ஶ்ரீ:
பதிவு : 667 / 857 / தேதி 28 பிப்ரவரி 2023
* உள்ளூரும் பிறிதொன்று *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 63.
ஒவ்வொரு எழுச்சியும் வீழ்ச்சியில் முடிவுற்ற பின்னால் பிறிதொன்று புதிதாக எழுந்து வரும் என்பது உலகின் விதி . அடுத்த மாற்றம் செறிவானதாக அதுவரை நிகழ்ந்த பிழைகளை கலைந்து புதிய துவக்கத்தை கொடுக்கும் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே. ஆனால் உண்மையில் அப்படி நிகழ்வதில்லை. புதிய துவக்கம் பிறதொரு சிக்கலுக்கு இட்டுச் செல்வதாகவே இருந்திருக்கிறது . உலகின் இயங்கு விசை அப்படிப் பட்டதாக அறிந்து கொள்கிறேன். கருத்தியல் அரசியல் காலாவதியாகி பல தசாப்தங்கள் கடந்துவிட்டது.காந்தி இருந்த காலத்திலே இது நிகழ்ந்து கொண்டிருந்தது . காந்தியின் போர் அதை நோக்கி ஒவ்வொரு நிமிட அறைகூவலாக இருந்தது. வாழ்கையின் நதி அதற்கேயான ஒழுங்குடனான எப்போதும் சாமான்ய தளத்தின் நியதிபடி இருக்கிறது . சில தலைவர்கள் அதன் போக்கை விசேஷ இடத்தை நோக்கி திருப்ப முயலும் போதெல்லாம் அந்நீரில் உருவாகும் சுழல் அனைத்தையும் தன் மையம் நோக்கி இழுத்தாலும் அதால் தொடப்படாதவை தங்கள் போக்கில் சென்று மறைகின்றன. மையச் சுழல் விசை இழக்கும் போது மொத்த நதியும் தனது வழக்கமான போக்கிற்கு சென்று திரும்பி பிறிதொரு சுழல் உருவாவதற்கு காத்திருக்கிறது. அது புதிய சிலரை அடையாள படுத்துகிறது. அன்றைய சூழலில் புதிய அத்தியாயங்கள் உருவாகி வருகின்றன. இந்தப் பதிவுகள் புதுவை அரசியலில் நடந்தவற்றை இனி நடக்கக்கூடும் என நம்புவதை இங்கு கவனப்படுத்த விரும்புகிறேன்
கருத்தியல் அரசியல் இல்லாமலாகி , தலைவரை நம்பி பின் தொடர்ந்து உருவாகும் அரசியல் நிரையும் இன்றைய சூழலில் காணாமலாகி இருக்கிறது. கண்ணன் தொடங்கி மிக வேகமாக தனது இலக்கு நோக்கி நகர்ந்த இளையர்கள் இன்றைய அரசியலில் முற்றாக இடமிழந்தார்கள். தங்கள் இறுதி அறுபது அகவைகயை கடந்து கொண்டிருக்கிறார்கள். அனைத்திலும் தொடர்பறுந்துவிட்டார்கள் . கண்ணனின் இடத்தை நிரப்ப கூடியவராக பிறரால் நம்பப்பட்ட ரங்கசாமி இரு தசாப்தங்களில் அளவிற்கு அதிகமாக விளம்பர வெளிச்சம் பாய்சப்பட்டு வெளிறி போய் இன்று அனைத்தாலும் கைவிடப்பட்டவராக இருக்கிறார். அவருடன் பலமுறை நேரில் உரையாடிய அனுபவத்தின் ஆரம்பம் முதலே கட்சி அரசியலுக்கு அவர் எவ்வகையிலும் பொருத்தமற்றவராக ஊகித்திருந்தேன். கட்சி அரசியலின் மிகச் சிறந்த நிர்வாகியாக அறிந்த சண்முகம் கூட தனது இறுதி காலத்தில் ஏமாற்றத்தையே அளித்தார். அரசியல் தனது மாற்று வழியை முன்வைத்திருப்பமை அவர் அறியவில்லை. அதிலிருந்து புதிய தலைமையாக ரங்கசாமி எழுச்சி நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. இன்னுமொரு தேர்தலை சந்திக்கும் இடத்தில் அவர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அடையும் ஏமாற்றத்தினால் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டாலும் கசப்படைவதில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இது எப்போதும் இப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நண்மை அதனூடாகவே அடுத்த முளைகளில் எப்போதும் வெளிப்படுவதாக நம்பப்படுகிறது.
இன்று இளைஞர்களை அரசியலை நோக்கி ஈர்க்கும் அனைத்து அரசியல் சக்திகளும் தங்கள் வசீகரத்தை இழந்து போயிருக்கிறார்கள். இங்கிருந்து உருவாகிவரும் 2030 களுக்கான புதிய தலைமுறை எதில் இருந்து கிளைத்து வரக்கூடும் என இங்கிருந்து ஊகிக்க முயல்கிறேன். அதில் சண்முகத்தின் “தியரி”யின்படி அடுத்து என்ன புரிதலை அடைய முடியும் என அவதானிக்க முயல்கிறேன். ஆனால் அது குறித்த தகவல்கள் நம்பிக்கை தருவதாக இலை .
கட்சி உள்கட்டுமானம் அகில இந்திய காங்கிரஸில் மிக அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு செயல்முறை 1990 களுக்கு முன்பு இருந்தது. அதன் மீது நம்பிக்கை இருந்த சிலர் அதன் நீட்சியை 1990 களில் முயற்சித்தனர். ஆனால் அந்த வழிமுறை
பின் முற்றிலும் சிதைந்துவிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வகத்தில் சில முறைமையை பார்த்திருக்கிறேன். உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் சில காலம் கட்சி பதவிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு உறைநிலைக்கு கொண்டு செல்லப்பட்டு காத்திருக்க வைக்கப்படுகிறார் . பின்னர் சில காலம் கழித்து அவருக்கு உரிய இடம் உருவாகு வந்து அது அவருக்கு அளிக்கப்படுகிறது. பதவியற்ற அந்தத் தனிமை காலத்தில் அவர்கள் தங்களின் செயல்பாடுகளை பார்வையை மற்றும் நட்பு வட்டத்தை மறு வரையறை செய்து கொள்ள உதவுகிறது. அந்த காலகட்டத்தில் பலர் உதிர்ந்து சிலர் புதிதாக வந்திணைவதை பார்த்திருக்கிறேன். அந்த தனிமையை தாள முடியாத சிலர் கட்சிக்கு எதிராக திரும்பி அதில் இருந்து வெளியேறிவிடுகின்றனர். உருவாகி வந்த சிலர் ஆனந்த சர்மா , முகில் வாஸ்னிக் , குலாம்நபிஆசாத், ஹரிபிரசாத், மணீஷ்திவாரி, தினேஷ் குண்டுராவ்,ஆஸ்கார் பெர்னான்டஸ் போன்ற பல நூறு பேர்களை இப்படி அடையாளம் காட்ட முடியும்.
இன்னொரு வழிமுறை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இல்லாத காலங்களிலும் அது அரசிற்கு இணையான மந்திரி சபை போன்ற ஒன்றை தனது கட்சியில் உருவாக்கி அகில இந்திய நிர்வாகிகளை் கொண்டு அமைக்கிறது ஒவ்வொரு நிர்வாகியும் ஒரு அரசு துறையை ஒருங்கிணைக்கிறார். அவர் அமைச்சராக இருந்த போது நிர்வகித்த அதே துறை. அதை இப்போது கட்சியில் இருந்து தொடர்புறுத்துகிறார். அங்கு நிகழ்வதை தனது அரசு அதிகாரத் தொடர்புகளை உபயோகப்படுத்து உடனுகுடன் அறிந்து கொள்கிறார் மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பும் போது விடுபட்டதாக அல்லது புதிதாக அறிந்து கொள்ள எதுவும் இருப்பதில்லை. சட்டென அனைத்து அதற்கான இடத்தில் சென்று அமர்ந்துவதுடன் காலதாமதன்றி செயல்படவும் முடிகிறது. அது ஒரு நல்ல அதிகார அடுக்காக செயல்பாடுகளை நெறிபடுத்தக் கூடியதாக பார்த்திருக்கிறேன். இதில் சில நடைமுறை சிக்கல்களும் இண்டு . அரசியல் அதிகாரத்தில் சிக்கலில்லாத ஒன்று என எதுவும் இல்லை.
நான் எனக்கான கருதுகோளை இங்கிருந்து பெற்றிருக்க வேண்டும்.நான் அரசு அதிகாரத்தை கையாள்வது குறித்த பயிற்சி மற்றும் அறிமுகம் பற்றிய கனவில் இருந்தேன்.ஆட்சி மாற்றம் உறுதி என்கிற அலர் ஓராண்டிற்கும் மேலாக நிலவிய சூழலில் அதை விரைந்து செயல்படுத்த நினைத்தேன். மாநில அரசியலின் இரு கூறுகளில் ஒன்று அரசியல் அதிகார அடுக்கில் முக்கிய இடத்தில் நிறுவிக் கொள்வது
அதிகாரத்தில் நிறுவிக்கொள்வது இரண்டு அதிகாரிகள் மத்தியில் முக்கியத்துவம் பெறுவது என்பதாக இருந்தது. அனைவருக்கும் சம இடத்தில என்னை வைத்துக்கொண்டதால் நான் எனது வசீகரத்தை இழந்திருக்கலாம் அனைவரையும் இணைக்கும் புல்லிய இருந்தேன் அனால் அரசியலில் மேஅல் நகரும் பாதை பிறருக்கு போதுமானதாக இருக்க வில்லை. இங்கு துண்டு துண்டாக சில நிகழ்வுகளை அவதானிக்க நினைக்கிறேன் ஒன்று சண்முகம் கண்ணன் மற்றும் ரங்கசாமியின் வழிமுறைகள் அவற்றில் இருந்து கிடைத்த புரிதலில் நான் எனக்கான பாதையை தெரிவு சீய்த்தேன் நான்கும் நான்குவித பலன்களை கொடுத்த அதே சமையம் இறுதியில் ஒரே இடத்தை சென்று அடைந்தன