https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 15 ஜனவரி, 2020

அடையாளமாதல் - 513 *அரசியல் கணக்கென்னும் மாயவெளி *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 513

பதிவு : 513  / 699 / தேதி 15 ஜனவரி  2020

*அரசியல் கணக்கென்னும் மாயவெளி 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 27




தேர்தல் வெற்றிக்கு ஜாதி கணக்குகள் இன்றியமையாததாக அரசியல் கடசிகளால் பார்க்கப்படுகிறது .அப்படி ஒரு கணக்கு நடைமுறைக்கு பயன தரக்கூடயதா என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது .அது எப்போதும் எல்லா இடங்களிலும் வெற்றிபெறும் கருதுகோளல்ல  . கட்சி மற்றும் ஆட்சி அமைப்பில் பின்புறமாக சிலர்  நுழைய அது  உருவாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் . தமிழகத்தை ஆண்ட MG.ராமசந்திரனும் , ஜெயலலிதாவும் பெரும்பாண்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை கருத்தில் கொள்ளலாம்

தேர்தல் அரசியலில் முடிவெடுக்க ஜாதிகணக்கு ஒரு அடிப்படைத் தரவாக எல்லா கட்சிலும் ஒப்புநோக்கப் படுகிறது . அது சமூகத்தை நோக்கி சொல்லப்படும் ஒரு கணக்கு மட்டுமே அது வாக்காளரை சென்றடையும் என அவர்களால் கருதப்பட்டாலும் . அது வெற்றிகரமான உருவாக்கம் அல்ல என்றே நினைக்கிறேன் . புதுவை அரசியலில்  ஜாதீய ஒதுக்கீடு  அவ்வளவு   வெளிப்படையானதல்ல என்றாலும் உள்கணக்கில் கருத்தில் எடுக்கப்படுவதை பார்த்திருக்கிறேன் .1985 தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியில் அமர்ந்த போது இந்த வண்ணியர் கணக்கு காங்கிரஸ் உள்ளறைகளில் முதல் முறையாக ஒலித்தது .

புதுவை  அரசியளாலர் பலரும் மூத்த சட்டமன்ற உறுப்பினர் சபாபதியை கவுண்டர்” என்பது பொதுவான விளிசொல்லாக அழைப்பதை பார்த்திருக்கிறேன் .அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட. வேண்டும் என்கிற நிர்பந்தம் எழுந்தபோது . அதை கண்ணனுக்கு எதிராக சிலரால் கிளப்ப பட்டிருக்க வேண்டும் என்றாலும் கண்ணன் தாய் வண்ணியர் சமூகத்தை சேர்ந்தவர் ஆதலால் கண்ணனுக்கு அமைச்சர் பதவி தரலாம் என முடிவானதாக சொல்லப்பட்ட அலர் அப்போது பிரசித்தம் .

இதில் வேடிக்கை என்னவென்றால் , அந்த கால சூழலில் கண்ணன் அமைச்சராவதை எந்த விதத்திலும் தடுத்திருக்க முடியாது என்பதே அன்றைய உட்கட்சி  நிரபந்தம்  .எந்த நோக்கத்திற்கு வண்ணியர் என்கிற அலகை யார் கையிலெடுத்தார்கள் என தெரியாது போனாலும் 1991 தேர்தலில் அந்த அலகு முக்கிய பங்கு வகித்தது .

1991 தேர்தலில் சபாபதி மற்றும் பாலன் அதை தங்களுக்கு சாதகப்படுத்திக் கொள்ள முயன்று ஆடிய ஆட்டத்தில் மூன்றாவது நபராக ரங்கசாமி அதை பெற்றுப் போனார் என்பது அரசியல் முரண்நகை .எப்போதும் அரசியலில் ஒரு கோட்பாடு உருவாகும் போது அதை ஒருவரை தேர்ந்தெடுக்க பயன்படுத்துவதை விட பிறிதொருவரை மறுதலிக்க பயன் படுத்தப்படுவதை பார்த்திருக்கிறேன் .

புதுவையில் வென்று அரசமைத்த எந்த முதல்வரும் பெரும்பாண்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல . ரங்கசாமி முதல்வரானது கூட அந்த கணக்கின் வெற்றியால் அல்ல , அவர் வென்று முதலவரான பிறகு அதை அவருடன் சிலர்  சேர்த்து சொன்னார்கள்  . முன்பே அது மறைமுகப் பேச்சாக இருந்திருக்கிறது .ஆனால் 1991 ல் அது பிரதான இடத்தை அடைந்திருந்தது . அது சிலரால் வலிந்து முன்வைக்கப்பட்டு தவிற்க இயலாத இடத்தை இன்று வந்து சேர்ந்துள்ளது.

1991 ல் ரங்கசாமி அமைச்சராகாது போயிருந்தால் 2001 கணக்கு வேறு விதமாக மாறி இருக்கக் கூடும் .அந்த விளையாட்டில் சபாபதி மற்றும் பாலன் இருவரும் அடிப்பட்டு போனார்கள் .பின்னர் அரசியல் சூழல் மாறி ரங்கசாமி தனி கட்சி கண்டு ஆட்சி அமைத்த போது சபாபதி சபாநாயகராக , பாலன் அரசு சார்பு நிறுவனங்கள் சிலதுக்கு தலைவரானார் . இருவரும் அரசியல் ரீதியான இடத்தை அடையமுடியாது போனது .

1999 ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது சண்முகம் முதல்வர் பதவி நோக்கி நகர்ந்தார் மரைகார் மற்றும் வைத்தலிங்கத்திற்கு உடனான அவருடைய சமன்பாடுகள் வென்ற பிறகு அரசியல் ரீதியாக மரைகார் பின் எப்போதும் மாநில அரசியலுக்கு திரும்ப முடியாமலானது .சிபிஐ வழக்கு வைத்திலிங்கத்தை பாதித்திருந்தது .அவை அனைத்தும் கட்சி மற்றும் ஆட்சி சண்முகத்தின் கட்டுக்குள் வந்தது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி பின் 2001 ல் அவை அனைத்தும் அவருக்கு எதிராக மாறிப்போனது .அவற்றின் பிண்ணனியில் அவரது அனுக்கர் வல்சராஜ் இருந்தார் .

1977ல் காங்கிரஸின் ஆட்சி முகமாக மரைகாரை ஏற்ற பிறகு அவரை கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தையை சண்முகம் கண்டைந்தார் .அது ஒழுங்கு கொண்ட கட்சி நிர்வாக நிரை , அதன் தலைவரை அது ஒருபோதும் விட்டுத்தராதது .பிறரை பனியவைக்க , பனிந்தவர்கள் தங்கள் எல்லைகளை வகுத்துக் கொள்ள , விலகியவர்கள்  பின் ஒருபோதும் தாங்கள் விலக்கியதை மீளவும் கேட்கத் துணியாத மனநிலையை உருவாக்கும் ஒன்றை அதுவரை அவர் எண்ணெணி உருவாக்கி அந்த அமைப்பை வைத்திருந்தார். அவை எப்போதும் காங்கிரஸின் முதலவர்களை , அமைச்சர்களை , சட்டமன்ற உறுப்பினர்களை நோக்கி கேள்விகளையும் தங்கள் வெறுப்பையும் காட்டிக் கொண்டே இருந்தன . அவை அனைத்தும் ஒருநாள் தனக்கும் எதிராக திரும்பக்கூடும் என அவர் அறிந்திருக்கவில்லை ,அந்த சூழல் தனக்கே வந்தபோது அவர் நிலையழிந்து போனார் அப்போது தான்  அவர் அது பற்றி அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக