https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 18 ஜூலை, 2021

அடையாளமாதல் *அறைகளும் கதவுகளுமான வீடு *

 


ஶ்ரீ:



பதிவு : 581  / 771 / தேதி 18 ஜூலை  2021


*அறைகளும் கதவுகளுமான வீடு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 59.







தேரம் காலை 9:00 . எப்படியும் தேர்தல் 10: 00 மணிக்கு மேல துவங்கும் என நினைத்தேன்வீட்டிலிருந்து கிளம்பியது முதல் பாலன் ஒரு சொல்லும் பேசவில்லை ஆழ்ந்த யோசணையில் இருந்தார் . தேர்தல் தோல்வி அவரை கடுமையாக பாதித்திருந்ததை உணரமுடிந்ததுஉப்பளம் விடுதி வழியாக செல்ல வேண்டாம் என சொன்ன போது பிறரின் கேலிப் பார்வையை தவிற்க விரும்பியது காரணமாக இருக்கும் என நினைத்தேன் . செஞ்சி சாலை வாய்க்கால் பாலத்தில் இருந்து இரண்டு தெரு தள்ளி இரு ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் அந்த வீடு இருந்தது . மரைக்காயர் வீடு எந்த ஆரவாரமும் இன்றி ஒரு சிலர் மட்டுமே இங்கொன்றும் அங்கொன்றுமாக சாலையில் நின்று கொண்டிருந்தது வியப்பை அளித்தது . ஆறு ஏழு கார்கள் மட்டும் வீட்டை ஒட்டி ஒரு பக்கமாக அடைத்து நிறுத்தப்பட்டிருந்தது . மரைக்கார் ஆதரவாளர் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது என ஊகித்தேன் . மரைக்காயர் வீடு பழைய பிரெனச் பாணியிலான கட்டுமானம் கொண்டது . பாரம்பரிய இந்தியதன்மை எதுவும் இன்றி அது ஒரு காலத்தில் 

பிரென்ச் அரசு அலுவலக நிர்வாக மாளிகையாக இருந்திருக்க வேண்டும் . கடற் சிப்பி சுன்னம்  மூசப்பட்ட மங்கலான வண்ணத்தில் வளைவு வளவான மதில் சுவரும், மதிலின் உயரத்தை விட இருமடங்கு உயரமுள்ளதாக பெரிய நுழைவாயில் மரத்தாலான ஓராள் உயரமுள்ள திட்டி வாசலும் கொண்ட கதவு . இரும்பினால் ஆன விளக்கு வளையம் அந்த கதவிற்கு மேல் எழுந்து நின்றிருந்தது . அதன் மேல் மல்லிகை கொடியும் சிகப்பான சிறு மலர்களைக் கொண்ட கொடி ஒன்றும் நன்றாக ஏறி வளர்ந்திருந்தது . வாசல் எப்போதும் பூட்டி இருந்தது. திட்டி வாசல் வழியாகவே அனைவரும் உள்ளே வெளியே என சென்று வந்து கொண்டிருந்தனர். முதல் முறையாக அந்த வீட்டிற்கு வருபவர் முன்பு அந்தக் கதவு அனைத்தையும் மறைப்பதாக மர்மம் நிறைத்து நின்று கொண்டிருந்தது . யாரையும் தயக்கமுள்ளவர்களாக அந்த மூடிய கதவு மாற்றிக் கொண்டிருந்தது . உள்ளே செல்ல துணியும் சிலர் கூட  அங்கு அழைப்பு மணியை தேடி ஏமார்ந்ததை பார்திருக்கிறேன்.



ஓங்கி நின்ற கதவை தட்டமுடியும் என யாரும் நினைத்து பார்க்க முடியாத தடிமனை கொண்டக் கதவு பச்சை வர்ணம் பூசி பல ஆண்டு பராமரிக்கப்படாமையால் அதன் வர்ணப் பூச்சு கடற் காற்றுபட்டு சிறு சிறு கொப்புளங்களாக உப்பி நின்றன . சில உதிர்ந்து கீழே கிடந்தனமரைக்காயரின் கார்கள் வரும்போது மட்டும் முழு வாசல் கதவும் விரிந்து  திற்கப்படுகிறது போல . அவரது கார்கள் அந்த வாசல் வழியாக செல்வதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அந்த வாசலை தாண்டியதும் மரைக்காயருக்கு சொந்தாமான கார்கள் இரண்டு அந்த பெரும் கதவிற்கு நேர்  பிண்ணால் நிறுத்தப்பட்டிருந்ததுஅது மரைக்காயரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்றாலும் வீட்டிற்குறிய எந்த அடையாளமும் அதற்கு இல்லை என்பது ஒவ்வொரு முறை அங்கு செல்லும் போதும் திகைப்படைந்திருக்கிறேன். வீட்டின் பெண்கள் மற்றும் உறுப்பினர்கள் பின்கட்டிலில் வேறு எங்கோ இருக்க வேண்டும். அவர்களை சில முறை தற்செயலாக பார்த்திருக்கிறேன் . மரைக்காயர் ஆழமான மத நம்பிக்கையிளராக அறியப்பட்டாலும் , பிற மதம் குறித்த மனவிலக்கம் அவரிடம் இல்லை என நினைக்கிறேன். அவரை மணக்குள வினாயகர் ஆலையத்தல் பார்பதாக பலர் சொன்னதுண்டு . சித்தர் வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக அவரை பற்றி பாலன் ஒரு முறை சொல்லியிருந்தார் . அந்த குடும்பத்துப் பெணகள் புர்கா அணிவதில்லை எப்போதும் புடவை தலைப்பால் தலைமுடியை மறைத்தபடி நடமாடியதை பார்த்திருக்கிறேன். காஜியார் வீதி மற்றும் முல்லா வீதியில் உள்ள எனது அனுக்க நண்பர்களின் வீடுகளில் பெண்கள் சகஜமாக அப்படி இருப்பதை அறிந்திருக்கிறேன் . வீட்டின் மைய நுழைவாயிலை கடந்ததும் கார் நிறுத்துமிடம் . அதன் இருபக்கமும் சிறிய தோட்டம் அந்த வீட்டை இரு புறமும் சுற்றி படர்ந்து அங்கிருந்து துவங்கி  வட்ட வடிவமான வீட்டை சுற்றி சூழ்ந்திருந்தது. கார் நிறுத்துமிடம் ஒட்டி இடப்புறம் நீல நிறத்திலான சிறு குளம் . அதில் கோய்கார்ப் வகை வெள்ளை மற்றும் சிகப்பு தீற்றல்கள் அலங்கார மீன்கள் அந்த குளத்தின் அளவிற்கு ஒவ்வாத பெரிய வடிவில் அதில் நீந்திக் கொண்டிருந்தன . வலப்புறம் சற்று உள்ளே தள்ளி ஒரு ஊஞ்சல் . சதாரன புல் மேவிய தரைகள் , சரியாக பராமரிக்கப்படாமல் ஈடும்தாழ்த்தியமாக ஒழுங்கற்று வளர்ந்திருந்தது . நடுநடுவே சில புல் மழைப் பூக்கள் சிறிய அளவில் பூத்திருந்தது . அந்த மையக் கட்டிடத்தையும் பின்கட்டு இல்லத்தையும் ஒரு சிறிய நடைபாதை இணைத்தது . நடைபாதையின் இரு புறமும் வளைவான கம்பியால் இணைக்கப்பட்டு அதன் மீது மலர் கொடி படர்ந்திருந்தது அதன் உள்ளே நடைபாதை . பின்கட்டு இல்ல நுழைவின் துவக்கத்தில் இடப்புறம் மாடிக்குச் செல்லும் படிகட்டுஉயரமான படிகளை கொண்டதாக எந்த ஆடம்பரமும் இன்றி சிமன்ட் மண் சுவற்றால் ஆனதாக கைபட்டு ஒருவித மனல் பொருக்கோடி இருந்தது . முதல் மாடி வராண்டா ஆஸ்பெஸ்டாஸ் கூரையாலானதாக , அதிக தடிமனான சுதை தூண்களுக்கு மேலே அமைப்பட்டிருந்தது. எங்கும் ஆளரவமன்றி இருந்ததால் ஆழ்ந்த அமைதி நிலவியது. முழுவதும் பளபளப்பில்லாத கடற் கிளிஞ்சல் உறைவிடப்பட்ட சுண்ணம் பூசப்பட்டதால் பழமை மாறாமல் எங்கோ ஒரு காலத்தில் இருந்தது . சுமார் இருபது அடி உரமான கூரைக் கட்டுமானம் கணமான வாரைகளை பருமனான சுதை தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தது . மழை சாரல் உள்ளே பொழியாதபடி கூரையில் இருந்து சுமார் ஐந்தடிக்கு இளம் சாம்பல் நிறம் பூசப்பட்ட மரத்திலான காத்துவாரி போல தொங்கு அமைக்கப்பட்டிருந்தது . கார் நிறுத்துமிடருந்து கடந்து சென்றால் பிறை வடிவிலான மூன்று படிகட்டுகள் இடைநாழி போன்ற ஒன்றில் மூன்று வாயில்கள் இணைக்கப்பட்டிருந்தது மிக உயரமானவை கதவுகளுக்கு பின்னால் அவை அறைகளாக இருக்க வேண்டும்.  


இரு புறமும்  மூடி வைக்கப்படிருப்பவை நேர எதிரே உள்ள வரவேற்பரை கதவை கடந்து உள்ளே சென்றால் மேலும் முன்று வாசல்களைக் கொண்ட விஸ்தாரமான வரவேற்பரை . அதில் வினோதம் அங்கு மிகச்சிலரே அமர்ந்து பேசம் அளவிற்கு குறைந்த நாற்காலிகள் போடப்பட்டிருந்தன . அது தலைவர்களுக்கான இல்லம் சாதாரன தொண்டனுக்கானது அல்ல என கூறுபவை போல இருந்தது . உள்ளே மரைக்காயர் ஆலோசணையில் இருக்கிறார் என்றார்கள் . வழியில் நின்றவரை நோக்கி பாலன் தலையசைத்த பின்னர் உள்ளே சென்றார் . நான் சற்றுத் தயங்கி நிற்க வெளியில் இருந்தவர் என்னை உள்ளே செல்லச் சொன்னார் . எனக்கு உள்ளே செய்ய மிகுந்த தயக்கமிருந்தது . அந்த இல்லத்தின் ஆழ்ந்த அமைதி ஒரு வித பதற்றத்தையும் நிலையழிவையும் கொடுத்தது . வெளியே வராண்டாவில் நீண்டு நாற்காலிகள் காலியா இருந்தன அந்த அமைதியில் அமர்ந்திருக்க விருப்பமின்றி மெள்ள உள்ளே நுழைந்தேன் . அது ஒரு பெரிய அறை போல இருக்கும் என நினைத்து போல் அல்லாமல் பிறிதொரு வரவேற்பு அறையாக அல்லது உணவு அருந்து்ம் இடமாக இருந்தது . பெரிய உணவருந்தும் மேசையிம் சுற்றி எட்டு அலங்கார நாற்காலிகளுடன் அங்கும ஆளரவம் இன்றி இருந்தது . அங்கிருந்து தோட்டம் போல ஒன்றிற்கு வேரொரு பாதையும் இருபக்கமும் வேறு அறைகளுக்கு செல்லும் கதவுகளும் இருந்தன . அந்தக் கதவுகளை திறந்தால் அது மேலும இன்னும் பெரிய வரவேற்பரை யாக இருந்தால் ஆச்சர்யபடுவதற்கு இல்லை என நினைத்தேன். மொத்த வீடும் இறைகளாலும் மூடிய பெரிய கதவுகளாலும் ஆனதாக இருந்தது. அந்த சாப்பாட்டு மேஜையின் நாற்காலியில் அமர்ந்து சற்று பதட்டத்துடன் சுற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன் . அலங்கார பொருட்கள் அடுக்கும் சுவர் அலமாரிகள் பெரிய கண்ணாடியில் மூடப்பட்டு உள்ளே சிறிய வாள்கள் நிறை பீங்கான் தட்டுக்கள் என விதவிதமான அளவுகளில் சிறு சிறு மர பீடத்தில் நிற்கவைப்பட்டருந்தன . காலையில் ஏற்றிய ஊதிவத்தியின் மனம் அங்கு மிச்சமிருந்தது . அத்தர் போல ஒரு வாசனை ஆனால் மிகவும் பழைய காலத்திற்கு இட்டு செல்வதை போன்ற உளமயக்கை கொடுத்தது சற்று அமைதியை ஏற்படுத்தி இரு௶்இருந்தாலும் ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருப்பதற்கான எந்த சிறிய ஓசையை கூட கேட்க இயலவில்லை . யாராவது என்ன? ஏது? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்பது பற்றி யோசனையில் இருந்தேன். சட்டென நான் அமர்ந்து கொண்டிருந்த நாற்காலிக்கு பக்கமுள்ள பெரும் கதவு ஓசையின்றி திறந்து கொள்ள பளீரிட்ட ஓசை முகத்தில் அறைந்தது .மரைக்காயர் வெளியே வர அவரை சுற்றி சிலர் உரத்தக் குரலில் பேசியபடி வெளயே வந்தனர் . அனைவரும் பேச முயன்றதால் எதுவும் அர்த்தமாகவில்லை . சற்று பின்னால் பாலன் வேரு ஒருவருடன் பேசிய படி வெளியே வந்தார் .


வியாழன், 8 ஜூலை, 2021

அடையாளமாதல் * வளத்தின் மிச்சல் *

 


ஶ்ரீ:



பதிவு : 580  / 770 / தேதி 8 ஜூலை  2021


* வளத்தின் மிச்சல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 58.




ஒவ்வொரு காரிலும் தலைவர்கள் நிர்வாகிகள் வந்திறங்கிக் கொண்டே இருந்தனர் . திருவிழா ஒன்று உச்ச நிகழ்வை நோக்கி நேரம் நகர்ந்து கொண்டிருந்தது போலத் தோன்றியது , செஞ்சி சாலை வாய்க்கால் பாலமும் ரயில் நிலைய ரோடு சந்திப்பில் கட்சிகாரர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை ரோட்டை மறித்து தடுப்புகளை போட்டிருந்தனர் . கட்சி முக்கியஸ்தர்களின் வருகையின் போது மட்டும் சற்று நகர்த்தி கொடுக்க கார்கள் உள்ளே சென்று கொண்டிருந்தன. உணர்ச்சி பொங்கும் கூட்டம் ஆர்ப்பரிப்பபது ஒற்றை முழக்கமாக, இருபக்கமிருந்தும் ஒவ்வொரு காரும் நுழையும் போது உள்ளிருப்பவர்களை பார்க்க முயலும் கூட்டம் ஒன்று  காருக்கு முன்னால் மறித்து பிதுங்கி வந்து விழுந்துகொண்டிருந்தனர். காவலர் அவர்களை அள்ளி விலக்கி வழியமைத்தனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வந்த போது அவரது ஆதரவாளர்கள் வாழ்த்தொலி எழுப்பினர்கள் சிலர் மாலைகளை அணிவிக்க சிலர் சால்வைகளை போட்டபடி இருந்தனர் . அதற்கு மட்டும் அவர்கள் காரில் இருந்து இறங்கி அவற்றைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள் ஒவ்வொரு முறை அது நிகழும் போது நதியில் ஏற்படும் சுழல் போல அந்த காரை சுற்றி

அனைவரும் முயங்கும் ஒலி கார்வையாக கேட்டு அலை அடிப்பது போல உளமயக்கு கொடுத்தது. பார்க்கும் இடமெங்கும் கட்சிக்காரர்களின் மொட மொடக்கும் கதர் சட்டையும் வேட்டியுமாக திரளென நிரம்பி வழிந்தனர் . வியர்வை பெருக்கோட நின்றிருந்த அனைவரும் ஒருவர் மீது ஒருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு இருந்தனர் . உப்பு வியர்வை வீச்சம் அத்துடன் ஒருவருக்கு சொல்லிக் கொள்ளும் தகவல்களின் பெருக்கு . யார் அதை எங்கிருந்து யாருக்க சொல்லுகிறார் என புரிந்து கொள்ள இயலவில்லை . பெறப்படும்  தகவல்களுக்கு ஆமோதிப்பும் ஆவேசமான ஆட்சேபனையுமாக எதிர்வினை கேட்டுக் கொண்டே இருந்தது . முன் பின் பழக்கம் இல்லாதவர்களுடன் அங்கு நிலவிய கருத்தே அந்த முழு திரளையும் நட்பாக எதிராக கணம் தோரும் மாற்றியபடி இருந்தது . ஏறக்குறைய அங்கு நடக்க இருப்பதன் இறுதி முடிவு தனக்கு மட்டும் தெரியமென பிற அனைவரையும் போல நானும் அங்கு இருந்து கொண்டிருந்தேன் . அங்குள்ள அனைவரையையும் விட ஒரு தகவல் என்னிடம் மேலதிகமாக இருக்கிறது என்கிற பிரமையை என்னால் வெல்லவே முடியவில்லை . அங்கு இருந்த அனைவரும் அத்தகைய கருத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரு பெரும் கலவரம் இப்படிப்பட்ட உறுதி செய்யப்படாத முரண்  தகவல்களை பகிர்ந்து கொள்வதிலிருந்து கொள்ளத் துவங்குகிறது . அன்று வெடிப்பின் தருணத்தை நிமிட நிமிடமாக எதிர்பார்த்துக் கொண்டருந்தோம். ஒருகாலத்தில் ஒரே அமைப்பாக இருந்த இளைஞர் காங்கிரஸிற்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சண்முகம் என்கிற தனி நபர் காழ்ப்பு தேவையானது . தங்களுக்கு மேலான ஒருவர் தங்களை கூட்டிச் செல்ல வேண்டும் என்றோ ரட்சிக்க வேண்டும் என்றோ நினைத்துக் கொண்டிருந்தது . அவ்வாறு ஒருவர் இல்லை என்றான பிறகு அது அவர்களுக்கான பாதையை உருவாக்கி இருந்தது . இன்று பிளவுபட்டு ஒரு முடிவிற்கு இருவேறு விழைவு கொண்டு எதிரெதிராக கோர்த்து நின்று கொண்டிருக்கிறது. ஒன்றாய் இருந்த காலத்தில் அது இத்தனை பலமுள்ளதாக யாருக்கும் தோன்றவில்லை . இன்றும் கூட அது இணைந்தால்  அரசியலை மாற்றி வேறு திசைகளுக்கு இட்டுச் செல்லலாம் . ஆனால் அது முடியாது . இனி ஒருவரை ஒருவர் நம்ப மாட்டார்கள் . ஒருவர் வீழ்ந்தால் மட்டுமே பிறிதொருவர் வாழமுடியும் என உறுதியாக நம்புகிறார்கள் . என்ன ஒரு பைத்தியகாரத்தனம். கண்ணன் வீழ்வதால் பாலன் தலைமையிலான இளைஞர் காங்கிரஸிற்கு எந்தப் பயனும் இல்லை அது பாலனின் காழ்ப்பும் ஆணவ நிறைவு மட்டுமே. அப்போதும் மரைக்காயரின் ஒரு அங்கமாக பாலனை உருவகித்திருந்தனர் . தனி அணியாகவே இயக்கமாகவோ் அவர் அடையாளப்படுத்த படவில்லை என்பது ஒரு பின்னடைவு


பாலன் பொறுப்பேற்ற பிறகு ஓரிரு ஆண்டுகள் இளைஞர் அமைப்பின் தலைமையை மாற்ற கண்ணன் முயற்சித்தார் அதை 1988 களில் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும் ,அதன் பிறகு அவர் தன்னை முழுவதுமாக வேறு ஒரு இடத்திற்கு தயார் செய்யத் துவங்கி இருந்தார். கண்ணன் முதல்வர் பதவியை குறித்து தனது கனவை விரித்தெடுத்தது அந்தக் காலகட்டதில் . காலம் அவரை அதன் அருகின் நிழலில் சில காலம் வைத்து அந்தக் கனவிற்கு படிகளை அமைத்துக் கொடுத்திருந்தது . அன்று முதல்வராக இருந்த மரைக்காயர் அரசுமுறை பயணமாக வெளிநாடு செல்ல நேர்ந்ததால் காபந்து முதல்வராக கண்ணன்  நியமிக்கப்பட்டார் . அதன் பின்னரே அவர் முழு அளவில் தனது கனவை நோக்கி நகரத் துவங்கினார். காபந்து முதல்வராக இருந்த போது சரச்சைக்குறிய பத்தமசுந்தரி கொலை வழக்கில் அவரது பெயர் அடிப்பட்டது தற்செயலானது இல்லை . அவரது முதல்வர் கனவை சிலகாலம் அது கலைத்தது . நீதிமன்றத்தில் குற்றமற்றவராக வெளிவந்தபின்பும் அதன் நிழல் அவர் மீது இருந்து கொண்டிருந்தது. கண்ணன் வீழ்ச்சியில் இருந்து பாலன் அடைய ஒன்றுமில்லை என்றாலும் அவர் வீழ்ந்து படுவதை அவர்  விரும்பினார்


முதல்வர் தேர்தல் துவங்குவதற்கு சில மணி நேரம் முன்பாக பாலனிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது .முதல்வர் தேர்தல் நடக்குமிடத்திற்கு என்னை நேராக செல்ல வேண்டாம் என்றும் தன்னை தன் வீட்டிலிருந்து அழைத்து செல்ல சொன்னார் . நான் அவரது இல்லத்திற்கு சென்ற போது அங்கு பாலனைத் தவிர வேறு யாரும் இல்லை . முக்கிய நிர்வாகிகளின் கூட்டத்தை எதிர்பார்த்திருந்தேன். எங்கே மற்றவர்கள்? என்றதற்கு அனைவரும் மரைக்காயர் ஏற்பாடு செய்திருந்த உப்பளம் விருந்தினர் விடுதி அறைக்கு சென்று விட்டார்கள் என்றார் . என்னிடம் நாம் முதலில் மரைக்காயரை அவரது வீட்டில் சென்று சந்திக்க வேண்டும் என்றார் . முதலியார்பேட்டையில் இருந்து மரைக்காயர் வீட்டிற்கு உப்பளம் விடுதி வழியாக செல்ல வேண்டும் . ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த வழி வேண்டாம் புஸ்ஸி வீதி வழியாக அவரது இல்லத்திற்கு செல்லலாம் என்றார் . நான் அவரை முதலியார்பேட்டை மில் வழியாக அண்ணா சிலை அடைந்து செஞ்சி சாலை வாய்க்கால் பாலத்தை அடைந்த போது அங்கிருந்து உப்பளம் செல்லும் வழி முழிவதுமாக போக்கு வரத்து தடை செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்தது . வண்டிகள் செல்வதை தடை செய்திருந்தாலும் கட்சிகாரர்கள் செல்ல எந்த தடையுமில்லை  என்பதால் செஞ்சி சாலை புதுவை ரயில் நிலைய ரோடு சந்திப்பு பாலம் மற்றும்  தண்ணீர் தொட்டி இருந்த இடத்திலிருந்தே கூட்டம் பிதுங்கி வழியத் துவங்கியிருந்தது. அங்கிருந்து உப்பளம் விருந்தினர் விடுதி சுமார் முக்கால் கிலோமீட்டர் இருக்கும் . நான் அந்த கூட்டத்தை வேடிக்கைப் பார்த்தபடி மரைக்காயர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தேன் . அவர் வீடு அங்கிருந்து இரண்டு தெருத் தள்ளி இருந்தது .


புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...