https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

அடையாளமாதல் * நிகர்நிலை புள்ளி *

 





ஶ்ரீ:



பதிவு : 665  / 855 / தேதி 19 பிப்ரவரி  2023



* நிகர்நிலை புள்ளி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 61.






புதுவை அரசியலில் முதன்மையான பொருட்படுத்தக் தக்க ஆளுமைகளாக நான் இருவரை சொல்லுவேன் . சண்முகம் , கண்ணன். என் பார்வைக்கு அவர்கள் இருவரும் அரசியல் பாதையின் இரு முணைகளில் நின்று அதன் எடையை சமன் செய்கிறார்கள். இயல்பான தலைவரான சண்முகத்தின் விடுபட்ட சில விஷயங்களுக்கு நிகர் செய்யப்பட வேண்டியது என ஒன்று உண்டென்றால் அதை சமன் செய்ய எழுந்தவராக கண்ணனை பார்க்கிறேன். அது வற்றாத எதிர்காலத்தை உறுதி செய்யும் இளைஞர்களின் உள் நுழைவு. இளைஞர்களை அவரை நோக்கி ஈர்த்தது இரண்டு அம்சம். ஒன்று அவரது அபார நினைவாற்றல். ஒரு முறை அறிமுகமாகும் பெயரை அடுத்த சந்திப்பில் நினவில் வைத்திருப்பது. இரண்டு கண்டவுடன் அவர்கள் பெயர் சொல்லி அழைத்து இறுக தழுவுவது. தலைவனுக்கு தன்னை தெரியும் என்கிற நினைப்பே தலைவன் தொண்டன் உறவை என்றும் மலர்ச்சியாக வைத்திருக்கும். சண்முகம் அதற்கு நேர் எதிர். புற வெளிகளில் அவரை சுற்றி உருக்வாகி இருக்கும் கட்சி அமைப்பு ஒரு இறுகிய வட்டம் அது அந்த வட்டம் அறிந்தவர் அன்றி பிறர் சண்முகத்தை அணுக அனுமதிப்பதில்லை. ஆனால் தனது இல்லத்தில் சண்முகத்தின் எளிமை அவர்கள் அறியாதது. எந்த காவலும் இன்றி யாரும் அவரை மிக எளிதில் சந்திக்கலாம். எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என தன்னை வைத்திருப்பவர். அதற்கு நேர் எதிராக கண்ணன். அவரை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல. அவருக்கு நெருக்கமானவரகளே நெடுநேரம் காத்திருந்தால் மட்டுமே அவரை சந்திக்க இயலும் என்பது அதில் உள்ள முரண்

கண்ணன் முதல்முறையாக அதிகாரத்திற்கு வந்தபோது அவரது தனிப்பட்ட வழிமுறைகள் அவரது பயணத்தை திசை மாற்றி பிறரால் எதிர் ஆளுமையாக புரிந்து கொள்ள வைத்துவிட்டது அல்லது அவர் அப்படி பொருள்படுவது குறித்து கவலை கொள்ளவில்லை.யாரும் எளிதில் தன்னை சந்திக்கும் இடத்தில் இறுதுவரை அவர் தன்னை வைத்திருக்கவில்லை என்பது அவரது தொடர்புகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக வைத்திருப்பது ஒரு பாவனை என்கிற தோற்றத்தை உருவாக்கி விட்டது. அவரை சந்திக்க இல்லம் செல்லும் அனைவரிடமும் சொல்லப்படும் முதல் தகவல்அவர் இல்லைத அல்லதுகுளித்துக் கொண்டிருக்கிறார்”. அது ஒரு அதிகார வட்டம் போல உருவாகி அவரை புற உலகில் இருந்து வெளியேற்றி இருந்தது. அவரை சந்திக்க சென்ற அவரது நண்பர் ஒருவர் பலமுறை கண்ணனை சந்திக்கச் சென்றும் இதே பதில் கிடைக்க அவர்கண்ணனை நீண்ட நேரம் குளிக்க வேண்டாம் என்று சொல்லுஙகள், உடம்பிற்கு ஆகாது என சொல்லி பின் அவரை சந்திக்க முயலுவதை நிறுத்துக் கொண்டார். இது இளிவரலாக நீண்ட காலம் இருந்தது


அரசியலில் தலைவர் எனப்படுபவர் புதிய தலைமுறையை நோக்கி உரையாடுபவராக இருத்தல் அரசியலின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது . சண்முகம் தன்னை வெகு ஜன அரசியலாளனாக முன்னிறுத்தவில்லை. அது தனது பாதையை திசைத் திருப்பிவிடும் என நினைத்திருக்கலாம்.அது உண்மையும் கூடவெகு ஜனங்களின் தலைமை என்பது ஆர்ப்பரிக்கும், கொந்தளிக்கும் எளிய மக்களை அவர்களின் எழுச்சியினூடாக அரவணைத்து செல்வது. ஆகவே சவாலானது


கொந்தளிக்கும் அவர்கள் எப்போதும் தங்களின் உணர்வு நிலைக்கு வடிகாலாக விரும்புவதை தலைமை தங்களை நிறைவுறச் செய்யும் முடிவை எடுக்க வேண்டும் என்று மட்டுமே விழைவார்கள். அது ஒற்றைப்படையானது. அரசியல் என்பது பலர் இணைந்து முயங்கும் வெளி அங்கு முடிவுகள் யாருடைய நிர்பந்தந்தால் நிகழ்வதில்லை. எனவே முன் முடிவுகள் அந்த இடத்தில் மோதி சிதறித் தெறித்திருக்கின்றன. புத்தி பூர்வமாக முடிவெடுக்க சூழலை சமநிலையில் வைத்திருக்க வேண்டி இருக்கிறது. சண்முகத்தின் காலம் விடுதலைக்கு எதிரான சக்திகளை ஆட்சியில் இருந்து தனிமைபடுத்தப்பட வேண்டும் என்கிற கருத்தியலை கொண்டவராக புதுவைக்கு வந்த போது அவர் தன்னை தகவமைத்துக் கொண்டது . அதன் விளைவாக குபேர் பதவி இறங்கி வெங்கடசுப்பா ரெட்டியார் முதல்வரான போது அந்த இலக்கு முடிவுற்றது . அதன் பின்னாலுள்ள சண்முகத்தின் அரசு சூழ்தலும் அதற்கு மறைமுகமாக உதவிய காமராஜரின் அரசியல் ஈடுபாடும் அதை ஒட்டி உருவான அரசியலின் சூழல் அவரை முக்கிய இடத்திற்கு நகர்த்தியது


அரசியலில் அனைத்தும் ஒவ்வொரு தசாப்தத்திற்கும் தன்னை மறுவரை செய்து கொள்கிறது. புதிய கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு மேல் நகர சொல்லுகிறது.அதனோடு இயந்து பயணப்பட்டு அரசியல் கருத்தியலை தனது தனித்தன்மையை இழக்காது மாறிவரும் சூழலை ஒட்டி தன்னை மறுவரையறை செய்து கொள்வது அவசியமாகிறது. ஆனால் அது எல்லோருக்கும் எளிதில் இயல்வதல்ல. அது மீள மீள ஒன்றையே செய்து அதிலிருந்து வெளிவர இயலாது செய்து விடுகிறது. இந்த இடத்தில் மகாத்மா காந்தி என்பை பிரமிக்கச் செய்கிறார். சுதந்திர போராட்டத்தின் காலகட்டத்தில் மத்தியில் புதிய சிந்தனை அல்லது புது முயற்சியை அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருந்ததை பார்க்கிறேன். சுதந்திரம் பற்றிய கருத்து முழுமை கொண்டு விடுதலையை நோக்கி நகரத் துவங்கிய அந்த சூழலில்அரசின்மை வாதம்என்கிற அதன் அடுத்த கருதுகோளை கண்டடைந்தார். இன்று வரை யாராலும் முயற்சித்துப் பார்க்கப்படாத ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது


சண்முகம் தனது அரசியலின் முதல் கருத்தியல் நிறைவுற்ற பிறகு கட்சியின் உள்முகம் திரும்பி அது கேட்கும் மேலதிகத் தேவையை மறுவரையறை செய்து கொள்ள முடியாமைக்கு காரணம் அவருக்கு அளிக்கப்பட்ட தலைமை பொறுப்பு தடையாக இருந்திருக்க வேண்டும். வெகு ஜன தலைவராக உருவாவது ஒன்றும் அவ்வளவு சிக்கலான ஒன்றில்லை. துவங்குவது எளிது ஆனால் அதை நீண்ட காலம் வைத்திருப்பது எவருக்கும் இயல்வதல்ல. கட்சியில் தலைவர் பதவியில் இருப்பவர்களுக்கு அது மிக எளிதில் நடந்துவிடுவது. அந்தந்த தொகுதிகளில் தன் ஆதரவாளர்களாக சிலரை வளர்தெடுப்பது எளிதில் இயலக்கூடியது. ஆனால் அது தேவையற்ற சிக்கலை உருவாக்கும் என ஊகித்திருந்தார். கட்சி என்பதன் இறுதிப் பயன் ஆட்சி, அதை உருவாக்கும் சட்டமன்ற உறுப்பினர்ககள் தங்கள் தொகுதியில் தனக்கு அணுக்கமானவர்களை வளர்த்து விடுவார்கள். அங்கு தனி அமைப்பை உருவாக்குவது அவர்களின் தொகுதிகளில் முரண்படவது என்பதால் அதை தவிற்க நினைத்தார்


ஒரு வகையில் சரியான கணிப்பு. அதனால் எழுந்த வெற்றிடத்தை கண்ணன் மிக சரியாக உபயோகப்படுத்திக் கொண்டார். அது சண்முகத்தற்கு எதிரான அரசியலாக கொண்டு செல்லப்பட்டது. அதை முன் வைத்து கண்ணன் தன்னை மாற்றுத் தலைவராக முன்னிறிருத்தி கொண்டது சரியான அரசியல் அணுகுமுறை ஆனால் தலைமைபண்பு கேட்கும் வேறு சில சமன்பாடுகளை அவர் பொருட்படுத்தவில்லை என்பது அவரது போதாமையல்ல என்பதால் குறையாகியது. கண்ணன் தனக்கென உருவாக்கிக் கொண்ட வெகுஜன தலைவர் இடத்தினால் உருவான அரசியலால் காலமெல்லாம் அடித்து செல்லப்பட்டார். ஆதரவு மக்கள் திரள் எப்போதும் தன் பின்னால் நிற்கும் என நினைத்தார். அவர் நினைத்தபடி அது நின்று கொண்டுதான் இருந்தது. ஆனால் அதை தொடர்புறுத்தும் நண்பர்களை அவர் தனது அரசியல் நாற்களசூதில் வைத்து விளையாடி அவர்களை மெல்ல இழந்து கொண்டே இருந்தார். வெகுஜன தலைவர்கள் தோற்கும் இடம் இது. தன்னை தனது இடத்தை மிக சரியாக உணர்ந்து பின் காய் நகர்த்த தெரிந்த தலைவர்களும் உண்டு

சண்முகம் அந்த சவரக்கத்தி விளையாட்டை நிராகரித்தவர். தலைவராக அல்லது அதற்கிணையான இடம் அவருக்கு அரசியலில் கிடைத்ததால் இந்த இடத்திற்கு வந்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள் விழா

  2022 ல் எனது மணிவிழாவிற்கு சரியாக ஒரு மாதம் முன்பு கோவையில் ஜெயமோகனுக்கு நண்பர்கள் எடுத்த மணிவிழாவில் கலந்து கொள்ளவும் உடன் ...