https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 9 ஜூலை, 2019

அடையாளமாதல் - 449 *முயற்சியின் அயற்சி *


ஶ்ரீ:



அடையாளமாதல் - 449

பதிவு : 449 / 626 / தேதி 09 ஜூன்  2019

*முயற்சியின் அயற்சி 


எழுச்சியின் விலை ” - 51
முரண்களின் தொகை -03 .




தனியனாகாமல் தன்னறம் பேண இயலாது” என்பது வெண்முரசின் , தீயின் எடையில் ஒரு சொல்லாட்சி . எவ்வளவு  நிதர்சணமானது அது .நான் தன்னறமென என்னை நிலைகொள்ளச் செய்யும் செய்கை என்னை மேலும் மேலும் தனியனாக்கியது.தனியன் என்பது கணம்தோறும் சமூகத்திலிருந்து விலகிச் சொல்லுவது , ஆனால் சமூகத்தின் மீதான வெறுப்பினால் அல்ல .அதன் செய்படு விதம் குறித்த புரிதலிலினால் .

விலகல் மனப்பான்மையினால் நிகழுவிருக்கும் அனைத்தையும் எதிர் கொள்ளும் மனநிலைக்கு வந்த பிறகே எனது விலகலை துவங்கியிருக்கிறேன்.அதன்பின் ஒருபோதும் அந்த தருணத்தை நினைவுகூராது அதை கடந்து சென்றிருக்கிறேன் .உரிய தயாரிப்பு இல்லமால் அதில் நுழைவது  , கழிவிரக்கம் கொள்ள வைப்பது என்றும் ,  கழிவரக்கம் தற்கொலையிலும் கீழானது எனவும் அறிந்திருக்கிறேன். இதுநாள் வரை எனது தனிமையை நொந்ததில்லை . மாறாக அங்கிருந்து கொண்டு உலகியலின் யதார்த்தை கற்கவே விரும்பி இருக்கிறேன்..

நான் முன்னெடுத்த எந்த செயலிலும் , அது எந்தத் துறையாக இருந்தாலும் எடுத்த முயற்சியில் வென்றிருக்கிறேன்.அதை தக்கவைத்துக் கொள்ள இயன்றதில்லை .தக்கவைத்தல் பிறருடனான சமரசபுள்ளிகளினால் ஆனது .எப்புதிய முயற்சிகளும் , அதற்கான உச்சங்களும்,கூட்டு முயற்சியால் நிகழ்வது .அதில் இணைந்து பணியாற்றியவருடன் எப்போதும் ஒத்திசைய இயலுவதில்லை என்பது என் ஊழ்.

புதிய முயற்சியை துவங்க அவநம்பிக்கை கொள்வது அனைவருக்கும்  ஒரு தடை .அந்த தடைகளை கலைந்து கொடுப்பதனால் உருவாகும் தலைமைக்கான இடமே எனக்கானதாக எப்போதும் இருந்திருக்கிறது . பலனில் விருப்முடையவர்களுக்கு கிடைத்து போதுமானதாகிறது. அதிலேயே உழல விரும்புகிறார்கள். வெற்றிகள் தேங்கி விடுவதற்கன்று .தேங்கி நிற்பது எப்போதும் வீழ்ச்சியை நோக்கியது என்பதால் , அங்கிருந்து புதிய முயற்சிகள் தேவையாகிறது .கிடத்தது  போதுமானதாக இருந்து விடுவதால் அடுத்த நிலை வெற்றிக்கான முயற்சி குறித்து வழமையான அவநம்பிக்கை கொள்வதும்  , அம்முயற்சியில் ஈடுபடுபவர் மீது அவர்கள்  ஒவ்வாமை அடைவதும் புரிந்து கொள்ளக் கூடியதே

மேலதிக முயற்சிகள் கிடைத்தை குலைப்பதாக புரிந்து கொள்கிறார்கள் .அங்கிருந்து மேல்நோக்கி செல்ல முயற்சிக்கையில் பதட்டத்தை அடைகிறார்கள்.அவர்களுக்கு கிடைத்ததை தக்கவைத்துக் கொள்வது போதுமானதாக  தோன்றிவிடுகிறது.இருப்பதை தொடர்வதற்கு தலைமையென ஒன்று தேவையில்லை.எம்முயற்சியும் உருவாகி வந்த பின் அதை எவராலும் தொடர்ந்து நடத்தி செல்வது எளிதில் இயலுவதாக தோன்றிவிடுவதால் எனக்கான இடம் அங்கு இல்லாமலகிறது .

முரண் உருவாகி வந்த பிறகு அவர்கள் மத்தியில் இருந்து கொண்டிருப்பது வேறுபாட்டை கசப்பென வளர்ப்பது .ஒரு அமைப்பில்  அனைத்தையும் புரியவைத்து  ஒன்றை நடத்திச் செல்லுதல் எப்போதும் சாத்தியமன்று. காரணம் கூட்டு முயற்சி சமூகத்தின் வெவ்வேறு பிரிவிலிருந்து வந்து இணைபவர்களுடன் அவரவர் வாழ்வியல் பெற்ற புரிதலை  பொறுத்து சாத்தியமாகிறது . ஏதோ ஒரு கணத்தில் அவர்கள் வேறுபடுகிற போது அங்கிருந்து தனியனாக விலகியிருக்கிறேன். அந்தப் புள்ளி உலகியல் என்கிற சாதாரண அரசியல் சரிநிலைகளாக இருந்திருக்கின்றன. அத்துடன் எப்போதும் ஒவ்வாமையையே அடைந்திருக்கிறேன்.

ஒரு விஷயத்தில் இரட்டை நிலை எடுப்பது என்பது என் ஸ்வதரமத்திற்கு எதிரானது , அது என்னை எப்போதும் நிலையழிச் செய்துவிடும் . ஸ்வதர்மத்தில் நிற்றலே நிகர்நிலை பேண வைக்கும் ஒரு ஆற்றலாக புரிந்திருக்கிறேன்  .நான் இவ்வாறு வடிவமைக்கப்பட்டதிற்கு எனது பிறவி பேச்சுக் குறைபாடு முக்கிய காரணியாக இருந்திருக்க வேண்டும் . எனக்குள் எழும் கருத்துகள்களை சொல்ல இயலாமை என்கிற இடத்தை அடைந்து நான் வெளியேறுகிற போது ,என்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள பல கோட்பாடுகளை வாரி அதன் மீது அடுக்கி என் விடுதலையை அடைந்திருக்கிறேன். அத்துடன் அவற்றை பேணியாக வேண்டிய நிர்பந்தத்தில்  எப்போதும் இருந்து கொண்டிருக்கிறேன் .

நிகர்நிலை பேணுதல் என்பது பல சமயங்களில் ஒரு விஷயத்தில் அதுவரை கொண்டிருந்து மதிப்பீடுகளை மறுவரையறை செய்வது .புரிதல் நிகழ்வது இந்தப் புள்ளியில் என நினைக்கிறேன்  .அது உடலின் பகுதியை வெட்டிக் கழிப்பது . வலிமிகுந்தது.சமாதனத்தினால் ஏற்படும் கசப்பை விட விலகி நிற்பது எனக்கு உகந்ததாக எப்போதும் இருந்திருக்கிறது. அதுவே என்னை தனியனாக்கியது

கசப்பையும், வெறுப்பையும் என்னால் நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடியாது .அனைத்தும் வருத்தமாக மட்டுமே என்னிடம் எஞ்சக்கூடியது .நீண்ட வருத்தம் ஒரு ரணம் . அதை நீடிக்க விடுவதில்லை . ஏதாவதொரு மன சமாதனத்தை நிறுவி என்ன மீட்டெடுத்துக் கொள்வது எனது வழிமுறையாக எப்போதும் இருந்திருக்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்