https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 22 பிப்ரவரி, 2023

அடையாளமாதல் * வடியும் இளைஞர் *

  


ஶ்ரீ:



பதிவு : 666  / 856 / தேதி 22 பிப்ரவரி  2023



வடியும் இளைஞர் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 62.







பல வகைகளில் தங்களுக்குள் பிளவுபட்டுக் கிடக்கும் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒருமித்த வகையில் ஒரு அணியாக திரண்டது இளைஞர் அமைப்பு மீளவும் கட்டமைக்கப்படுவதை எதிர்க்கும் போது மட்டும் என்பதை அறிந்திருந்தேன் . நாராயணசாமி போன்ற அகில இந்திய பொறுப்பில் இருந்தவர் கூட புதுவையில் இளைஞர் காங்கிரஸை விரும்பாததற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிகிற அதே சமயம் மற்றவர்களும் அப்படியே விரும்புகிறார்கள் என்றாலும் நாராயணசாமியின் காரணங்களில் இருந்து மாறுபட்டு வேறு சில நுட்பமான காரணங்களால் அவர்கள் எங்களுக்கு எதிர் நிலை எடுத்திருந்தனர். கட்சியில் மூத்த மாநில மற்றும் தொகுதிகளின் தலைவர்கள் கட்சிக்கு சம்பந்தமில்லாத தங்களுடைய உள்ளூர் பிற கட்சித் தலைவர்களுடனான சமரசங்களை எப்போதும் தங்களின் நலனுக்கு உகந்ததாகவே எடுக்கிறார்கள். அப்போதெலாம் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டு அதை அவர்களின் செயல்கள் அரசியலின்மையாக பிறரால் புரிந்து கொள்ளப்படுவது குறித்து அவர்களுக்கு எந்த கூச்சமும் இருப்பதில்லை . தாங்கள் எதிர்மறை அடையாளங்களாக புரிந்து கொள்ளப்படுவதை பற்றியும் அவர்கள் கவலையும் கொள்வதில்லை. மாநிலத் தலைமை அதை காணாதது போல இருந்துவிடுகிறது என்பதால் நிகழும் மனக் கொதிப்பு கட்சியின் உள்ளூர் தலைவர்களுக்கு எதிரானதாக உருமாற்றமடைந்தது . கட்சியின் அதிகார பதவிகளில் அமர்ந்திருந்தாலும் தகுதியற்றவர்களாக எளிய சாமான்யர்களாக அவர்களை வெளிக்காட்டியதுஅரசியலில் வளர்ந்து வர விரும்பும் இளைய தலைமுறையானர் வேறு வகையானவர்கள் என்பதால் தங்கள் உள்ளூர் தலைமைகளை அவர்கள் நிராகரிக்கரிக்கிறார்கள். இது காற்றோட்டம் இல்லாத குட்டையாக அவர்களது குழுவை சிறுத்து உறைய வைத்து விடுகிறது . அதில் உருவாகும் வெற்றிடத்தை சுற்றி பிழைப்பிற்கான ஒரு குறுங்கூட்டம் சேர்ந்து பிறரிடம் இருந்து அவர்களை மேலும் அந்நியப்படுத்துகிறது


ஊர் பிரமுகர்கள் இந்தப் போக்கை வெறுத்து ஒதுங்க அந்த இடத்தை இயல்பாக இளைய தலைமுறையைச் சேர்ந்தவர் வந்து நிரப்ப வேண்டும் . ஆனால் செயலூக்கம் கொண்ட இளைஞர்கள் அவர்களை ஏற்பதில்லை. அவர்களுக்கு உள்ள தலைமுறை இடைவெளியால் தொடர்புறுத்தல் மற்றும் நடைமுறை சிக்கலை அது கொண்டு வந்தது . கண்ணனின் இளைஞர் காங்கிரஸ் தலைவரானதும் அவரை நோக்கி பாய்ந்த புதிய இளைஞர்களை தங்களுக்கு கீழ் கொண்டு வருவதில் தோல்வியுற்றவர்களுக்கு் கண்ணன் மட்டுமல்ல ஒட்டு மொத்த இளைஞர் அமைப்பே வெறுப்பிற்குள்ளானது . இந்த போக்கு மாநில கட்சி அமைப்பை மெல்ல சிறுக்கச் செய்து கொண்டிருந்தது. அதனால் அது ஒரு போதும் வளர்ச்சியடையவே இல்லை


புதுவை தமிழக இணைப்பு எதிர்ப்பு எழுந்த காலத்திற்கு முன்பிருந்தே காங்கிரஸ் வீழ்ச்சி ஆரம்பித்திருந்தது. சண்முகம் தலைவராக இருந்த காலத்திலும் கூட இறுதிவரை அவரால் அது சரி செய்யப்படவில்லை. தனது பொறுமை , விட்டுக் கொடுத்தல் மற்றும் சமரச அரசியல் என காய் நகர்த்தலின் வழியாக கட்சி கட்டுடன் பலமாக இருப்பது போன்ற தோற்றத்தை வெற்றிகரமாக உருவாக்கி அதன் முடிவை தள்ளி வைத்தார் . அதையொட்டி காங்கிரஸ் கட்சிக்கு புதுவை மக்களிடமும் தொடர்ந்து ஆட்சியமைக்கும் வாய்புள்ள கட்சியாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. அது உண்மையில்லை என்று சண்முகத்திற்கும் தெரியும் . கட்சியை உயிர்புள்ளதாக வைத்திருக்கும் வித்தை தெரிந்ததால் ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பது மட்டுமே அவரது செயல்பாடுகளில் இருந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் தங்கள் வாய்ப்பிற்காக அமைச்சர் பதவிக்காக கட்சியில் வந்திணைந்தவர்கள் தொடர்ந்து கட்சியை ஆட்சியில் அமரவைத்தார்கள். இதே பாணியை பின்பற்றி கண்ணன் புது கட்சி துவங்கி அரசியல் சக்தியாக பிரகடபடுத்திக் கொண்டார். அந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றது. பின்னர் ரங்கசாமியும் அதே பார்முலாவை பின்பற்ற சண்முகத்திற்கும் கிடைக்காத வரவேற்பை அடைந்து முதல்வராக அமர்ந்தார். சண்முகம் கட்சி பார்முலா பிறர் செய்தாலும் அதே பலனை கொடுக்கும். ஆனால் அதை சணமுகம் போல நீண்ட காலத்திற்கு தக்கவைத்திருத்தலே அதன் வித்தை. கண்ணனால் பெற்ற வெற்றியை தொடர்ந்து கையில் வைத்திருக்க முடியவில்லை. ரங்கசாமியாலும் அதை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன். வயோதிகம் அதற்கான தடை என்தை ஏற்க இயலாது. சண்முகம் தனது 80 அகவையிலும் அதை தொடர்ந்து தனது கட்டில் வைத்திருந்தார்.  


இரண்டாம் முறையாக நடந்த தேர்தல் வேட்பாளர் விஷயத்தில் ரங்கசாமி செய்து கொள்ளாத சில சமரசங்கள் காரணமாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழக்க அந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது . தனது அரசு சூழ்தல் மூலம் முதல்வராக நாராயணசாமி அமர்ந்தது துரதிஷ்டவசமானது. கட்சியின் கடையாணி கழன்று போனது. விளைவு நாராயணசாமியால் புதுவை 60 ஆண்டு கால புகழை அழிந்து முதல் முறை ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவமானகரமாக பதவி இறக்கப்பட்டார். காங்கிரஸில் சண்முகம் உருவாக்கி வைத்திருந்த அனைத்து பிம்பமும் முடிவுக்கு வந்தது. காங கிரஸ் அரசியலின் இடத்தை பாஜாக எடுத்துக் கொள்ள ரங்கசாமி தனது செயலின்மையால் முடங்கிப் போனார்காங்கிரஸ் மூன்றாம் இடம் நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் களம் என்பது முதல் இரண்டு இடத்திற்கான போட்டி மட்டுமே. அதில் மூன்றாவது என இடமில்லை . இன்று துரதிஷ்டவசமாக புதுவை காங்கிரஸ் பொதுமக்கள் கவனத்தில் இல்லா அந்த மூன்றாவது இடத்தில். இரண்டு திராவிட அரசிசியலின் போட்டியால் தமிழக அரசியலில் காங்கிரஸிற்கு நிகந்தது. இனி புதுவை காங்கிரஸ் இயக்கத்தின் எழுச்சி மற்றும் வளர்ச்சி குறித்து பெரிய நம்பிக்கை இல்லை


இதற்கு அடுத்த காலகட்டங்களில் தலைவர்களாக எழுந்த கண்ணன் மற்றும் ரங்கசாமியும் இதில் இருந்து வெளியே வர முடியாமல் ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர்களுக்கு அது வெறும் சட்டமன்றக் கணக்கு மட்டுமே என்றானது . அது அவர்களின் கட்சிக்கு எந்தவிதத்திலும் உதவப் போவதில்லை . சண்முகம் தனது அனுபவம் மற்றும் மௌனத்தால் அந்த காலகட்டத்தில் கட்சியை ஒருங்கிணைத்தார். இரண்டு தலைமுறைகளுக்கு இடையேயான பிளவை அவரால் ஒரு போதும் சரி செய்ய இயலவில்லை என்றாலும் அனைத்து தரப்பிற்குமாக தன்னை பொதுவில் வைத்துக் கொண்டார். கண்ணன் மற்றும் ரங்கசாமி தங்களின் வசீகரம் குன்றிய பிறகு இன்று தளைமுறை பிளவு இல்லை காரணம் அனைவரும் இளைஞர்கள். அவர்களுக்கு கட்சியைப் பற்றிய புரிதல்களை இனி உருவாக்க முடியாது. முன்னாள் தேசியத் தலைவர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதெல்லாம் கூட்டத்தின் மெல்லி நகைப்பு உருவாகும். காரணம் சொல்லுபவருக்கே அதில் பெரிய நம்பிக்கை இல்லை


கண்ணனின் இளைஞர் காங்கிரஸ் மிக சிலரைத் தவிர இறுதிவரை குறுங்குழுவாக செய்பட்டு அதனாலேயே மைய அணியில் வர இயலாமல் காணாமலாகியது. புதிய கட்சி துவங்கி அதன் நிர்வாகிகள் அனைத்து தரப்பையும் கருத்தில் கொண்டு நியமிக்கப்பட்ட பிறகு அது ஒருகோட்டாமுறையாக உருவாகி திறமை அளவுகோலாக பார்கப்படுவதில்லை என்றானது . ஒரு கட்டத்தில் கட்சி நிர்வாகத்திற்கு ஆதரவாளர்கள் என்கிற தகுதி கொண்டவர்கள் வந்து நிறப்பினர். இளைஞர்கள் நிரை நீர்த்துப் போனது இனி அதில் இருந்து புதிய தலைமை எழுந்துவரும் வாய்ப்பு மிக மிக குறைவானதாகவே பார்க்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள் விழா

  2022 ல் எனது மணிவிழாவிற்கு சரியாக ஒரு மாதம் முன்பு கோவையில் ஜெயமோகனுக்கு நண்பர்கள் எடுத்த மணிவிழாவில் கலந்து கொள்ளவும் உடன் ...