https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 7 ஜனவரி, 2020

அடையாளமாதல் - 510 * தடைகளால் வெற்றி *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 510

பதிவு : 510  / 696 / தேதி 07 ஜனவரி  2020

* தடைகளால் வெற்றி 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 24



குபேர் தனது ஆதர்வாளர்களை திமுக வில் இணைத்து 1969 தேர்தலில் காங்கிரஸ் தோற்கவும் திமுக ஒரு அரசியல் அமைப்பாக உருவாகவும்  காரணமானார் . புதுவை அரசியலில் புது அத்தியாயம் துவக்கி வைத்ததின் மூலம் தனது கோபத்தை நிறைவேற்றிக் கொண்டார். இது அவரது இரண்டாவதும் முடிவானதுமான அரசியல் பிறழ்வு  .அதன் விளைவாக திமுக அரசில் மரைகார் முதலவராக பொறுப்பேற்றார் . அதைத் தொடர்ந்து குபேர்  திமுக வில் பின்னர் இணைந்த போது அவரால் உருவாக்கப்பட்ட அவரது ஆதரவாளர்கள் அவருக்கு சாதகமற்ற தூரத்தை சென்றடைந்திருந்தார்கள் . குபேருக்கு அது பெரும் மன அழுத்தத்தை கொடுத்திருக்க வேண்டும்  . 

அரசியலின் கருணையற்ற விளையாட்டில்  அவர் களைப்படைந்திருந்தார் .அரசியலில் தனது ஆதரவாளர்களின் நல்லுறவு  அரசு அமைந்த பிறகும் நீடிக்கும் என்கிற அவரது பிழை கணக்கு முடிவிற்கு வந்தபோது அவர் அரசியலில் இருந்து முற்றாக வெளியேறி இருந்தார் .அதன் பிறகு அந்த இடத்தில் மரைகார் வந்தமர்ந்தார்.நிதானமான அரசியல் நகர்விற்கும் இனிமையான உரையாடலுக்கு  புகழ் பெற்ற மரைகார் அதிகார அரசியலில் தமிழக முதல்வர் MG.ராமசந்திரன் போல ஏறிய படிகளில் இறங்காது பல உயரங்களை அடைந்து , அரசியலில்  நிறைந்து வாழ்ந்து மண்மறைந்தார்.

மரைகாரின் வெற்றிக்கு நிகழ் அரசியல் குறித்த கருத்துக்களுக்கு அவரது ஆசாத்திய புரிதல் காரணம் இருந்திருக்க வேண்டும்  .அவருக்கு தான் எப்போது தேர்தலில் போட்டியிடுவது எப்போது விலகி நிற்பது என்கிற கறாரான அதே சமயம் தெளிவான உளப்புரிதல் இருந்தது .அது அவரை அரசியல் ரீதியில் ஒருபோதும் தோல்வியை சந்திக்காத வெற்றியாளராக்கியது .1963 ல் தனது தேர்தல் அரசியல் வாழ்கையை துவக்கி 1965 ல் முதல்வராக தேர்வாகி பின்னர் 1969 ல் திமுக அரசில் முதல்வராகி , 1974 ல் அதன் இரண்டே திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரானார் .

பின்னர் புதுவை அரசியல் நிலையின்மை காரணமாக 1977 ல் தேர்தலில் போட்டியிடவில்லை . அவர் தனது தொகுதியான லாஸ்பேட்டையை தனக்கான தேர்தல் களமாக வெற்றிகரமாக வளர்த்தெடுத்திருந்தார் . அதில் 1977 ல் போட்டியிருந்தால் அவர் வென்றிருக்கவே வாய்ப்புகள் அதிகம் . இருந்தும் அரசியல் நிலையின்மை , திமுக வின் பிளவு போன்றவை அல்லது தேர்தல் வெற்றிக்கு பின்னர்  தனக்கான இடம் என்ன என்பதைக் குறித்த கேள்விகள் அவருக்கு  தனது எதிர்காலாம் குறித்து அதானிப்பு  நிழலானதாக இருந்திருக்க  வேண்டும் . அவர் அரசியலில் எப்போதும் தேவையற்ற இடர்களுக்கு இடம் கொடுக்காதவர் .1980 ல் காங்கிரஸில் மீண்டும் இணைந்து தேர்தலில் வென்று அதிமுக ஆட்சி கவிழ காரணமாக இருந்தார் என அவரது அரசியல் வரலாறு மிக நெடியது

சர்வ வல்லமையாக இருந்த சண்முகத்தின் தலைமையின் கீழே அரசியல் செய்ய இயலாமல் குபேருடன் வெளியேறிய மரைகார் , திமுக , அதிமுக என பிளவுபட்ட பிறகு அது தனது அரசியல் வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் வல்லமையை சந்தேகித்தார் . அவரது அரசியல் கணக்கு உண்மையாகி 1974 மற்றும் 1977 தேர்தல்களில்  புதுவையில் திமுக பெரும் பின்னடைவை சந்தித்தது .பின்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 1980 ல் திமுகாவால் மீள இயன்றது  .

திமுக பிளவுபடுத்து அதிமுக வளர்ந்த போது அதன் தாக்கம் தழிகம் மட்டுமின்றி புதுவையிலும் உருவானது .திமுக விற்கு தன்னை நிலைபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் .இரண்டு திராவிட கட்சிகளின் பரிப்பியல் பிரசாரத்திற்கு முன்பாக எந்த அரசியல் அமைப்பும் நிலைகொள்ளாது என்பதே எப்போதைக்குமான உண்மை நிலவரம் . அதில் தமிழக காங்கிரஸ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இன்றளவும் மீளவில்லை என்பதே சரித்திரம் . தமிழகத்தில் ஆட்சியேறிய அதிமுக , மறைந்த MG. ராமசந்திரன் இருந்தவரை அவரை வெற்றி கொள்ளும் வாய்ப்பு திமுக விற்கு கிடைக்காது போனது .

தமிழக அரசியலின் பாதிப்பு புதுவையிலும் இருந்தது  .அதன் விளைவாக புதுவை அரசியலில் நிலையற்ற தன்மை உருவானது .1974 , 77 என இரண்டு முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றாலும் , கட்சி அமைப்பை வழிநடத்தி செல்லும் தலைமையின் செயல்பாடுகள் தெளிவான வழிகாட்டல் இல்லாமல் அதிமுக சிதற ஆரம்பித்தது.     1974 ல் ஒரு வருட காலமே அதனால் நீடிக்க இயன்றது . பின்னர் 1977 ல் மூன்று வாரம் மட்டுமே .அந்த காலகட்ட ஆட்சி கவிழ்ப்பிற்கு பின்னால் சண்முகம் இருந்தார் என்கிற அலர் அரசியலில் பிரபலமாக இருந்தது .அது சண்முகத்தின் அரசியல் ஆளுமையாக அனைவராலும் பார்க்கப்பட்டது விந்தையானது 

புதுவை அரசியலில் பலம்மிக்தாக கட்சி அமைப்பான காங்கிரஸ் 1974 ல் ஓரளவிற்கு தனது வெற்றியை தக்கவைத்துக் கொண்டாலும் , 1977 தேர்தலில் இரண்டே சட்டமன்ற உறுப்பினர்களுடன்   மோசமான பின்விளைவை சந்திக்க நேர்ந்த போதும் சண்முகம் தனது அரசியல் நகர்வுகள் வழியாக அமைப்பை குலையாமல் பார்த்துக் கொண்டது அமைப்பை மீட்டெடுக்க உதவியது .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...