https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

அடையாளமாதல் - 509 * இயக்கம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 509

பதிவு : 509  / 695 / தேதி 05 ஜனவரி  2020

இயக்கம் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 23



விடுதலைக்கு பின்னர்  புதுவை அரசில் பக்கிரிசாமி பிள்ளை தவிர  பிற அனைத்து தலைவர்களும்   குபேரின் கீழே இரண்டாம் நிலை பதவிகளை பெற முடிந்தது . விடுதலை போராட்டத்திற்கு எதிராக மக்களை ஒருங்கிணைக்க வெங்கிட சுப்பா ரெட்டியார் போன்றவர்களுக்கு பெரும் தடையாக இருந்த குபேர் காங்கிரஸ் அரசில் முதல்வராக வந்தது ஒரு வரலாற்று முரண் .அவற்றை களைந்து கொடுக்க முயன்ற சண்முகம் புதுவை அரசியலில் முக்கிய இடத்தை பெற காரணமாயிற்று .

புதுவையில் நேரு நினைத்ததை அவர் நினைத்த காலத்திற்குள்  செய்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் காமராஜருக்கு , அதனால்  காரைக்கால் பக்கிரிசாமி பிள்ளை காங்கிரஸ் அமைப்பில் இணைந்து கொண்டு காரைக்கால் பகுதியில் புதுவை இருந்து கொண்டு புதுவை விடுதலை  குறித்து  முடிவிற்கு காமராஜர் வந்திருக்கலாம் . புதுவை விடுதலைக்கு பிறகே சண்முகத்துக்கு காமராஜருடன் நெருக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். 

அப்போதைய புதுவை காங்கிரஸ் கட்சி அரசியலில் பெரும் வல்லமையோடு விளங்கிய எதுவார் குபேர் , வெங்கடசுப்ப ரெட்டியார் , முத்துப்பிள்ளை , காரைக்கால் பக்கிரிசாமி பிள்ளை , புதுவை கந்தசாமி பிள்ளை , ஜீவரத்தின உடையார் போன்றவர்கள் ,பெரும் பொருளியல் ஜாம்பவான்களாக இருந்தனர் . அவர்களுக்கு  மத்தியில் எளிய புரட்சிக்காரனாக தன்னை அனையாளப்படுத்திக் கொள்வதில் சண்முகத்திற்கு சிக்கலில்லாமல் இருந்திருக்கலாம் .அது அவருக்கான இடத்தை  லாபத்தை கொடுத்திருக்கக் கூடும்.ஆரம்ப காலத்தில் அது அவருக்கு கொடுத்த அரசியல் முகத்தை  எக்காலத்திற்குமாக  கொடுக்கவில்லை . அதுபற்றிய விரிவான பதிவு பிறிதொன்றில்

தில்லி அரசியல் களம் தலைவர்களின் தலைவர்களுக்கானது. அங்கு ஐந்தாம்படை செயல்கள் அங்கீகரிக்கப்பட்டவை . சண்முகம் நீண்ட காலம் நாராயணசாமியை சார்ந்திருப்பதில் புதுவை அரசியலில் லாபங்களை கண்டவர் , இனி அவரால் நிகழ இருக்கும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய காலம் வந்து சேர்ந்தது . அதை சண்முகம் தனது ஆழத்தில் முன்பே உணர்ந்திருக்க வேண்டும்  .ஆனால் அது மிக குறுகிய காலத்தில் நிகழும் எனக் கணக்கிடவில்லை . நாராயணசாமியுடன் முரண்பட்ட பிறகு சண்முகம் , 

தில்லியில் நாராயணசாமி இனித் தன்னை பிரதிநிதிபடுத்த மாட்டார்  என வெளிப்படையாக அவரால் சொல்ல முடியாது போயிருக்கலாம் . அதே சமயம் இனி  தில்லி நிர்வாகம் தன்னை மட்டுமே அனுகவேண்டும் என்கிற பொருள் பட பேசவும்  இயலாது  .மேலும் தான் உருவாக்கிய ஒருவரை பற்றி தன்னுடைய மேலிடத்தில் குறை சொல்வது தம்மையே பழித்துக் கொள்வதற்கு ஒப்பு என நினைக்கக் கூடியவர் . அதனால் அவர் தயங்கியிருக்கலாம் . அவரின் இந்த மனப்பான்மை அரசியலில் வளர்ந்துவிட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் . அரசியலில் துவக்க நிலையில் இது அவரது மனப்பான்மை அல்ல . 

புதுவை அரசியலில் அவர் பொருட்டு அனைத்தும் மாறியது போல அவரது இறுதிக்காலத்தில் எதுவும் மாற்றவில்லை. காங்கிரஸ் அல்லாத ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புதுவையை ஆண்டதில்லை என்பது வரலாறு . சண்முகம் அதற்கு முக்கிய காரணமாக இருந்தார் . சண்முகம் ஒரு ஜனநாயகவாதியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். ஆனால்  ஆட்சி நிர்வாகத்தில் பிற கட்சிகளை புதுவையை ஆள விட்டதில்லை .கட்சி ஜனநாயகத்தில் இதற்கு வேறு பொருள் போலும் .

1995 ல் திமுக தலைமையில் ஆட்சி அமைத்த போது சண்முகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து  கட்சி விலகி சென்றுவிட்டது . அதன் பிண்ணனி 1991 துவங்குகிறது . சண்துகத்தை முதல்வராக முன்மொழியப்பட்டு அது நிகழாது போனதில் இருந்து அது துவங்கியிருக்க வேண்டும். வைத்திலிங்கம் முதல்வராக வந்த போது கட்சி அமைப்பு சண்முகம் மற்றும் மரைகார் என இரண்டு தரப்பு மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது . குபேர் வீழ்ச்சியின் நீட்சி மரைகார் .

ஒருவகையில் அரசாங்கத்திற்கு தனது மாற்றாக மரைகார் குபேரால் முன்வைக்கப்பட்டார் .பின்னர் ஒரு புள்ளியில் அவர் 1964 தேர்தலில் கட்சி ரீதியில் சட்டமன்ற பலத்தை அடைய முயன்ற அனத்தும் அவருக்கு கை கொடுக்கவில்லை .மிக மெல்லிய பலத்துடன் அவர் முதல்வராக பொறுப்பேற்றார் .1969 தேர்தலில் கட்சியில் அவரது நிலை முற்றாக காணாமலாகி இருந்தது . தனது ஆதரவாளர்களை திமுக வில் இணையச் செய்து தனது கோபத்தை நிறைவேற்றிக் கொண்டார் . 1969 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்று புதுவை அரசியலில் புது அத்தியாயம் துவங்கியது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...