https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 26 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * நம்பிக்கை *

 
ஶ்ரீ:பதிவு : 535  / 728 / தேதி 26 செப்டம்பர் 2020


* நம்பிக்கைஆழுள்ளம் ” - 03

மெய்மை- 12.


பிற மாநிலங்கள் போல செயல்படாத அல்லது அதிருப்தியை பெருக்கிய அமைச்சர்கள் மாற்றம் எளிதில் நிகழ்வதில்லை . தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இது சாத்தியம் . 30 உறுப்பினர்களை கொண்ட சிறிய சட்டமன்றத்திற்கு ஒரு கட்சிக்கு 16 உறுப்பினர்கள் இருந்தால் அது பெரும்மான்மை அரசு .அதில் முதல்வர் தொடங்கி கடைசி அமைச்சர் என ஆறு பேர்களை கொண்ட மந்திரிசபை பிற அரசு பதவி என மீதம் ஆறுக்கும் மேற்பட்ட பதவிகள் , பிறகு சட்டமன்ற நிலைக்குழுக்கள் . இப்படி ஒருவர் ஒன்றுக்கு மேப்பட்ட பதவிகளில் அமரவே வாய்ப்பு .


ஒவ்வொரு கமிட்டிகளில் உருவாகும் மனக்கசப்பு அடுத்த கமிட்டியில் எதிரொலிக்கும் போது எதன் அடிப்படையிலும் அவை எழுகின்றன் அவற்றின் ஊற்றுமுகம் என்ன ? என புரிந்து கொள்ள முடியமல் அல்லது தீர்வை எளிதில் முன்வைக்க முடியாதபடி போய்விடுவதுண்டு . கூட்டணி ஆட்சியாக இருந்தால் இன்னும் சிக்கல் அது கொதிநிலையை அடையும் போது  ஆட்சிமாற்றம் மட்டுமே மாறாத வாய்ப்பு.அதை நோக்கி அனைத்தும் திரளும் . கட்சி தலைமைக்கு அது கரையுடைக்காமல் பார்த்து கொள்ளவது மட்டுமே .எல்லை மீறும் போது ஆட்சி மாற்றம் தவிற்க இயலாது போகிறது.


சண்முகம் , அரசுக்கு எதிராக திரும்புபவர்களை கையாளக் கற்றவர் . புதுவையின் ஆளும் அமைப்பாக பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி இருந்து வந்திருக்கிறது . ஆகவே மடை கட்டும்” கலையை கற்றுத் தேர்ந்தவர் . அத்தனை பேரிடமும் உரையாடி சலிக்காதவர் . பெரியவர் ,எளியவர் ,சிறார் என்கிற வேறுபாடுகளை அறியாதவர் .அல்லது பிறர் அதை அறியும்படி செய்வதில் வல்லவர் .எல்லா தரப்பு மக்களும் தன்னை மிக எளிதில் வந்து சந்திக்கும்படி வைத்துக் கொண்டவர் .

வாசலில் எந்த காவல் கட்டுப்பாடுகளும் இருப்பதில்லை.அவர் முதலவராக வந்த போதும் அதுதான் நிலை.கடற்கரை சாலையில் வாடகை வீட்டில் இருந்தார். கடற்கரையில் நடைபயிற்சிக்கு வருபவர்கள் ரோட்டில் இருந்தபடியே அவர் அறையில் அமர்த்திருப்பதை காண முடியும் .எந்த காரணமும் இன்றி அவரை அனுகமுடியும் என்கிற உணர்வை அது கொடுத்து விடுகிறது.


பல தரப்பட்ட மனிதர்களை சந்திப்பது ஆயாசத்தை பொடுப்பது .ஆனால் உரையாடலில் விழைவு உள்ளவர் தன்னை சுற்றி நிகழ்வதை அத்தகைய எளிய மனிதர்கள் வழியாக பெற்றுக் கொள்ள முடியும் .அவர்கள் பலநூறு வாய்ப்புகளை எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் . நமக்கு சரியானதை அதிலிருந்து விரித்து எடுத்துக் கொள்ள முடியும் என்பதை பார்த்திருக்கிறேன்.அந்த மனிதர்களை் அரசியலின் அத்தனை சாத்தியகூறுகள் பல உடல்களாக நிகழ்த்திக் காட்டக் கூடியவர்கள் .அவற்றை ஒற்றை பேருடாலாக பார்க்கக் கூடியவர்களுக்கு அடுத்து நிகழ இருப்பது வசப்படுகிறது .


ஆட்சிமாற்றம் மட்டுமே வாய்ப்பு என்கிற சூழலில் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஏற்கும்  தீர்வு ஒன்று முன்வைக்கப்படும்.எதிர் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த சறுக்கல் இல்லாத சமன்பாடுகள் முன்வைக்கப்பட்டு சிக்கல் தள்ளிவைக்கப்படும் .பிறிதொரு கால சூழலை பொருத்து அது பெட்டிக்குள் இருந்து எழுந்து வரும்.அப்போது அதுவே அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு எழுத்தில் வராத உடன்பாடு என்றாகும்.


அதுவரை இருந்த அந்த அரசியல் நடைமுறை 1989 களில் புதிய கோணம் கண்டது . தில்லியில் காங்கிரஸ் ஆட்சி இழந்து சந்திரசேகர் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட சூழல். தேர்தல் தோல்விக்கு பிறகு ராஜீவ் காந்தி அரசியலில் கனிந்து கொண்டிருந்த நேரம் .திட்டம் மற்றும் கணக்குகளில் இருந்து  எதார்த்தம் மாறுபட்டது .ஒரு தோல்வி மட்டுமே அதை அருகென பார்க்க வைப்பது .


தில்லி சூழலை மிக நுட்பமாக புரிந்து கொண்ட மரைக்காயர் முதல்முறையாக சண்முகத்தை கடந்து D.ராமசந்திரன் தலைமையிலான் திமுக ஜனதா தள் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர முயன்று கொண்டிருந்தார்.ஆட்சிக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்கள் தில்லியில் முகாமிட்டிருந்தனர்.


ஏறக்குறைய மரைக்காயர் தனது இலக்கை அடைந்து விட்டிருந்தார் .அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தில்லியில் முகாம் கொண்டிருப்பதை அறிந்த பிறகும் தனது அழைப்பிற்காக காத்திருந்தார் .அதுவரை ஏற்படுத்தப் பட்டிருந்த சமன்பாடுகளை மரைக்காயர் குலைத்து சென்றது சண்மகத்தை பற்றியெறியச் செய்திருந்தது.இனி அவருடன் எந்த விதத்திலும் மாநில அரசியலில் இணைந்து பணியாற்றுவதில்லை , அவருக்கான இடம் இனி இல்லை என்கிற முடிவிற்கு வந்து விட்டிருந்தார்.


தனது சாமர்த்திய காய் நகர்த்தலில் ஆட்சி மாற்றத்திற்கான வாய்பை முற்றிலுமாக தகர்த்தார் .மரைகாயரை முதல்வரென ஏற்று தில்லி சென்ற அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சி கவிழ்க்கட்டதை அறிந்து கொள்ள நேர்ந்தது .இது புதுவை அரசியலில் மரைக்காயர் மீதான நம்பிக்கையை முற்றாக அழித்தது.


1989-90 களில் சண்முகம் எடுத்த மிக முக்கிய முடிவு முதலில் மரைக்காயரை மாநில அரசியலில் இருந்து வெளியேற்றியது. ஆனால் அதிகார அரசியலில் நீந்த தெரிந்த அவர் 1991 ல் நரசிம்மராவின் அரசில் மத்திய இணையமைச்சராகி சண்முகத்தின் ஊழல் புகாரினால் பதவியிழந்தார் . ஆனால் தனது  அரசியல் சாதுர்யத்தால் சட்டீஸ்கர் மற்றும் கேராள மாநில ஆளுனர் என பதவியை பெற்று மன்மறைந்தார் . அவரால் இறுதிவரை புதுவை மாநில அரசியலுக்கு திரும்ப முடியாது போயிற்று . சண்முகத்தின் கோபம் அப்படிப்பட்டது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...