https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 21 செப்டம்பர், 2016

வாழ்வெனும் நதி

வாழ்வெனும் நதி 



மழை - அது துளித் துளியாய் பொழிவதற்கு கடலும் கருமேகமும் தொடக்கம் என்றபோதும் , அது மீண்டு கடலை சரண் புகுமுன் பூமியை நனைத்து நதியென பிரவகித்து மனல் அரித்து சென்றாலும், சில கூழாங்கற்களை விட்டுத்தான் செல்கிறது.அவை தான் சொல்ல விழையும் பொருளை நம் வாழ்வின் தருணத்திற்கேற்ப நமக்கு ஓர் புதிய புரிதலை கொடுக்கிறது.

வாழ்வின் தொடர் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்றை பொருத்தி பார்க்கும் போது சில சமயங்களில் அதற்கு ஒரு அதீத அர்த்தம் புலப்படுகிறது.

அம்மா சொல்வார் தன் மாமனாரின் ஆசியே தன் வாழ்வியலில் நலத்திற்கு காரணம் என. ஆனால் அதை தன் வாழ்வில் எப்படி கையாண்டார் என்பது விவாதத்திற்குறியது. எப்படி எனினும் அவர் சொன்னது சத்தியம்.பெரியவர்களுக்கு அவர்களின் வயோதிகத்தில் அவர்தம்பிள்ளைகள் செய்யும் உதவிகளுக்கு, அவர்கள்  தரும் ஆசி மிக சக்தி வாய்ந்தது,

தீச்சொல்லும் அவ்விதமே.


வாழ்கையில் பெரிதும் குழப்பிக்கொண்டது இது பற்றிதான், அது என்னை தடுமாற்றமடையச் செய்தது. ஆனால் சில கோட்பாடுகளின் அடிப்படையில் அதைக் கடந்து தாண்டினேன்.

அப்பாவின் ஆசி எனக்கானது, ஆனால் அம்மாவிடம் அது எவ்வகையிலும் கிடைக்கப்போவதில்லை அது என் ஊழ்.
என் தந்தை எனை பற்றிய புரிதல் தவறானதென தன் இறுதிக்காலத்தில் சொன்னார் என நான் கேட்டதுண்டு,
அவ்வாறு என் தாய் சொல்லப்போவதில்லை.

உலகம் தாய்க்கு கொடுக்கும் அங்கீகாரம் அபரிதமானது ,அதை எக்காலத்திற்கும் எவறாலும், அத் தொகுப்பிலிருந்து ஒருவரைக்கூட விலக்க முடியாது . அப்படியானால் நான்  என் தாயுடனான விலக்கலை எங்கனம் புரிந்துகொள்வது.
அவர் குண இயல்புகள், பொதுவானதா அல்லது தனிப்பட்டதா.


தந்தைக்கு தன் மகனின் மரணம் அவனது தாயைவிட ஆகப் பெரியது என்பர் .தாய்க்கு மகன் உறவைப் போன்றதல்ல தாய் மகள் உறவு அது இன்னும் விவரிக்க இயலாதது , மிக நுண்ணிய பல மடிப்புக்களால் ஆனது .
மிக ஆழமானது.

மகள்களின் உலகில் மருமகள் எனப்படுபவள் எப்படி புரிந்து கொள்ளப்டுகிறாள் . தாய் மகன் நிலையை பாதிக்கும் உறவு என்றா ?

அப்படியானால் அனைத்து மகள்களும் யாருக்கோ மருமகளெனில் அங்கும் அவர்கள் தாய் மகனை பிறிக்கிறார்களா? எனில்
அவர்கள் எப்படி நியாயத் தராசின் முள்ளாக  முடியும்.
அவர்கள் தன் தாய்க்கு எப்படி சரியான புரிதலை கொடுக்க இயலும்.
ஆகவே தான், அவர்கள் அனுகூல பரதிகூலங்கள் வழியாக தாய்களின் வயோதிகத்தை நெருப்பால் நிறைக்கிறார்கள். நிலையின்மையில் அவர்களை பதறவைக்கிறார்கள். அவர்களுக்கு வருத்தமும் , வெறுப்பும் வாழ்வில் எங்கும் எவர்பேரிலும் நிறைந்து கிடக்கிறது.

மகள்கள் - அவர்கள் இருநிலைப்பாட்டாளர்கள் தங்களுக்கெனவும் பிறர்கெனவும் தனிவழி திறந்து வைத்துள்ளார்கள் ,ஆகவே இரு பக்கமும் தாய் மகன் உறவைகளைப் பாதிக்கிறார்கள்.
எனில், இதில் பெருவிசும்மென கரந்துரையும் ஊழின் தர்மம் எனப்படுவது யாது?.

அவர்கள் தன் விதியை எழுதிக்கொள்கிறார்கள்.
இது உலக வழக்காரு.
ஆனால் பாவம் அத்தகையர்.
அவர்கள் சின்னஞ்சிறு உயிரத்தொகைகள்.
அப்பெரும் விசும்பின் நிர்வாகத்தை முன்னெடுப்பவர்கள்.

ஆகவே தாயின் வயோதிகத்தில் உதவ மறுகப்பட்ட மகன்களுக்கு,அவர்களின் ஆசி கிடைக்க வாய்ப்பில்லையா?
இயற்கை எவ்வகையாகிலும் இதை சமன்பாடு செய்திருக்கலாம். நம் புரிதலுக்கு காலம் தேவைப்படுகிறது,
...........நாம் சரியாக இருப்பின்.

...........தான் சரியாக இருப்தென்பதென்ன? தாய்ககு எதிர் நிற்றலை விடுத்து விலகியிருத்தல். பின் யார் எதிர் நிற்பது ?

மகள்களின் உலகில் மருவும் மருமகள்தான். !!

அவளே இவ்வூழின் சங்கிலித்தொடரை அறுக்கவல்லாள்.
............தான் சரியாக இருப்பின். அவள் தான் சரியாக இருப்பது என்பது யாது?

அவள் தனக்கான கூடாததும் கூடலும் அறிந்து ஒழுகுதல்..........அதை அவன் அங்கீகரித்தல் என முடிந்தால்.

அவனுக்கு இப்பெருவிசும்பு மருமகளை மகள் என மருவித்தந்து
தன் ஊழின் கரவுகளைத் கலைந்து கொடுக்கிறது .

இறந்தகாலத்துடன் பேசுதல்

19 செப்டம்பர் 2016

இறந்த காலத்துடன் பேசுதல்




காலம் புரிதல்களால் ஆனது , நிகழ்வுகள் கால பரிமாணங்களில் பரிணமிக்கிறது.கடந்த காலத்திலிருந்து வெளியேறி நிகழ்காலத்தில் வாழ்வதும் ,எதிர்காலத்தை நோக்கி  நகர்வதும் மானஸ வியாபாரமே .ஏனெனில் இறந்தகாலம் இருந்ததற்கான தரவுகளை நம் எதிர்காலத் தேவைக்கென அது நம் நினைவுகளில் மட்டுமே அதை விட்டுச்செல்கிறது.

நினைவுகள்  புரிதல்களால் அறுதியிடப்பட்டால்தான். அது ஆழ்மனதில் படிமங்களென படர்கிறது.இதில்தான்  காலமெனும் துளாவின் முள் நிகர்நிலை கொள்கிறது.

நம்மை கடந்து சென்ற நிகழ்வுகள் நம் ஆழ்மனதில் படிமங்களாகி, நம் எதிர்காலத்திற்கான புரிதல்களை அதில் கரவுகளாக வைத்து விடுகிறது. ஆழ்மனத்துடன் உரையாடுகையில் அவை எழந்துவந்து நம் எதிர்காலம்குறித்த தெளிவுகளை பிரகாசமாக்குகிறது.

ஆழ்மனம் படிமங்களினால் ஆனது. அதில் எக்காலத்திற்குமான கேள்விகளுக்கு பதில் உண்டு, அவற்றுடன்  உரையாடுகையில் அது அனுபவஅறிவென மிளிர்கிறது ,நம் தேவைக்கேற்ப அனுபவங்களாக வெளிப்பட்டு நம்மை இயங்கவைக்கிறது. மற்றவர்களிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

காலங்களுக்கு இடையேயான மெல்லிய கோடு நம் புரிதல்களால் பகுத்து கொள்ள முடியாதபடி கலங்கிவிடின், அது நம் கடந்த காலநிகழ்வுகளின் நினைவு மையத்தில் ஓயாது அலைக்கழித்து ,துரதிஸ்டவசமாக மனதை இறந்தகாலத்தை நோக்கி நிலைநிறுத்துகிறது.

நாம் இறந்த காலத்தை நோக்கி பேசத்தொடங்குகிறோம்.

கடந்த காலத்தில் நடந்தவைகளில் இருந்து எழும் கேள்விகளுக்கு பதில் உரைக்கத்தொடங்கினால் அது மற்றொரு கேள்வி எழுதலில் கொண்டு விடும்.பின் அது முடிவிலி. ஏனெனில் தற்பெருமை,தன்நேர்மை,தான்சரி என்கிற இடத்திலிருந்து புறப்படுபவை.அவை பிரச்சனையின் ஆழத்தில் இறங்கி விவாதிக்காது ,தன்னையும் சிக்கலையும் சேர்துக் குழப்பிக்கொள்ளும் ,தன்னில் முற்றி வீங்கிய அகங்காரத்தால் எவரையும் சந்தேகிக்கும், எவ்விளக்கத்தையும் ஏற்காது.அது தான்விழையும் பதிலை அடுத்தவர் வாயால் சொல்லப்படும் எனக்காத்திருக்கும் அவ்விதம் என அது சொல்லப்பட்டால் உளம் பதறி செயலொழிந்து நிற்கும்.

எதிர்காலம் நிகழ்காலமாகும் பொழுது அதை நித்யமென எழும் சூரியோதயம் வகுப்தில்லை.புரிதலில் எழும் மானஸசிருஷ்டியே அதை வகுக்கிறது. அந்த சிருஷ்டி நிலைகொண்டுள்ள ஸ்தானத்திற்கான பாதையின் பயண ஊடகமே சூரியோதயமென பரிணமிக்கிறது.

அதைநோக்கிய பயணம் தொடங்கி நெடுநாட்களாகிறது. கடந்த காலத்திலிருந்து கற்ற பாடங்கள் அனுபவத்தில் வரவில்லை எனில் அவற்றில் இருந்து எனக்கு கிடைக்கப்போவது மனதை வருத்தி எடுக்கும் நிகழ்வுகளே.
அவை ஏன்? எதற்கு? என ஓயாத கேள்விகள் புல்லென உலகம் முழுவதும் பரந்து கிடக்கிறது இதற்கு பதில் இறுத்து மாளாது .

ஏதோ ஒருவகையில் என்னைப் பொருட்படுத்துகிற, என்னிடம் சொல்லவும் நான் சொல்வதைக் கேட்கவும் நினைக்கிறவர்களிடம் மட்டுமே நான் பேசுகிறேன்.அந்த உரையாடலில் கூடுமானவரை உண்மையைப் பேசவே முயல்வேன். தெளிவாக நேரடியாக. என்னிடம் ஒளிக்கவோ, பூடகமாகச் சொல்லவோ ஏதுமில்லை. என்னுடைய தனிப்பட்ட நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் என்னுடன் பேசுபவர்கள் நம்பவேண்டும் என்று விரும்புவேன். அவர்கள் நம்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் பேசுவேன். அப்படி நம்பி என்னுடன் விவாதிப்பவர்களை மட்டுமே எனக்குறியவர்களாக நினைப்பேன். அவர்களுடன் உரையாடும் பொழுது வாழ்கையைப்பற்றிய சில புதிய புரிதல்கள கிடைக்கலாம் .மற்றவர்களை முற்றிலும் புறக்கணித்துவிடுவேன்.

தன் வாழ்வனுபவங்களைக்கொண்டு, தன்னுள் தன் பண்பாடு தேக்கிய படிமங்களைக்கொண்டு ஆழ்மனத்துடன் பேசுகையில் அது அவனுன் உரையாடுகிறது.

மற்றவர்களுக்கு அது நாய்பெற்ற தேங்காய்தான். உருட்டிப்பார்க்கிறார்கள். புண்படுபவர்கள். அவர்கள் வழிதவறி வந்து விழிக்கிறார்கள்.பணிவுடன் அவர்களுக்கு திரும்பிச்செல்லும் வழியைக் காட்டுவதே நல்லது

எதிர் காலத்தை நோக்கிய பயணத்தின் படிகளில் என்றாவது அவர்களை சந்திக்க நேரின் இன்று கடலளவு கொட்டி புரியவைக்க முடியாதது அன்று ஒரு அத்மார்தமான சிரிப்பில் புரியலாம்.

- கிருபாநிதி அரிக்கிருஷணன் 

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

அம்மாவை யார் நரகத்தில் தள்ளியது?


அம்மாவை யார் நரகத்தில் தள்ளியது .








யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

என்ன இது, என்ன இது என நோக்கி ஒவ்வொன்றாக விட்டு விலகியவன் அந்தஅளவு அந்தஅளவுதுயரம் இல்லாதவன்’


வயதினால் மற்றும் ஸ்தானத்தனால் பெரியவர்களுக்கு ,வயோதிகம் இயற்கையின் கொடை என்பதை மறந்தால் அவர்கள் மறுபடியும் வாழ்தல் எனத்தொடங்கி நரகத்தை நோக்கி நகருகிறார்கள்.

தன் முதிரா இளமையில் மறுக்கப்பட்டதை மீட்டெடுத்தல் என தொடங்குகிறது அவ்வாழ்வு. கால மாற்றத்தை உணராமல் அடுத்தத் தலைமுறையினரின் விழுமியத்தை புரிந்து கொள்ள முடியாது.அதை அறியாது தன் அடுத்த தலைமுறைக்கு அறிவுரையை தொடங்கி மதிப்பிழந்து போகிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று புரிவதில்லை .தன் அடுத்த தலைமுறையினர் வாழ்வின் மூன்றில் இரண்டு பகுதிகளை கடந்தவர்கள்,இல்லறம் அவர்களை மையப்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கிறது என்று.

பெரியவர்கள் தன் இடம் உணராது பிறர் வாழ்கையில் தன்னை மையப்படுத்தியே அனைத்தையும் நடத்த முயல்கிறார்கள், அறிவுரைகளை வழங்குகிறார்கள்.அதை பெறமறுப்பவர்கள் இன்றைய நவீன உலகின் நடைமுறை யதார்த்தம் அறித்தவர்கள்.தரக்க ரீதியன்றி அவர்களை வெல்ல முடியாது.

ஸ்வதர்மத்தை உயிரென சிலர் கடைபிடித்தாலும்,நிர்பந்தமும் தேவையுமே அனைவரையும் அதில் நிற்கவைக்கிறது என்பது உலக வழக்கு .இவை இரண்டும் அவசியமில்லாத போது அனைத்து தர்மங்களுக்கும் மீறப்படுகின்றன.

இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தனக்கென ஓர் இடத்தை நோக்கிய நகர்வு தொடங்கிவிடுகிறது. தன் புகுந்த வீட்டில் தனக்கான நியாமான இடத்தை விரும்பும் இவர்கள் தன் பிறந்த வீட்டின் சிடுக்களுக்கு பெரும்பாலும் தவறான வழிகளை காட்டுகிறார்கள்.

பிறந்த வீட்டில் தாய் தந்தை இருவர் இருப்பது அல்லது இருவரில் ஒருவர் இருப்பின் சூழ்நிலை மாறுபடுகிறது 

தாய் தந்தை இருவரும் இருப்பின் பெரும்பாலும் சகஜநிலையே பேணப்படுகிறது.ஆனால் தந்தை மட்டும் என்றால் அது மருமகளைப்பொறுத்தது அவர் நியாய உணர்வு உள்ளவர் எனில் சராசரி குடும்ப பிரச்சனை கொதிநிலைக்கு வருவதில்லை ஆனால் தாய் மட்டும் மிச்சப்பட்டவர் எனில் , பிறந்த வீட்டு பெண்களின் பங்கினால் பூசல்கள் உச்ச நிலைக்கு வந்து விடுகிறது.

வயோதிகத்தின் காணமாக சமூக மான அவமானங்களின் தாக்கம் இல்லாமையாலே அவர்கள் மரபான விஷயங்களில் இருந்து விலகிவிடுகின்றனர். பெயர்தி அல்லது பெயரர்க்களின் காதலுக்கு பெரும்பாலும் பாட்டியின் ஆதரவு இருக்கும் என்பது கண்கூடு. காதலுக்கு ஆதரவு இது புரிந்து கொள்ளக்கூடிய அல்ல இது சமுகத்திறகு பதில் சொல்லவேண்டிய பொறுப்பில்லாமயாலே

உடல்சார் நலனுக்கும் நவீன மருத்துவமும் சிலரின் ஜீவனை காபாற்றிக் கொடுத்தாலும்,பல நடுத்தர வயது மற்றும் நடுத்தர வர்ககத்தின் பிராணனை வாங்கிவிடுகிறது.நவீன மருத்துவம் வரமா? சாபமா? 

நவீனத்துவம் உலகியல் வாழ்வை மறுமதிப்பீடு செய்ய வைத்துள்ளது மரபான விஷயங்களில் சிக்குண்டவர்களுக்கு அது நரகத்தையே பரிசளிக்கிறது.அதை உதாசீனமாக கருதுகையில் தன் நரகத்தை தாங்களே சிருஷடக்கத் தொடங்குகிறார்கள்.

அவர்களின் நரகம் மிக பிரம்மாண்டமானது அதை உருவாக்கி எடுக்க தனி மனிதர் உழைப்பு போதுமானவை அல்ல. சிலர் உதவிக்கு வருகிறார்கள்.

அவர்களின் மாயக்காயங்களுக்கு மருந்திடுகிறார்கள், மற்றும் அதை நக்கிக்கொடுப்பதின் வழியே அதை ஆற்றாது பெருகவைக்கிறார்கள் 

யாருக்கு எதிர்வினையாக இதை முன்னெடுக்கின்றனரோ அவர்களுடன்   நேரிடையாக தொடர்பு கொள்ளும் நிமிடம் அந்நரகத்திற்கு வாசல் திறக்கப்டுகிறது. அவர்கள் செய்வது என்வென்று அறியாது அதில் தன் அம்மாவை தள்ளுகிறார்கள்.



.

.

.