https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

அடையாளமாதல் * ஆழ்மனத்தின் மடை *

 ஶ்ரீ:



பதிவு : 563  / 753 / தேதி 7 பிப்ரவரி  2021


* ஆழ்மனத்தின் மடை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 41.




இயலுமானால் இலக்கிய வாசிப்பின் வழியாக வாழ்கையின் ஆயிரக்கணக்கான சாத்திய கூறுகள் அனைத்தையும் மனத்தளதில் நிகழ்த்திப் பார்த்து புரிந்து , வாழ்ந்து பார்க்க முயலலாம் . அதற்கான உளக் கருவி கிடைக்கவேண்டும். மேலதிகமாக அவற்றை நிகழ்த்திப் பார்க்கும் விசை கை வரவேண்டும் . நிகழும் தருணத்தில் அது கொடுக்கும் பரவசம் ,புரிதல் மானுட நிகழ் வாழ்கையை பற்றி அறிந்து கொள்ள தனது ஆழ்மன வேர்களை நோக்கி அது இட்டுச் செல்கிறது . அங்கிருந்து தனது செயல்பாட்டை வடிவமைத்துக் கொடுக்கும் முடிவிலா நதிக்கு அழைத்துச் சென்று காண்பிக்கிறது . அங்கிருந்து அது எப்படி நம்மை நாம் அறியாமல் விருப்பு வெறுப்பு என்கிற இரட்டை சரடை பற்றிக் கொண்டு மேலெழுந்து வந்தது என காட்டிக் கொடுக்கிறது . புரிதல்களின் கதவு திறந்து கொள்ள அந்த இரட்டையை சாராத ஒன்றை பற்றி நிற்க இயலுமானால் , அது முதலில் நம்மால் ஏற்க இயலாத நம்மைப் பற்றிய கூறிய விமர்சனப் பார்வையை முன்வைக்கிறது . அதை கடந்தாலொழிய சமநிலை என்கிற இருப்பு வாய்க்காது .ஒரு குரு தேவையாய் இருப்பது இங்கு என நினைக்கிறேன் . குருவின் வழியாக அவரது பாதையை புரிந்து கொள்ள முயலும்போது இது கிடைக்கலாம் . அது ஒரு கீதா முகூர்த்தம் .  


அது ஆழ்மனப் படிமைத் தொகையை தெளிவாக விரித்த எடுக்கிறது . ஒரு தவம் போல . எனக்கான தளமாக நான் அரசியலை எடுக்கிறேன் . என் தவம் அரசியல். என் மெய்மையை அழகியலை கோட்பாடுகளை அங்கிருந்து பெற்றுக் கொள்கிறேன் . அவற்றை அனைத்தின் மீது போட்டுப் பார்த்து அதிலிருந்து எனக்கான கற்றலை  அடைந்திருக்கிறேன் . தலைவர் சண்முகம் போன்றவர்கள் எனக்களித்த  நல்ல அரசியலை நவீன இலக்கிய வாசிப்பிற்கு இணையாக வைப்பேன் . அதில் மனிதர்களை அவதானிப்பது அரசியலின் முதன்மை இலக்கு . வாழ்வின் அத்தனை சாத்தியங்களை உணர்ந்து கொள்வதன் வழியாக , அனைவரின் பெறுமதியில் இருந்து நிகர் வாழ்வை புரிந்து கொள்ள முடியுமானால், நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்தின் மேம்படுத்துதலின் வழியாக சென்று கொண்டிருக்கும் இந்த உலகின் போக்கை சற்றேனும் புரிந்து கொள்ள இயலும் என நினைக்கிறேன். நம்மை சூழ்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதுடன் ஒத்திசைய வேண்டும் என்கிற அவசியமின்றி அவற்றை பற்றிய புரிதல் நம்மை நாம் வைத்துக் கொள்ளும் இருப்பு என நினைக்கிறேன்.


நான் நீண்ட இலக்கிய வாசிப்புனூடாக வெண்முரசை நோக்கி வரவில்லை . அது சட்டென எனது மைய வாழ்வில் நுழைந்து கொண்டது . ஒரு ஆக்ரமிப்பு போல . அதை தவிர்கவே இயலாது அதிலிருக்கும் எனக்கான திரட்டை பெற்றுக் கொள்ளவே நீண்ட காலம் எடுத்துக் கொண்டேன் அவை இன்றுவரையிலும் கூட ஒரு விதையைப் போல இருந்து கொண்டிருக்கிறது . அது விடும் முதல் குருத்திற்கு காத்திருக்கிறேன் . அவற்றை என்னுள் நிகழ்த்திப் பார்க்க அவற்றை எழுதி எழுதி ஆழ்படிபத்தில் தேங்கி இருப்பது வெளிவரக் காத்திருப்பதை நோக்கி செவல்கிறேன்  . காத்திருந்ததற்கு இணையான நேரம் அது முளைத்தெழத் தேவை இல்லை . எத்தனை ஆயிரம் காலத்து இருளும் ஒளி பெரும் சிறு விலக்கின் நுழைவிற்கு பின்னர் சூழும் வெளிச்சம் என எனக்கான மெய்மை முழுவதுமாக இங்கிருந்து அடையக் கூடும் என நம்புகிறேன் .


வன்முறை அரசியலை கையில் எடுத்த கணம் முதல் அது கண்ணனை துரத்திக் கொண்டிருந்தது . இளைஞர் காங்கிரஸிற்கும் மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு இடையே தீராத பகை உருவாகி அதன் வழியாக கட்சிக்குள் பல வன்முறைகள் நிகழ்த்தின . அரசியலுக்கும் கட்சிக்கு அப்பாற்பட்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக  சிலர் தாக்கப்படுவது தொடர்ந்த போது அது அவர்களை இளைஞர் காங்கிரசை நோக்கி செலுத்தியது . தன்னை வளர்த்துக் கொள்ள பல கோணங்களிலில் எதிர்ப்பு அரசியலை இளைஞர் காங்கிரஸ் தலைமை முன்வைத்தது. எதிர்பும் வெறுப்பும் எளிதில் பற்றிக் கொள்ளக் கூடியது. அனைவரையும் ஒருங்கி விடுவது என்பதால் எளிதில் பிடிகொடுப்பது . ஆனால் அந்த செயல்பாடகள் அவர்களை ஒரு போதும் கட்சிக்கு உள்ளே உள்ள பொது அரசியலுக்குள் வர முடியாமல் செய்து விட்டது . தனக்கு கிடைத்த எல்லா சந்தர்பத்திலும் தனது முழு பலத்தை சொந்தக் கட்சிக்கு எதிராக நிற்க மட்டுமே பயன் படுத்திக் கொண்டார் . பின்னாளில் காங்கிரஸுடன் இணைந்து பின்னர் , இயந்தும் எதிர்த்தும் தனது அரசியலை நிறுவிக் கொண்டது போது அது அவருக்கு போதிய முக்கியத்துவத்தை பெற்றுக் கொடுத்தது . இளைஞர் காங்கிரஸ் தலைவராக பாலன் பொறுப்பேற்ற போது அவர் மிதமான அனுகுமுறையை கையாண்டார் . வன்முறைக்கு  அரசியலில் என்ன இடம் என்பது அவருக்கு புரிந்திருக்க வேண்டும் . கண்ணனிடம் தங்கள் அரசியல் எதிர்காலக் கனவுடன் வந்தவர்கள் பாலனுடனும் பயணித்தனர் . தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சட்டமன்றம் நுழையும் கனவுடன் அவரை பின் தொடர்ந்தனர்அது ஒரு அறுபடாத தொடராக ஆனது.


எனக்கான அரசியல் ஆரம்பம் முதலே அவர்களை ஒருங்கிணைக்கும் பணி எனக்கு பாலனால் அளிக்கப்பட்டது. அது அரசியல் ரீதியில் முக்கிய தருணம் என்றே எண்ணுவேன் .அது எனக்கு என்ன கொடுக்கப் போகிறது என்கிற புரிதல் இல்லாமல் ஆழ்மனம் வரும்பியதை செய்தேன் .அன்று அதை மிக சரியாக நான் கையாண்டிருக்க வேண்டும் . அது பின்னர் எனக்கென  அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. அதே சமயம்  மறைமுக எதிர் அரசியலால் தொடர்ந்து பின்னிழுக்கப் பட்டேன்அதுவே என்னை எப்போதும் முன்னோக்கி செலுத்திய விசை என உணர்கிறேன் . அதே பணியின் வழியாக அவர்களை சண்முகத்தை நோக்கி  மடைமாற்றம் செய்ய இயன்றது . எனது செயல்பாடுகள் சண்முகத்திற்கு அவரின் பிற அணுக்கர்களுக்கு மத்தியில் என்னை தனித்து அடையாளம் காட்டிருக்க வேண்டும் . இளைஞர் காங்கிரஸை ஒருங்கினைக்க எனக்கான வழி அவர்களை சண்முகம் நோக்கி அழைத்துச் செல்வது . அதற்கு இரண்டு காரணம் இருந்தது . ஒன்று அமைபுகளுக்கிடையே இருந்து இடைவெளி மிக ஆழமானது . அது முதலில் சரி செய்வதனூடாக எதிர்காலம் குறித்து எதாவது திட்டமிட முடியும் என்பது எனது அப்போதைய எண்ணமாக இருந்தது . இரண்டு அவர்களை ஒருங்கிணைக்கும் எவரும் அதை அதே அனைத்து  பெருநிலக் கிழார்களை எதிர்த்தே நிகழ்ந்த வேண்டியிருந்தது. அவர்கள் கோரும் வண்முறை எனக்கு கட்டுப்படியாகாது . அப்படி ஒரு மோதல் நிகழுமானால் அது சண்முகத்திற்கு எதிராக என எழட்டும் என கணக்கிட்டிருந்தேன் .


அவர்களால் ஒரு காலத்தில் இளைஞர் காங்கிரஸ் அரசியல் சண்முகத்திற்கு எதிரானதாக எடுக்கப்பட்டு அடக்கப்பட்டது. இன்று அவர்களை சண்முகம் அணியில் கொண்டு சேர்த்தது மட்டுமே நான் செய்தது .ஆனால் அது எளிதில் நிகழவில்லை . சண்முகம் மாற்றப்படாத தலைமையை கொடுத்தவர் என்பதும் அவர் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அப்போதைக்கு இல்லை என்பதைவிட அவரது அரசியல் செயலமுறையால் கவரப்பட்டு அவர்களை சண்முகத்திற்கு கையளிக்க முடிவுசெய்தேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்