.
ஶ்ரீ:
பதிவு : 536 / 729 / தேதி 30 செப்டம்பர் 2020
* நடைமுறைவாதம் *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 13.
புதுவை மாதில காங்கிரஸ் தலைவர் சண்முகம் உரையாடல்களின் வழியாக தனது அரசியலை பிறரிடம் செலுத்துவதை வழியாகக் கொண்ட பழைய அரசியல் பாணியை சேர்ந்தவர். காந்தியின் வழிகளை தங்களின் பாதைகளாக ஏற்று நவீன இந்தியவில் அவற்றை நடைமுறைக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து கொண்டவர்களை நடைமுறைவாதிகள் என வரையறை செய்யது கொள்ள முயல்கிறேன் .காந்தீய முயற்சியின் அரசியல் மதிப்பீடுகளை குறித்து 1970 களின் இறுதிகளில் அவர்கள் அச்சமடைந்தார்கள். காந்தியின் அரசியல் நிர்வாக அனுகுமுறை ,நேருவின் சோஷலிச கொள்கைகள் அவற்றுடன் சர்தார் வல்லபாய் பட்டேலின் செயல்பாட்டுடன் இணைத்து புரிந்து கொள்ள முயன்றவர்கள்.
இந்தியாவில் அவர்களைப் போன்றவர்கள் எண்ணற்றவர்கள் . ஆட்சி பொறுப்பை வகிக்கும் வாய்பை பெற்று அதில் நிலைகண்டவர் என்கிற அளவில் நரசிம்ம ராவ் அதில் முதன்மையானவார் . அரசியலில் நடைமுறைவாதம் என்கிற கருதுகோளை அவர்களின் வழிமுறைகள் மூலம் விளங்கிக் கொள்ளும் பிரதிபலிப்பாக சண்முகம் அவர்களை பார்கிறேன். அவர் எங்களைப் போன்றவர்கள் அரசியலில் நம்பிக்கை கொள்ள வைத்தவர் .
1989-90 களில் சண்முகம் , மரைக்காயருக்கு இடையேயான பொது சமன்பாட்டை மரைக்காயர் குளைத்து அதற்கு எதிரான செயல்பாட்டிற்கு வந்த போது அவரை மாநில அரசியலில் இருந்து வெளியேற்றியது சண்முகத்தின் நிதானமாக அரசியலாடும் பாணி. அவருக்கு நெருக்கமான பல கட்சி அமைப்புகளைச் சேர்ந்த பலருக்கு தெரிந்ததே . அரசியலில் வெட்டி ஆடுவதை கடைசி ஆயுதமாகக் கொண்டவர். அதை ஒருவருக்கு எதிராக நிகழ்த்தும் போது அவரால் வெட்டுப்பட்டவர் பின் ஒருபோதும் தன் இடத்தில் திரும்ப எழுந்ததில்லை என்பது புதுவை அரசியல் வரலாறு . குபேர் முதல் கண்ணன் வரை .காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமல்ல பல முறை எதிர்கட்சிளிலும் அதை நிகழ்த்தியவர் என்பதால் அவர் மீது கொண்ட அரசியலாளர் மற்றும் அரசு நிர்வகிகள் வரை கொண்ட அச்சம் அவரது கடைசி காலம்வரை நீடித்தது.
சண்முகம் தொண்டர்பலமோ வாக்குவங்கியோ இல்லாதவர் .அரசியல் சமன்பாடுகள் வழியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் . இவை அனைத்தையும் கடந்து அவர் அரசியல் சூழ்ச்சியாளர் என குற்றம் சுமத்தப்படுபவர் . அது உண்மை .அரசியல் சமன்பாடுகள் சூழ்ச்சிகளின் வழியாகவே வகுக்கப்படுபவை. அதில் நேரடித்தன்மை இருக்க வாய்ப்பில்லை. சண்முகம் ஒரு நடைமுறைவாதி .ஆனால் அரசியலில் அவரை போன்றவர்களின் பங்களிப்பை குறைத்து புரிந்து கொள்கிறோம்.அவர்கள் சுவாரசியமற்றவர்கள் , சூழ்ச்சிகாரர்களாக தெரிகிறார்கள். முப்பனாரும் அவர்களைப் போன்றவர்களே. ஆனால் மூப்பானார் போன்ற பெரும் ஆளுமைகள் தோற்றது துரதிஷ்டவசமானது.அந்த இடத்தில் சண்முகம் வென்றிருக்கிறார் என்பது ஆச்சர்யமானது .
அகில இந்திய தலைமை பலர் பற்றிய ஆழமான , நுட்பமாண பத்திரிக்கைகளில் வெளிவராத அரசியல் செய்திகளை விளங்கிக் கொள்ள சண்முகம் ஒரு சிறந்த ஊடகமாக எனக்கு தெரிகிறார் .எனக்கான வாய்ப்பு அவரை மிக நெருங்கிப் பார்க்கும் வாய்பை பெற்றது தான் . இந்த பதிவு சண்முகத்தின் புகழ்பாடுவதல்ல . இந்தியப் பெருந்தலைவர்களின் செயல்முறையின் ஒரு துளி அவர் . அந்த ஆளுமைகளால் அடைந்த பாதிப்பை தனது வாழ்நாளில் முயற்சித்து பார்த்தவர் .
அதில் அவர் வென்றாரா இல்லையா என்பதை அலசுவதல்ல இந்தப் பதிவின் நோக்கம். அசிங்கமாக எதுவும் அரசிலின் பொருட்டு செய்யாலாம் என்கிற சித்தாந்தம் பெருமளவு ஒப்புக்கொள்ளப்பட்ட சூழலில் .இல்லை மனிதனாக வாழயிலாதவன் நல்ல தலைவனாக எப்படி உருவாக முடியும் என்கிற கேளவிக்கும் , லட்சியவாதத்தில் நம்பிக்கையும் அதை செயல்படுத்தும் இடங்களில் நடைமுறைவாதமே வெற்றி பெறக்கூடியது என எனக்கு புரியவைத்தவர்.அதன் பொருட்டு அரசியலின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்தவர் என்கிற அடிப்படையில் ஆகச் சிறந்த தலைவராக இன்றளவும் அவரை பார்கிறேன்.ஆற்றிக் கொள்ள முடியாத கசப்புகள் கைநழுவி போன வாய்ப்புகள் , என எனக்கு அவரிடத்தில் பெரும் வருத்தம் இருப்பினும் நான் கண்ட மிகச்சிறந்த தலைவராகவே அவரை எண்ணுகிறேன்
கண்ணன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது அவரது அரசியல் பாணியை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறேன் .அதில் அவர் கையாண்ட யுக்தி புரட்சிகரமானதும் உலகை திருத்தும் ஆவேசமும் லட்சியவாதப் பேச்சும் .அவை நடைமுறை யதார்த்தத்தில் இல்லாதவை .அன்றைய அரசியல் சூழலில் இளைஞர் காங்கிரஸார் மத்தியில் இடதுசாரி சிந்தனை நோக்கிய மனச்சாய்வு இருந்தது .அவர்கள் எப்போதும் இடதுசாரிகளாக தங்களை முன்வைக்கத் தயங்காதவர்கள்.சுப்பையா போன்ற பெருந் தலைவர்களிடம் இருந்து அதை பெற்றுக் கொண்டவர்கள். கண்ணனைச் சுற்றி ஒரு பெரும் இளைஞர் கூட்டம் இருந்தது உண்மை . அவர்களுக்கு அவர் தங்களுக்கான இடத்தை உருவாக்கி தருபவராக தெரிந்தார்.
அடுத்தடுத்த தலைமைகள் உருவாகிவருவதை ஏற்பவர் . தன்னளவில் தனியாளுமை என்கிற கருத்து , பாலன் தலைமை பொறுப்பிற்கு உகந்தவராக நிர்வாகிகள் எடுத்த முடிவை நிராகரித்ததும் சிதைந்து போனது .அமைப்பின் ஆதரவு பாலனுக்கு இருந்ததும் அதை கடந்து தனது எண்ணத்தை திணிக்க முயற்சித்த போது அவரது ஆளுமை அடிவாங்கி.அமைப்பு இரண்டாக உடைந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக