https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 19 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * நிலைத்த வேறுபாடுகள் *

 .

ஶ்ரீ:



பதிவு : 533  / 726 / தேதி 19 செப்டம்பர் 2020


* நிலைத்த வேறுபாடுகள்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 10.





1997 இறுதிகளில் நிகழ்ந்த தில்லி இளைஞர் காங்கிரஸ் மாநாடு எனக்கு அனைத்து விதத்திலும் முக்கியமானது .மாநில அரசியலில் பெரும் மாற்றம் நிகழவிருப்பதை உய்த்துணர்ந்தாலும் அது எங்கே தொடங்கும் என்பது பற்றி எந்தக் கணக்கையும் என்னால் வந்தடைய முடியாத சூழல் .காரணம் குறந்தபட்சம் மூன்று வித கோணங்கள் ஒன்றுடன் ஒன்று  முயங்கி முரண்பட்டு நின்று யாரும் கணிக்கவியலாத புது வண்ணத்தில் அது எழுந்து கொண்டிருந்தது.


கட்சியில் முக்கிய தலைவர்களின் முரணரசியல்.சண்முகம் அணியில் நாராயணசாமியின் விலகிய மனப்போக்கு ,மூன்றாம் நிலைத் தலைவர்கள் இரண்டாம் இடம் நோக்கிய நகர்வு போன்றவை உட்கட்சியை பாதித்த சூழலில் ,திமுக ஆட்சியில் கண்ணனால் நிகழும் இடர்பாடுகள் . தமிழக அரசியலில் நிகழும் மடைமாற்றம் போன்றவை.அந்த கணிக்க இயலாத புது சந்தர்ப்பங்களை உருவாக்கி இருந்தது.


1996 களில் மத்தியில் பஜக ஆட்சி அறுதிப் பெரும்பான்மையற்று நிலைதடுமாறியதை தொடர்ந்து மேலும் அரண்டு  பாராளுமன்ற தேர்தலில் கொண்டு விட்டது .அதில் இரண்டு முடிவுகள் அ்ன்று நிலவிய அரசியல் குழப்பத்தை உறுதி செய்து தெளிவான வாக்கை அளிக்கவில்லை . அது மீள மீள தேர்தலை திணித்துக் கொண்டிருந்தது .அதே சமயம் தமிழக அரசியலில் கடும் விளைவை உருவாக்கியிருந்தது .


1998 பாரளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தமகா அதனது கூட்டணியை முடிவு செய்யவேண்டிய நிர்பந்தம். ஆனால் மூப்பனார் திமுக வுடான கூட்டணியில் நீடித்தார். கட்சிக்குள் உள்ளவர்கள் அதற்கு எதரான மனநிலையில் இருந்தனர்.1998 பாராளுமன்றத் தேர்தல் அவருக்கு சாதகமாக இல்லை .1996 களில் இருந்த மனநிலையில் மக்கள் இல்லை.இன்று வேறுவிதமான சமநிலை கோரினர்.


இந்த சூழலில் தான் தில்லி இளைஞர் காங்கிரஸ் மாநாடு நடந்து முடிந்திருந்தது . அதன் மையக் கருத்து அரசியல் பயிற்சி முகாம்” நடத்துவது பற்றி இருந்தது .இதை எனக்கான ஆகச் சிறந்த வாய்ப்பாக பார்த்தேன்


புதுவை இளைஞர் காங்கிரஸ் முதிய முகங்களை அறிமுகப் படுத்த நினைத்ததும், அகில இந்திய மற்றும் தமிழக அரசியலில் நிகழக்கூடிய வாய்ப்புகள் பற்றி எனது உரையாடலை கொண்டு செல்ல நினைத்திருந்தேன் . அரசியல் எதிர்காலம் குறித்த சிக்கல்களுக்கும் கணக்குகளுக்கும் வெளிப்படையான உரையாடலில் வாய்ப்பில்லை . சொல்லப்படும் பல சொற்களில் இருந்து கேட்பவர் அதை விரித்தெடுத்துக் கொள்ள வேண்டியது. அதை அவரவர் புரிதலுக்கு விட வேண்டியதே நான் செய்யக்கூடுவது.


அங்கிருந்து உந்தப்பட்டு மேலதிக அரசியல் கணக்கிற்கு விழைபவர்களுக்கு அவர்களுக்குறிய கருத்தை தெரிவிப்பதுடன் அவர்களை அடையாளம்கண்டு அரசியலை முன்னெடுப்பது என எண்ணமாக இருந்தது.


தில்லி மாநாடு முடிந்து அனைவரும் புதுவை திரும்பினர். எனக்கு ரயிலில் முன்பதிவு இல்லை என்பதால் நான் அவர்களுடன் திரும்ப முடியவில்லை .இந்தியா முழுவதிலும் இருந்து பலர் வந்திருந்தமையால் கடைசி நேர ரயில் புக்கிங் சாத்தியமில்லாது போனது .


அனைவரும் புதுவை திரும்பினர் , அவர்கள் அனைவரையும் நிஜமதாபாத் ரயில் நிலையத்தில் சந்தித்து விடை கொடுத்து அனுப்பினேன் . அங்கு கிடைத்த சில மணிநேரத்தில் கடந்த மூன்று நாட்களாக மாநாட்டிற்கு மத்தியில் கிடைத்த நேரத்தில் துணுக்குகளாக உரையாடிதை தொகுத்துக் கொடுத்தேன் . அதில் நமக்கான இடம் அதிலுள்ள சவால் .மேலும் மாநில அரசியல் தலைவர்களுக்குள் நிகழும் பனிப்போரை வெளிப்படையாக பேச இயலாத சூழல் போன்றவை . அது வெளிப்படும் காலம்வரை காத்திருக்க முடிவு தெய்திருந்தேன் .


தில்லி மாநாடுகள் கூட்டங்கள் அனைத்தும் ஹிந்தியில் நிகழ்பவை . ஒரு சில முக்கிய ஆளுமைகளும் தலைமை மட்டும் ஆங்கிலத்தில் உரையாற்றினர்.1996 களில் நடந்து பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு நரசிம்மராவ கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து விலக நேர்ந்தது .அதே சமகாலத்தில் புதுவையிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்திருந்தது . 1996 முதல் 1999 அவரை இந்திய அரசியல் நிலைத்தன்மை இல்லாததாகி இருந்தது .


1991 இந்தியவிற்கு மிக ஆபத்தான காலகட்டம் . நாடு திவாலை நோக்கி சென்று கொண்டிருந்தது அவருடன் மன்மோகன் சிங் இணைந்து இந்தியாவின் மிக முக்கிய காலகட்டத்தில் இந்தியாவின் வளர்மிகு எதிர்காலத்தை வடிவமைத்தார்கள். இன்று ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்திற்கான அடித்தளம் அன்று அமைக்கப்பட்டது .நரசிம்மராவை போன்ற தீயூழ் கொண்டவர் பிறிதெவரும் இல்லை . அவர் வாழும் காலத்திலேயே முகமற்று போனார்.


இந்திய பொருளாதாரத்திற்கு வித்திட்ட பெருமை மன்மோகன் சிங்கை சூழ்ந்து நிற்கவைக்கப்பட்டு நரசிம்பராவ் மறக்கடிக்கப்பட்டார் .ஆனால் 2004 முதல் 2014 வரையில் பிரதமராக மன்மோகன் சிங் செய்பாடுகளை கணித்தால் அவரை பின்னின்று இயக்குபவரை வைத்தே அவரது வெற்றிகள் நிலைகொண்டது தெரியவரும்.நரசிம்ம ராவை புரிந்து கொள்ள அது போதுமானது,


நரசிம்ம ராவின் பெரும்மாண்மை இல்லாத அரசு இரண்டு மூன்று சிறு கட்சிகளின் ஆதரவில் முழுமையான ஆட்சிகாலத்திற்கு நீடித்தது .அதை தொடர்ந்து ஊழல் குற்றச்சாண்டு ஏழுந்து நரசிம்மராவின் இறுதி காலத்தை நிம்மதியற்ற போகச் செய்திருந்தது


இதில் எதிர்கட்சிகளை வட சொந்தக் கட்சியே முனைந்த செய்தது .அரசியலில் திற்மபட செயல்படுவது ஒரு திறமை என்றால் அரசியலாளர்களை திறம்ப கையாள்வது பிறிதொன்று .அவரது அரசியல் செயல்பாட்டினால் பலரின் கோபத்தை சம்பாதித்திருச்தார்.கட்சி ரீதியில் தன்னை பலப்படுத்திக் கொண்டு தேர்தலை சந்திக்க நினைத்தபோது . அந்த தொடர்புறுத்தும் நிலை அவருக்கு முற்றாக அறுந்திருந்தது . நம்பிக்கையாளர் என யாரையும் அவர் பெற்றிருக்கவில்லை  . சோனியா காந்தியின் கடும் கோபத்தை சேர்த்து வைத்திருந்தார் .தனது கோபத்திற்கான விலையை சோனியாகாந்தி பிறிதொரு சந்தர்ப்பத்தில் கொடுக்க வேண்டியிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...