https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 3 பிப்ரவரி, 2021

அடையாளமாதல் * பார்வை கோணம் *

 




ஶ்ரீ:



பதிவு : 562  / 752 / தேதி 3 பிப்ரவரி  2021


* பார்வை கோணம்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 40.





புதுவை அரசியலில் அனுபவங்களின் ஊடாக வளர விரும்புவதும் தங்களை மாற்று  தலைமைகளாக முன்வைக்கும் போக்கு உருவாக இயலாது போனது ஏன் எனக் கேட்டுக் கொண்டதுண்டு அதன் முதன்மை காரணங்கள் அரசியல் ஈடுபாடு இன்றும் அடித்தட்டு மக்களுக்கு உரியது,பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கு உள்ள ராஜபாட்டை குறித்து நான் நினைக்க ஒன்றுமில்லை . எழுந்து வர முடியாமைக்கு தங்களின் பொருளியல் பலமின்மை, மாநில கட்சித் தலைவரின் கடும் எதிர்ப்பு போன்றவை அடிப்படை என பல காலம் இளைஞர் காங்கிரஸார் புலம்புவதுண்டு . அது ஒரு வகையில் உண்மை கூட . ஆரம்ப நாட்கள் முதல் அதை நோக்கியே பயணப்பட்டிருக்கிறேன். சண்முகத்தை முதன்மை எதிரியாக எண்ணும் போக்கு கட்சியில் பலருக்கு இருப்பதை உணர்ந்திருக்கிறேன் . ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்டக் காரணம் இருந்தது . நேரடியாக அவருக்கு கீழே அரசியல் செய்யும் வாய்ப்பு கிடைத்த போது பல காலம் இணையாத ஒன்றை இணைக்கும் நோக்கத்துடன் ஆவேசமாக செய்பட்டேன்.


இளைஞர் காங்கிரஸ் தன்னுடைய தொண்டர்களை ஒருங்கு திரட்டும் திறமையால் தங்கள் பலத்தை நிலைநிறுத்திக் கொண்டிருந்தது . அவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்பு நிலை இளைஞர்களை முன்னழைத்தனர் . அனைத்திற்கு குவிமையமாக அன்று கண்ணன் இருந்தார் . அவரது செயல்பாடுகள் பிறிதொரு வகையில் கட்சிக்கு வெளியேயும் அவருக்கு அரசியல் சிக்கலை உருவாக்கியது . தொண்டர்களை ஒருங்கு திரட்டும் பலம் மட்டுமே அவர்களை அரசியல் களத்தில் தவிர்க இயலாதவர்களாக ஆக்கிருந்ததுஅனைத்துத் தரப்பு இளைஞர்களை தன்னை நோக்கி வரவழைக்கும் கண்ணனின் செயல்பாடுகள், கம்யூனிஸ இயக்கங்கள் தங்களுக்கு எதிரான அறைகூவலாக  பார்த்தனர் . அதை தங்களுக்கான களமாக உருவகித்திருந்தனர் . அங்கிருந்து எழுந்த வன்முறைகளும் முடிவுறாத தொடர் அரசியல் கொலைகளும் அதற்கான பழிவாங்களும் கண்ணனின்  அரசியல் வழிமுறைகளை அவருக்கு வகுத்தளித்திருக்க வேண்டும் . அவை ஒரு போதும் திரும்பி செல்ல இயலாத பாதையாக கண்ணனால் பார்க்கப்பட்டது . அதன் அடிப்படையில் அவரது அரசியலும் ,முடிவுகளும் அதற்காக அவர் செய்து கொண்ட தொடர் சமரசங்களிலும் அவரது பதட்டத்தை உணரமுடிகிறது . அவர் தன்னனை மட்டும் மையப்படுத்திய அரசியலை  முன்னெடுத்தார் . அவை அனைத்து  குறுகிய கால வெற்றியைப் போல ஒன்றை அவருக்கு தொடர்ந்து அளித்திருந்தாலும் , அது இன்று அவர் வந்து சேர்ந்திருக்கும் இருட்டிற்கு அழைந்து வந்தது.


பிறிதொரு கோணத்தில் சண்முகத்தின் அரசியலில் அதை நோக்கியப் பயணத்தை ஒருவழிப்பாதையாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமையை அறிந்து கொள்ள முடிகிறது. சாதகமான சூழலில் முனைந்து செயல்படும் அவர் மற்ற காலங்களில் தனது அடுத்த நேரத்திற்கு காத்திருந்தார் . அரசியலில் காத்திருப்பது இன்றைக்கு  என்ன பொருள்படும் எனத் தெரியவில்லை . ஆனால் எனக்கு காத்திருப்பது அரசியலின் ஒரு முக்கிய அங்கம் என இன்றளவும் உணர்கிறேன் . அவை அன்று சொல்லாக திரளாத குத்துருக்கள். அதை எனது அடிக்கருத்தாக இருந்து கொண்டிருந்தது .அதன் தீவிரம் குறித்து எனக்கான சொற்களை கண்டடைந்தது காந்தியின் விடுதலை போர் குறித்த பார்வையை ஜெயமோகனின்இன்றைய காந்திவாசித்த போது மேலும் மேலும் எனக் குவியத் துவங்கியது . அதன் உண்மை மற்றும் கறார் தன்மையை அருகிருந்து பார்த்து உள்வாங்கி புரிந்து கொண்ட உணர்வை அடைகிறேன் . அவை வார்தைகளால் விவரிக்க இயலாத திறப்புக்கள் . காந்தியை போன்ற தலைவர்கள் வாழ்க்கையை வழிநடத்தும் பேரியற்கையை அறிந்து கொண்டு அதனூடாக தங்களை பிணைத்துக்  அது வைக்கும் அறைகூவலையும், அதை அவர்கள் ஏற்றுக் கொண்ட முறையும் உணர்கையில் கடும் அக நடுக்கத்தைக் அடைகிறேன் . அதன் நிலைப்பாடுகளை புரிந்து அது கேட்கும் தங்களின் வாழ்கையை அதற்கு ஈடாக வைத்தார்கள் . நான் தலைவர் சண்முகம் வழியாக காந்தியை புரிந்து கொள்ள முயல்கிறேன் . பேரியற்கை என்னும் கடலில் காந்தியும் ஒரு நீர்கொப்பளம் போல என ஒரு சொல் உண்டு என்கிறார் ஜெயமோகன் . அது அந்த பேரியற்கையின் முன்பாக ஒரு மாநுடனுக்கு என்ன பொருள் என்பதை விளக்கும் பொருட்டு சொல்லப்பட்டது. அந்த நீள் வரிசையில் தலைவர் சண்முகத்தை கொண்டு வைத்து காந்தியை அதன் வழியாக அவரது சிந்தனைகளை புரிந்து கொள்ள முயல்கிறேன்


காந்திய சிந்தனைகள் எனக்கு ஏன் தேவையாகின்றன? .  அவரின் சுதந்திரப் போராட்ட வழிமுறைகள் ஏன் எனக்கு அரசியலைத் தவிர்த்து வேறு பல கதவுகளை திறக்கின்றன. “காந்தியை புரிந்து கொள்ளலாம் ஆனால் பின்பற்ற முடியாதுஎன்கிறது ஜெயமோகனின் அழுத்தமான அவதானிப்பு . அந்தக் கருத்துடன் ஒத்து போகிற , அல்லது அவற்றின் சாரம்சத்தை உணர்ந்து கொள்ள எப்போதும் முயன்றிருக்கிறேன் . காந்திய வழிமுறைகளின் அதன் கடுமையினால் அவற்றை வாழ்வில் பயன்படுத்த இயலாத எளிய மனிதர்களுக்காக அவர் மீள மீள அவர்களிடம் உரையாடியபடி இருந்தார் . காந்திய கொள்கைகள் எனக்கு என்னவாக இருக்கிறது . அந்த தகவல்களினூடாக என்ன புரிந்து கொள்ள முயல்கிறேன் . ஆம் அவை மிக சில சமயங்களில் உளக் கற்பிதமாக பறக்கின்ற மனத்தை அதன் இயல்பில் சென்றுவிடாத படி பிடித்துக் கொள்ள அவற்றை உபயோகப்டுத்திக் கொள்கிறேன். அதை அடிப்படையாக வைத்து எனது மனப்போக்கை கையாண்டபடி இருக்கிறேன் . இதுவரை உள்வாங்கி இருந்ததை இப்போது தொகுத்துக் கொள்ள, நடைமுறை படுத்திப் பார்க்க முயன்றபடி இருக்கிறேன் . அந்த நொடி அவரை நினைத்து மனதை விம்ம வைக்கிறது . காந்தி தன் வாழ்நாளெல்லாம் செய்து பார்ததை சில இமைப் பொழுதாவது உள்ளத்தில் நிகழ்த்தி பார்த்துக் கொள்கிறேன்.


காந்தியைப் பற்றிய நுண்ணிய தகவல்கள் எனக்கு ஏன் அந்த ஈர்பைக் கொடுக்கிறது . உலகியலில் நம் கருத்தியலுக்கு அதன் வெளிப்பாடான செயல்படுதலுக்கும் உன்னத மனிதர்களின் கருத்து தேவையாகிறது . அவற்றை நம்மால் செயல்படுத்தக் கூடிய ஒரு சிறு அம்சத்தையாவது செய்து செய்து பார்க்க முயல்கிறோம் .அதற்கான சாத்தியக் கூறுகள் அனேகமாக இல்லை என்றாலும். ஜெயமோகனுக்கு எழுத்து தவம் , அதை அவர் எழுதி எழுதி பார்த்து தனக்கான மெய்மையை நோக்கி செல்கிறார் . எனக்கு அரசியல் அந்த தவம் போல . இன்று எதனுடனும் தொடர்பில்லாத சூழலிலும் என்னை ஈர்ப்பது அரசியல் மட்டுமே . நான் என் அரசியல் எனச்சொல்லுவது மனிதர்களை ஒரு கருதுகோளை அல்லது கருத்தியலை செய்படுத்த இணைப்பது . எனது கனவுகளுக்கு அங்கிருந்து வழிகளை கண்டடைய முயல்கிறேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்