https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

அடையாளமாதல் * பார்வை நகல்கள் *

                                                                                          ஶ்ரீ:



பதிவு : 566  / 756 / தேதி 23 பிப்ரவரி  2021


* பார்வை நகல்கள்  * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 44.






மாநாட்டில் கலந்து கொள்வருபவர்கள் அடையாள அட்டை மற்றும் தலைவர்களுக்கான கடவு சீட்டு முதலியவைகளை  அப்போது பெற்றுக் கொள்வார்கள் . பலர் வந்து பிட்டாவை சந்தித்து சென்று கொண்டிருந்தனர். நாங்கள் காக்கவைக்கப்பட்டோம் .நேரம் கடந்து கொண்டிருந்தது . எனக்கு பிட்டாவின் மனநிலை தெளிவாகத் தெரிந்தது  . நேரில் சந்தித்த போது முகம் கொடுத்து பேசவில்லை . புதுவையில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக நிகழ்ந்த பொதுக் கூட்டதிற்கு வந்திருந்த போது அவரை சந்தித்திருக்கிறேன் . என்னை நோக்கிய சிறு புண்ணகையை தவிர என்னிடமும் பேசவில்லை . வல்சராஜ் நியமித்ததில் அவருக்கு உடன்பாடில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது . அதில் விய்பென ஏதும் இல்லை .அவர்அமைப்பு மனிதர்கீழிருந்து வளர்ந்து இந்த இடத்திற்கு வந்தவர் . அவர்களுக்கான மனநிலை வேறு .அமைப்பை சீரமைக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருந்தது . பிரதமர் நரசிம்மராவ் அதிகாரப்பூர்வமாக அமைப்பை அதனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க . அதை இளைஞர் காங்கிரஸில் இருந்து தொடங்க விரும்பினார் . மூத்த தலைவர்களின் மனநிலையை அறிந்து கொண்டு பிறகு காங்கிரஸில் செய்வது சரியாக இருக்கும் என யூகித்திருந்தார் . இளைஞர் காங்கிரஸ் நல்ல பரிசோதனைக் களம் . வல்சராஜ் தனக்கு நிகழ்ந்த  அவமதிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை .வெளியே வந்ததும் காட்டமாக பேசிக் கொண்டிருந்தார் . எனக்கு அடுத்த நிகழ வேண்டியதைப் பற்றிய எண்ணம் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது . இரண்டு மாத காலமாக அடுத்தடுத்த தனி நிகழ்வுகள் ஆனால் ஒற்றை விஷயத்தை பிண்ணி பிணைந்திருந்தது . அந்த சந்தர்பத்தில் புதுவையில் முக்கிய சிக்கல் ஒன்று துவங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள தில்லியில் இருந்த சமயத்தில் இளைஞர் காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் கமலக்கண்ணன் தலைமையில் கட்சியில் இருந்து வெளியேறிய செய்தி அறிந்து வல்சராஜ் பதட்டமானார் . தலைவர் சண்முகத்திடமிருந்து காலையிலேயே தொலைபேசி வந்திருந்தது .கடிந்து கொண்டார் என தெரிந்தது . பின்னர் தொடர்ச்சியாக தொலைபேசி அடித்த படி இருந்தது . ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தார் .நான் நடந்து கொண்டிருந்ததை ஒருவாறு ஊகித்திருந்தேன். ஆரம்பம் முதலே என்னை செயல்பட இயலாதபடி தடைகள் வல்சராஜின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுதான் நிகழ்ந்தது .என்னை ஏன் உறைநிலையில் வைக்க வேண்டிம் . என்ன நிர்பந்தம் எனத் தெரியவில்லை . கமலக்கண்ணனை  எனக்கு எதிரெடையாக வைத்தார் . சட்டமன்ற உறுப்பினர் சபாபதியின் அனுக்கர்கள் அதன் பிண்ணியில் இருந்திருக்க வேண்டும் . முக்கிய இடத்தில் பச்சைமுத்து என்பவர் இருந்தார் . பச்சைமுத்து அரசியல் சூது மிக்கவர் . பாலன் , பச்சைமுத்து , சுப்புராயன் , கமலக்கண்ணன் , தாமோதரன் என ஒரு நிரை அன்று கண்ணனின் அமைப்பில் இருந்தனர் . பாலனின் அரசியல் எதிர்காலத்திற்காக கண்ணனை விட்டு வெளியேறியதற்கு பிண்ணியில் பச்சைமுத்து இருந்தார் . பாலனை இயக்கியவர் . இவர்கள் அனைவரும் சபாபதியின் அணியைச் சேர்ந்தவர்கள் . முதலியார்பேட்டை அவர்களின் அரசியல் களம் .


பாலன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது ஒரு சிறு காலம் அமைப்பு தொய்வடைந்திருந்தது . அந்த சந்தர்ப்பத்தில்தான் நான் பாலனுடன் இணைந்தேன் . நான் இணைந்த சில காலத்திற்கு பின்னர் பச்சைமுத்து கருத்து வேறுபாட்டினால் பாலனைவிட்டு விலகி சபாபதியின் அனுக்காராக தன்னை மாற்றிக் கொண்டார் . சபாபதி பாலனுக்கு எதிர் மனநிலைக்கு வந்ததின் பிண்ணனியில் பச்சைமுத்து இருந்தார் . பாலன் எனது வரவை உற்சாகமாக எடுத்துக் கொண்டார் . அரசியல் ஒரு வினோத ஆட்டம் . யாரை முன்வைத்து அது ஆடுகிறது என்பதை அவ்வளவு எளிதில் ஊகித்து வட முடியாது . என்னைப் போன்ற ஒருவன் பாலனை நாடி வந்தது அவரை சுற்றியிருந்தவர்களை பலவாறு கற்பனை கொள்ள வைத்திருக்க வேண்டும் . அனைய இருக்கும் ஒன்றை சிறு பொறி மீளவும் பற்றியெரிய வைப்பது போல நான் அங்கு வந்து சேர்ந்தேன் .அது பாலனை இன்னுமொரு சுற்று வர வைத்து அவர் தேர்தலில் நிற்க வைக்கும் அளவிற்கு கொண்டு சென்றது .எதிர்பார்பின் மத்தியில் வாழ்ந்தவர்களுக்கு எனது எதிர்பார்ப்பின்மை ஒருவித கிளர்ச்சியாக அல்லது ஒரு கோமாளியாக் என்னை தெரியவைத்திருக்கலாம் . நான் பெரும் பொருளியல் உதவ செய்வதாக எல்லோராலும் நம்பப்பட்டது . ஆனால் அது உண்மையல்ல . அங்கு நிளவிய அரசியல் என்னை பித்து கொள்ள வைத்தது . அதன் சுவை அதை நோக்கி நகர்தியது .பூச்சிகளில் இரண்டு வகை விளக்கையும் , தேனையும் நோக்கியவை . இரண்டின் முடிவு ஒன்றே ஆனால் வேறுவேறானவை என்பது போல . பாலனின் வீழ்ச்சி தள்ளிப்போக நான் காரணமானேன் என என் மீது தீராத வன்மம் கொண்டவராக இருந்தார் சபாபதி . அவரை சார்ந்தவர்கள் அனைவருக்குமே என்னிடம் அந்த கசப்பு இறுதிவரை இருந்தது. பச்சைமுத்து சண்முகத்தின் அணியில் இருந்ததால் வல்சராஜுடன் நெருக்கமும் , நல்ல அரசியல் சூழ்ச்சியாளர் என்பதால் அவர் சொல்லுக்கு தனி மதிப்பிருந்தது .என்னுடன் முரண்பட்டவர்கள் அவர் தலமையில் ஒருக்கு திரண்டிருந்தனர் . கமலக்கண்ணன் எளிய குடும்ப பிண்ணனிக் கொண்டவர் , ஆலைத் தொழிலாளி . நல்ல மேடைப் பேச்சாளர் என்பது அவரை அரசியல் திறன்நடுத்தரக் குடுபத்திற்கான பொருளாதாரா நெருக்கடி அவரை எப்போதும் தடுமாற்றம் கொண்டவராக வைத்திருந்தது  . அவரது அரசியல் பயணம் கண்ணன் தலைமையில் தொடங்கியது . கமலக்கண்ணனின் சகோதரர் பாலனுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவரை கண்ணனுக்கு அறிமுகப்படுத்தினார் . மேடையில் முழங்குவது தனித்திறனாக அறியப்பட்ட காலம் , அதன் வழியாக  முன்னாள் தலைவர் கண்ணனின் அனுக்கரானார் . அமைச்சராக இருந்த கண்ணன் அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தார்  .ஊழின் விசையால் பாலன் கண்ணனுடன் முரண்பட்டு வெளியேறிய போது அவரும் வெளியேறியது அவர் செய்த பெரும் பிழை . பாலனிடம் அவருக்கு பொருளாதார எதிர்பார்பிருந்திருக்க வேண்டும் . பாலனும் ஆரம்பத்தில் தன்னாலானதை செய்து கொண்டிருந்தார் . ஒரு கட்டத்தில் கமலக்கண்ணனின் மனநிலை புரிந்து கொண்டு விலகிவிட்டார் . கண்ணனின் ஆளுமையால் கவரப்பட்டதால் எப்போதும் கண்ணன் நோக்கிய மனச்சாய்வு கொண்டவராகவே இருந்தார். அது அவரை பிறவெல்லா இடத்திலும் நிலைகொள்ளாமல் செய்துவிட்டது . பாலனிடம் மனம் கசந்த கமலக்கண்ணன் பல முறை அவரிடம் இருந்த விலக முயன்றதை தடுத்தவர் தாமோதரன் . அது தாமோதரன் செய்த பிழை என்றானது . அந்த பிழைக்கு ஈடாக அவரை எல்லா சந்தர்ப்பத்திலும் ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் தாமோதரனுக்கு இருந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...