https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 11 ஜனவரி, 2020

அடையாளமாதல் - 511 *அமைப்புக் கட்டுமானம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 511

பதிவு : 511  / 697 / தேதி 11 ஜனவரி  2020

*அமைப்புக்  கட்டுமானம் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 25




மத்திய ஜனதா அரசாங்கத்தின் புதுவையை தமிழகத்தோடு இணைக்கும் முடிவில், அதை ஆதரித்த  அதிமுக புதுவையில் எப்போதைக்குமான தனது ஆதரவை இழந்த பின்னர்,  ஆட்சி அமைக்கும் வல்லமையை அதனால் பின் ஒருபோதும் அடைய இயலவில்லை .1981 தேர்தலுக்கு அதன் விளைவாக சண்முகம் புதுவை அரசியலில் திமுக வுடனான கூட்டணியை நோக்கி சென்றார் .

1977 தேர்தல் அரசியிலில் இருந்து ரெட்டியார் விலகிய பிறகு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த மரைகார் ரெட்டியாருக்கான சரியான மாற்றாக சண்முகத்திறகு தோன்றி இருக்க வேண்டும் .அவரை காங்கிரஸின் ஆட்சி முகமாக கட்டவோ ,ஏற்கவோ சண்முகத்திற்கு சிக்கலில்லைஆட்சி மற்றும் கட்சி நிர்வாகத்தை பற்றிய தெளிவான புரிதல் சண்முகத்திற்கு  இருந்தாலும் , அவர் ஆட்சி அதிகாரத்தை விழைந்தது 1985 பிறகு நிகழ்ந்திருக்க வேண்டும் . அதன் பின்னணி 1981 மற்றும் 1985 ஆட்சிக்கு காலத்தில் நிகழந்த சில முக்கிய அரசியளுக்கு பின்னர் எழுந்ததாக  வேண்டும் 

ஆட்சி நிர்வாகத்திற்கு தேவையான எல்லாவிதமான சமரசத்திற்கு உடன்படும் சண்முகம் , கட்சி அமைப்பில் தனது நிலைப்பாட்டில் இருந்து விலகி எந்த சமரசத்தையும் ஏற்றதில்லை .ஆட்சி அதிகாரத்திற்கு வெற்றி பெரும் காரணிமட்டுமே பிரதானமாக பார்க்கப்பட்டது . கட்சி நிர்வாக உறுப்பினர்கள மிக சாமான்யர்கள் . அவர்களில் பெரும்பாலனவர்கள் எந்தவிதமான  பொருளியல் பின்புலம் கொண்டவர்களல்ல . ஒருபோதும்  அமைப்பை விட்டுக் கொடுக்காத தன்மை கொண்டவர்களாக இருந்தனர் என்பதே அவர்களுக்கான தகுதியாக இருந்தது .

அகில இந்திய மற்றும் தமிழக அரசியல் மாற்றங்களினால் புதுவை காங்கிரஸ் அமைப்பு பல முறை பிளவுபட்டு பலம் மிக்க தலைவர்கள் கடசியை விட்டு வெளியேறிய போதும் , கட்சி பிளவுபட்டது போன்ற தோற்றத்தை அவர்களால் உருவாக்க இயலவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆட்சியின் வெற்றி உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்வது போன்றே கட்சியிலும் பிறிதொரு கணக்கு பேணப்படுகிறது. சண்முகத்தால் உருவாக்கி நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகளை அவர்களால் ஒருபோதும் கலைக்க இயலவில்லை என்பது விந்தையானது .

அரசியலில் கட்சி அமைப்பை சரியாக நிர்வகிக்க தெரிந்தவர்களால் மட்டுமே அமைப்பை சிதறாமல் பார்த்துக் கொள்ள இயலுகிறது . தமிழகத்தில் திமுக வை நிர்வகித்த அதன் தலைமை கருணாநிதியையும் பிறிதொரு உதராணமாக சொல்லாம் .ஏறத்தாழ மூன்று முறை தொடர் தேர்தல் தோல்விக்கு பிறகும் திமுக கட்சி அமைப்பு சரிந்ததைப் போன்ற தோற்றத்தை யாராலும் உருவாக்கு இயலவில்லை. அதே சமயம் அதிமுக தலைமைக்கு கருணாநிதியால் மறைமுகமான அழுத்தம் கொடுக்க முடிந்தது . அண்ணாதுரையின் ஆட்சி நீடிப்பதாக காட்ட வேண்டிய நிரபந்தம் முதல் இரண்டு ஆட்சி காலத்தில் MG.ராமசந்திரனுக்கு  ஏற்பட்டது .அதனாலேயே வெகு ஜன கவர்ச்சி இல்லாத நெடுஞ்செழியன் போன்றவர்கள் இரண்டாம் இடத்தில் தொடர்ந்து நீடிக்க இயன்றது .

1977 ல் கட்சியில் இணைந்த மரைக்காரை சார்ந்து இயங்க வேண்டிய நிர்பந்தம் சண்முகத்திற்கு உருவானது . அவரை சார்ந்து அரசியல் செய்வது தவிற்க இயலாததாகிப் போனதில் இருந்து அதை அவதானிக்க இயல்கிறது .வெளிப்படையாக மரைகாரை எதிர்க்க சண்முகம் தயங்கியதில்லை . ஆட்சி அதிகாரத்திற்கு அப்பால் தன்னை வைத்துக்கொண்டால் , மரைகார் நோக்கிய அவரது எதிர்ப்புகள் வேறு பொருளில் பாரக்கப்படவில்லை .ஆனால் அவர்கள் இருவருக்குள்ளும் எழுதப்படாத உடன்பாடுகள் நிறைய இருப்பதாகவும் , ஒருவர் வழியில் பிறிதொருவர் தலையிடுவதில்லை போன்றவை அதில் அடக்கம் என்கிற அலர் புதுவை உயர் அரசியலாளர்கள் மத்தியில் இன்றும் மிகப் பிரபலம் .

அதை உண்மையாக்குவது போல சண்முகத்திற்கு கட்சி சார்ந்த பார்வையும் , அதில் அதீத நாட்டமும் இருந்ததைப் போல அரசாங்க பதவிகளுக்கு அவர் முனையவில்லை என்பதை அவரது 1991 வரையிலான செயல்பாடுகள் காட்டுகின்றன. முதல்வர் பதவி குறித்து அவருக்கு மனவிலக்கம் அல்லது தயக்கம் இருந்திருக்க வேண்டும் .இந்திராகாந்தியிடம் அவருகிருந்த செல்வாக்கு அவர் நினைத்த எதையும் சாதித்து கொடுக்க வல்லது , என்றாலும் என்ன காரணத்தினாலோ அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை .1991 ல் அதிலிருந்து மீண்டு முதல்வர் பதவி நோக்கி நகர்ந்த போது அதுவரை மரைகாருக்கும் அவருக்குமான சமன்பாடு குலைந்து பின் அனைத்தும் அவருக்கு எதிராக மாறிப்போனது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்