ஶ்ரீ:
பதிவு : 664 / 854 / தேதி 12 பிப்ரவரி 2023
* நிகழ்வு பிளந்த காலம் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 60.
“இதே ‘தியரி’யுடன் சிறிது உள்ளுணர்வும் தர்க்கமும் தெரிந்த யாரும் அதன் நுண்மைக்குள் வர முடியும் என்றால் அதிகாரத்தில் இருப்பவர்களும் அதை போன்ற ஒன்றைப் பயன் படுத்த முடியுமே”என்றதற்கு. “அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு எதிரானவற்றை மாற்றியமைக்க தங்களின் அதிகாரமே என்கிற உருவாக்கும் பிம்பத்தில் இருந்து தப்பிக்க முடியாதவர்கள் ” என்றார். “கணக்குகளை நம்ப வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன் அரசியல் ஆட்டத்தில் தவறவிட்டவன் . தனது இடத்தை நோக்கிய எதிர்காலப் பயணத்தில் உள்ளவன். தனக்கான இடத்திற்கு காத்திருப்பவன். நான் சொன்ன இந்த கோட்பாடு அவர்களுக்கானது” என்றார். இதுபற்றி நான் உனக்கு சொன்னது போல வேறு யாருக்கும் சொன்னதில்லை. இது போல ஒன்றை சென்று தொட முடியும் என அவர்களுக்க தெரியாது. இது நான் நீண்ட காலம் மெல்ல என் மனதை பழக்கி எடுத்தது ” என்றார். இதை “தோற்று அமர்ந்திருப்பவர்கள் மோட்டுவளை பார்த்து போடும் கணக்கு போல” என அவரை நான் பகடி செய்வதுண்டு . “இது போன்ற அவதானிப்புகளை பிறர் உருவாக்கி ஒருவருக்கு அளிக்க முடியாது. யாருக்கு தேவையோ அவன் தனது நெருக்கடியில் வாழ்கையில் இருந்து அவற்றை கண்டடைய வேண்டியது, அதற்கு அடிப்படை ஆழ்மன வழிகாட்டல், உள்ளுணர்வு.“அதே சமயம் அரசியலில் வென்று ஆட்சிக்கு வருபவன் அதிகாரத்தில் அமர்ந்த அந்த கணம் முதல் தோற்க துவங்குகிறான்.அவனுக்கு எதிரான சவாலை கொடுக்கும் வேண்டிய காலம் தோற்றவன் விழித்திருப்பதில் துவங்குகிறது” என்றார்.
கால பயணத்தில் மீண்டும் மீண்டும் என ஒன்றை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது என்பது நீட்சேவின் தியரி. ஆனால் நவீன காலகட்டத்தில் இது உடைந்து விட்டது என்றாலும் இந்திய தத்துவியலில் மிக ஆழமான செல்வாக்கு செலுத்தும் கோட்பாடு என்பதால் இதன் உட்கூறுகளை வேறு கருவியை கொண்டு அணுக வேண்டும் என நினைக்கிறேன். அவர் அன்று சொன்னதை இன்று இன்னும் அணுகி பார்க்கிறேன். இன்று அது தரும் புரிதல்கள் வேறுவிதமானவை. இயற்கையின் மாபெரும் வலை பின்னலின் ஒவ்வொரு கண்ணியும் அது அமைந்துள்ள இடத்தைப் பொருத்து தனித்துவமானது. ஒன்றைப் போல பிறிதொன்று இருப்பதில்லை என்பதால் அனுபவமும் அதிலிருந்து பெருமதியும் வேறு வேறானவையாக இருந்தாக வேண்டும் அவை பொதுவில் ஒன்றை புரிந்து கொள்வதில்லை அல்லது ஏற்பதில்லை. அது ஒரு கேயாஸ் தியரி போல ஒரு தொடக்கம் மட்டுமே அது எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பித்திருக்கலாம். இன்று நிகழும் ஒன்றுடன் அதற்கிருக்கும் தொடர்பு ஆச்சர்யமளிப்பது. அதில் பழையன புதியன என்கிற குறியீடுகள் எதுவும் இன்றி காலத்தால் உறையவைக்கப்பட்டவை போல என்பதால் அவற்றில் நவீனம் நவீனம் மட்டுமே என பார்ப்பது வேறு ஒரு கோணம்.
அரசியலுக்கான கால பகுப்புக் கோடுகள் பூமத்திய ரேகை போல ஒரு புரிதலுக்கானது, அதை வரையறை செய்து கொள்பவர்கள் பொருத்து அது மாறுபாடு உடையது. அவற்றை நிஜத்தில் அப்படி வகுத்துக் கொள்ள முடியாது என்றாலும் சில அரசியல் சிடுக்குகளை புரிந்து கொள்ள அந்த வழிமுறையை தவிற வேறு வழிகள் இல்லை. அரசியல் கூட்டி நனவிலியில் இருப்பது என்பதால் அதை புரிந்து கொள்ள இது போன்ற கணக்குகள் தேவையாய் இருந்தது. புதுவை அரசியலில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வு என்பது சணமுகம், கண்ணன் ரங்கசாமி என மூவரின் எழுச்சி வீழ்ச்சி அதை புதுவையில் நிகழ்பவை மட்டும் கணக்கில் கொள்ளாது இந்திய அரசியலில் என்ன நிகழ்ந்து அதை புதுவை அரசியல் தலைவரின் காலத்தை எப்படி பிரதிபளித்தது என்பதை பற்றிய அவதானிப்பு இந்த பதிவு.
ஒரு உதாரணத்திற்கு நரசிம்ம ராவ் பிரதமரானது யாரும் எதிர் பார்க்காதது . அதன் துவக்க புள்ளி ராஜீவ் காந்தி இலங்கையில் செய்து கொண்ட ஒப்பந்தம். பிறதொரு இடத்தில் போர்பஸ் பீரங்கி ஊழல் என சொல்லப்பட்ட ஒன்று. அந்த நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட கமிஷன் தொகை பணத்திற்கு பதிலாக ஆயுதாமாக பாலஸ்தீன யாசர் அராபத்திற்கு கொடுக்கப்பட்டு இஸ்ரேலை சீற்றம் கொள்ள வைத்தது. விடுதலைபுலிகள் இந்த விஷயத்தில் இஸ்ரேலின் கூலிப்படை போலத்தான் செயல்பட்டார்கள் அவர்களுக்கு பின்னால் இஸ்ரேலின் மொசாட் இருந்தது. பாலஸ்தீன அராபத்துடனான நல்லுறவு இந்திரா காந்தி காலத்தில் இருந்து துவங்கியது ராஜீவ் காந்தி அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார். ஆசிய பிராந்திய வல்லரசாக இந்தியா உருவகடுக்கத, துவங்கிய காலம். உள்நாட்டு கலவரத்தை ஒடுக்க மொரீஷியஸிற்கு ராணுவத்தை அனுப்பியது. இலங்கையில் விமானம் மூலம் உணவு பொருட்கள் விநியோகித்தது போன்றவையுடன் பாலஸ்தீன உறவு சம்பந்தப்பட்டது. இவை முழுக்க செய்திகாளலும் ஊகங்கள் கற்பனையால் கோர்க்கப்பட்டது. இங்கிருந்து நரசிம்மராவ் பிரதமரானதிற்கு உள்ள தொடர்பு மிக நுட்பமாணது. அவரது நண்பரான சந்திராசாமி ராஜிவ் கொலையில் சம்மந்தப்படுத்தியது என அந்த சரடு நீள்கிறது.
அதன் பாதிப்பால் நீண்ட காலம் இஸ்ரேலுடனான இந்திய தூதரக உறவு பாதிப்பில் இருந்தது. இந்த அவதானிப்பு நரசிம்ம ராவுடன் தொடர்புறுத்தியதில்லை. ஆனால் அவர் அங்கு வந்தமர்ந்த பாதை இந்த சரடால் கோர்கப்பட்டிருந்தது. மத்திய அரசியலில் நீண்ட தொடர்புடையவருக்கு இன்னும் சில கதவுகள் திறக்கலாம். ஆனால் ஒரு சரடு எப்படி ஒன்றில் இருந்து பிறிதொன்றுக்கு நகர்ந்து புது விளைவை உருவாக்குகிறது என்பதை சொல்ல வந்தது. புதுவை அரசியலில் இந்த தொடர்புறுத்ல் “தியரி” எப்படி செயல்பட்டது என்பதை மூன்று தசாப்தங்களுக்கு முன் என தொடங்கி அது கண்ணனை எப்படி உருவாக்கி காணாமலாக்கியது என அவதானிக்கலாம் என நினைக்கிறேன் .
1985 நீண்ட நெடுங்காலம் ஆட்சியில் இல்லாமலாகி மீண்டும் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைய இருந்த சமயத்தில் நீண்ட காலம் அமைச்சர் பதவிக்காக காத்திருந்த முதலியார்பேட்டை சபாபதி தனக்கு இம்முறை அதற்கான வாய்ப்பு மிக குறைவு என கணக்கிட்டு அவரது ஆதரவாளர்கள் புதுவை அரசியலில் முதல்முறையாக வண்ணியருக்கு அமைச்சர் பதவி என்கிற கோட்பாடு உருவாகி வந்தது ஒரு கருவி மட்டுமே . ஆனால் அந்த கோட்பாடு சபாபதிக்கு எதிராக திரும்பி ஏற்கனவே கண்ணனுக்கு சாதகமாக இருந்த சூழலில் அவர் இந்த வண்ணனியர் கார்டை தனக்கு பயன்படுத்திக் கொண்டார். இதில் வேடிக்கை அவர் தந்தை முதலியார் , அன்னைதான் வண்ணியர் என்பது அதில் வினோதம். சபாபதிக்காக சாதி கோட்டா முணை உடைந்தாலும் அடுத்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுந்தாடிக் கொண்டிருந்தது. ரங்கசாமி முதல்வரானது பின் அவருடன் முரண்பட்டு நமச்சிவாயம் முதல்வர் மாற கட்சியில் இருந்து வெளியேறிய ரங்கசாமி புது கட்சி கண்டு ஆட்சியில் அமர்ந்தது. அதை வண்ணியர் காங்கிரஸிற்கு எதிரான கோபம் என நாராயணசாமியன் அரசியல் புரிந்து கொள்ளப்பட்டு நமச்சிவாயம் காங்கிரஸ் தலைவராக முன் மொழிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக