https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 7 ஜூலை, 2019

அடையாளமாதல் - 448 *இருப்பும் அனுபவமும் *


ஶ்ரீ:



அடையாளமாதல் - 448

பதிவு : 448 / 625 / தேதி 07 ஜூலை  2019

*இருப்பும் அனுபவமும்  * 


எழுச்சியின் விலை ” - 50
முரண்களின் தொகை -03 .




பிடிவாதமாக என்னை ஏன் கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார் என விளங்கவில்லை .கட்சி அலுவலர் ,மூத்த நிர்வாகிகள் என பலரும் இருக்கையில் நான் ஏன்? என்பிற கேள்விக்கும் அவரிடம் பதிலில்லை .ஒரு ஆளுமையின் வீழ்ச்சியை அருகிலிருந்து பார்க்கும் துர்பாக்கியம் எனக்கு என நினைக்கிறேன் . நாங்கள் இருவரும் AV சுப்ரமணியத்தின் அலுவலக அறைக்குள் நுழையும்போது அவரை சூழ்ந்திருந்த அவரது அனுக்கர்களை கொண்டு , அவரது  பாதையையும் , அதை ஒட்டி நடக்க இருப்பதையும் முற்றாகக் கணக்கிட முடிந்தது. இழந்து போன எனது கனவுகள் குறித்து மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தேன்.இனி அதற்கான வாய்ப்புகள் தூர்ந்து போயிருந்தன .அமைப்பின் மேலிருந்து கீழ் நோக்கிய பாதையின் விடுபடல்கள் இனி ஒருபோதும் இணைக்கப்படப் போவதில்லை .இனி எனக்கான களம் அங்கு இல்லை .

வாழ்வின் அல்லது முயற்சியின் முடிவு எப்போதும் வெறுமையை தரக்கூடியவை என அறிந்திருந்தேன். காலமெனும் சரடில் கோர்க்கப்பட்ட ஒங்வொன்றும் தனக்கான அர்த்தத்தை பெறுகிறது என்கிற எண்ணம் எவ்வளவு பொருளற்ற வாதம்  .தனது முயற்சி நடைபெறாது போனால் ஏற்படும் விளவுகளை எண்ணியே அது எவரையும் உறங்கவிடாது அந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வைக்கிறது . ஆனால் மரணம் மற்றும் எண்ணியிராத மாற்றம் போன்றவை அந்த அடுக்கை கலைத்து போடும் போது , உலகின் போக்கு நின்றுவிடுவதில்லை.அந்த முயற்சிகள் வெல்லப்டாமலேயே மறுநாள் விடியலை அது அடைகிறது

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அனைத்தையும் முடித்து அங்கிருந்து தலைவருடன் வீடு திரும்பிய உடனே நான் அஙகிருந்து வெளியற விழைந்தேன் .அந்த சூழல் பெரும் ஒவ்வாமையை எனக்குள் ஏற்படுத்தி இருந்தது. தலைவர் மீது என்கிருந்து அனுக்கம் அவர் வகித்த பதவி குறித்ததல்ல . அது ஆளுமையினால் என்னை வெற்றி கொண்டது. அதற்கு பதவி ஒரு பொருட்டல்ல .அரசியல் குறித்த எனது புரிதலுக்கும் , கற்றலுக்கும் அவரைவிட சிறந்த ஆசிரியர் எனக்கு கிடைக்கப்போவதில்லை .இன்றும் அவரைப்பற்றிய எனது எண்ணம் அதுவாக இருப்பினும், இறுதிக் காலம் அவரது அரசியல் சான்றாமைக்கு அணி சேர்ப்தாக இல்லை.என்பது வேதனையானதுதிறமை , பொறை , அனுபவ அறிவு போன்றவை எல்லாம் நரம்பின் முடுக்கினால் நிகழ்வபவை போல .வயோதிகத்தால் அதை இழக்கும் ஒருவர்  இந்த அத்தனையும் இழந்துவிடுகிறார் என்பதை தவிற அவர்களது பிறழ்வுகளை நியாயப்படுத்தி விட இயலாது என நினைக்கிறேன்.

ஒருவர் பதவியில் நீடிப்பதும் , வீழ்வதும்  கலத்தை பொருத்து நிகழ்வது .ஒரு ஆளுமை அது குறித்து வருந்த எந்த காரணியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை . தலைவரை எனக்கு நான் அப்படித்தான் அறிமுகப்படுத்தி இருந்தேன் . காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து திரும்பிய பின்னர் அவரிடம்  உருவாகி இருந்தது இழத்தல் என்கிற வலி , நான் அவரிடம் அதுவரை நோக்காதது . அவருக்கு ஏற்பட்டிருந்த   தனது இருத்தல் குறித்த வெறுமை உணர்வு எனக்கு அந்த ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கவேண்டும் . எவ்வளவு கட்டுப்படுத்தியும் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணங்களை மட்டுறுத்த இயலவில்லை .என் அருகில் இருப்பவர் கொஞ்சம் கவனித்தால் கேட்டுவிட இயலும் என நான் அச்சமுறும் வகையில் என் எண்ணங்கள் , குமுறலாக என்னுள் ஓங்கி எழுந்து வெளியே வழிந்து கொண்டிருந்தது .

என்னுள்,  ஏன் ? என்கிற ஒன்று அனுவாகத் தோன்றி பேருருவமாக எழுந்து கொண்டிருந்தது , அவைகளுக்கு வழக்கம் போல யாரிடமிருந்தும் , விளக்கமோ, ஆறுதலோ எனக்குக் கிடைக்கப் போவதில்லை . நான் எனது கட்டுறத்தும் முறையில் என் கோட்பாடுகளையும் , கருதுகோள்களையும் அதன்மீது வாரி இட்டு நிறப்பி அதன் குரலை தூரத்தில் எங்கோ ஒலிப்பது போல செய்து விட வேண்டும் .ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அதன் ஓலத்தை என்னால் பொறுக்க இயலவில்லை.

எனது பேச்சு குறைபாட்டினால் எனது எண்ணங்களை, விமர்சனங்களை ,  உடனுக்குடன்  மனதில் தோன்றிய கணம் வெளிப்படுத்த  இயலுவதில்லை .சொல்லாத சொற்கள் மடியேறியப் பால் என உள்ளம் கணத்துக்கிடக்கையில் , அதை வெளியேற்றாது , நான் அமைதி கொள்ள முடியாது. எனக்குள் தர்கித்துக் கொள்வதை தவிற அதிலிருந்து வெளியேற பிற வழியற்ற நிலையில் .ஏதாவதொரு நிலைபாட்டை பற்றி அதிலிருந்து வெளியேற முயன்றபடி இருப்பேன்.

எந்த நிகழ்வும் எனக்குள் இரண்டு நிலையை எடுத்துக் கொண்டு எப்போதும் ஒன்றை ஒன்று இடித்து தனது கருத்தை நிலைநிறுத்த முயன்ற படி இருப்பதும் , நடுநிலையான பிறிதொன்று அவற்றை கடந்து செல்வதும் எனக்குள் எப்போதும் நிகழ்வது .எல்லா நிகழ்வுகளிலும் எனக்கான குரலை கண்டெடுத்து அதை வெளியிட நான் எப்போதும் தயங்கியதில்லை .ஆனால் அதற்கான களத்தில் அவற்றை வெளியிட இயலாது போகும் போது எனக்கான கொந்தளிக்கும் ஒன்றும் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்அனைவருக்குள்ளும் நிகழும் பொதுவான ஒன்றுதான்.பிறர் அதை வெளிப் படுத் தயங்குவதில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் அது தவறாகிப் போகும் போது அதை பெரிது படுத்துவதில்லை அல்லது அப்படி ஒரு கருத்து தனக்கிருந்ததாக அவர்கள் நினைவற்றவர்கள் போல நடந்து கொள்வார்கள் .அது ஒரு இழிவு என நான் எப்போதும் நினைத்ததுண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...