https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 23 ஜூலை, 2019

அடையாளமாதல் - 453 * நிர்வாகம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 453

பதிவு : 453 / 631 / தேதி 23 ஜூலை  2019

நிர்வாகம்  * 


எழுச்சியின் விலை ” - 55
முரண்களின் தொகை -03 .




காவல்துறை உயரதிகாரி ஶ்ரீகாந்த் தலைவருக்கு மிக அனுக்கமானவர் . தலைவரின் ஆதரவாளர் எனவும் சொல்லலாம் .அரசு மற்றுமல்ல அரசியல் தலைமையும் காவல்துறை நுண்பிரிவும் விலக்க முடியாத கூட்டணியைக் கொண்டது   . ஆளும்  அமைப்பின் உறுப்பினர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க மற்றும் அமைப்பை சிக்கலின்றி நிர்வகிக்க அது இன்றியமையாதது .தலைவர் அதை ஆரோக்கியமான வழிகளில் நிர்வகித்தார் என்றே நினைக்கிறேன்  .உட்கட்சி மட்டுமின்றி பிற கட்சி தலைவர்களும் சண்முகத்தை அஞ்சியதற்கு காரணம் அனைவரைப் பற்றியும் அவர் வைத்திருந்த நுண் தகவல்கள் .

சாதரான உரையாடலை விவாத எல்லைக்கு தள்ளி கொண்டு வந்தவர் தலைவர் என்றாலும் ஶ்ரீகாந்த் முன்பாக அவரிடம்  அவருடைய அனைத்து முறைமைகளை கடந்து விவாதிப்பது எனக்கு பெருமை தருவாதாக இருக்கலாம் , ஆனால் அவருக்கும் எனக்குமான உறவிற்கு அது  உகந்ததல்ல என்பதால் நான் எனது விவாதத்தை முடித்து கொண்டேன் .

ஶ்ரீகாந்த் எனக்கு தலைவர் வீட்டில் பழக்கமானார் என்றாலும் தலைவர் வீட்டில் அவரை  சந்திக்கும் போது ஒரு சொல் இல்லாது இருவரும் ஒருவரை ஒருவர் புண்ணகையுடன் கடந்து சென்று விடுவோம். அவர் எனது நல்ல அனுக்க நண்பரானது தில்லியில்தில்லியில் உள்ள புதுவை விருந்தினர் இல்லத்தில் அப்போது அவர் தங்கி இருந்தார் . தில்லி சென்றிருந்த போது இருவரும் எதிர்பாரது சந்தித்துக் கொண்டோம். அவரிடம் ஓரிரு வார்த்தை பேசியது அப்போதுதான் . பின்னர் தில்லி செல்லும் போதெல்லாம் அவருடன் மாலை நடை ஒரு அலுவல் போலானது.

பொதுவாக அரசாங்க உயர் பதவிகளில் உள்ளவர்களிடம் பழக சில காரணத்தினால் நான் மன விலக்கம் கொண்டிருந்தேன். பெரும்பாலும் அவர்கள் தங்களைப் பற்றி மிகை மதிப்பு கொண்டிருப்பார்கள், அதனாலேயே  எல்லாவிடத்திலும் புண்படுவார்கள் .அதை ஆற்றிக்கொள்ள கிடைப்பவர்களிடம் எல்லாம் தலைகணத்துடன் நடந்து கொண்டு மேலும் இழிவை சம்பாதித்துக் கொள்வார்கள் .

அதிகாரிகளின் அரசு நிர்வாகமென்பது ஒருவித அரசியலை முழுமையாகக் கொண்டது .முதல்வர்கள் மாறும் போதெல்லாம் அரசு உயரதிகாரிகள் இடமாற்றம் பெறுவார்கள் .அத்தகைய அதிகாரிகளில் செல்வாக்குள்ளவர் நிர்வாக வசதிக்காக தனக்கென ஒரு அதிகாரிகளின் நிரையை உருவாக்கிக் கொள்வார் .அந்த நிரைகளில் இடம்பெறுபவர்கள் மட்டுமே அதிகாரத்தின் அருகே சென்று அமர இயலும் . முடிவுகளை ஒருபோதும் அவர்கள் எடுப்பதில்லை என்றாலும் ,முக்கிய முடிவெடுக்கும் இடத்தில் அவர்களே திரும்ப திரும்ப நியமிக்கப்பட்டு வெகு விரைவில் பலர் கனவிலும் எண்ணாத உயரத்தில் சென்று நிலை கொள்வார்கள்

அவர்களின் விசுவாசமே தகுதி என இருக்கும் .அவர்கள் தனிப்பட்ட அடையாளமோ, திறமையோ ஏதுமின்றி , இட்டதை ஆற்றுபவர்கள் மட்டுமே. அவர்களுக்கான மதிப்பை தனது அலுவலகத்திலோ , தன்னை உருவாக்கியவர்கள் மத்தியிலோ ஒரு நாளும் பெறுவதில்லை. அது ஒருவித அடிமை அமைப்பு .யதார்தத உலகில் அவர்கள் ஒரு நாளும் பொருந்தி இருப்பதில்லை .சுய சிந்தனை அற்றவர்களாக இருப்பர் . ஒரு சிலர்  தனது துறையில் சூரர்களாக இருந்தலும் , அதை கடந்து பொது வாழ்கையில் ஏதும் அறியதவர்களகவே இருப்பர் .திரைபடம் , மலிவான நகைச்சுவைகளை கடந்து வேறு எதைப் பற்றியும் அவர்களிடம் உரையாட இயலாது .

மிகச் சிலரே ஆளுமைகளாக இருப்பதை பார்த்திருக்கிறேன் . அவர்கள் தனக்கென சிறு வட்டத்தை உருவாக்கி தனித்திருப்பார்கள் .யாருடனும் எளிதில் பழகாதவர்கள்.அரசு நிர்வாக அதிகாரிகளுக்கு இருப்பதை விட பலமடங்கு வீங்கியது காவல்துறை உயரதிகாரிகள் தங்கள் மீது கொண்டிருக்கும் தன்மதிப்பு.அவர்களிடம் மரியாதை நிமித்தமாக கூட பழக முடியது . அது யாரையும் புண்பட செய்வது என அறிந்திருக்கிறேன் .விதி விலக்கு எங்கும் உள்ளதே . ஶ்ரீகாந்த் அந்த விதிவிலக்கு ரகம்

முதல் உரையாடலின் போதே அவர் பிறரிடமிருந்து மாறுபட்டிருப்பதை  அறிய முடிந்தது .பலநுண் தகவல்களை தெரிந்து வைத்திருப்பதுடன் அவற்றை பற்றிய தனிப்பட்ட கருத்தும் கொண்டவர் .நல்ல வாசிப்பு பழக்கமுள்ளவர் .அதன் பிறகு தில்லிக்கு செல்லும் போதெல்லாம் நானும் அவருமாக மணிகணக்கில் பல விஷயங்களை குறித்து உரையாடி இருக்கிறேன்

பொதுவான தளத்தில் அவை இருக்கும் .அவசியமிருப்பின் புதுவை மற்றும் அகில இந்திய கங்கிரஸ் அரசியலை குறித்ததாகவும் அவை இருக்கும்  .அவைகளுக்கு இடையே தான் கற்ற விஷயங்களை மேற்கோளிட்டு பேசுதல் பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள இயன்றது . புதுவை அரசியல் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் அவருக்கிருந்தது. தொடர்ச்சியாக அதை என்னிடம் விவாதித்ததில் . எனது கருத்துகளை ஏற்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். இருவரும் எவ்வித மனச்சாய்வும் இன்றி உரையாடியதற்கு நல்ல நட்பாக இருந்ததற்கு அது முழு காரணமாக இருந்திருக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக