https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 22 பிப்ரவரி, 2023

அடையாளமாதல் * எனக்கென தேர்ந்தவை *

  ஶ்ரீ:பதிவு : 666  / 856 / தேதி 22 பிப்ரவரி  2023* எனக்கென தேர்ந்தவை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 62.

ஆழ்மனத்தில் அவரும் அதை அனுமானித்திருக்க வேண்டும். இறுதியில் நான் சொன்னதே நிகழ்ந்தது. கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறாவிட்டாலும் அனைத்து விதத்திலும் உள்ளூர் கட்சிக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்தார். அவரது அணுக்கர் சந்திரகாசு NR காங்கிரஸில் இணைந்தது சண்முகத்தின் எண்ணத்தை வெளிபடையாக அறிவித்தது. இதில் வினோதம் ரங்கசாமி சண்முகத்தை மூப்பனாருக்கு அருகில் வைத்து அவரிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதை வெளிப்படையாக்கினார். அவற்றை செயல்படுத்தினாரா என்பது அந்த இருவர் மட்டுமே அறிந்த ரகசியம். தனக்கு மேலே ஒரு தலைமை போல சண்முகம் அமர்ந்திருப்பதாக அவர் வெளிப்படுத்தியது ஒரு உருவகம் மட்டுமே. அது அப்படித்தான் என காட்ட ஒவ்வொரு மாதத்திலும் பல முறை காரைக்காலுக்கு சென்று சண்முகத்துடன் ஆலோசிப்பதை வழக்கமாக்கினார். பின்னர் அவரது கட்சி சார்ந்த தொண்டர்கள் காரைகாலுக்கு படையெடுத்து அதை உண்மையாக்கினர்


சண்முகம் புதுவையில் இருந்து காரக்காலுக்கு இடம் பெயர்ந்த பின்னர் ஓரிரு முறை அவரை சென்று சந்திருத்திருக்கிறேன். அவை முறைமை சார்ந்தவை. எனது அரசியல் நண்பர்கள் அவரை தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருந்ததை பின்னர் அறிந்து கொண்டேன். எனது அரசியல் நண்பர்களை விட்டு நான் விலகிய பிறகு நண்பர்கள் சண்முகத்தை சந்திப்பதை வழக்கமாக்கி கொண்டார்கள். ஓய்வில் இருந்ததாலும் எந்த கட்டுப்பாட்டையும் தனக்கு வைத்துக் கொள்ளாத சண்முகம் அனைவரிடமும் அரசியல் குறித்து தனது வெளிப்படையான விமர்சனத்தை வைக்கத் துவங்கி இருந்தார். அவரை சந்தித்த நண்பன் ஒரு முறை என்இடம் சொன்னான். ஒவ்வொரு முறையும் என்னை பற்றிய பேச்சு அங்கு எழுந்துவிடும். ஒருமுறை சண்முகம் அவர்களிடம்எனது அரசியல் பலத்தை தான் அறியத் தவறிவிட்டதாக சொன்னதை என்னிடம் கூறிய போது என்னிடம் அது எந்த அசைவையும் நான் உணரவில்லை. வழக்கம் போல அது ஒரு வெற்று உணர்ச்சியாக இருக்கலாம். என்னை கூர்மையாக அவதானிக்க தவறியதாக அவர் சொன்னது பொய்.1998 களில் எனக்கு நான் உருவாக்க முனைந்த அமைப்பு நிலைத்திருக்க அதற்குள் முழு அளவில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்க  வேண்டும் என்கிற நிர்பந்தமிருந்தது . நான் அவர்களை தயாரிக்க நினைத்த செயல் அந்த தில்லி ரயில் பயணம் ஊழின் காரணமாக சொதப்பிய பின் அடுத்த வாய்ப்பு பயற்சி முகாமாக இருந்தது ஆனால் அதை சண்முகம் தேவையற்று குழப்பினார். ஆழ்மனம் எனக்கான இடத்தை அடைவது ஏறக்குறைய நிகழாது என்பதை திரும்பத்திரும்ப அறிவுத்திக் கொண்டே இருந்தது. நான் அவற்றை வழக்கம் போல புறந்தள்ளி எனது முயற்சியில் இருந்தேன். பல முறை அந்த உள்ளுணர்வுகளுடன் பொருதி பல சந்தர்பங்களில் அவற்றை வென்றிருக்கிறேன். ஆனால் அவற்றில் கிடைத்த புரிதல் வேறுவிதமானவை. ஆழ்மனம் சொன்னது மட்டுமே நிகழ்ந்தது. எனது ஆழ்மன அறிவுறுத்தலை ஒதுக்கி செயலாற்றிய போது அதிலிருந்து எழுந்த பலன்கள் உடனடியானவைகள். ஆனால் நீண்டகால போக்கில் அதில் திரிபுகளை எனக்கெதிராக திரும்பிய சந்தர்பங்களில் இருந்து நான் பெற்றவை நான் அவற்றை செய்திருக்க் கூடாது என்பதாக இருந்தது. எந்த செயலுக்கும் பலன் உண்டு என் நோக்கில் அவை சரியானவைகளாக தெரிந்திருக்கலாம். ஆனால் அவை மறுக்கப்பட்டவைகள். வலிந்து அவற்றை இழுக்கும் போது கிடைக்கும் பலன்கள் மிகச் சிறியவை. ஆனால் மைய நீரோட்டத்தில் இருந்து பிறதொரு வளைவில் நான் வெளியேற்றப் பட்டிருப்பதை தாமதமாக உணர்ந்திருக்கிறேன். அதன் பின் இன்று வரை பாதை தெளிவில்லாதவைகளில் பயணப்படுவதில்லை. அன்றைய புரிதலில் என்னளவில் எனக்கு திறந்து கவடுக்கும் ஒவ்வன்றும் ஒரு வாய்ப்பு அல்லது ஒரு விளையாட்டு அதில் தோற்றால் கூட நான் பெரிதாக இழக்க ஏதுமில்லை. அரசியலில் நமக்கான நேரம் வரும்வரை காத்திருப்பது.அதுவரை எடுத்த முயற்சியில் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பது என்பது எனது முடிவாக இருந்தது


அனுபவமற்ற புதிய இளம் தலைவர்களுக்கு கட்சி அரசியில் ஆடல் என்பது அரசாங்க அலுவலகத்தை நோக்கி நகர்வது. அதுவரை காத்திருப்பது தங்களுக்கான பாதையை வரையறை செய்து கொள்வது என அவர்களுக்கு புரிய வைப்பது என்பதே எனக்கான சவால். அவர்கள் அனைவரும் அரசியலை பிழையாக புரிந்திருந்தனர். அவர்களுக்குள் அரசியல் சாத்தியங்கள் குறித்து உணர்த்த பழைய நிர்வாகிகள் சிலரையாவது அதில் இணைக்க வேண்டும் என்கிற முயற்சியை அவர்கள் கடுமையாக நிராகரித்தனர். என்னை பொருத்தவரை அரசியல் அங்கீகாரம் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் உள்ள ஒன்று . அது அரசு அதிகார இயந்திரத்துடன் தொடர்ந்து உரையாடுவது. மீள மீள அதன் மெத்தனப் போக்கை உபயோகப்படுத்தி அதை நம்மை பார்க்க வைப்பதும் நாம் முன் வைப்பவற்றை நோக்கி செயல்பட வைக்க முயற்சித்தலை பற்றியதாக இருந்தது. நம்மை நோக்கிய அதன் பார்வையை ஒவ்வொரு முறையும் அதை மறுவரையறை செய்வது தொடர் மனுக்களும் அது நகராத போது அதை எதிர்த்து நடத்தும் போராட்டமும் அரசியலில் ஒருவரின் இடத்தை முடிவை செய்வது . ஆட்சிக்கு ஒருபோதும் வர முடியாத கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை அரசு அதிகாரி அஞ்சுவது அவர்கள் நாளை வீதியில் நின்று தங்களை விமர்சிப்பார்கள் என்பதற்காகவும் தொடர் மனுக்கள் மூலம் யாருக்கு எதிராகவும் அவர்களால் ஓயாத போர் போல ஒன்றை தொடுக்க முடியும் என்பதால். அரசாங்கத்தில் ஒருவருக்கு எதிரான மனு உட்காரக்கூடாத கோப்புகளில் சென்று அமரும் போது அது அவர்களை வாழ்நாளில் தூங்க முடியாமல் செய்துவிடுவதும் உண்டு.அந்த பாணி அரசியல் மட்டுமே ஒருவரை திரளில் இருந்து உயர்த்திக் காட்டுவது.

அது நிகழ அரசாங்கம் மற்றும் அரசு இணையும் ஒரு புள்ளி பற்றிய தெளிவான அறிதல் . பொதுமக்கள் சிக்கலுக்கு தன்னை கொடுக்காதவன் அரசியலில் ஒரு போதும் அதன் உயரத்தை அடைய முடியாது . பிற அனைத்தும் உச்சம் போல தோன்றிலும் விரைவில் விசையிழந்து விடுவதை பார்திருக்கிறேன்


கட்சி தொண்டர்கள் அரசாங்க அலுவலகத்தில் எதிர் கொள்ளும் நடைமுறை சிக்கலை சரி செய்ய அரசு அலுவலகத்துடன் தொடர்பை உருவாக்கிவது வளர்த்தெடுப்பது. எடுக்கும் முயற்சியில் தேக்க நிலை உருவானால் அதை எதிர்த்து அதன் வழியாக அடையாளம் காணப்படுவது என்பது எனது வழிமுறையாக இருந்தது. அதிகாரத்தை நோக்கி செல்லும் போது மட்டுமே சில ஒழுங்குகள் உருவாகிறது. அதிகாரம் எதையும் உருவாக்கவோ வளர்த்தெடுக்கவோ செய்யாது என்பதை அனுபவத்தில் இருந்து அதை அறிந்திருக்கிறேன். அதிகாரம் அதில் திளைக்கும் நினைவு ஒன்றையே கொடுக்கும். எந்த உட்கட்டமைப்பையும் அந்த நேரத்தில் உருவாக்க நினைத்தால் அதில் போலிகளே உள்நுழைந்து அதிகாரத்தின் பக்கத்தில் நின்று கொண்டு அதிகார துஷ்பிரயோகத்தை உருவாக்கி அதிகாரத்தை இழக்கும் போது  வெளியேறி விடுவார்கள் . ஆட்சி மாற்றம் நிகழும் முன்னர் கட்சி நிர்வாகம் அனைத்தையும் ஒருங்க வேண்டிய நிர்பந்தம் என்மீதான அழுத்தமாக உணரத் துவங்கினேன். இப்போது இல்லை எனில் இனி ஒருபோதும் இல்லை என்பதே கள எதார்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக