https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * அரசியல் யுக்தி *

 


ஶ்ரீ:



பதிவு : 534  / 727 / தேதி 22 செப்டம்பர் 2020


* அரசியல் யுக்தி



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 11.






இரண்டாம் நிலைத் தலைவர்கள் தங்கள் விழைவினால் நரசிம்ம ராவிற்கு எதிராக சோனியாவை பின்னாலிருந்து  இயக்கினார்கள் . சோனிகாந்தி எதிர்பார்த்த வயோதிகரல்ல நரசிம்மராவ்.அவரின் எளிய தோற்றம் அவர்பற்றிய பிழை புரிதலை அனைவருக்கும் கொடுக்கவல்லது.ஒரு கட்டத்தில் சோனியாகாந்தி நரசிம்மராவை அஞ்சினார். தனது அனுபவத்தில் இருந்து தனக்கானதை நரசிம்மராவ் கண்டடைந்தார் . அனுபவம் சில தடைகளை உருவாக்கும் . அவருக்கும் அது நிகழ்ந்து .என்ன என்பதை பிற்காலத்தில் சண்முகம் முதல்வராக பொறுப்பேற்ற பின் வீழ்ந்து போனதில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது .


காலம் சறுக்கலை எவருக்கும் நிகழ்வது. வயதும் அனுபவ அறிவும் பெற்றவர்களுக்கும் அதிலிருந்து விதிவிலக்கில்லை. அது அதன் தேவையை எடுத்துக்கொள்ள சிலரை தேர்ந்தெடுக்கிறது .அதை மிகச் சரியாக இயற்றி எவரும் தன் செயலில் இருந்து ஓய்வு பெரும் போது எந்த எதிர்பார்புமின்றி நிம்மதியுற்று வெளியேறுகிறார்கள் .சிலருக்கு அது நிகழ்வதில்லை .சற்றேறக்குறைய மாநில அரசியலில் சண்முகம் சென்று சேர்ந்தது அங்குதான்


மிக திறமையாக செயல்பட்ட பிரதமர்களில் என்னளவில் நான் நரசிம்மராவை முன்னிறுத்துவேன் .1988 முதல் 2008 வரை பல முறை தில்லிப் பயணம் , பலருடன் உரையாடியது ஓரிரு சந்தர்ப்பத்தில் புதுவை அரசியல் காரணமாக சண்முகத்துடன் நரசிம்மராவை சந்தித்து .அவர் பற்றி தலைவர் சண்முகம் சொன்ன தகவல்கள் என்னை அரசியலை உள்ளும் புறமுமாக பார்க்க வைத்திருந்தது .அது எனக்கு நரசிம்மராவைப் பற்றிய நேர்மறை எண்ணம் உருவாக காரணமாக இருந்திருக்கலாம்.

நரசிம்மராவ் ஆட்சிக் காலம் இந்தியாவின் மிகச் சிறந்தவையாக இன்றளவும் நினைக்கிறேன்.


புதுவை திரும்பிய பிறகு சிலநாட்கள் கழித்து தலைவர் சண்முகத்திடம் பலவருடங்களாக நிரப்பபடாமல் இருக்கும் மாவட்ட மற்றும் வட்டார தலைவர்கள் அவர்களின் நிர்வாக அமைப்பு நியமிக்கபட வேண்டிய சூழல் எழுந்திருப்பதை பற்றி சொன்னபோது , நான் எதிர்நோக்கியபடி கடும் சொற்களால் அதை மறுதளித்தார் .தில்லியின் தலைமையிடம் தான் பேசிக் கொளவதாகவும் என்னை சற்றே சும்மாயிரும்” என்றார்.


அதற்கென்ன பொருள் என நான் முன்பே அறிந்து கொண்டதே. மாநில குழப்ப அரசியலில் முகத்தில் வெடிக்க எது முதல் கிழிச்சல் என்பதே அப்போதுள்ள கேள்வி .புதிய சவால்களையும் அது கேட்கும் சமன்பாடுகள் பற்றிய அச்சத்தில் என் கைகளை கட்டிப்போட பார்கிறார் .தில்லியில் நிகழ்ந்த மாநாட்டிற்கெல்லாம் அவரளவில் என்ன மதிப்பு என நான் அறிந்தது தான்.


அரசியலில் முக்கிய முடிவுகள் ஊர்கூட்டி எடுப்தல்ல . அது ஒரு அரசியல் நகர்வு . அதே சமயம் தலைவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள மாநாடு நடத்துவது ஒரு யுக்தி மட்டுமே. அது அவர்ளை மேலிடம் அறிந்து கொள்வதற்கான பாதை மட்டும.

அரசியலில் முக்கிய இடத்தில் உள்ளவர்களுக்கு அன்றாடம் அதன் முனையை தொட்டபடி இருப்பவர்கள்.ஏதாவது ஒரு வகையில் மையத் தலைமை நிலைபாடுகளை முன்பே யூகித்திருப்பார்கள் . எதிர் நோக்காது ஒன்று நிகழும் போது மேலிட பொறுப்பில் உள்ளவர்களுக்கு அது குறித்த சமிக்ஞை அனுப்பட்டிருக்கும் . அனைவரும் ஒரே குரலில் உணரச்சிகளற்றுப் பேசுவார்கள்.அது எப்போதும் திகைப்பை பின் கசப்பையும் தருவது.


1990 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தது . சட்டமன்றத்திற்கு யாரையும் முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது காங்கிரஸில் வழக்கமாக இருந்ததில்லை . அது சண்முகம் மன்றும் பாரூக் மரைக்காயர் இருவரின் அரசியல் சமன்பாடுகளின் விளைவுகளால் உருவாவது . தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்வர் பதவியை கடைசி வரை பேரத்தில் வை்திருப்பது சண்முகத்தின் நிலைபாடாக இருந்தது .அது அகில இந்திய காங்கிரஸின் நிலைப்பாடு கூட.


ஏகமனதான தீர்மாணம் என்பதற்குளே இருக்கும் சமன்பாடுகள் அனைவரும் அறிந்தது.தே்தலில் கட்சி பெரும்பான்மை பெற்றதும் இந்த ஏகமனதானது” உருவாகி முடிவு தில்லியிடம் விடப்படும்.பிற நேரங்களில் அந்த சமன்பாட்டை  கொண்டு வருபவர் அதில் முன்னுரிமை பெறுவார்.


சண்முகம் மற்றும் பாரூக் மரைக்காயர் என்கிற இரு முனை கொண்ட அரசியலில் பாரூக் மரைக்காயரை பலவீனமான இடத்திலேயே வைத்திருப்பது சண்முகத்தின் அரசிலில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யுக்தி . கட்சி அமைப்பை அதற்காக வலுவுள்ளதாக வைத்திருந்தார்.கட்சி அரசியலில் மரைக்காயர் ஆர்வம் கொண்டவராக இருந்ததில்லை. தனது அரசியல் நிலைபாட்டிற்கு உகந்த வழிகளில் கட்சி அமைப்பை கொண்டு செல்ல சண்முகம் தயங்கியதில்லை . ஆனால் அது 1990 களில் காலாவதியானது.


புதுவை போன்ற சிறிய எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆட்சி அமைப்பில் அதிருப்தி மிக எளிதாக அடையப்படுவது .மத்திய அரசின் உள்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முதலமைச்சர் ஒரு தலைமை அதிகாரியின் இடத்தில் உள்ளவர் மட்டுமே.ஆறே மாத த்தில் ஒரு முதல்வருக்கு எதிராக மிக எளிதில் அதிருப்தி திரண்டுவிடும் .


மற்ற மாநிலங்கள் போல அமைச்சர் மாற்றம் எளிதில் நிகழ்வதில்லை .ஆட்சிமாற்றம் மட்டுமே எப்போதைக்குமான வாய்ப்பு.அதை நோக்கியே அனைத்தும் திரளும் . கட்சி தலைமைக்கு அது கரையுடைக்காமல் பார்த்து கொள்ளவது மட்டுமே .எல்லை மீறும் போது ஆட்சி மாற்றம் தவிற்க இயலாது போகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்