https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

அடையாளமாதல் * துணுக்குகளின் தெரிவு *

 




ஶ்ரீ:



பதிவு : 663  / 853 / தேதி 03 பிப்ரவரி  2023



* துணுக்குகளின் தெரிவு * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 58.






அரசியல் செயல்பாடுகள் சில சமயங்களில் அசைவற்றதாகி பெரும் தேக்கநிலைக் கண்டு அது நீண்ட காலம் நீடித்து இருக்கப் போவதற்கான தோற்றம் கொண்டுவிடுவது அரசியல் விற்பன்னர்களையும் பிறரையும் திகைக்க செய்கிறது. நடு வீதியில் அமர்ந்திருக்கும் எருமைப் போல எழுப்பும் முயற்சிக்கு எந்த எதிர்வினையும் இன்றி அசையாது அமர்ந்திருந்து சலிப்படையச் செய்துவிடுகிறது . அரசியல் தேக்க நிலையை கடக்க சண்முகத்திற்கான காலத்தின் குறுக்கு வெட்டுத்தியரிஅவரால் அவரது அரசியல் ஆரம்ப காலத்தில் இருந்து செய்து பார்க்கப்பட்டிருக்க வேண்டும் . அதன் கொடுத்த ஊக்கம் காரணமாக இன்று அதை விஸ்தாரமாக விரித்தெடுதிருக்கிறார். ஆரம்பத்தில் அதை ஒரு வகை உள்ளுணர்வாக அங்கிருந்து கற்பனையாக பின்னர் அதை தர்க்கத்தால் சமன் செய்ய செய்தி துணுக்குகளை கருவியாக பயண்படுத்த துவங்கியிருக்க வேண்டும் . முதல் முறையாக என்னிடம் சொன்ன போது எனக்கு மிக அணுக்கமானதியரியாகஉணர அதை முடிந்தது. என்னுடைய பேசுதல் குறைபாட்டினால் என்னை நோக்கிய இளிவரலுக்கும் அனுதாபத்திற்கும் அஞ்சி என்னை தனியனாக உருவாக்கிக் கொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரையிம் என் உலகம் வேறுவகையானது. ஆழ்மன உந்துதலால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிலிருந்து  செயல்பாட்டிற்கு வந்திருக்கிறேன். இன்றும் எனக்கு ஒரே துணை எனது மனம் மட்டுமே. என் எண்ணங்களை தொடர்ந்து அத்துடன் உரையாடுவது வழக்கம். அவை ஆழ்மன வெளிப்பாடுகள் என்கிறகருதுகோள்மிக மிக தாமதமாக எனக்கு அறிமுகமாயின. அதுவரை என் உரையாடல்களுக்கு வழி காட்டியவை என் மனம் என்கிற அடிப்படையில் புரிந்திருந்தேன். ஆனால் அது ஆழ்மனதுடனும் என்னை தொடர்புறுத்தி இருக்க வேண்டும். எனது முடிவுகள் அனைத்தும் அது காட்டிய வழிகளில் அமைத்துக் கொண்டேன் . இது நாள் வரை எனது முடிவுகள் குறித்து நான் என்னை பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன் என் முடிவுகள் தவறானவை என அவை என்னிடம் ஒரு போதும் சொன்னதில்லை.  


இயல்பில் சண்முகத்தின் இந்த கோட்பாடு எனக்கு மிக எளிதாக புரிந்தது எனக்கும் அவருக்குமான இந்த ஒத்திசைவின் வழியாக இருந்திருக்க வேண்டும். அவருக்கு அது முதலில் கற்பனை மற்றும் உள்ளுணர்வின் திசையை தேர்வு செய்ய பயன் பட்டிருக்க வேண்டும். அதற்கு தர்க்க ரீதியான விளக்கங்கள் வழியாக தனக்கு நிரூபித்துக் கொள்ள அன்றாட தினசரி செய்திகளை பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். செய்திகள் அரசியல் அல்லாதோருக்கு தகவல் குப்பையைத் தவிர எதுவும் அளிப்பதில்லை. அரசியலில் மேலோட்டமாக உள்ளவர்களுக்கு கூட அது பொருட்படுத்தும் ஒன்றை தருவதில்லை . அனைவருக்கும் அவை நிகழ்ந்து முடிந்தவைகள் பற்றிய அறிவிப்புகள் மட்டுமே. ஆனால் அரசியலில் அனுபவமும் பொறுப்பும் உள்ள ஒருவருக்கு அவை தெளிவான தடையத்தை வரைபடம் போல விட்டுச் சென்றிருப்பது. ஒரு சிறுகதைப் போல நுணுக்கமாக சித்திரத்தை கொடுத்து ஒன்றிலிருந்து பிறிதொன்றிற்கு கைபிடித்து அழைத்துச் செல்வது . ஒவ்வொரு அரசியல் செய்திக்குப் பின்னால் ஒரு சிந்தனை அல்லது திட்டம் இருக்கும். அது யார் என அடையாளம் காண அதில் அமிழ்ந்துள்ளவர்கள் மிக இயல்பாக கண்டடைய முடியும். அதில் உள்ள மறை செய்தியை மிக எளிதில் பிரித்து மாற்றிக் கோர்த்து அது சொல்லும் கூறாய்வு தகவலை அடையாளம் காண்கிறார்கள் . செய்திகள் ஒருபோதும்  நிகழ்ந்தவற்றை சொல்லாது . கள அரசியல் ஒருபோதும் பத்திரிக்கை செய்தியாவதில்லை .


தினசரிகளில் வரும் அரசியல் குறித்த வெட்டி எடுக்கப்பட்டு அனைத்து செய்திகளை தன் முன் குவித்து ஒவ்வொன்றாக எடுத்து இணைத்து புதிய கோட்பாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வார். அதிலிருந்து கடந்த சென்ற அந்த செய்தியின் கவனிக்கப்படாமல் விடப்பட்ட பின்னணி அதன் காரணம் அன்று உருவாக்கிய அரசியல் மயக்கு அங்கிருந்து எதிர்காலத்தில் அது என்னவாக உருப்பெரும் என்கிற கணக்கை சென்றடையும். ஒரு முறை அதை அவர் விளக்கிய போது அவர் சென்றமர்ந்த கிளை பரவசத்தைக் கொடுத்தது. தினசரிகளின் துணக்குகளை வெட்டி ஒட்டி தேதிவாரியாக அடுக்கி வைக்க அவர் சொல்லும் போதெல்லாம் சலிப்பை அடைந்திருக்கிறேன். பல சமயங்களில் அதுவெட்டிவேலை என நினைத்ததுண்டு . ஆரம்பத்தில் இந்த தகவல்கள் புதுவை மாநில அரசிலாளர்கள் பற்றிய தகவல்கள். அவை மக்களால் மிக எளிதில் மறந்து கடந்து சென்றுவிடுபவை. சில வருடம் கழித்து சம்மந்தப்பட்டவரே கூட மறந்துவிட்ட செய்திகள் மீண்டும் உயிர் பெற்று எழுந்து அவரை தொந்தரவு செய்ய துவங்குகின்றன. சண்முகம் சேகரிக்கும் செய்தி துணுக்குகளுக்கு அவ்வளவே பயன் என நினைத்திருந்தேன். அதற்கு இப்படி ஒரு பயன் உண்டு என யோசித்திருக்கவில்லை


அவரது படுக்கையை ஒட்டியுள்ள அறையில் ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட கோப்புகள் ஆண்டுகளாக அங்கு தூசி மற்றும் பழைய காகித நாற்றத்துடன் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒரு வாழ்நாள் சேகரிப்பு . சில இரவுகளில் தூக்கம் பிடிக்காமல் அந்த கோப்புகளில் உள்ள காகிதங்களை ஒன்றுடன் ஒன்றை பொருத்தி பார்ப்பதை சலியாத குழந்தை விளையாட்டு போல அவர் செய்வதைப் பார்த்திருக்கிறேன் , காகிதங்களுடன் வாழும் இன்னொரு அரசியல்வாதியை நான் சந்திக்கப் போவதில்லை. அதுதான் சண்முகத்தை உருவாக்கி இருந்தது மட்டுமின்றி பிற அரசியலாளர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. அரசியலில் இருந்து அவர் விலகும் எண்ணம் கொண்டவுடன் அந்த செய்தி துணுக்குகளை காரைக்காலுக்கு எடுத்து போவதாக சொன்னார். நான் பகடியாக சிரித்தஅரசியலை விட்டு விலகும் போது இதற்கு என்ன அர்த்தம். நீங்கள் விட்டாலும் அது உங்களை விடாதுஎன்ற போதுபேப்பர் கூழ் இயற்கை உரம் அங்கு நான் வளர்க்க நினைக்கும் செடிகளுக்கான உணவு இதுஎன்றார்


தன்தியரிகுறித்து முதல் முறையாக அவர் பேசிய போது , “காலத்தை கணக்கிட பின்னோக்கி முப்பது வருடங்கள் வரை பயணிப்பது நிகழ் அரசியலை பற்றிய தெளிவை கொடுக்கும்என்றார் . ஒவ்வொரு பத்து வருடங்களை ஒருதசாப்த்தம்”, இரண்டு தசாப்பதங்கள் இணையும் இடத்தைசந்திஎன வகுத்துக் கொள்வது. அரசியல் தேக்க நிலை அந்தசந்திகாலத்தில் உருவாகிறது என்பது முதன்மைக் கோட்பாடு என்றார். அது அடுத்த தசாப்தத்தின் நிகழ்வுகள்கருக்கொள்ளும் காலம். முதல் தசாப்பத்தத்தில் உருவான அனைத்தும் இல்லாமலாகி புதியது முளைப்பது பற்றிய மந்தனம்சந்தியில்நிகழ்வதால் யாராலும் கவனிக்கப்படாது போய்விடுகிறது. அடுத்ததசாப்த்த மத்தியில் அது பேருரு கொண்டு கிளைத்து நின்றுவிடுகிறதுஎன்றார் . இது ஏதோ மழை வரும் காலம் பற்றிய கிராமத்தான் கணக்கு போல என  நினைத்துக் கொண்டதுண்டு.அந்த கோட்பாட்டின் பிடி ஆரம்பத்தில் கிடைக்கவில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்