்னை நோக்கி வரும் எதையும் எதிர்கொள்பவராக அவரை அறிந்திருக்கிறேன் . மேலும் அது அவர்களின் அரசியல் பிழைத்திருக்கும் வழி , அதை செய்து கொடுப்பது தனது பணி என அவர் நினைதிருக்கலாம் .அவர்களை கட்சி அமைப்பில் பொருந்தியிருக்கச் செய்யும் நிர்பந்தமும் அவருக்கு  இருந்திருக்க வேண்டும் அதன் பொருட்டு நிலமுடை சமூகத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் இடத்தில் இருந்தார் .எனவே எந்த அரசு வந்தாலும் அதன் மீது வலுவான பிடி உள்ளவர்களாகவே அவர்கள் எப்போதும் இருந்தனர் .என்னிடம் இளைஞர் காங்கிரஸ் இந்த சிக்கல்களுடன் முழுமையாக என்னிடம் வந்து சேர்ந்தது . அடிப்படையில் அமைப்பை சண்முகம் முழுவதுமாக ஏற்க வேண்டும் என்பது  என்னுடைய நிலைப்பாட்டாக இருந்தது . என்னால் வன்முறை சிக்கலுக்குள் செல்ல இயலாது . எதன் பொருட்டும் என்னால் அதை ஏற்க முடியாது என அனைவரிடமும் திட்டவட்டமாக சொல்லியிருந்தேன். அந்த சூழலில்தான் அந்த கொடியேற்ற நிகழ்வு நடந்து முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்