https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 17 ஜனவரி, 2020

அடையாளமாதல் - 514 *தலைமையும் அமைப்பும் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 514

பதிவு : 514  / 700 / தேதி 17 ஜனவரி  2020

*தலைமையும் அமைப்பும்  * 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 281964 களில் குபேரால் அடையாளப்படுத்தப்பட்டு இந்தியாவின் முதல் இளம் முதல்வரான மரைகாரை சண்முகம் குபேரின் அரசியல்  நீட்சியாக நினைத்திருக்க வேண்டும் , குபேர் அரசியல் மீது கொண்ட அதே ஒவ்வாமையை மரைகார் மீதும் கொண்டிருந்தார் . இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் கட்சி அடைந்த தோல்விகள் சண்முகத்திற்கு புதிய புரிதல்களை  கொடுத்திருந்தது . கட்சி முழுமையாக கட்டுக்குள் வந்ததைப் போல தோற்றம் உருவாகி இருந்தாலும் , ஆட்சியில் அமர்வது  அவற்றை முற்றாக வடியச்செய்து விடும் என உணர்ந்திருந்தார் . ரெட்டியார் மந்திரிசபையில் பங்கெடுத்த போது அவருக்கு நிகழ்ந்தது நினைவிற்கு வந்திருக்க வேண்டும் .

சட்டமன்றம் சமூக மற்றும் பொருளாதார பலமுள்ளவர்கள் அமரும் இடம் . அவர்களில் பெரும்பாண்மையோர் உணர்வுக்  கொந்தளிப்புகளுக்கு இடம் தராது ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லும்  உயர்நிலையில் உள்ளவர்கள் , மக்கள் பிரச்சனைகளுக்கு அப்பால் தங்களின் பலவித சொந்த உள்கணக்குகளை சமரசம் செய்து கொள்ளும்  இடமாக சட்டமன்றத்தை அறிந்திருந்தார் . அவர்களின்  அடையாளத்திற்கு பலம் சேர்க்கும் இடமாக சட்டமன்றம் இருந்திருக்க வேண்டும்    அது தனக்குறிய இடமாகசண்முகத்துக்கு தோன்றவில்லை . தன்னைக் குறித்த தயக்கமே அவரது எல்லாவித மனத்தடைக்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் .

நேரடி ஆட்சியில் ஈடுபட்டு அரசியல் சரிவை சந்திப்பதை விட ஆட்சியாளர்களை ஆளும் இடம் தனக்கு உகந்ததாக எண்ணியிருக்க வேண்டும் . அவருக்கு எளிய தொண்டர்கள் மத்தியில் இருப்பது எளிதானதாக இருந்தது . அவர்களை முன்னிறுத்தி விளையாடும் அரசியல் எளிதாக இருந்திருக்க வேண்டும் . எளிய மற்றும் பொருளியல் பலமற்ற கடசியை சார்ந்திருக்கும் தொண்டர்களை  கொண்ட கட்சி நிர்வாக அமைப்பை உருவாக்கினார் . அது கட்சி திரளின் நம்பிக்கையை அவருக்கு வென்று கொடுத்தது .

ஆட்சி அமைப்பில் கட்சி உட்காரும் ஒவ்வொரு சமயமும்  அனைத்து கட்சிக்காரர்களுக்கும் தங்களுக்கான சூழல் எழுந்துவிட்டதாக உணர்கிறார்கள் . எளிமையானவர்கள் அரசு ஏதாவதொரு வகையில் தங்கள் பொருளாதார சிக்கலை நேரடியாக அவிழ்த்துக் கொடுக்கும் என மிகையாக நினைத்து ஏமாந்து போகிறார்கள் .எண்ணிகையில் இவர்களே பிரதானம். தங்கள் விழைவை தயக்கமில்லாமல் சொல்லும் இடமாக கட்சி அலுவலகத்தை சண்முகம் உருவாக்கி இருந்தார் .அது அரசு மற்றும் கட்சிக்கு இடையேயான கால்பந்தாட்ட முறையாக மாறிப்போனது .

பொருளியல் பலமுள்ளவர்கள் தங்களின் தேவைக்கு ஆட்சியை உபயோகித்து அங்கிருந்து தங்களுக்கு தேவையுறும் பொருளியலை வென்று  பயனடைகிறார்கள் . அத்தகையோருக்கு தங்கள் கட்சிதான் ஆட்சியில் அமரவேண்டு என்பதில்லை .அவர்கள் எல்லா ஆட்சியலும் பயன்பெறுபவர்கள் . அவர்கள்  தனி சமூகம் .அதே சமயம் கட்சியை இறுக்கப்படித்து அதனூடாக தங்களின் விழைவிற்கு விடை தேடுபவர்கள் கொள்ளகை பிடிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என அர்த்தமில்லை . அதுவே அவர்களிடம் உள்ள ஒரே முதலீடு.செல்லத்தக்க செலாவணி  .எனவே அவர்களை பயன்படுத்தி அரசியல் களமாடுவது அரசியல் சூழதலாக இருந்திருக்கும் போல .

தங்களின் தேவை குறித்து கட்சி தலைமையை நெருங்க, ஒவ்வொருமுறையும் அவர்கள் கட்சித் தலைமையால் ஆட்சியை நோக்கி கைகாட்டி விடப்பட்டு , அவை முடியாமையைக்கான காரணங்களாக பெற்று  ஏமாற்றமுற்று திரும்பும்போது அதை தன்னியலாமையாக முன்வைக்க சண்முகம் தயங்கியதில்லை . தனக்கு இன்னும் பலம் வேண்டும் என்கிற புரிதலை அவர்களுக்கு உருவாக்குவதிலிருந்து அவர்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக திருப்பிவிடுவதுடன்   அவர்களைப்  பற்றிய தனது எண்ணத்தை வெளிப்படையாக நிர்வாகிகள் மத்தியில் வெளியிடுவதை ஒரு விளையாட்டாக செய்து வந்தார் . அந்த  விளையாட்டு ஒரு நாள் அவருக்கு  வினையாகியது '.

தங்கள் விழைவு ஆட்சியாளர்களால் மறுதலிக்கப் படும்போது கட்சி தலைவர் சொல்லுவதை ஆட்சியாளர்கள் செய்வதில்லை என்கிற எளிய மாயையை உருவாகி  விடும் . கசப்படைந்த கட்சி நிர்வாகம் ஆட்சி மீது எப்போதும் அவநம்பிக்கயுடன் இருக்கும் . இந்த பிளவை  ஆட்சியாளர்களை கட்டுப்படுத்த உபயோகப்படுத்திக் கொண்டார்  . அமைச்சரவை உறுப்பினர்கள் பல சமயம் அச்சத்துடன் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர் . சிலர் வருவதை தவிற்துவிடுவார்கள் . கட்சி அமைப்பும் அதன் தலைவரும் வல்லமையுடன் இருப்பதாக மாயை உருவாகிவிடும் .

கட்சி அமைப்பு கட்டுக்கோப்பாக சண்முகத்தின் பின்னால் நிற்க இதுவே பிரதான காரணமாக இருந்திருக்க வேண்டும் . ஆனால் சண்முகம் முதல்வராக ஆட்சியில் அமர்ந்த போது கட்சி தலைவர் நாராயணசாமி இதே யுக்த்தியை கையாண்டு கட்சி நிர்வாகத்தின் கோபம் முற்றாக அவரை நோக்கி திரும்ப வைத்தார் .அரை நூற்றாண்டு காலமாக வெற்றியுடன் தக்க வைத்துக் கொண்டிருந்து இடத்தை இழந்ததும் சண்முகத்தின் வீழ்ச்சியை துவங்கியது .
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...