https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 30 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * நடைமுறைவாதம் *

 .



ஶ்ரீ:



பதிவு : 536  / 729 / தேதி 30 செப்டம்பர் 2020


* நடைமுறைவாதம்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 13.







புதுவை மாதில காங்கிரஸ் தலைவர் சண்முகம் உரையாடல்களின் வழியாக தனது அரசியலை பிறரிடம் செலுத்துவதை வழியாகக்  கொண்ட பழைய அரசியல் பாணியை சேர்ந்தவர். காந்தியின் வழிகளை தங்களின் பாதைகளாக ஏற்று நவீன இந்தியவில் அவற்றை நடைமுறைக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து கொண்டவர்களை  நடைமுறைவாதிகள் என வரையறை செய்யது கொள்ள முயல்கிறேன் .காந்தீய முயற்சியின் அரசியல் மதிப்பீடுகளை குறித்து 1970 களின் இறுதிகளில் அவர்கள்  அச்சமடைந்தார்கள். காந்தியின் அரசியல் நிர்வாக அனுகுமுறை ,நேருவின் சோஷலிச கொள்கைகள் அவற்றுடன் சர்தார் வல்லபாய் பட்டேலின் செயல்பாட்டுடன் இணைத்து புரிந்து கொள்ள முயன்றவர்கள்


இந்தியாவில் அவர்களைப் போன்றவர்கள் எண்ணற்றவர்கள் . ஆட்சி பொறுப்பை வகிக்கும் வாய்பை பெற்று அதில் நிலைகண்டவர் என்கிற அளவில் நரசிம்ம ராவ் அதில் முதன்மையானவார் . அரசியலில் நடைமுறைவாதம் என்கிற கருதுகோளை அவர்களின் வழிமுறைகள் மூலம் விளங்கிக் கொள்ளும் பிரதிபலிப்பாக சண்முகம் அவர்களை  பார்கிறேன். அவர் எங்களைப் போன்றவர்கள் அரசியலில் நம்பிக்கை கொள்ள வைத்தவர் .


1989-90 களில் சண்முகம் , மரைக்காயருக்கு இடையேயான பொது சமன்பாட்டை மரைக்காயர் குளைத்து அதற்கு எதிரான செயல்பாட்டிற்கு வந்த போது அவரை மாநில அரசியலில் இருந்து வெளியேற்றியது சண்முகத்தின் நிதானமாக அரசியலாடும் பாணி. அவருக்கு நெருக்கமான பல கட்சி அமைப்புகளைச் சேர்ந்த பலருக்கு தெரிந்ததே . அரசியலில் வெட்டி ஆடுவதை கடைசி ஆயுதமாகக் கொண்டவர். அதை ஒருவருக்கு எதிராக நிகழ்த்தும் போது அவரால் வெட்டுப்பட்டவர் பின் ஒருபோதும் தன் இடத்தில் திரும்ப எழுந்ததில்லை என்பது புதுவை அரசியல் வரலாறு . குபேர் முதல் கண்ணன் வரை .காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமல்ல பல முறை எதிர்கட்சிளிலும் அதை நிகழ்த்தியவர் என்பதால் அவர் மீது கொண்ட அரசியலாளர் மற்றும் அரசு நிர்வகிகள் வரை கொண்ட அச்சம் அவரது கடைசி காலம்வரை நீடித்தது.


சண்முகம் தொண்டர்பலமோ வாக்குவங்கியோ இல்லாதவர் .அரசியல் சமன்பாடுகள் வழியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் . இவை அனைத்தையும் கடந்து அவர் அரசியல் சூழ்ச்சியாளர் என குற்றம் சுமத்தப்படுபவர் . அது உண்மை .அரசியல் சமன்பாடுகள் சூழ்ச்சிகளின் வழியாகவே வகுக்கப்படுபவை. அதில் நேரடித்தன்மை இருக்க வாய்ப்பில்லை. சண்முகம் ஒரு நடைமுறைவாதி .ஆனால் அரசியலில் அவரை போன்றவர்களின் பங்களிப்பை குறைத்து புரிந்து கொள்கிறோம்.அவர்கள் சுவாரசியமற்றவர்கள் , சூழ்ச்சிகாரர்களாக   தெரிகிறார்கள். முப்பனாரும் அவர்களைப் போன்றவர்களே. ஆனால் மூப்பானார் போன்ற பெரும் ஆளுமைகள் தோற்றது துரதிஷ்டவசமானது.அந்த இடத்தில் சண்முகம் வென்றிருக்கிறார் என்பது ஆச்சர்யமானது .


அகில இந்திய தலைமை பலர் பற்றிய ஆழமான , நுட்பமாண பத்திரிக்கைகளில் வெளிவராத அரசியல் செய்திகளை விளங்கிக் கொள்ள சண்முகம் ஒரு சிறந்த ஊடகமாக எனக்கு தெரிகிறார் .எனக்கான வாய்ப்பு அவரை மிக நெருங்கிப் பார்க்கும் வாய்பை பெற்றது தான் . இந்த பதிவு சண்முகத்தின் புகழ்பாடுவதல்ல . இந்தியப் பெருந்தலைவர்களின் செயல்முறையின் ஒரு துளி அவர் . அந்த ஆளுமைகளால் அடைந்த பாதிப்பை தனது வாழ்நாளில் முயற்சித்து பார்த்தவர்


அதில் அவர் வென்றாரா இல்லையா என்பதை அலசுவதல்ல இந்தப் பதிவின் நோக்கம். அசிங்கமாக எதுவும் அரசிலின் பொருட்டு செய்யாலாம் என்கிற சித்தாந்தம் பெருமளவு ஒப்புக்கொள்ளப்பட்ட சூழலில் .இல்லை மனிதனாக வாழயிலாதவன் நல்ல தலைவனாக எப்படி உருவாக முடியும் என்கிற கேளவிக்கும் , லட்சியவாதத்தில் நம்பிக்கையும் அதை செயல்படுத்தும் இடங்களில் நடைமுறைவாதமே வெற்றி பெறக்கூடியது என எனக்கு புரியவைத்தவர்.அதன் பொருட்டு அரசியலின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்தவர் என்கிற அடிப்படையில் ஆகச் சிறந்த தலைவராக இன்றளவும் அவரை பார்கிறேன்.ஆற்றிக் கொள்ள முடியாத கசப்புகள் கைநழுவி போன வாய்ப்புகள் , என எனக்கு அவரிடத்தில் பெரும் வருத்தம் இருப்பினும் நான் கண்ட மிகச்சிறந்த தலைவராகவே அவரை எண்ணுகிறேன்


கண்ணன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது அவரது அரசியல் பாணியை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறேன் .அதில் அவர் கையாண்ட யுக்தி புரட்சிகரமானதும் உலகை திருத்தும் ஆவேசமும் லட்சியவாதப் பேச்சும் .அவை நடைமுறை யதார்த்தத்தில் இல்லாதவை .அன்றைய அரசியல் சூழலில் இளைஞர் காங்கிரஸார் மத்தியில் இடதுசாரி சிந்தனை நோக்கிய மனச்சாய்வு இருந்தது .அவர்கள் எப்போதும் இடதுசாரிகளாக தங்களை முன்வைக்கத் தயங்காதவர்கள்.சுப்பையா போன்ற பெருந் தலைவர்களிடம் இருந்து அதை பெற்றுக் கொண்டவர்கள். கண்ணனைச் சுற்றி ஒரு பெரும் இளைஞர் கூட்டம் இருந்தது உண்மை . அவர்களுக்கு அவர் தங்களுக்கான இடத்தை உருவாக்கி தருபவராக தெரிந்தார்


அடுத்தடுத்த தலைமைகள் உருவாகிவருவதை ஏற்பவர் . தன்னளவில் தனியாளுமை என்கிற கருத்து , பாலன் தலைமை பொறுப்பிற்கு உகந்தவராக நிர்வாகிகள் எடுத்த முடிவை நிராகரித்ததும் சிதைந்து போனது .அமைப்பின் ஆதரவு பாலனுக்கு இருந்ததும் அதை கடந்து தனது எண்ணத்தை திணிக்க முயற்சித்த போது அவரது ஆளுமை அடிவாங்கி.அமைப்பு இரண்டாக உடைந்தது

சனி, 26 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * நம்பிக்கை *

 




ஶ்ரீ:



பதிவு : 535  / 728 / தேதி 26 செப்டம்பர் 2020


* நம்பிக்கை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 12.






பிற மாநிலங்கள் போல செயல்படாத அல்லது அதிருப்தியை பெருக்கிய அமைச்சர்கள் மாற்றம் எளிதில் நிகழ்வதில்லை . தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இது சாத்தியம் . 30 உறுப்பினர்களை கொண்ட சிறிய சட்டமன்றத்திற்கு ஒரு கட்சிக்கு 16 உறுப்பினர்கள் இருந்தால் அது பெரும்மான்மை அரசு .அதில் முதல்வர் தொடங்கி கடைசி அமைச்சர் என ஆறு பேர்களை கொண்ட மந்திரிசபை பிற அரசு பதவி என மீதம் ஆறுக்கும் மேற்பட்ட பதவிகள் , பிறகு சட்டமன்ற நிலைக்குழுக்கள் . இப்படி ஒருவர் ஒன்றுக்கு மேப்பட்ட பதவிகளில் அமரவே வாய்ப்பு .


ஒவ்வொரு கமிட்டிகளில் உருவாகும் மனக்கசப்பு அடுத்த கமிட்டியில் எதிரொலிக்கும் போது எதன் அடிப்படையிலும் அவை எழுகின்றன் அவற்றின் ஊற்றுமுகம் என்ன ? என புரிந்து கொள்ள முடியமல் அல்லது தீர்வை எளிதில் முன்வைக்க முடியாதபடி போய்விடுவதுண்டு . கூட்டணி ஆட்சியாக இருந்தால் இன்னும் சிக்கல் அது கொதிநிலையை அடையும் போது  ஆட்சிமாற்றம் மட்டுமே மாறாத வாய்ப்பு.அதை நோக்கி அனைத்தும் திரளும் . கட்சி தலைமைக்கு அது கரையுடைக்காமல் பார்த்து கொள்ளவது மட்டுமே .எல்லை மீறும் போது ஆட்சி மாற்றம் தவிற்க இயலாது போகிறது.


சண்முகம் , அரசுக்கு எதிராக திரும்புபவர்களை கையாளக் கற்றவர் . புதுவையின் ஆளும் அமைப்பாக பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி இருந்து வந்திருக்கிறது . ஆகவே மடை கட்டும்” கலையை கற்றுத் தேர்ந்தவர் . அத்தனை பேரிடமும் உரையாடி சலிக்காதவர் . பெரியவர் ,எளியவர் ,சிறார் என்கிற வேறுபாடுகளை அறியாதவர் .அல்லது பிறர் அதை அறியும்படி செய்வதில் வல்லவர் .எல்லா தரப்பு மக்களும் தன்னை மிக எளிதில் வந்து சந்திக்கும்படி வைத்துக் கொண்டவர் .

வாசலில் எந்த காவல் கட்டுப்பாடுகளும் இருப்பதில்லை.அவர் முதலவராக வந்த போதும் அதுதான் நிலை.கடற்கரை சாலையில் வாடகை வீட்டில் இருந்தார். கடற்கரையில் நடைபயிற்சிக்கு வருபவர்கள் ரோட்டில் இருந்தபடியே அவர் அறையில் அமர்த்திருப்பதை காண முடியும் .எந்த காரணமும் இன்றி அவரை அனுகமுடியும் என்கிற உணர்வை அது கொடுத்து விடுகிறது.


பல தரப்பட்ட மனிதர்களை சந்திப்பது ஆயாசத்தை பொடுப்பது .ஆனால் உரையாடலில் விழைவு உள்ளவர் தன்னை சுற்றி நிகழ்வதை அத்தகைய எளிய மனிதர்கள் வழியாக பெற்றுக் கொள்ள முடியும் .அவர்கள் பலநூறு வாய்ப்புகளை எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் . நமக்கு சரியானதை அதிலிருந்து விரித்து எடுத்துக் கொள்ள முடியும் என்பதை பார்த்திருக்கிறேன்.அந்த மனிதர்களை் அரசியலின் அத்தனை சாத்தியகூறுகள் பல உடல்களாக நிகழ்த்திக் காட்டக் கூடியவர்கள் .அவற்றை ஒற்றை பேருடாலாக பார்க்கக் கூடியவர்களுக்கு அடுத்து நிகழ இருப்பது வசப்படுகிறது .


ஆட்சிமாற்றம் மட்டுமே வாய்ப்பு என்கிற சூழலில் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஏற்கும்  தீர்வு ஒன்று முன்வைக்கப்படும்.எதிர் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த சறுக்கல் இல்லாத சமன்பாடுகள் முன்வைக்கப்பட்டு சிக்கல் தள்ளிவைக்கப்படும் .பிறிதொரு கால சூழலை பொருத்து அது பெட்டிக்குள் இருந்து எழுந்து வரும்.அப்போது அதுவே அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு எழுத்தில் வராத உடன்பாடு என்றாகும்.


அதுவரை இருந்த அந்த அரசியல் நடைமுறை 1989 களில் புதிய கோணம் கண்டது . தில்லியில் காங்கிரஸ் ஆட்சி இழந்து சந்திரசேகர் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட சூழல். தேர்தல் தோல்விக்கு பிறகு ராஜீவ் காந்தி அரசியலில் கனிந்து கொண்டிருந்த நேரம் .திட்டம் மற்றும் கணக்குகளில் இருந்து  எதார்த்தம் மாறுபட்டது .ஒரு தோல்வி மட்டுமே அதை அருகென பார்க்க வைப்பது .


தில்லி சூழலை மிக நுட்பமாக புரிந்து கொண்ட மரைக்காயர் முதல்முறையாக சண்முகத்தை கடந்து D.ராமசந்திரன் தலைமையிலான் திமுக ஜனதா தள் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர முயன்று கொண்டிருந்தார்.ஆட்சிக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்கள் தில்லியில் முகாமிட்டிருந்தனர்.


ஏறக்குறைய மரைக்காயர் தனது இலக்கை அடைந்து விட்டிருந்தார் .அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தில்லியில் முகாம் கொண்டிருப்பதை அறிந்த பிறகும் தனது அழைப்பிற்காக காத்திருந்தார் .அதுவரை ஏற்படுத்தப் பட்டிருந்த சமன்பாடுகளை மரைக்காயர் குலைத்து சென்றது சண்மகத்தை பற்றியெறியச் செய்திருந்தது.இனி அவருடன் எந்த விதத்திலும் மாநில அரசியலில் இணைந்து பணியாற்றுவதில்லை , அவருக்கான இடம் இனி இல்லை என்கிற முடிவிற்கு வந்து விட்டிருந்தார்.


தனது சாமர்த்திய காய் நகர்த்தலில் ஆட்சி மாற்றத்திற்கான வாய்பை முற்றிலுமாக தகர்த்தார் .மரைகாயரை முதல்வரென ஏற்று தில்லி சென்ற அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சி கவிழ்க்கட்டதை அறிந்து கொள்ள நேர்ந்தது .இது புதுவை அரசியலில் மரைக்காயர் மீதான நம்பிக்கையை முற்றாக அழித்தது.


1989-90 களில் சண்முகம் எடுத்த மிக முக்கிய முடிவு முதலில் மரைக்காயரை மாநில அரசியலில் இருந்து வெளியேற்றியது. ஆனால் அதிகார அரசியலில் நீந்த தெரிந்த அவர் 1991 ல் நரசிம்மராவின் அரசில் மத்திய இணையமைச்சராகி சண்முகத்தின் ஊழல் புகாரினால் பதவியிழந்தார் . ஆனால் தனது  அரசியல் சாதுர்யத்தால் சட்டீஸ்கர் மற்றும் கேராள மாநில ஆளுனர் என பதவியை பெற்று மன்மறைந்தார் . அவரால் இறுதிவரை புதுவை மாநில அரசியலுக்கு திரும்ப முடியாது போயிற்று . சண்முகத்தின் கோபம் அப்படிப்பட்டது .


செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * அரசியல் யுக்தி *

 


ஶ்ரீ:



பதிவு : 534  / 727 / தேதி 22 செப்டம்பர் 2020


* அரசியல் யுக்தி



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 11.






இரண்டாம் நிலைத் தலைவர்கள் தங்கள் விழைவினால் நரசிம்ம ராவிற்கு எதிராக சோனியாவை பின்னாலிருந்து  இயக்கினார்கள் . சோனிகாந்தி எதிர்பார்த்த வயோதிகரல்ல நரசிம்மராவ்.அவரின் எளிய தோற்றம் அவர்பற்றிய பிழை புரிதலை அனைவருக்கும் கொடுக்கவல்லது.ஒரு கட்டத்தில் சோனியாகாந்தி நரசிம்மராவை அஞ்சினார். தனது அனுபவத்தில் இருந்து தனக்கானதை நரசிம்மராவ் கண்டடைந்தார் . அனுபவம் சில தடைகளை உருவாக்கும் . அவருக்கும் அது நிகழ்ந்து .என்ன என்பதை பிற்காலத்தில் சண்முகம் முதல்வராக பொறுப்பேற்ற பின் வீழ்ந்து போனதில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது .


காலம் சறுக்கலை எவருக்கும் நிகழ்வது. வயதும் அனுபவ அறிவும் பெற்றவர்களுக்கும் அதிலிருந்து விதிவிலக்கில்லை. அது அதன் தேவையை எடுத்துக்கொள்ள சிலரை தேர்ந்தெடுக்கிறது .அதை மிகச் சரியாக இயற்றி எவரும் தன் செயலில் இருந்து ஓய்வு பெரும் போது எந்த எதிர்பார்புமின்றி நிம்மதியுற்று வெளியேறுகிறார்கள் .சிலருக்கு அது நிகழ்வதில்லை .சற்றேறக்குறைய மாநில அரசியலில் சண்முகம் சென்று சேர்ந்தது அங்குதான்


மிக திறமையாக செயல்பட்ட பிரதமர்களில் என்னளவில் நான் நரசிம்மராவை முன்னிறுத்துவேன் .1988 முதல் 2008 வரை பல முறை தில்லிப் பயணம் , பலருடன் உரையாடியது ஓரிரு சந்தர்ப்பத்தில் புதுவை அரசியல் காரணமாக சண்முகத்துடன் நரசிம்மராவை சந்தித்து .அவர் பற்றி தலைவர் சண்முகம் சொன்ன தகவல்கள் என்னை அரசியலை உள்ளும் புறமுமாக பார்க்க வைத்திருந்தது .அது எனக்கு நரசிம்மராவைப் பற்றிய நேர்மறை எண்ணம் உருவாக காரணமாக இருந்திருக்கலாம்.

நரசிம்மராவ் ஆட்சிக் காலம் இந்தியாவின் மிகச் சிறந்தவையாக இன்றளவும் நினைக்கிறேன்.


புதுவை திரும்பிய பிறகு சிலநாட்கள் கழித்து தலைவர் சண்முகத்திடம் பலவருடங்களாக நிரப்பபடாமல் இருக்கும் மாவட்ட மற்றும் வட்டார தலைவர்கள் அவர்களின் நிர்வாக அமைப்பு நியமிக்கபட வேண்டிய சூழல் எழுந்திருப்பதை பற்றி சொன்னபோது , நான் எதிர்நோக்கியபடி கடும் சொற்களால் அதை மறுதளித்தார் .தில்லியின் தலைமையிடம் தான் பேசிக் கொளவதாகவும் என்னை சற்றே சும்மாயிரும்” என்றார்.


அதற்கென்ன பொருள் என நான் முன்பே அறிந்து கொண்டதே. மாநில குழப்ப அரசியலில் முகத்தில் வெடிக்க எது முதல் கிழிச்சல் என்பதே அப்போதுள்ள கேள்வி .புதிய சவால்களையும் அது கேட்கும் சமன்பாடுகள் பற்றிய அச்சத்தில் என் கைகளை கட்டிப்போட பார்கிறார் .தில்லியில் நிகழ்ந்த மாநாட்டிற்கெல்லாம் அவரளவில் என்ன மதிப்பு என நான் அறிந்தது தான்.


அரசியலில் முக்கிய முடிவுகள் ஊர்கூட்டி எடுப்தல்ல . அது ஒரு அரசியல் நகர்வு . அதே சமயம் தலைவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள மாநாடு நடத்துவது ஒரு யுக்தி மட்டுமே. அது அவர்ளை மேலிடம் அறிந்து கொள்வதற்கான பாதை மட்டும.

அரசியலில் முக்கிய இடத்தில் உள்ளவர்களுக்கு அன்றாடம் அதன் முனையை தொட்டபடி இருப்பவர்கள்.ஏதாவது ஒரு வகையில் மையத் தலைமை நிலைபாடுகளை முன்பே யூகித்திருப்பார்கள் . எதிர் நோக்காது ஒன்று நிகழும் போது மேலிட பொறுப்பில் உள்ளவர்களுக்கு அது குறித்த சமிக்ஞை அனுப்பட்டிருக்கும் . அனைவரும் ஒரே குரலில் உணரச்சிகளற்றுப் பேசுவார்கள்.அது எப்போதும் திகைப்பை பின் கசப்பையும் தருவது.


1990 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தது . சட்டமன்றத்திற்கு யாரையும் முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது காங்கிரஸில் வழக்கமாக இருந்ததில்லை . அது சண்முகம் மன்றும் பாரூக் மரைக்காயர் இருவரின் அரசியல் சமன்பாடுகளின் விளைவுகளால் உருவாவது . தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்வர் பதவியை கடைசி வரை பேரத்தில் வை்திருப்பது சண்முகத்தின் நிலைபாடாக இருந்தது .அது அகில இந்திய காங்கிரஸின் நிலைப்பாடு கூட.


ஏகமனதான தீர்மாணம் என்பதற்குளே இருக்கும் சமன்பாடுகள் அனைவரும் அறிந்தது.தே்தலில் கட்சி பெரும்பான்மை பெற்றதும் இந்த ஏகமனதானது” உருவாகி முடிவு தில்லியிடம் விடப்படும்.பிற நேரங்களில் அந்த சமன்பாட்டை  கொண்டு வருபவர் அதில் முன்னுரிமை பெறுவார்.


சண்முகம் மற்றும் பாரூக் மரைக்காயர் என்கிற இரு முனை கொண்ட அரசியலில் பாரூக் மரைக்காயரை பலவீனமான இடத்திலேயே வைத்திருப்பது சண்முகத்தின் அரசிலில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யுக்தி . கட்சி அமைப்பை அதற்காக வலுவுள்ளதாக வைத்திருந்தார்.கட்சி அரசியலில் மரைக்காயர் ஆர்வம் கொண்டவராக இருந்ததில்லை. தனது அரசியல் நிலைபாட்டிற்கு உகந்த வழிகளில் கட்சி அமைப்பை கொண்டு செல்ல சண்முகம் தயங்கியதில்லை . ஆனால் அது 1990 களில் காலாவதியானது.


புதுவை போன்ற சிறிய எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆட்சி அமைப்பில் அதிருப்தி மிக எளிதாக அடையப்படுவது .மத்திய அரசின் உள்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முதலமைச்சர் ஒரு தலைமை அதிகாரியின் இடத்தில் உள்ளவர் மட்டுமே.ஆறே மாத த்தில் ஒரு முதல்வருக்கு எதிராக மிக எளிதில் அதிருப்தி திரண்டுவிடும் .


மற்ற மாநிலங்கள் போல அமைச்சர் மாற்றம் எளிதில் நிகழ்வதில்லை .ஆட்சிமாற்றம் மட்டுமே எப்போதைக்குமான வாய்ப்பு.அதை நோக்கியே அனைத்தும் திரளும் . கட்சி தலைமைக்கு அது கரையுடைக்காமல் பார்த்து கொள்ளவது மட்டுமே .எல்லை மீறும் போது ஆட்சி மாற்றம் தவிற்க இயலாது போகிறது