https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 19 ஜூலை, 2019

அடையாளமாதல் - 452 *அடுக்குகள் *

ஶ்ரீ:



அடையாளமாதல் - 452

பதிவு : 452 / 629 / தேதி 19 ஜூலை  2019

* நிகழ்வுகளின் அடுக்கு 


எழுச்சியின் விலை ” - 54
முரண்களின் தொகை -03 .





அவர் எள்ளுடன் சொன்ன நிகழ்வுகளும் ,அவற்றிலிருந்து எழுந்த பின்விளைவுகளுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டி இருக்கும் என்கிற எனது கோணத்தால் சீண்டப்பட்டார். உரையாடல் என்பது முற்றி விவாத நிலையை தொட்டது .அவர் விமர்சித்த  அனைத்து வித சிக்கல்களின் பின்புலத்தில் இருந்தது அவரின் நோக்க அரசியலே என நான் முன்வைத்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் அவை அனைத்தையும்  கடந்த காலத்தில் அவர் எனக்கு கல்வியென கற்பித்தவைகள்

அரசியலில் எல்லா சம்பவங்கள் வெறும் நிகழ்வுகளாக மேகங்களை போல கடந்து சென்றுவிடுவதில்லை .யார் எதை எவரின் பொருட்டு இயற்றினாலும் , அதன் பலனெனும் மறுமுணை என்றோ எங்கோ தன்னை ஒரு நாள் வந்து தொடும் என்கிற விழைவு அதன் பிண்ணனியில் இருந்து கொண்டிருக்கும் .எல்லா நிகழ்வுகளும் விதைகளைப் போல மண்ணில் விழுந்து எங்கோ முளைக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருப்பவை போல  .அது வளர்கையில் யாருக்கு என்ன கொண்டு கொடுக்கும் என காலத்தை கணக்கிட்டு அது யாருக்கு எவ்வகையிலான முகத்தை கொண்டிருக்கும் என எவரும் கணித்துவிட இயலாது.அது காலத்தைப் பொறுத்து அரசியலின் விசை மாற்றம் பெற்றிருக்கும் .

ஒரே விதை ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு நல்ல மற்றும் கெடு  பலன்களை ஒருவருக்கே கொடுத்துக் கொண்டிருப்பதை வியப்புடன் பார்த்திருக்கிறேன் . அவர் முன்வைத்த அந்த நிகழ்வுகள் குறித்து அதை இயற்றிய அவரின்  நோக்கத்தை அவரது வாய்மொழியாக அறிந்து கொண்டதுதான். ஆனால் அதை இப்போது அவருக்கே பிறிதொரு கோணத்தில் திரும்பிச் சொன்னதால் வாயடைத்துப் போனார் . மிக எளிதில் அதிலிருந்து மீண்டு , என்னிடம்  , நீ வென்றாய்” என்றார்  . நான் திகைத்திருக்க எல்லா நிகழ்வுகளையும் வெவ்வேறு கோணத்தில் முன்வைப்பது ஆசாத்தியமான திறமைதான் என சிரித்த படி , என்ன ஶ்ரீகாந்த் என சொன்னபோது தான் எனக்கு பின்னால் ஶ்ரீகாந்த் அமர்ந்திருப்பது தெரிந்து கொண்டேன்.இதோ எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் சாட்சியாக சொல்கிறேன் நீ இந்த அரசியலை நான் எதிர் பார்ததபடி மாற்றுவாய் , என்ஆசி உனக்கு எப்போதும் என்றார்.

நான் மேலும் விசையுடன் பேச விரும்பினேன் , ஆனால் எதையும் சொல்லாமல் அமைதியடைந்தேன், காரணம் நான் பேசியவைகளுக்கு சாட்சியாக புதுவையின் காவல்துறை நுண்பிறிவு மூத்த கண்கானிப்பாளர் ஶ்ரீகாந்த் எனக்கு பின்னால் இருந்ததை மிக தாமதமாக உணர்ந்தேன். தலைவருக்கும் எனக்கும் நிகழ்ந்தது உரையாடல் நான் எதிர்நோக்காதது.அவருக்கு எதையும் புரியவைக்க வேண்டிய நிலையில் அவர் இல்லை என்பதை விட எனக்கான வேலை அதுவல்ல . நான் அவருக்குறிய மரியாதையை கொடுக்க விரும்புபவன்.என்னை விவாதத்திற்குள் கொண்டு வந்தது சேர்த்தது அவர்.

நான் அவரையும் அவரது அரசியலையும் விமர்சிப்பவன் அல்லன் .அவர் எனது அரசியல் குரு. பிறருக்கு இருண்டதான, புரிந்து கொள்ளவே முடியாத அரசியலின்  பாதையை தனது அனுபவ அறிவெனும் ஒலியால் எனக்கு திறந்து கொடுத்து அதை  துலங்கச் செய்துவர் .பல திறமையுள்ளவர்கள் தோற்ற களத்தை எனக்கு அது ஒன்றுமில்லை” என ஆக்கியவர். இன்று எதிர்நோக்காது தாக்கப்படுகிற போது நிலைகுலைவு அனைவருக்கும் நிகழ்வது .விவாதத்தில் அவரது துல்லிய தாக்குதல்களை பார்த்தவன் இன்று அவரது வயோதிகம் அதை மறைக்க செய்யாது வார்த்தைகளாக வெளியாகிவிடுவது நிகழ்ந்திருக்கிறது.  (இதுபற்றி வரிவான பதிவு பிறிதொன்றில்)

அவருக்கு தொலைபேசி வந்திருப்பதாக அவரது உதவியாளர் சொல்ல அவர் எழுந்து உள்ளே சென்றார் .நான் அமைதியாக அமர்ந்திருக்க ஶ்ரீகாந்த் எழுந்து வந்து என் கை குலுக்கி நல்ல விவாதம்” என்றார் .அவர்தான் என்னை பேச வைத்தார்”   என்றேன் .

உள்ளிருந்து வெளியே வந்த தலைவர் தனது இருக்கையில் அமர்ந்தவுடன், தான் விட்ட இடத்திலிருந்து மறுபடியும் தனது புதிய கோணத்தை முன் வைக்க துவங்கினார் .நான் அதை மேற்கொண்டு வளர்க்க விரும்பவில்லை .அவரிடம் தலைவரே நான் இதை மேற்கொண்டு விவாதிக்க விரும்பவில்லை உங்களை வாதத்தில் வெல்வது எளிதல்ல என அறிந்தவன் நான்.என்ன காரணத்தினாலோ நான் வென்றதாக சொல்லிவிட்டீர்கள். இப்போது மீளவும் உங்களை தொகுத்துக் கொண்டு உங்கள் தாக்குதலை தொடங்கி நீங்கள் எனக்கு கொடுத்ததை இல்லையென மாற்றிக்காட்டுவீர்கள் என எனக்கு தெரியும். நான் பெற்றது உங்கள் சொல் , அதை இழக்க விரும்பவில்லை” என சொல்லி விடை பெற எழுந்ததும் , ஒரு அட்டகாச வெடிச் சிரிப்புடன் எனக்கு விடை கொடுத்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்