https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 22 பிப்ரவரி, 2023

எண்ணமும் பார்வையும்

 22.02.2023

எண்ணமும் பார்வையும்





ஆன்னியின் உள்ளம் நான் சந்திக்கும்போது ஒரு சிக்கலான நிலையில் இருந்தது. அவர் கிறித்தவ மிஷனரிகளுக்குரிய ஆழமான மதநம்பிக்கைகளால் ஆனவர். புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் என்பது ஓர் அடிப்படையான மதநம்பிக்கையும் அதைச்சூழ்ந்து சமகால உலகியல் சார்ந்த பகுத்தறிவும் கொண்டது. அந்த மதநம்பிக்கை இந்த பகுத்தறிவால் பாதுகாக்கப்படுகிறது. பகுத்தறிவின் ஐயங்களையும் பதற்றங்களையும் மதநம்பிக்கை போக்குகிறது. அந்த பகுத்தறிவு ஒரு கோட்டை, ஒரு வாள்.


https://www.jeyamohan.in/131428/


கரு [குறுநாவல்]- பகுதி 1 & 2 இரண்டும் ஷம்பாலா என்கிற திபெத்திய சொர்கம் பற்றி பேசுகிறது. இந்து மத்த்தின் நான்கு யுகத்துடன் ஒத்து போகிற வேறு ஒரு பரிமாணத்தை முன்வைக்க முயல்கிறது .வழக்கம் போல ஜெயமோகனின் வித்தைகளில் முதன்மையானது என நான் கருதும்  நிஜத்தையும் புனைவையும் வரையறை செய்யும் கோட்டை முற்றாக அழிக்கும் ஒன்று. அதை இதில் மிக வெற்றிகரமாக செய்து அந்த கோட்டை அழித்திருக்கிறார் . அதில் உள்ள வேர் சொற்களை கூகுளில் தேடும்போது . நிஜ உலகின் அத்தனை கூறும் இதில் பொருந்தி போகும் போது ஒரு வித திகைப்பை கொடுப்பதுடன் அந்தப் புனைவை முழுதாக நம்பும் ஒரு உலகை காட்டிவிடுகிறது . கரு சிறுகதை வழக்கம்போல பல அடுக்குகளாக பிரித்து பார்த்தால் புது புது திறப்புகளை கொடித்துக் கொண்டே இருக்கிறது . நான் எப்போதும் எனது நிலைப்பாட்டுடன் ஒத்து போகிற கருத்தாக சிலவற்றை வாசிக்கும் போது அது எனக்கான மெய்மையை கண்டடைய அகவயமான ஒரு மின்னலை அளித்து விடுகிறது . நிலவும் சூரியனும் காட்டும் உலகில் ஒரு கண நேர மின்னல் காட்டும் உலகம் முற்றிலும் வேறாகி விடுகிறது . அந்த கதைகயில் இருந்து எனக்கான திரண்ட ஒன்றாக மேலே உள்ள குறிப்பு எனக்கு அதை வாசிக்கும் போது கொடுத்த ஒரு மின்னலை இப்போது எனக்குள் மீண்டும் நிகழ்திக் காட்ட முடியுமா என முயற்சிக்கிறேன். இது ஒருவகையான அசட்டுத்தனமாக , அபத்தமாகக் கூட தெரியலாம்


ஆன்னியின் உள்ளம் நான் சந்திக்கும்போது ஒரு சிக்கலான நிலையில் இருந்தது. அவர் கிறித்தவ மிஷனரிகளுக்குரிய ஆழமான மதநம்பிக்கைகளால் ஆனவர். புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் என்பது ஓர் அடிப்படையான மதநம்பிக்கையும் அதைச்சூழ்ந்து சமகால உலகியல் சார்ந்த பகுத்தறிவும் கொண்டது. அந்த மதநம்பிக்கை இந்த பகுத்தறிவால் பாதுகாக்கப்படுகிறது. பகுத்தறிவின் ஐயங்களையும் பதற்றங்களையும் மதநம்பிக்கை போக்குகிறது. அந்த பகுத்தறிவு ஒரு கோட்டை, ஒரு வாள்.

 சரணாகதி தத்துவத்தில்  ஒரு ஶ்ரீவைஷ்ணவ பக்தனாக அதன் ஆழமான மதநம்பிக்கைகளால் நின்று கொண்டு புறவய உலகம் காட்டும் அன்றாடங்ளுடன் ஒரு வித சமரச , விலகல் மனப்பானமையுடன் கடந்து செல்ல இலக்கிய வாசிப்பு வழிகளை தந்துவிடுவதாக நினைகிறேன் விக்கி பீடியாவில் சரணகதி இப்படு விளக்கபடுகிறது


சரணாகதி (Saranagati - surrender) என்பது இந்து சமயத்தின் வைணவ அடியார்கள், எவ்வித பலன் கருதாமல், தங்களை உடல் அளவிலும், ஆன்ம அளவிலும் முழுவதுமாக, பரம்பொருளான திருமாலிடத்தில் ஒப்புவிக்கும் ஒரு வகையான பக்தியாகும். சரணாகதி தத்துவம் இராமானுசர் மற்றும் சைதன்யர் ஆகியவர்களால் வலியுறுத்தப்பட்டதாகும் .பக்தனின் உயர்ந்த குறிக்கோளான திருமாலையும் இலக்குமியையும் அல்லது கிருஷ்ணரையும் இராதையையும் அடைவதற்கு, சரணாகதியே எளிதானது என இராமானுசரும், சைதன்யரும் போதிக்கின்றனர்.


வீடணன் மற்றும் கஜேந்திரன் முறையே இராமர் மற்றும் பெருமாளிடம் செய்த சரணாகதி வைணவ சமயத்தில் பெரிதும் போற்றப்படுகிறது.


இதை ஒருவகை நகைப்புடன் எடுத்துக் கொண்டாலும்

இன்றைய புரட்டஸ்டண்ட் கிறிஸ்துவத்துடன் ஊடாடி பார்த்தால் ஒரு ஒப்புமை தோன்றிவிடுகிறது என்பது ஓர் அடிப்படையான மதநம்பிக்கையும் அதைச்சூழ்ந்து சமகால உலகியல் சார்ந்த பகுத்தறிவும் கொண்டதாக ஆக்கிக் கொள்ளும் போது அன்றாட உலகியல் நிலையழிவில் இருந்து வெளியேற அதைப் போன்ற ஒன்றை நான் எப்போதும் முயற்சிக்கிறேன் . அதற்கான தர்கம் உடனே உருவாகி நிலை கொண்டு விடுகிறது அதன் வேர் மதத்தில் இருப்பதை கண்டு கொண்டவுடன் அந்த மதநம்பிக்கை இந்த பகுத்தறிவால் பாதுகாக்கப்படுகிறது என்கிற சொல் என்னை மிக நெருக்கமாக அதனுள்ளே கொண்டு விட்டு விடுகிறது . அதே சமயம் பகுத்தறிவின் ஐயங்களையும் பதற்றங்களையும் மதநம்பிக்கை போக்குகிறது. அந்த பகுத்தறிவு ஒரு கோட்டை, ஒரு வாள்.


இது ஒருவகை மிக கச்சிதமான சமன்பாடு எனது ஆழுள்ளம் எனது ஆன்மீக நிலைப்பாட்டை ஒட்டி இருக்கும் ஒன்றாக நினைக்கிறேன். மரபான ஒரு கோட்பாட்டை வாழ்வியலில் கொண்டு வரும் ஒன்றை ஆழ்மனம் வெளிப்படுத்தும் கோணத்தில் சிந்தித்திருக்கிறேன் . உறுதியாக அதை பின்பற்றி இருக்கிறேன்.பலவற்றில் இருந்து மிக வெற்றிகரமாக மீண்டிருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்