https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

அடையாளமாதல் * சமனின் சிக்கல் *

 


ஶ்ரீ:



பதிவு : 664  / 854 / தேதி 07 பிப்ரவரி  2023



* சமனின் சிக்கல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 59.





தனதுதியரியின் தர்க்க ரீதியில் நடைமுறை சாத்தியம் குறித்த அனுபவத்தை தனது வாழ்கையில் இருந்து துவங்கியதைப் பற்றி பல கணக்குகளாக அவர் பலமுறை சொன்னது தான். இந்தப் பதிவு  புதுவை விடுதலை காலகட்டத்தில் சண்முகத்தின்தியரியின் படி அவரது கணிப்பும் அதன் பின்புலமான அவரின் உள்ளுணர்வும் நம்பமுடியாத துல்லியம் கொண்டிருந்ததாக நினைக்கிறேன். அந்த ஆழ்மனப் புரிதலை அவர் காமராஜரிடமிருந்து பெற்றுக் கொண்ட தகவல்கள் அடைப்படையாக இருந்திருக்க வேண்டும். நேருவிடமுள்ள நெருக்கம் காரணமாக காமராஜருக்கு புதுவை குறித்து எழ இருக்கும் சர்வதேச அரசியல் சிக்கல்கள் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தன . இந்திய சுதந்திரத்திற்கு பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையை போல அல்ல இந்திய அரசு அமைந்த பிறகு புதுவை விடுதலையைப் பெறுவது. அப்போது அந்த அரசிற்கு எழும் சர்வதேச நிர்பந்தங்கள் வேறு வகையானவை. தவிற புதுவை சுதந்திரப் போராட்டம் இந்திய அரசின் கவனத்தை மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளின் கவனத்தையும் பெற வேண்டும் என்கிற புரிதலையும் சண்முகம் காமராஜரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.அதை விரித்து விரித்து புதுவை விடுதலையும் அது ஒட்டிய சட்ட நடைமுறைகள் துவங்கும் போது தங்களுக்கு உரிய இடம் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் அவருக்கு துல்லியமாக தெரிந்திருந்தது.


புதுவை விடுதலை இயக்கம் தனது இருப்பை மிகச் சரியாக வெளிப்படுத்த இயலாமைக்கு புதுவையின் வன்முறை அரசியலும் அதற்கு ஆதரவளித்த பிரென்ச் நிர்வாகமும் காரணம். அது உள்ளூரில் புரிந்து கொள்ளக் கூடியது நியாயம் ஆனால் அதை கடந்து பொது வெளியில் தன்னை சரியாக முன்வைக்கத் தவறியதாக இந்திய தலைவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. போராட்டம் மக்கள் இயக்கமாக வெளிப்படாமல் குறுங்குழு செயல்பாடு போன்ற தோற்றத்தை அளித்துவிட்டதால் அது தனது பேரம் பேசும் இடத்தை இழந்தது துரதிஷ்டவசமானது. அதன் பொருட்டே விடுதலை குறித்த பூர்வாங்க பேச்சுவார்தைகளில் அதற்குறிய இடம் வழங்கப்படவில்லை.அது போல ஒன்று நிகழுக் கூடும் என சண்முகம் ஊகித்திருக்க வேண்டும். அந்த சிக்கலை ரெட்டியாரிடம் சொன்ன போது அந்த கருத்து அவரிடம் எடுபவில்லை. சண்முகத்தின்தியரிஉருவாக்கியமீபொருண்மைமாதிரியான கணிப்பை ரெட்டியாரிடம் கொண்டு சேர்க்க சண்முகத்தாலும் இயலவில்லை. அவரே கூட அந்த கருத்தியலின் தொடக்க கால புரிதலில் இருந்திருக்கலாம்.


இந்திய விடுதலை ஏறக்குறைய உறுதியான நிலையில் அத்துடன் இணைந்த புதுவை விடுதலை பற்றிய எதிர்பார்ப்பு உருவாக்கி இருந்தது. ஆனால் மிக மிக தாமதமாக 1954 களில் ஆட்சி மாற்றத்திற்கான பூர்வாங்க  பேச்சுவார்த்தை இந்திய மற்றும் பிரென்ச் அரசாங்கத்திற்கும் துவங்கியது. அதில் புதுவை விடுதலை இயக்கத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. ரெட்டியாரிடம் அதை விளக்க முயன்ற போது முதன்மை தலைவர் என்கிற இடத்தில் இருக்கும் ரெட்டியாருக்கும் சண்முகத்திற்குமான மேல் கீழ் போன்ற அடுக்கு அதற்கு தடையாக இருந்திருக்கலாம். தனது தியரி மீது சண்முகத்தின் அசையாத நம்பிக்கையை ரெட்டியாரிடம் கடத்த இயலாமையால் உருவான விரக்தியின் அடையாளமாக இறுதிவரையில் அவரின் மீதான அந்த எள்ளலை சண்முகத்திடம் பார்க்க முடிகிறது . புதுவை சுதந்திர போராட்ட வீரர் வெங்கடசுப்பா ரெட்டியரின் அரசியல் நடவடிகைகள் தீவிரமானவை என்றாலும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் அவரை பற்றி பேசுகிறபோது அவரின் உடல்மொழியை எள்ளலுடன் வெளிப்படுத்தி அவர் பேசுகிற பாணியில் பேசுவார். ரெட்டியருக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் கைவிரல் நகத்தை கிள்ளும் பழக்கம் இருந்திருக்க வேண்டும். அவரை பற்றி என்ன சொல்ல நேர்ந்தாலும் அவர் செய்வதை அப்படியே பகடியாக நடித்துக் கட்டுவார். அவர் நம்புவது ஒரு அரசியல்வாதியின் ஆழ்மனம் நம்பிக்கையிலான உணர்வுடன் புறவுலக யதார்த்தத்தை சென்று தொடும் கணம் ஒன்று உண்டு என்று. ரெட்டியார் அதை செய்யத் தயங்குவதையும் தன் கணக்குகளை நம்ப மறுப்பது பற்றிய கசப்பு அவருக்கு இருந்தது


ஆட்சி மாற்றத்தின் போது நடந்த அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் ரெட்டியார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை இரண்டாம் இடத்தில் வைத்த போது சண்முகத்தின் கணக்கு வென்றிருந்தாலும் அந்த சரித்திர முக்கியமான நிகழ்வில் புதுவை விடுதலை இயக்கத்தினர் அனைவரும் முற்றாக தோற்றிருந்தனர். அதுவரை யாரை எதிர்த்து புதுவை விடுதலை முயற்சி நடந்ததோ யாரால் அது முன்னகர முடியாமலானதோ அவர்கள் அனைவரும் புதுவையின் முதல் அரசின் சார்பில் முன் வரிசையில் அமர்ந்து பேச்சு வார்த்தையிலும் பின்னர் ஆட்சியில் பங்கு கொண்டார்கள். விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் சர்வதேச நிர்பந்தத்தாலான அந்த காட்சி வெறுப்புற வைத்திருக்க வேண்டும். தங்கள் இடம் பறிபோனதை சண்முகத்தால் எளிதில் கடக்க இயலவில்லை


சண்முகம் தியரிப்படி புதுவை விடுதலை தங்களுக்கு அவ்வளவு சாதகமாக நிகழாது என்பதற்கு விடுதலை போராட்டதில் இயக்கம் தன்னை ஒரே அமைப்பாக முன்வைக்க இயலவில்லை என்பது அடிப்படைக் காரணம் .புதுவையிலும் அதன் பிற பகுதிகளிலும் விடுதலை போராட்டம் ஒருங்கிணைவு இல்லாமையால் அதன் சுதந்திரம் துண்டு துண்டாக நிகழ்ந்தது. இந்திய விடுதலை நிகழ்ந்த காலகட்டதில் மாஹீ மற்றும் ஏனாம் தனித் தனியாக விடுதலை பெற்றது. அது அனைத்தையும் புரட்டிப் போட்டு புதுவை விடுதலைக்கு தடையாக இருந்தவர்கள் கைகளில் புதுவையின் முதல் அரசு சென்று சேர்ந்தது. சண்முகத்திற்கு இதை விட கொடுங் கனவு இருந்திருக்க முடியாது. இனி வாழ்நாளெல்லாம் அவர்களுடன் மோத வேண்டும். அதை விட வருத்தமளிப்பது இந்திய அரசு அவர்களை முதன்மை சக்தியாக வைத்து பேச்சு வார்த்தையை துவக்கியது. தங களது தலைவர்களே தங்களை இரண்டாம் இடத்தில் வைப்பது மனம, வெதும்ப வைப்பது. பிரென்ச் அரசின் அங்கமாக இருந்த போது உள்ளதை விட இப்போதுள்ள அவர்களின் அதிகாரத்திற்கு எதிராக களம் கண்டாக வேண்டிய சூழல் உருவானது. அவை எண்ணியதைவிட மிக கடினமானதாக இருந்தது. அரசமர்ந்த சில மாதங்களில் பதவியில் இருந்த முதல்வர் இறந்துவிட குபேர் அடுத்த முதல்வராக வந்தது எரிவதில் எண்ணை இட்டது போலானது. அந்த அரசில் வெங்கடசுப்பா ரெட்டியார் மற்றும் சண்முகம் அமைச்சராக இருந்தனர் என்பது ஒன்றே அப்போதைய ஆறுதல்.


தியரியின் படி அந்த தொடக்கம் வேறொரு விளைவை உருவாக்கி பிறிதொன்றுக்கு நகரும் என்பது. அதிலிருந்து சண்முகத்திற்கு புதிய வாய்ப்பு திறந்திருந்தது . அது அவரை புதுவை அரசியலின் மையத்திற்கு அழைத்து வரும் வாய்ப்பு. புதுவை விடுதலை குறித்த விஷயங்களில் ஈடுபாடுமாறு தமிழக முதல்வராக இருந்த காமராஜரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. காமராஜருடனான தொடர்பு சண்முகத்திற்கு வலுப் பெற்றது இந்த காலகட்டத்தில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்