https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

அடையாளமாதல் * அரசியல் நகர்வுகள் *

 



ஶ்ரீ:



பதிவு : 565  / 755 / தேதி 16 பிப்ரவரி  2021


* அரசியல் நகர்வுகள்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 43.





அமைப்புகள் எப்போதும் கண்களுக்கு நேரே உள்ள அதன் தலைமையின் ஆளுமையை நம்பி அதனுடன் இருப்பது, செயல்படுவது  . தங்களது சிக்கல் குறித்து பேச அது பற்றி ஆறுதல் பெற ஆற்றுப்படுத்த நேரடி தலைமை அதற்கு தேவையாகிறது . காங்கிரஸ் போல ஒரு அகில இந்திய இயக்கத்தில் உயர்நிலை தலைவர்களுக்கு மட்டுமே தங்கள் பதவிகளால் அடையாளங்களால் மத்தியத் தலைமையுடன் நேரடியாக உரையாட இயல்கிறது . மற்ற படிநிலை தலைவர்கள் அனைவரும் மொழி , பயணதூரம் பொருளியல் போன்ற  தடைகளினால் தொலைந்து போனவர்களே  . அவர்களுக்கான ஒரே வழி மாநிலத்தில் எளிதில் அனுகக் கூடிய தலைமையுடன் மட்டுமே . தங்களுக்குள்ளான பூசல்களை அங்கு முன் வைப்பதன் வழியாக அணிகள் கோஷ்டிகள் உருவாவது தவிர்க்க இயலாதது . இங்கு அரசியல் என்பதே தலைமையைச் சார்ந்தும் சுற்றியும் , எதிர்த்தும் இயங்குவது .சண்முகத்துடன் இருப்பவர்களுக்கு கூட  அவர் அந்த உண்மையை வாய்விட்டு சொல்லவேண்டும் என விரும்பினர் . அவரது தொடர் மௌனம் அவர்களை வெவ்வேறு  பக்கம் கொண்டு சென்றிருந்ததுஅது ஒரு வகையில் அவருக்கு அழுத்தம் கொடுப்பது . உயர்நிலை அரசியல்வாதிகள் அனைவருக்கும் இதுவும் ஒரு விளையாட்டு . அந்த மௌடியமான சூழல் . எனது எதிர்காலத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என அச்சம் கொண்டேன் . நாராயணசாமி வளர்ந்து வருவது எனது அனைத்து முயற்சிக்கும் பெரும் தடையை உருவாக்கிவிடும் . அரசியலில் பிழைத்திருக்க விரும்பும் அனைவரும் இருகரையர்கள் . அவர்கள் அனைத்திலும் கால் பாவிக் கொண்டு ,சில்லறை அரசியல் லாபத்திற்காக காத்திருப்பவர்கள். அவர்கள் விழைவது அதிகாரத்திற்கு எதிரான அறைகூவல் மற்றும் பிளவுகள் உருவாகும் தருணங்களுக்காக , அங்கு அவர்களுக்கான வாசல்கள் திறந்து கொள்கின்றன. நாராயணசாமி எனக்கான நேரம் ஒன்று குறித்து வைத்திருந்திருக்க வேண்டும் . பிற அனைவரையும் போல நான் என் நிலைப்பாட்டை சொல்லவேண்டும் என நினைத்தார் . நான் எந்த தயக்கமும் இன்றி அவருக்கு எனது எதிர்பை வெளிப்படுத்தினேன் . இறுதிவரை எனது நிலைபாடு அதுவாகவே இருக்கும் என நினைக்கிறேன்.அந்த சூழலில் தில்லி மாநாட்டிற்கு இளைஞர் காங்கிரஸ் சார்பாக நட்பர்களை அழைத்து செல்லும் சந்தர்ப்பம் வந்தது . நான் ரயிலில் அவர்களுடன் பயணிப்பது என முடிவெடுத்திருந்தேன் . எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் சிக்கலை மறைமுகமாக அல்லது நேரடியக  சொல்ல நினைத்திருந்தேன் ஆனால் ஊழ் வேறொரு கணக்கு வைத்திருந்தது . விந்தையான காரணத்தினால் நான் ரயிலில் அவர்களுடன் பயணிப்பது நடக்காது போனது . எனது இடத்திற்கான போராட்டம் அங்கு துவங்கியது .என்னை தற்காத்துக் கொள்ள மேலும் நகர வேண்டிய நிர்பந்தம் எழுந்தது .தொடர் அரசியல் நிகழ்வுகளில் இருந்துஅரசியலின் அடுத்த தலைமுறை உருவாகி வருவதற்கான வாய்ப்பை பார்க்கவும் , என்னுடன் பயணிக்க விரும்புபவர்களை  அங்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தமும் திரண்டது. அது 2020 ஆட்சியை நோக்கிய நகர்வு என்கிற கனவை  விதைத்தது  . இலக்கும் வழிமுறைகளையும் உருவாக்கிக் கொண்டேன் எப்படி அடைவது என்கிற வழிமுறைகளை பற்றிய  செயல்திட்டம் இல்லாமல் அந்த பாதையில் பயணப்பட்டேன் . ஒரு செயலை செய்யத் துவங்கியதும் அதன் எதிர்கால பயன் பற்றி கணக்கிட்டது இல்லை. எது என் மனதிற்கு நிறைவளிக்கிறதோ அதை செய்வது மட்டுமே அந்த தருணத்தில் எனக்குள் எழுவது  . அரசியல் நிலையற்றது , அதில் நம்பத் தகுந்தவர் என எவரும் இல்லை . யாரை முன்வைத்தும் எதுவும் திட்டமிடக்கூடாது என்கிற தெளிவான புரிதல் இருந்தாலும் , வாய்ப்புகள் முன்னே சென்று நிற்கவேண்டிய ஊழ் எழுகிற போது , அனைத்து  தவிற்க முடியாத காரணங்களும் உடன் வந்து கொண்டிருக்கிறது .இவற்றை கடந்த கால நிகழ்வுகளின் வலி எனக்கு அறிவறுத்தியிருந்தது  . 


இந்திய அரசியலில் நிகழ்ந்து கொண்டிருந்த தொடர் மாற்றங்கள் ஒன்றுடன் ஒன்று முயங்கி  புதுவை அரசியலில்  அதன் பாதிப்புகள் உருவாக்கி இருந்தது . 1991 களில் அர்ஜுன்சிங் , NT திவாரி , பிரனாப் முகர்ஜி போன்றவர்கள் நரசிம்மராவால் அரசியல்ரீதியாக ஓரங்கட்டப்பட்டது  பிற மூத்த கட்சி தலைவர்களை அதிர்ந்து போகச் செய்ததிருந்ததுகட்சி மற்றும் ஆட்சியில் நரசிம்மராவ் வலுவாக காலூன்ற அவருக்கு அந்த நடவடிக்கைகள் உதவியது .அதன் பிறகே சோனியா காந்தி அரசியலுக்கு வர வேண்டும் என்பது மெல்லத் துவங்கி பின் ஓங்கி ஒலித்தது  .சோனியா காந்தியின் தனது அரசியல் பிரவேசத்திற்கு நாள் குறிக்க 1995 இளைஞர் காங்கிரஸ் மாநாடு ஒரு முக்கிய காரணமானது .அதன் பின் ஒரு வருடத்திற்குள்ளாக நரசிம்மராவ் வீழ்ந்து , 1996 களில் சீத்தாராம் கேசரி தலைவராக வந்தபோது கட்சியை கைப்பற்ற சோனியாகாந்திக்கு நீண்டநாட்கள் தேவைப்படவில்லை . நரசிம்மராவிற்கு எதிராக சோனியாகாந்தியை மையப்படுத்தி எழுந்த விசைக்கு ஆதரவாக அப்போது திவாரி காங்கிரஸ் என்கிற பெயரில் கட்சி துவங்கப்பட்டு . வாழப்பாடி தமிழநாட்டிலிருந்து பெரும் படையை கூட்டிச் சென்றார் . ஆனால் கல்கத்தாவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்கு முதல் முறையாக வந்து தனது அரசியல் பயணத்தை துவங்கினார் சோனயா காந்தி .அதன் பின் திவாரி காங்கிரஸ் தேவை இல்லாமலாகியது . அதன் பின்னர் வாழப்பாடி ராஜீவ்காந்தி காங்கிரஸ் தொடங்கியது தனிக்கதை .


தேர்தல் பற்றிய அறிவிப்பிற்கான முஸ்தீபுகள்  நடைபெறக்கூடி சாத்தியகூறுகள் உருவாக்கியது. அது எனக்கான வாய்ப்பை உருவாக்குவதாக இருந்து .தேர்தல் நடக்க ஏற்ற சூழ்நிலை புதுவையில் முன்பே உருவாகியது . 1995 களில் பிட்டா தலைமையில்  அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் மாநாடு பிரதமர் நரசிம்ம ராவின் முன்னிலையில் நடைபெற்றது . இந்திரா மற்றும் ராஜீவ்காந்திக்கு இணையாக உயர்த்தி வைக்கப்பட்டார் பிரதமர் நரசிம்மராவ் .சோனியா காந்தியின் வரவை கட்சிக்குள் எதிர்பார்த்து இருந்த சூழலில் அவருக்கு விடுக்கப்பட்ட அறைகூவலை அங்கு கூடி இருந்த அனைவராலும்  உணரப்பட்டது .நரசிம்மராவ் தனது தடையை வெளிப்படையாக உடைத்து நடந்த முதல் கூட்டம் அவரின் நிலைப்பாடு  பிற மூத்த தலவர்களுக்கு திகைப்பை உருவாக்கி இருப்பதை பார்க்க முடிந்து . அது ஏறக்குறைய அகில இந்திய காங்கிரஸ் மாநாடு போலவே நடந்தது . நரசிம்மராவை ஆதரிக்கும் அனைத்து மூத்த தலைவர்களும் மேடையில் அமரவைக்கப்பட்டனர்உச்சகட்ட நிகழ்வாக நரசிம்மராவின் அரங்கம் அதிரும் நுழைவு நிகழ்த்தப்பட்டது பிண்ணனியில் உறுதியான , தெளிவான  திட்டமிடல் இருந்தது .


அதில் கலந்து கொள்ளவே இளைஞர் காங்கிரஸின் முழுக் குழுவுடன் தில்லி சென்றிருந்தேன் .அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா முழுவதும் இருந்து வந்திருக்கும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்களை அலுவலகத்தில் சந்திப்பது ஒரு மரபு . நான் வல்சராஜுடன் மணீந்தர்ஜித்சிங் பிட்டாவை சந்திக்க சென்றிருந்தேன் . அங்கு மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அடையாள அட்டை மற்றும் தலைவர்களுக்கான கடவு சீட்டு முதலியவைகளை அங்கு அப்போது பெற்றுக் கொள்ளாலாம் . அடையாள மற்றும் கடவு சீட்டு பெறுவதற்கு கோஷ்டிக்களுக்கிடயே தள்ளுமுள்ளு முதல் கைகலப்பு வரை நிகழும் . அது ஒரு சடங்கு போல .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்