https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 10 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * பரப்பியலரசியல் *

 ஶ்ரீ:பதிவு : 531  / 724 / தேதி 10 செப்டம்பர் 2020ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 08.

பஜகாவின் முதல் பிரதமர் வாஜ்பாய் அரசு 16 நாட்களில் கவிழ்ந்து தேவக்கவுடா பிரதமாராக வந்த அந்த சூழலில் மூப்பனாரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டு திமுக அதை ஆதரிக்கவில்லை என்கிற அலர் எங்குமிருந்தது . மூப்பனார் பிரதமர் பதவியை விரும்பினாரா? இல்லையா என்பது பற்றி யாருக்கும் தெளிவில்லை. அதுவரை மத்திய அரசாங்கத்தில் அவர் கைகாட்டிவர்களுக்கு காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக முடிந்தது . அவருக்கான வாய்பை எப்போதும் தட்டிக் கழித்துவந்தார்.


நீண்டகால அரசிலுக்கு அது உகந்ததல்ல என அவர் நினைத்திருக்கலாம் .அமைச்சராக ஒருமுறை ஏறி சில காரணத்தால் அதிலிருந்து கீழிறங்கும் போது , அதுவரை பெற்றிருந்த அனைத்து செல்வாக்கை அழித்தே இறங்க வேண்டியிருக்கும் என்பதால் அது சரியான வழிமுறையும் கூட .ஆனால் பாரதபிரதமர் வாய்பபை பற்றி என்ன நினைத்தார் என்பது தெளிவில்லாமல் இருந்தது . அவர் தயங்கியிருக்கவே வாய்ப்பு.


1996 ல் திமுக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை எதிர் பார்த்திருந்த தமகா இரண்டாம்கட்ட தலைவர்கள் அது நிகழாததால் அதிருப்தியின் இருந்தனர் . அவர்கள் இந்த சிக்கலை ஊதி பெரிதாக்கினர் .திமுகா வை விட்டு வெளியேறவது பற்றி பலமுறை மூப்பனாரிடம் பேசப்பட்டது . ஆனால் அடுத்து என்ன என்கிற அவரது கேள்விக்கு பதிலில்லை.


தமகா வின் உதயமே நரசிம்மராவின் அதிமுக கூட்டணி என்கிற நிலைப்பாட்டை எதிர்த்தே நிகழ்ந்தது . தமிழக அரசியலில் மூப்பனார் தனது மென்மையான பாணி அரசியலை முன்வைத்தவர். வெகுஜன மட்டையடி அரசியல் தனக்கானதில்லை என பலமுறை வெளிப்படுத்தியவர்.தமகா வின் இரண்டாம் நிலை தலைவர்கள் சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தார்கள் . புதுவையில் கண்ணனும் அதற்காக காத்திருந்தார் என்பது வினோதம்.


தமிழக தமாக வுடன் எந்த தொடர்பு இல்லாது தன்னை மையப்படுத்திய அரசியல் மட்டுமே கண்ணனின் நிலைப்பாடாக இருந்தது .மூப்னாரின் தீவிர ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கண்ணன் நிஜத்தில் அந்த மனநிலை கொண்டவரல்ல.மாநில அரசியலில் சண்முகம் மற்றும் மரைக்காயரை   எதிர்த்தே தன்னை வளர்த்துக் கொண்டார் .அதற்கு மூப்பனார் ஆதரவாளர் என்கிற அடையாளம் தேவையாய் இருந்தது.


கண்ணன் தொண்டர் பலம் மிக்கவராக அறியப்பட்டவர். பொது மக்கள் மத்தியலும் கண்ணனுக்கென செல்வாக்கு ஓங்கி இருந்தது .சண்முகம் மற்றும் மரைக்காயர் இடையே மூன்றாவது சக்தியாக கண்ணன் உருவெடுத்திருந்தார். சண்முகம் மற்றும் மரைக்காயரிடையே மோதல் முற்றும் போது கண்ணன் சாயும் பக்கம் வெற்றிபெற்றது. பெரும்பாளும் மரைக்காயரை சார்ந்தே அதனது முடிவுகளை எடுத்தார். மரைக்காயரும் கண்ணனை பயனபடுத்திக் கொண்டார்.


மரைக்காயரின் ஆதரவு நிலையானதில்லை  கண்ணனும் அறிந்தே இருந்தார்.அவர் தன்னை பிற தலைவர்கள் ஒதுக்க முடியாது படி செய்ய மூப்பனாரின் பெயரை பயன்படுத்திக் கொண்டார்.அவர் எவரின் பின்னாலும் நிற்பவரல்ல . அதை வெளிப்படுத்த 1999 ல் ஒரு வாய்ப்பு நிகழ்ந்தது


1991 தேர்தலில் காங்கிரஸ் சார்பாக நின்று வெற்றி பெற்று முதல்வர் வேட்பாளராக அறியப்பட்ட கண்ணன் சண்முகத்திற்கு எதிராக சதி குற்றச்சாட்டு மற்றும் மரைக்காயரின் மறைமுக எதிர்ப்பினால் வைத்தியலிங்கத்திடம் முதல்வர் பதவியை பறிகொடுத்திருந்தார் .சண்முகத்தின் பலவித காய் நகர்த்தலில் கட்சி சார்ந்து செயல்பட இயலாத சபாநாயகர் பதவியை ஏற்கவேண்டிதாயிற்று.


1991 தொடங்கி 1994 வரை வைத்தியலிங்கம் தலைமையிலான அரசுக்கு அனைத்து விதத்திலும் தொல்லை தருபவராக உருவெடுத்தார் . ஒரு புள்ளியில் தாங்க முடியததாகி தில்லி பிரதமர்வரை சென்று கண்ணன் பலமுறை எச்சரிக்கப்பட்டு அதனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை .


1994 ல் புதுவை சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு அண்டு இருக்கும் சூழலில் , நிலைமை கட்டுமீறி போவதை விரும்பாத காங்கிரஸ் மேலிடம் கண்ணனிடம் சபாநாயகர் பதவியில் இருந்து வெளியேற அறிவுறுத்தியது . மறுத்தால் அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மாணம் கொண்டுவரப்படும் என எச்சரித்தது . தீர்மாணம் கொண்டுவருவது கண்ணனின் அரசியலை முடிவுக்கு கொண்டுவந்து விடும் . கண்ணன் பதவி விலக துணை சபாநாயகர் சுப்பிரமணியம் சபாநாயகரானார்

கண்ணன் அப்போதே மேலிட கங்கிரஸின் ஆதரவு தளத்தை முற்றாக இழந்திருந்தார்.கட்சியைவிட்டு வெளியேறுவதை விட வேறு வாய்புகள் இல்லை.


காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த கண்ணன் 1996 தேர்தலை ஒட்டி தனிக்கட்சி துவங்கினார்.தமிழக அதிமுக கூட்டணி என்கிற நிலைப்பாடு அதன் விளைவாக அரசியலில் இருந்து வந்த கொந்தளிப்பு அனைவரும் அறிந்தது . ஆனால் மூப்பனார் வாழப்பாடி ராம்மூர்த்தி போல் அதிரடி அரசிலுக்கு பழக்கமில்லாதவர் . நரசிம்மராவின் அதிமுக கூட்டணி என்கிற முடிவை எட்டப்படுகிற தருணத்தில் சீண்டப்பட்டவராக தமிழகம் திருப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...