ஶ்ரீ:
பதிவு : 532 / 725 / தேதி 14 செப்டம்பர் 2020
* விரலிடுக்கில் *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 09.
அதிரடி அரசிலுக்கு பழக்கமற்றவரான மூப்பனார் ஜெயலலிதாவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவர்.தில்லியில் பலகட்ட பேச்சுவார்தைகளில் தமிழக கூட்டணி குறித்து எந்த முடிவும் எட்டப்படாத சூழலில் . அகில் இந்திய காங்கிரஸ் தலைமையின் முடிவுக்கு விடப்பட்டது .ஆரம்பம் முதலே மூப்னார் திமுக நோக்கிய மனச்சாய்வு கொண்டவர் என்பது வெளிப்படையானது . அவர் முன்வைத்த கருத்துக்கள் அனைத்தும் அதனாலேயே அடிபட்டது .
ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தில் திமுக மறைமுக காரணம் என அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராம்மூர்த்தியால் குற்றச்சாட்டப்பட்ட சூழலில் திமுக தலைமை ஜெயின் கமிஷன் முன்பு ஆஜராகாமல் விடுபட்டது பல அழுத்தமான கேள்விகளை முன்வைத்து சென்றது .திமுக நோக்கிய வாழப்பாடி ராம்மூர்த்தி வைத்த குற்றச்சாட்டை அவரே எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி காங்கிரஸ் திமுக கூட்டணி வாய்பபை சிதறச்செய்து அவர் காங்கிரஸ, கட்சியிலிருந்து வெளியேறி திவாரி காங்கிரஸ் கண்டது பிறிதொரு வினோதம்
நரசிம்மராவ் மற்றும் சோனியாகாந்தியுடனான உறவு கொதிநிலையை அடைந்து விட்டிருந்தது.சோனியகாந்தி தனது நேரத்திற்கு காத்திருந்தார் . திமுக வுடான கூட்டணி முடிவு அதற்கான வாய்ப்பை திறந்து வைக்கும் என்கிற காரணத்தை ஒட்டி நரசிம்மராவ் அதிமுக வுடான கூட்டணியை அறிவித்தார்.அது தற்கொலைக்கு இணையான முடிவு.
தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த முடிவை எதிர்த்தனர்.அதிமுக விற்கு எதிரான மனநிலை தமிழகத்தில் காணப்படுவது அதை தோக்கிய கூட்டணி முடிவு சாதகமானது அல்ல என்கிற முடிவு ஆழமாக இருந்தது .
நரசிம்மராவின் முடிவால் சீண்டப்பட்டு முதல் முறையாக கோபம் கொண்டவராக மூப்பனார் வெளிப்பட்டார் .அவரை சென்னை விமான நிலையத்தில் சந்திக்கும் வாய்ப்பு .அதீத கோபத்துடன் அதே சமயம் நிதானம் தவறாதவராக அவரை பார்க்க முடிந்தது ஒரு ஆச்சர்யம் .
சில நாட்களுக்கு பின் அதனது தயக்கங்களை உதறி வெளிவந்து தமகா வை துவங்கினார் .மேல்மட்ட அரசியல் தலைவராக அறியப்பட்ட மூப்பனார் ஒரு மாநில அரசியல் கட்சிக்கு தலைமை ஏற்றது அவரது அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரானது . மூப்பனாரின் இந்த முடிவிற்கு “சோ” போன்ற அரசியல் கட்சிகள் சாராத ஆளுமைகள் முக்கிய பங்கு வகித்தனர்.
தில்லி அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதுக் கட்சி கண்டவர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர் சிலர் மட்டுமே அதில் வெற்றி கண்டனர்.மிகப் பெரும்பாளோர் திரும்ப கட்சிக்குள் வந்து சேர்ந்தனர். தமிழகத்தில் காமராஜர் போன்ற ஆளுமைகள் கூட தான் துவங்கிய கட்சியின் அழுத்தம் காரணமாக தங்கள் கொளகைக்கு முரண்பட வேண்டியிருந்தது .
இவைகளே மூப்பனாரின் தயக்கத்திற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் . முடிவுகள் தனது விழைவிற்கு அப்பாற்பட்டு எடுக்கப்பட்டவை என்பதும் அது குறித்து ஆழ்ந்த மனவருத்தம் அடைந்திருந்ததை உணரும் வாய்ப்பு கிடைத்தது .
சென்னை ராமசந்திரா மருத்துவமணையில் தனது இறுதி காலத்தை கழித்துக் கொண்டிருந்த மூப்பனாரை அன்றைய முதல்வர் சண்முகத்துடன் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது .அவர் சொன்ன அந்த வார்தைகள் தனது மகனை திரும்பவும் காங்கிரஸ் கட்சியில் இணைக்க அனைத்து முயற்சிகளையும் சண்முகம் செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டார்.தனிக்கட்சி முடிவு தவறானது என கூறினார் , பிற இரண்டாம் நிலை தலைவர்களிடமிருந்து தன் மகனை காப்பாற்ற வேண்டும் என கூறினார்.
பா.சிதம்பரம் போன்றவர்களை குறித்து அவர் கொண்டிருந்த ஆழமான கசப்பு அதற்கு காரணாக இருந்திருக்க வேண்டும். மூப்பனாரின் வேண்டுகோள் படி GK.வாசன் காங்கிரஸில் இணைந்ததும் தந்தையின் கோட்பாட்டு அரசியலுக்கு முரண்பட்டு மத்திய அமைச்சராகி ,கட்சி மேலிடத்தில் கசப்பு கொண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி துவங்கியது பிறிதொரு முரண்நகை .
மூப்பனார் இந்தியா முழுவதும் தலைவர்கள் அகில இந்திய தலைமைக்கு முரண்படும் போதெல்லாம் அதை சரி செய்பவராக அறியப்பட்டவர் . “ஜென்டில்மென் பாலிடீஷியன்” என்கிற அடைமொழி கொண்டவர் .அன்றாட அரசியலில் கருத்து சொல்வதை எப்போதும் தவிற்தவர்.அவை அல்ப ஆயுளை கொண்டவை என அறிந்தார்.
உணர்வு பெருக்குகள் கால அளவிற்கு உட்பட்டவை. நீண்ட பயத்திற்கு ஏற்றவை அல்ல . அவை முழுதாக உருவாகி முடிவதற்குள் வடிந்துவிடக் கூடியவை . மேலும் மக்களை தொடர்புறுத்தும் தலைவர்கள் தங்கள் கோட்பாடுகளை விட சூழலை ஒட்டி முடிவெடுக்கும் நிற்பந்தத்தில் உள்ளவர்கள் , அதனால் எந்தவித சமரசத்திறகும் தயாராக இருப்பார்கள்.
தனக்கென முகம் உள்ளவர்கள் கூட எளிதில் இறங்க முடியாத இடத்திற்கு இறங்க வேண்டிய சூழலை சந்தித்தேயாக வேண்டியவர்கள் . மூப்பனார் போன்றவர்களுக்கு அவை கட்டுபடியாவதில்லை.அது மிக விரைவில் வெளிப்பட்டது.
சண்முகம் மற்றும் மூப்பனார் போன்றவர்கள் பழைய தலைமுறை அரசியல்பாணியின் நீட்சி .காமராஜரை ஆதர்சமாக கொண்டவர்கள் .அரசியல் ஆர்வலர்களின் பரபரப்பிற்கும் , இரண்டாம் நிலை தலைவரகளின் விழைவிற்கும் அப்பால் தங்களை வைத்துக் கொண்டவர்கள். அரசியல் சரி நிலைகளில் மத்தியில் நடைமுறைவாதிகளாக இருந்தனர். வெகுஜன அரசியலை மிக எச்சரிக்கையுடன் அனுகினர். அது மழை வெள்ளம் போல மிக சீக்கிரம் வடிந்து விடக்கூடியது .அதை ஒருபோதும் மையப்படுத்தியதில்லை என்கிற தெளிவு உள்ளவர்கள்.இதில் மூப்பனார் சிக்கியபோதும் அதில் உழலாதவராக சண்முகம் இருந்தார் என்பது உச்ச கட்ட ஆச்சர்யம் .
திராவிட பரப்பிய பாணி அரசிலுக்கு எதிரானவர் அதில் அனுபவம் இல்லாதவர். மறைந்த ஜெயலலிதா பாணி அரசியலில் ஆரம்பம் முதலே விலகியிருந்தார் .1991 அரசியலுக்கு கூட்டணி பேச ராஜீவ்காந்தி போயஸ் தோட்டத்திற்கு சென்ற போது உள்ளே செல்லாது வெளியே ரோட்டில் நின்றதை மிக ஆச்சர்யமாக பார்த்ததை நினைவுறுகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக